First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு கைது: ராமதாஸ் கண்டனம் - மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: இடதுசாரிகள் முடிவு - தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் - மத்திய அரசுக்கு சமாஜ்வாடி ஆதரவு உறுதி: காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆபத்து நீங்கியது
தமிழ் சினிமா இதுவரை...
மறைந்தவர்கள்
    
2007-ம் ஆண்டில் மறைந்த கலைஞர்கள்

குட்டி

(டான்சர் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் இவர். விபத்தில் ஒரு காலை இழந்தவர்! கால் போனாலும் தன்னம்பிக்கை போகாத குட்டி தன்னுடைய விடா முயற்சியால் நடனம் கற்றுக்கொண்டார். பம்பரம் போல் சுற்றியாடும் இவரது திறமையை பார்த்து திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான கேயார் இவரை தன்னுடைய டான்சர் படத்தில் கதாநாயகன் ஆக்கினார்)

கதாநாயகன்
ஏப்ரல்

ஜோதி

(இரயில் பயணங்களில் என்ற படத்தில் அறிமுகமானவர் ஜோதி. புதுக்கவிதை என்ற படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். கடந்த நான்கு வருடங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர், சிகிச்சை பலனிக்காமல் உயிரிழந்தார்)

 

கதாநாயகி
மே 19

எல்.வைத்தியநாதன்

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 160-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். தமிழில் இவரது இசையமைப்பில் வெளியான 'ஏழாவது மனிதன்' என்ற திரைப்படம் இவருக்கு புகழைத் தேடித் தந்தது. மாரடைப்பால் மரணமடைந்த இவருக்கு வயது 65.

இசையமைப்பாளர்
மே 19

சீனிவாசன்

பிரபல இயக்குனர் மணிரத்னத்தின் தம்பி. அண்ணனுடன் இணைந்து திருடா திருடா, அலைபாயுதே, உயிரே, இருவர், நேருக்கு நேர், ஆய்த எழுத்து, குரு ஆகிய படங்களை தயாரித்தவர். கோடை விடுமுறையை கழிப்பதற்காக மனைவி குழந்தைகளுடன் குலுமணாலி சென்றவர் மலையேறும்போது தவறி விழுந்து மரணமுற்றார். இவருக்கு வயது 47

 

தயாரிப்பாளர்
மே 27

ரத்னமாலா

சிவாஜி நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் போகாதே போகாதே என் கணவா பாடலை பாடிய பாடகி இவர். எம்.ஜிஆருடன் இன்பக்கனவு, சிவாஜியுடன் பராசக்தி, டி.ஆர்.மகாலிங்கத்துடன் ஓர் இரவு நாடகம் உட்பட பல நாடகங்களிலும் நடித்துள்ளார். மாரடைப்பால் மரணமடைந்த அவருக்கு வயது 76

 

நடிகை-பாடகி
ஜுன் 6

ஜீவா

ரஷ்யாவில் உயிர் பிரிந்தது...

ஒளிப்பதிவாளர்-இயக்குனர்

ஜுன் 26

விஜயன்

கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் விஜயன். தமிழ், மலையாளம் உள்ளிட்ட 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மது அருந்தும் பழக்கத்தால் சினிமா வாய்ப்புகளை இழந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் விஜயகாந்த் நடித்த ரமணா படம் மூலம் வாய்ப்புகள் பெற ஆரம்பித்தார். ஆயுதம் செய்வோம் என்ற படம் அவரது கடைசி படமாக அமைந்துவிட்டது. அவருக்கு வயது 63. சென்னையில் மரணமடைந்த அவரது சொந்த ஊர் கேரளாவில் உள்ள கோழிக்கோடு

நடிகர்
செப்டம்பர் 21
ருக்மணி
நடிகை
செப்டம்பர் 4
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter