| சாந்தகுமாரி |
நடிகை |
üùõK |
| பி.லீலா | பின்னணி பாடகி | üùõK |
| ஆர்.எஸ்.மனோகர் |
நடிகர்
இதுவரை சுமார் 300 படங்களில் நடித்திருக்கிறார். கைதி கண்ணாயிரம், இருவல்லவர்கள், வல்லவனுக்கு வல்லவன், பல்லாண்டு வாழ்க, ஆயிரத்தில் ஒருவன், தீ, தங்கமகன், போன்ற படங்கள் அவருக்கு புகழை பெற்று தந்தன |
10-1-2006 |
| கே.சங்கர் |
இயக்குனர்
குடியிருந்த கோயில், அடிமைப்பெண், ஆலய மணி, ஆண்டவன் கட்டளை, கைராசி, சந்திரோதயம் போன்ற அற்புதமான பல படங்களை இயக்கியவர். தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் பிற மொழி படங்களையும் இயக்கியவர். இறப்பதற்கு இரண்டு வாரங்கள் முன்புதான் தமிழக அரசின் கலைவித்தகர் விருதை முதல்வர் ஜெயலலிதா கரங்களால் வாங்கியிருந்தார் சங்கர். சுமார் 100 படங்களுக்கு மேல் இயக்கியவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு |
5-3-2006 |
| சுந்தரிபாய் |
நடிகை
இவர் மறைந்த கதாசிரியர் கொத்தமங்கலம் சுப்புவின் மனைவி 'கண்ணம்மாள் என் காதலி,' 'சந்திரலேகா', எழுத்தாளர் ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
|
13-03-2006 |
|
ஜி. தேவராஜன் |
இசையமைப்பாளர்
20 திரைப்படங்களுக்கும் மேல் இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. தேவராஜன் (அன்னை வேளாங்கண்ணி, துலாபாராம்) காலமானார்.
| 14-03-2006 |
| ஏ.சி.பிள்ளை |
ஆர்ட் டைரக்டர்
தமிழக 'சேது', 'பிதாமகன்' உட்பட பல படங்களில் ஆர்ட் டைரக்டராக பணியாற்றிய ஏ.சி.பிள்ளை மரணம் அடைந்தார்,
|
09-05-2006 |
|
விக்ரம் தர்மா |
திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர்
திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் விக்ரம் தர்மா சென்னையில் காலமானார். விக்ரம் தர்மாவிற்கு வயது 50. 'விக்ரம்', 'இந்தியன்', 'ஜென்டில்மேன்', 'காதலன்', 'ஆளவந்தான்', 'பரமசிவன்' உள்பட தெலுங்கு, இந்தியில் ஆயிரம் படங்களுக்கு மேல் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ள இவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
| 28-06-2006 |
| கவிஞர் சுரதா | கதை, வசனகர்த்தா மற்றும் பாடலாசிரியர்
மங்கையர்கரசி, அமரகவி போன்ற படங்களுக்கு கதை வசனம் பாடல்களை எழுதிய உவமைக் கவிஞர் சுரதா மரணம் அடைந்தார். 1972 ஆம் ஆண்டு தமிழக அரசு கலைமாமணி பட்டம் வழங்கியது, தொடர்ந்து பல விருதுகளும் பட்டங்களும் பெற்றுள்ளார்.
|
20-06-2006 |
|
சகாதேவன் |
நகைச்சுவை நடிகர்
சகாதேவன் தமிழ் திரையுலகில் 'தூரல் நின்னு போச்சு' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து 150 படங்களுக்கு மேல் நடித்தவர். இவர் இரட்டை சகோதரர்களில் ஒருவர். இவரது சகோதரர் மகாதேவனும் இவரும் சேர்ந்து பல படங்களில் நகைச்சுவை மன்னர்களாக வலம் வந்தனர்,
|
11-09-2006 |
|
பத்மினி |
நடிகை
ஏராளமான தமிழ்படங்களிலும் இந்தி உள்பட பல்வேறு மொழிப் படங்களிலும் நடித்து சினிமா உலகில் தனக்கென்று தனி இடத்தைப்பிடித்தவர். தமிழக அரசின் கலைமாமணி விருது, ரஷிய தலைநகர் மாஸ்கோவில் சிறந்த பரதநாட்டியக் கலைஞருக்கான விருது போன்ற இன்னும் பல விருதுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
|
25-09-2006 |
|
ஸ்ரீவித்யா |
நடிகை
பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எல் வசந்தகுமாரியின் மகளான ஸ்ரீவித்யா பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். மலையாளப் படங்கள் மற்றும் டி.வி.தொடர்களிலும் நடித்துள்ளார். 900 படங்களுக்குமேல் நடித்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் புற்றுநோய் தீவிரமடைந்ததால் காலமானார்.
| 19-10-2006 |
| ஈ.வி.சரோஜா |
நடிகை
என்தங்கை, பாக்கியலெட்சுமி, கொடுத்து வைத்தவள், பிள்ளை கனியமுதே, படிக்காத மேதை, குலேபகாவலி உள்பட ஏராளமான தமிழ் படங்களில் நடித்தவர் ஈ.வி.சரோஜா, தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகலும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடனமாடியிருக்கிறார். இவர் புகழ் பெற்ற டைரக்டர் டி.ஆர். ராமண்ணாவின் மனைவி ஆவார்.
இவர் மாரடப்பால் மரணம் அடைந்தார்.
| 03-11-2006 |
ஜி.வரலட்சுமி | நடிகை
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட சுமார் 80 படங்களில் நடித்துள்ளார். தனது 9- வயதில் குழந்தை நட்சத்திரமாக பக்தபிரகலாதா என்ற படத்தில் அறிமுகமானார். கதாநாயகியாக நடித்த முதல் படம் துரோகி. இப்படத்தில் எல்.வி.பிரசாத் கதாநாயகனாக நடித்தார். தமிழில் குழந்தையும் தெய்வமும், நான் பெற்ற செல்வம், அரிச்சந்திரா ஆகிய படங்களில் நடித்துள்ளார். குலேபகாவலியில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி. அரிச்சந்திராவில் சிவாஜிக்கு ஜோடி. இது வரலட்சுமியின் சொந்தபடமாகும். சென்சார் பிரச்சனையில் நீண்ட நாட்கள் ரிலீஸ் ஆகாமல் இருந்த இந்த படம் ரிலீஸ் ஆன பிறகும் சரியாக ஓடவில்லை. இவர் நடித்த அண்ணி தமிழ், தெலுங்கு இரண்டு மொழிளில் தயாராகி பெரும் வெற்றி பெற்றது. இளம் வயதில் மல்யுத்த வீராங்கனையாக இருந்த வரலட்சுமி ஒரு தெலுங்கு படத்தை இயக்கி இயக்குனராகவும் வெளிப்பட்டுள்ளார். | |