|
புரட்சித்தலைவர். எம்.ஜி.ஆர்
1969-ல் மிகப் பெரிய வெற்றிப்படம் அடிமைப்பெண். 25 ஆண்டுகளுக்குப் பின் அடிமைப்பெண் 1994 சென்னை கமலா தியேட்டரில் திரையிடப்பட்டபோது அவசர போலீஸ் 100-க்கு போன்செய்து போலீஸை வரவழைக்கும்படி ஆனது. கமலா தியேட்டர் அதற்குமுன் சந்தித்திராத அனுபவம் இது. அந்த அளவுக்கு கூட்டமும், ரசிகர்களின் ஆரவாரமும் இருந்ததாம்.
நம் நாடு நாகிரெட்டிக்கு எங்க வீட்டுப்பிள்ளையைத் தொடர்ந்து இதுவும் வெற்றி தேடித் தந்தது. எம்.ஜி.ஆர் மாறுபட்ட கதையம்சங்களில் அக்கறை காட்டுபவர் என்பதற்கு நம் நாடு படமும் ஒரு உதாரணம். எம்.ஜி.ஆர். வாத்தியார் என்றழைக்கப்படுவதை பிரபலமாக்கிய படம் இது. மாட்டுக்கார வேலன் மொழிமாற்று படங்களில் எம்.ஜி.ஆர் நடிக்கிறாறென்றால் அது நிச்சய வெற்றி என்பதை இந்தப் படமும் நிரூபித்தது.

ஜிக்ரி தோஸ்த் என்ற ஜிதேந்திரா நடித்த இந்திப் படத் தழுவல்தான் இது. ஒரே மாதிரி தோற்றமுடைய- குணாதிசயத்தில் வேறுபாடு இல்லாத இரட்டை வேட நடிப்பில் கூட எம்.ஜி.ஆர். ஜனரஞ்சகத்தைக் காட்டியிருந்தார். அடுத்தடுத்த வெளியீடுகளில் இந்தப் படத்தின் விநியோக போட்டோமை விலை புதிய படங்களுக்கும் மேலாக இருந்தது, இருக்கிறது. வினியோகஸ்தரான கனகசபை செட்டியார், இந்தப் படத்தில் சம்பாதித்ததைப் போல் வேறெதிலும் சம்பாதித்ததில்லை. அவர் தயாரித்த முதல் படம் இது. எங்கள் தங்கம் மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர். நடித்த கடைசிப் படம். அவர்களுக்கு முதல் வண்ணப்படமும்கூட. இன்றைக்கும் வசூலைத் தந்துக் கொண்டிருக்கும் வெற்றிப்படம் இது.
எம்.ஜி.ஆர் உச்சிக்குடுமி வைத்து மொட்டைத்தலையுடன் ஆம்ஸ்ட்ராங்கே ஆம்ஸ்ட்ராங்கே வா வா என்று நிலவில் மனிதன் இறங்கியதை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதாகலாட்சேப காட்சியில் பாடி நடிக்கும் காட்சி படத்தின் சிறப்புகளில் ஒன்றாக அமைந்தது. போட்டோக்ஷாக்காரன் 1971-ல் இந்தியாவிலேயே சிறந்த நடிகராக எம்.ஜி.ஆருக்கு பாரத ரத்னா விருது பெற்றத்தந்த படம் இது. தமிழ் நடிகர் ஒருவர் தேசிய அளவில் விருது பெற்றது அதுவே முதல் முறை. போட்டோக்ஷாக்காரன் படத்திற்காக போட்டோக்ஷா ஓட்டும் போட்டிக் காட்சி அண்ணாநகரில் படமாக்கப்பட்டபோது, எம்.ஜி.ஆர் நிஜமான போட்டோக்ஷா காரர்களை விட நிஜமாகவே வேகமாக ஓட்டி முதலாவதாக வந்ததற்கு, சூழ்ந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்களே சாட்சி.
55 வயது வலிமை அது. போட்டோக்ஷாவில் இருந்தபடியே எதிரிகளோடு சிலம்பமாடுவார் எம்.ஜி.ஆர். பின்புறம் அமர்ந்திருக்கும் கதாநாயகி மீதும் அடிபடாதபடி, ஹேண்டில்பாரில் கை வைக்காமல் போட்டோக்ஷாவை சுற்றி சுற்றி ஓட்டியபடியே எம்.ஜி.ஆர். மோதும் அந்த லாவகமும், ஸ்டைலும் வேறு எந்த இந்திய நடிகரிடமும் காணமுடியாத சிறப்பாகும். இப்படி படத்தில் ஏராளமான சிறப்புகள் இருந்ததால் சத்யா மூவிஸ§க்கு இது வசூலை வாரிக் குவிக்கும் படமாக அமைந்தது.
நல்ல நேரம் ஹாத்தி மேரே சாத்தியை தயாரித்த தேவர், இதை தமிழுக்கும் கொண்டு வந்தார். படம் தமிழிலும் சூப்பர் ஹிட். இதய வீணை பத்திரிகையாளர் மணியன், வித்வான் வே.லட்சமணன் தயாரிப்பு இதய வீணை. ஆனால் படம் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகையில் எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேற்றப்பட்ட 10-10-72 இரவில் ஜெமினி ஸ்டுடியோவில் இதய வீணை எடிட்டிங்கில் இருந்தார். 20-10-72ல் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியபோது எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வைத் தொடங்கி விட்டார். உலகம் சுற்றும் வாலிபன் இந்த படம் உருவான விதம் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். அவ்வளவு விஷயங்கள் உள்ளன.
இதுவரை அயல்நாடுகளில் படமாக்கப்பட்ட படங்களிலேயே அதிக செலவு ஏற்பட்ட படம் இதுவாகத்தானிருக்கும். அது மட்டுமன்றி அயல்நாடு செல்லாத நம்பியார், தேங்காய் சீனிவாசன், மனோகர் ஆகியோரையெல்லாம் அயல்நாடுகளில் அவர்கள் இருப்பதுபோல் அரங்கங்களை எண்ண முடியாத அளவில் உருவாக்கிப் படமாக்கினார் எம்.ஜி.ஆர். தமிழில் சமூகப் படமொன்றிற்காக இதுவரை அதிகபட்ச அரங்கங்களை (செட்) சந்தித்த படம் உலகம் சுற்றும் வாலிபனே. நிலவு ஒரு பெண்ணாகி என்ற பாடலில் மஞ்சுளாவுடன் எம்.ஜி.அர். நடித்த காட்சிகளில் எது அரங்கம் எது அயல்நாட்டுக் காட்சி என்று கண்டுபிடிக்க முடியாத அளவில் படமாக்கியிருந்தார் எம்.ஜி.ஆர்.
|