தேவிப்பிரியா- ஐசக்
(சின்னத்திரை நடிகையான தேவிப்பிரியா வீடியோ கடை அதிபரான ஐசக் என்பவரை மணந்து கொண்டார். இந்த ஐசக் ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்தவர் என்ற சர்ச்சை எழுந்ததுடன் முதல் இரு மனைவிகளும் இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தலைமறைவாக இருந்த ஐசக்கும், முன் ஜாமீன் வாங்கியிருந்த தேவிப்ரியாவும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்கள்)
|
நடிகை |
19-02-07 |
விஜய் ஜேசுதாஸ்- தர்சனா
(விஜய் ஜேசுதாஸ் பிரபல பாடகர் ஜேசுதாசின் மகன் ஆவார். இவர்களின் திருமணம் இந்து மத முறைப்படி நடந்தது)
|
பாடகர் |
22-01-07 |
சீனு ராமசாமி- தேன்மொழி
(கூடல் நகர் படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி, தன் படத்தில் பாடல் எழுத வந்த தேன்மொழி மீது மையல் கொண்டார். கல்யாணத்தை தள்ளி போடாமல் உடனடியாக இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்)
|
டைரக்டர்- பாடாலாசிரியர் |
ஜனவரி 2007 |
ஸ்ரீகாந்த்-வந்தனா
பிப்ரவரி 7-ந் தேதி தனது பெற்றோருக்கு தெரியாமல் வந்தனாவை காக்கிநாடாவில் திருமணம் செய்து கொண்டார் ஸ்ரீகாந்த். பிறகு வந்தனா குடும்பத்தை பற்றி வந்த சில தவறான செய்திகளால் அவரை பிரிய முற்பட்டார். இந்நிலையில் ஜுன் 13-ந் தேதி அதிரடியாக ஸ்ரீகாந்த் வீட்டில் குடியேறினார் வந்தனா. இதை தொடர்ந்து குடும்பத்தோடு தன் வீட்டைவிட்டு வெளியேறினார் ஸ்ரீகாந்த். பிறகு கோர்ட், கேஸ் என்று அலைந்த இருவரும் சமாதானமாகி மீண்டும் இணைந்தனர். இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி 7-9-07 அன்று சென்னையில் நடந்தது.
|
நடிகர் |
7-2-07 |
நந்திதா-காசி
(பாரதிராஜா இயக்கிய
ஈர நிலம் படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நந்திதா. பிரபல ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில்குமாரிடம் உதவியாளராக இருந்தவர் காசி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள்)
|
நடிகை-ஒளிப்பதிவாளர் |
பிப்ரவரி-26 |
வசந்த பாலன்-விஜயலட்சுமி
(வெயில் என்ற வெற்றிப்படத்தை இயக்கியவர் வசந்தபாலன். தனது அத்தைமகள் விஜயலட்சுமியை கரம் பிடித்தார் வசந்தபாலன். சாத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கிறார் விஜயலட்சுமி)
|
டைரக்டர் |
7-3-07 |
மாளவிகா-சுமேஷ்
(சந்திரமுகி, பேரழகன், சித்திரம் பேசுதடி போன்ற படங்களில் நடித்தவர் மாளவிகா. மும்பை தொழிலதிபர் சுமேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் பெங்களூரில் உள்ள ராணுவ குடியிருப்பு வளாகத்தில் நடந்தது. திருமணத்தில் நடிகை ரீமாசென் கலந்து கொண்டார்)
|
நடிகை |
7-3-07 |
ரக்ஷிதா -பிரேம்
(மதுர, தம் ஆகிய இரண்டு தமிழ் படங்களிலும் ஏராளமான கன்னட படங்களிலும் நடித்திருப்பவர் ரக்ஷிதா. இவர் கன்னட இயக்குனர் பிரேமை காதல் திருமணம் செய்து கொண்டார். பெங்களூரில் திருமணம் நடந்தது)
|
நடிகை-இயக்குனர் |
9-3-07 |
ஐஸ்வர்யாராய்-அபிஷேக்
முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராய் பிரபல இந்தி நடிகர் அபிஷேக்பச்சனை காதலித்து வந்தார். இவர்கள் இருவரின் திருமணம் மும்பையில் மிக விமரிசையாக நடந்தது. திருமணத்திற்கு மொத்தம் 100 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
|
நடிகை-நடிகர் |
20-4-2007 |
ரவளி-நீலி கிருஷ்ணன்
ஒரு சில படங்களில் நடித்தவர் ரவளி. இடையில் மார்க்கெட் இல்லாமல் காணாமல் போயிருந்தவர் ஹைதராபாத்தை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினியர் நீலிகிருஷ்ணனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
|
நடிகை |
11-5-2007 |
|
நித்யாதாஸ்-அரவிந்த் சிங்
தமிழில் மனதோடு மழைக்காலம், பொன்மேகலை போன்ற படங்களில் நடித்தவர்.
|
நடிகை |
17-7-2007 |
நரேன்-மஞ்சு
தமிழில் சித்திரம் பேசுதடி படத்தில் அறிமுகமானவர் நரேன். நெஞ்சிருக்கும்வரை, பள்ளிக்கூடம் போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவரானார் இரண்டு வருடங்களாக காதலித்து வந்த மஞ்சுவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் கோழிக்கோட்டில் நடந்தது.
|
நடிகர் |
26-8-2007 |
பூமிகா-பரத் தாகூர்
தமிழில் பத்ரி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூமிகா. அந்த படத்தில் விஜயுடன் ஜோடி சேர்ந்த அவர் அதன்பின் ரோஜாக்கூட்டம், ஜில்லுன்னு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்தார். தெலுங்கு, இந்தி படவுலகில் முன்னணி நடிகையான அவர் யோகா மாஸ்டரான பரத் தாகூரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
|
நடிகை |
21-10-2007 |