|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயல் பாதித்த கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.790 கோடியில் சிறப்பு திட்டம்: நிலவரி முழுமையாக ரத்து- ஜெயலலிதா அறிவிப்பு - கூடங்குளம் பாதுகாப்பு பற்றி அறிய தமிழக அரசின் சார்பில் நிபுணர் குழு நியமனம்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு - சுப்பிரமணியசாமி தொடர்ந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு: சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி-சி.பி.ஐ. கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
தமிழ் சினிமா இதுவரை...
தசாவதாரம் படத்தில் கமலஹாசன் 10 வேடத்தில் நடித்து சாதனை படைத்தார்.
அற்புதத்தீவு படத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குள்ளர்கள் நடித்தனர்.
அயல் நாட்டில் பரிசு பெற்ற முதல் படம் வீரபாண்டிய கட்டபொம்மன். 1959-ல் பி, ஆர், பந்துலு தயாரித்து இயக்கிய பத்மினி பிக்சர்ஸ் வீரபாண்டிய கட்ட பொம்மன் வண்ணப்படத்தில் சிவாஜி கணேசன் நடித்து இங்கிலாந்தில் டெக்னிக் கலர் பிரிண்ட் எடுக்கப்பட்டது, சக்தி கிருஷ்ணசாமி எழுதிய பிரபல நாடகம் இது, 1960-ல் கெய்ரோவில் நடைபெற்ற ஆப்பிரிக்க-ஆசிய பட விழாவில் திரையிடப்பட்ட படங்களில் சிறந்த நடிகராக சிவாஜி கணேசனும், சிறந்த இசைமைப்பாளாராக ஜீ, ராமநாதனும் தேர்ந்தேடுக்கப்பட்டு வெள்ளி பருந்து பரிசு பெற்றார்கள் இப்படத்திற்கு இந்திய அரசாங்கம் பிராந்திய சான்றிதழ் அளித்தது.
1940 ஆண்டு முதன்முதலில் இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் வெளிவந்தது, அந்த படம் உத்தமபுத்திரன், இதில் பி.யு. சின்னப்பா அண்ணனாகவும் தம்பியாகவும் நடித்தார்.
110 வாரம் ஓடிய ஹரிதாஸ் 1944-ல் வெளியான ராயல் டாக்கிஸ் விநியோகஸ்தர்கள் தயாரித்தார்கள் ஹரிதாஸ் படத்தில் எம்.கே. தியாகராஜபாகவதர் நடித்திருந்தார், சென்னை பிராட்வே திரை அரங்கில் தொடர்ந்து 110 வாரங்கள் (768 நாள்) ஓடியது (16-10-1944 முதல் 22-11-46 வரை) மூன்று தீபாவளி தினத்தை கண்டது.

முழுக்க பெண் குரல் பாடல்கள் இடம் பெற்ற முதல் திரைப்படம்-கற்பகம்

முதல் பேசும்படமான காளிதாஸ் 1931-ம் வருடம் அக்டோபர் மாதம் 31-ந் தேதி சென்னை சென்டிரலில் (தற்போதய ஸ்ரீ முருகன்) முதல் பேசும் படமான காளிதாஸ் - (35 எம் எம்) வெளியாகியது,
தமிழில் தயாரான முதல் ஸ்டீரியோ எபெக்ட் படம்- ப்ரியா இசை-இளையராஜா
609 பிரதிகள் எடுக்கப்பட்ட சந்திரலேகா 1948-ல் தமிழ்-இந்தி இரு மொழிகளில் தயாரிக்கப்பட்ட ஜெமினியின் சந்திரலேகா படத்தில் எம்.கே.ராதா, டி.ஆர்.ராஜகுமாரி நடித்தனர். அந்த நாளில் 30 லட்ச ருபாய் செலவில் தயாரிக்கப்பட்ட படம், விளம்பரத்தில் வினோதமும் வட இந்தியாவில் தமிழ் பட தயாரிப்பாளர்களுக்கு புகழையும் கொடுத்தப்பபடம். எஸ்.எஸ்.வாசன் இயக்கிய இப்படத்திற்கு இதுவரை 609 பிரதிகள் எடுக்கப்பட்டுள்ளன, ஆங்கில படங்களுக்கு நிகரான இப்படம் ஆங்கிலத்தில் சப்டைட்டில் செய்து வெளிநாட்டில் திரையிடப்பட்டுள்ளது.
தமிழில் தயாரான முதல் வர்ணப்படம் அலிபாபாவும் 40 திருடர்களும் - முதல் ஈஸ்ட்மன் கலர் படம்-காதலிக்கநேரமில்லை(1964) முதல் ஆர்.ஓ. கலர் படம் பட்டினப்பிரவேசம் (1977)
தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் படம் ஸ்ரீ நிவாச கல்யாணம் (1934)
வெளிநாட்டில் (லண்டனில்) படப்பிடிப்பு நடைப்பெற்ற முதல் தமிழ்ப்படம் நவயுவன் (1937)
தமிழில் முதல் டப்பிங் செய்யப்பட்ட படம் அரிச்சந்திரா, கன்னடத்திலிந்து (1943)
தமிழின் முதல் சினிமா வார இதழ் சினிமா உலகம்
நடிகை சுஹாசினியை இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்திய படமான இந்திரா படத்திற்கு சர்வதேச விருது (சிறந்த இயக்குனர்) கிடைத்துள்ளது. ,முன்னால் சோவியத் யூனியனைச்சேர்ந்த பெலாரஸ் நாட்டின் தலைநகரான மின்ஸ்க் நகரில் நடைபெற்ற நான்காவது சர்வதேச பெண்கள் திரைப்பட விழாவில் இவ்விருது வழங்ப்பட்டது, இவ்விழாவில் 22 நாடுகளை சேர்ந்த 120 படங்கள் பங்கேற்றன
தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரிய அதிக இருக்கை உள்ள தியேட்டர் மதுரையிலுள்ள தங்கம், 2563 இருக்கைகள் கொண்டது. (தற்போது மூடப்பட்டுள்ளது)
6 மொழிகளில் தயாரானது மலைக்கள்ளன். 1954-ல் தயாரான மலைக்கள்ளன் படத்தில் எம்.ஜி.ஆர். பி. பானுமதி, நடித்திருந்தார்கள். எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு தயாரித்து-இயக்கிய பட்சி ராஜா ஸ்டுடியோவின் படம், நாமக்கல் வே,ராமலிங்கம் பிள்ளையின் நாவலான இதை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் ஆகிய ஆறு மொழிகளில் தயாரிக்கப்பட்டது, இந்திய அரசின் வெள்ளி பதக்கம் பரிசு பெற்ற முதல் தமிழ் படம்.
முதல் சினிமா ஸ்கோப்படம் ராஜ ராஜ சோழன் 1973-ல் தமிழில் வெளிவந்த முதல் சினிமாஸ்கோப் வர்ணப்படம் ஆனந்த் முவிஸ் ராஜ ராஜ சோழன் படத்தில் சிவாஜி கணேசன்-முத்துராமன் சிவகுமார்-லட்சுமி ஆகியோர் நடித்தனர், இப்படம் ஜி.உமாபதி தயாரித்து, ஏ.,பி. நாகராஜன் இயக்கியது, அரு,ராமநாதனின் பிரபல நாடகம் இது.
இந்தியாவின் முதல் திறந்தவெளி அரங்கு என்.கே. திறந்தவெளி அரங்கு தசரதபுரம்.
தமிழ் திரையுலகில் வந்த முதல் 3டி திரைப்படம் மை டியர் குட்டிச்சாத்தான்
35எம்,எம், திரைப்படங்களே தமிழில் வந்து கொண்டிருந்தபோது முதல் 70எம்.எம்.திரைப்படமாக வந்த திரைப்படம் மாவீரன் ஆகும். ரஜினிகாந்த், அம்பிகா நடித்தது.
பாடல்களே இல்லாமல் முதலில் வந்த தமிழ் சினிமா-அந்த நாள்
அதிக பாடல்கள் கொண்ட தமிழ் சினிமா-ஸ்ரீ கிருஷ்ண லீலா(1934)
- 62 பாடல்கள்
சாமிக்கண்ணு வின்சென்டின் வெரைட்டி ஹால்தான் தென்னிந்தியாவில் முதன் முதலில் தோன்றிய தியேட்டர்
வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான மர்மப் படங்கள் வசூலை வாரிக்குவித்தன. இதை வியாபார ரீதீயாக சமாளிக்க ஆங்கில படங்களுக்கு நிகராக எடுக்கப்பட்ட மர்ம படம் மெட்ராஸ் மெயில்., இந்தப் படம் வசூலை வாரிக்குவித்தது.
பாடலை முன் கூட்டியே பதிவு செய்து படபிடிப்பின்போது ஒலிக்க செய்து அதற்கு ஏற்ப நடனம் ஆடும் முறையை முதன் முதலில் பின்பற்றி எடுக்கப்பட்டபடம் அசோக்குமார்.
பெண்களே இல்லாமல் தயாரிக்கப்பட்ட படம் பக்த ராமதாஸ்
ஆங்கில சப் டைட்டிலுடன் தென்னாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு சென்று வெற்றிக்கொடி நாட்டிய ஒரே படம் சந்திரலேகா., இந்த படத்திற்கு விளம்பர செலவு மட்டும் இருபத்தைந்து லட்சம் ஆனதாம்.(அந்த காலத்திலேயே)
ஒரே செட்டில் (மருத்துவமனை) எடுக்கப்பட்ட முதல் படம் நெஞ்சில் ஒர் ஆலயம்
வெளிநாட்டில் (இங்கிலாந்து) படமாக்கப்பட்ட முதல் படம் நவயுவன்(கீதாசாரம்)
செவாலியர் விருது பிரான்ஸ் அரசு சிவாஜி கணேசன் அவர்களுக்கு அளித்தது, இந்திய சினிமா உலகில் 45 ஆண்டுகளாக சாதனை புரிந்து வரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மத்திய அரசின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. தங்க தாமரையுடன் ரு,1 லட்சம் ரொக்கப்பரிசு ஜனாதிபதி வழங்கினார்.
12 கதாநாயகர்கள் 8 கதாநாயகிகள்,இணைந்து நடிக்க 11 டைரக்டர்கள் இயக்கும் சுயம்வரம் என்ற புதிய படம் கின்னஸ் ரெக்கார்டுக்காக தமிழில் தயாரிக்கப்பட்டது, இந்த படத்தை 24 மணி நேரத்தில் எடுத்து சாதனை புரிந்தனர் எம்.எஸ்.நிறுவத்தினர்,5 பெண்கள், 3 மகன்களுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்க துடிக்கும் ஒரு தந்தையை மையமாக வைத்து இக்கதை பின்னப்பட்டது,
தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் மொத்தம் 101 படங்கள் தயாரித்த டி.ராமா நாயுடுவின்பெயர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது, கின்னஸ் உலக சாதனை அமைப்புகளான பிரதிநிதி எம்.காலின்ஸ் ராமா நாயுடுவுக்கு இது தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார்.
Android
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter