Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
பிளஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - பிளஸ் ரிசல்ட் : நாமக்கல் மாணவி முதலிடம் - பிளஸ் ரிசல்ட் : முதல் 4 இடத்தையும் தட்டிச்சென்றது நாமக்கல் - கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மாதிரி எரிபொருள் அகற்றும்பணி தீவிரம் - ஆந்திராவில் ரெயில்கள் மோதி தீ பிடித்து 14 பேர் பலி - இலங்கை: இந்தியா ஒப்பந்தத்தை அனுமதித்திருந்தால் எந்த துன்பமும் வந்திருக்காது : ஞானதேசிகன் - இலங்கை சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் : சீமான் கோரிக்கை
``குரல்ல பிசிரு அடிக்குது...
இது ஒலிப்பதிவுக்குச் சரியா வராது’’

-அழியாத அதிசயம் டி.எம்.சௌந்தரராஜன் வாழ்வில்...

பத்மஸ்ரீ கலைமாமணி எழிலிசை மன்னர் டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் பற்றிய குறிப்புகள்-

பெற்றோர் : மீனாட்சி ஐயங்கார். வேங்கடம்மாள். பிறந்த தேதி 24.03.1923. பிறந்த ஊர் : மதுரை

கல்வித்தகுதி : எஸ்.எஸ்.எல்.சி. சௌராஷ்டிரா பள்ளி,
புனித மேரி பள்ளி - மதுரை.
இந்தி : ``ராஷ்டிராபாஷா’ பள்ளியில்

இசை அனுபவம் : பள்ளியில் `பிரார்த்தனைப் பாடல்களாக’ தியாகராஜ பாகவதரின் பாடல்களை பாடியது.

முதல் பணி : `ஆஷெர் அண்ட் கோ%’ - டைப்பிஸ்ட்/ உதவியாளர், மாத ஊதியம்: ரு40/ =
சங்கீதப் பயிற்சி : சாரங்கபாணி பாகவதர்,
காரைக்குடி ராஜாமணி ஐயங்கார்

முதல் கச்சேரி அரங்கேற்றம்: 1945. மதுரை சத்குரு சமாஜன்.

திருமணம் : 28.03.1946,
மனைவி பெயர்: சுமித்ரா.
பிள்ளைகள்: சித்ரலேகா, சந்திரிகா, பாலசுப்ரமணியன், மல்லிகா, பால்ராஜ், செல்வக்குமார்.

குரல் தேர்வில் பாடிய பாடல்கள் - `சினம் காமம் பொய் களவு’ (அசோக்குமாரில் பாகவதர் பாடியது), `சிந்தை அறிந்து வாடி’ (ஸ்ரீவள்ளியில் பி.ஏ பெரியநாயகி பாடியது)
இடம்: சென்டிரல் ஸ்டுடியோ. இசையமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடு.

முதல் திரைப் பாடல்: 1946, ஜுபிடரின் `கிருஷ்ண விஜயம்’,
இசை: எஸ்.எம்.சுப்பையா நாயுடு.
பாடல்கள்: நம்ம கண்ணன் பிரதாபமாக,
ராதே என்னை விட்டு ஓடாதேடி

மாடர்ன் தியேட்டர்ஸ்: `மந்திரிகுமாரி’ (1950) ` அன்னம் இட்ட வீட்டிலே’

பாடல் பதிவின் போது ஒலிப்பதிவாளர் பத்மநாபன் வெளியிட்ட கருத்து: ``குரல்ல பிசிரு அடிக்குது...
இது ஒலிப்பதிவுக்குச் சரியா வராது’’

இதற்குப் பதிலளித்த இசையமைப்பாளர் ஜி. ராமநாதன்: ``இந்தப் பிசிரு அழகான பிசிரு. பாகவதர் குரலில் கூட இந்த மாதிரியான இளம் பிசிரு வரும். நீங்க சும்மா போட்டோக்கார்ட் பண்ணுங்க... பிரமாதமாக வரும் பாருங்க’’ என்றார்.

திரையில் நடிகராக தோன்றிய முதல் படம்: தேவகி’ - தாடியுடன் ஒரு ஆண்டியாகத் தோன்றி `முந்நாளின் ஆண்டவனே போட்டோல் வந்து’ என்ற பாடலைப் பாடி நடித்தார்.

கதாநாயகனாக நடித்த திரைப்படங்கள்: `பட்டினத்தார்’ , அருணகிரிநாதர்’, `கல்லும் கனியாகும்’.

சென்னை விஜயம்: தென் சென்னை, ஆழ்வார்ப் பேட்டை பிள்ளையார் கோயில் சந்தில் மாதம் பத்து ருபாய்க்கு அறையில் வாசம். சிகரெட் பாக்கெட் அட்டையில் பெயர், விலாசம் எழுதி வைத்துக் கொண்டு வாய்ப்பு வேட்டை.

சிவாஜியுடன் முதல் பாடல்: கூண்டுக்கிளி - `கொஞ்சும் கிளியான பெண்ணை... சரியா தப்பா?
எம்.ஜி.ஆருடன் முதல் பாடல்: மலைக்கள்ளன் - `எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’

இசையமைப்பாளர் ஜி. ராமநாதனின் கருத்து: `சௌந்தரராஜன்... உங்களை மாதிரி ஒரு சாரீரம் எனக்கிருந்தா என்னோடு சங்கீதத்தினாலே இந்த உலகத்தையே ஜெயிச்சுடுவேன்’ இசையமைப்பாளர் வேதா, இந்தியில் பிரபலமான முகமது ரஃபி பாடல்களின் மெட்டுக்களின் சௌந்தரராஜனைப் பாட வைத்தார். `நான் மலரோடு தனியாக’ - `இரு வல்லவர்கள்’, இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால்’ - `வல்லவன் ஒருவன்’, `நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன’ - சி.ஐ.டி சங்கர்... போன்ற பாடல்களைக் கேட்ட முகமது ரஃபி, ``நான் பாடிய பாடல்களை என்னை விட நன்றாகப் பாடியிருக்கிறீர்கள்... உங்கள் நாதம் மிகவும் சுந்தரமானது’’ என்று பாராட்டினார்.

உள்ளம் உருதய்யா’ பாடலை சென்னை காளிகாம்பாள் ஆலயத்தில் செதுக்கி வைத்திருக்கிறார்கள்.

`அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே...’ (உயர்ந்த மனிதன்) சிவாஜி ஒடிக்கொண்டே, முச்சுவாங்கியபடி பாடும் பாடல் என்பதால், மைக்கில் இரு புறமும் அங்கும் இங்கும் ஒடி முச்சு வாங்கியபடி பாடினார் டி.எம்.எஸ்!

1967-ம் ஆண்டில் வெளியான 48 திரைப்படங்களின் இரண்டே இரண்டு படங்களைத் தவிர்த்து (கற்பூரம் ராஜாத்தி) அத்தனை படங்களிலும் டி.எம்.எஸ் பாடல்கள் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

பத்மஸ்ரீ கலைமாமணி எழிலிசை மன்னர் டி.எம். சௌந்தரராஜன் அவர்கள் பெற்ற பட்டங்கள்:

· கீதவாரி (திருச்சி தமிழ் இசைச் சங்கம்)
· இசைக்கடல் (கவிஞர் கண்ணதாசன்)
· கற்பகத்தரு மன்னர் (சேலம் தமிழ்ச் சங்கம்)
· எழிலிசை மன்னர் (ஏ.வி.எம்)
· கலைமாமணி (தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்)
· கீதாஞ்சன் வா£தி (மதுரை ஆதீனம் சோமசுந்தர தம்பிரான்)
· அருட்பா இசைமணி (வடலூர் திருவருட்பா இசைச் சங்கம்)
· கான கலா பாரதி (ஸ்ரீ லால்குடி ஜெயராமன், பாரத் கலாச்சார் நிகழ்ச்சியில்)
· பத்மஸ்ரீ (இந்திய அரசு)

முதல் அயல்நாட்டுப் பயணம் - மலேசியா, 1957. பின்னர் சிங்கப்பூர், இலங்கை, தென்னாப்பிரிக்கா, துபாய், அமெரிக்கா, கனடா, ஐரோப்பா.

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter