|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தமிழ் சினிமா இதுவரை...
மறைந்தவர்கள்
2005-ம் ஆண்டில் மறைந்த கலைஞர்கள்
பாலகுரு
இயக்குனர்
(பாக்யராஜ், பார்த்திபன் ஆகிய இருவரும் இவரிடம்தான் உதவி இயக்குனராக தங்கள் திரையுலக வாழ்க்கையை துவங்கினார்கள். சென்னை போரூர் அருகே சாலையோரத்தில் அனாதையாக செத்துக்கிடந்த பாலகுருவின் அருகில் ஜெயகாந்தன் எழுதிய புத்தகம் ஒன்றும் கிடந்ததாம்)
2-1-2005
சிந்து
நடிகை
(சாமிபோட்ட முடிச்சு, பரம்பரை, இணைந்த கைகள் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். பின்பு சின்னத்திரைக்கு வந்து பிரபல நடிகையாக திகழ்ந்தார். பிரபல நடிகை மஞ்சுளாவின் அக்காள் மகள் இவர். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீதி வீதியாக சென்று நிவாரண நிதி திரட்டிய போது மயங்கிவிழுந்த இவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்)
6-1-2005
ஜெமினி கணேசன்

நடிகர்
(எம்.ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன் என்ற வெப்பமிட்ட போட்டோயன்களுக்கு நடுவே குளிர்நிலவாக எல்லோரது மனதையும் கவர்ந்தவர். கனிவான முகம், காதல் காட்சிகளில் மென்மை, நடுத்தர வர்க்க மனிதனை யதார்த்தத்துடன் காட்டிய பாங்கு இவரது சிறப்பம்சம். தேனிலவு, பாசமலர், மிஸ்ஸியம்மா. கணவனே கண்கண்ட தெய்வம், நான் அவனில்லை உட்பட பல வெற்றிப்படங்களின் நாயகன். நுங்கம்பாக்கத்தில் தனது வீட்டில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இயற்கை எய்தினார். இவரது மறைவையட்டி வெளியான பத்திரிகைச் செய்திகளின் தலைப்பு இவ்வாறே இருந்தது 'காதல் மன்னன் காற்றில் கலந்தார்')

22-03-2005
காஞ்சி ரங்கமணி
நடிகர்
முள்ளும் மலரும், தங்கமகன், காதல் போட்டோசு, முரட்டுக்காளை உள்பட 200 படங்களில் நடித்தவர். 62 நாடகங்களை சொந்தமாக எழுதி, தயாரித்து மேடை ஏற்றியவர். இறுதி வரை திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்தவர் தன் 67 வயதில் மறைந்தார்
20-5-2005
ஷாலினி
நடிகை
கும்பகோணம் கோபாலு படத்தில் பாண்டியராஜனுக்கு ஜோடியாக அறிமுகம் ஆனவர் இந்த ஷாலினி என்ற மயூரி. ஏராளமான டி.வி சீரியல்களில் நடித்தவர். மன்மதன், 7ஜி ரெயின்போ காலனி, கனாக்கண்டேன் ஆகிய படங்களில் துணை வேடங்களில் நடித்தவர். திடீரென்று தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 22. இந்த சாவுக்கு காரணம் காதல் தோல்வி என்று கூறப்படுகிறது
15-6-2005
வீரப்பன்
வசனகர்த்தா
கவுண்டமணி-செந்தில் இருவரின் நகைச்சுவை பிரபலம். அதற்கு வசனம் எழுதியவர் இவர்தான். குறிப்பாக கரகாட்டக்காரன் படத்தில் வரும் வாழைப்பழ காமெடி இவருடைய கை வண்ணம்தான். சாகும் நிலையில் கண் தெரியாமல் இருந்தார்.
30-8-2005
ரிச்சர்டு மதுரம்
காமராஜ் படத்தில் தலைவர் காமராஜராக நடித்தவர். உணவுக்குழாயில் புற்றுநோய் காரணமாக இறந்தார். அவருக்கு வயது 70
15-9-2005
கண்ணன்
கவர்ச்சி வில்லன் கண்ணன் என்று அழைக்கப்பட்டவர். எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்தவர். அருப்புக்கோட்டை அருகே அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் பேசி கொண்டிருந்தவர், அந்த மேடையிலியே சரிந்து விழுந்து இறந்தார்
17-10-2005
பானுமதி
நடிகை, தயாரிப்பாளர், பாடகி, என்று சினிமாவின் பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக நடை போட்டவர். எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். நடிப்பு கல்லூரி முதல்வராகவும் இருந்திருக்கிறார். பத்மஸ்ரீ விருதுகள் உள்ளிட்ட பல அரசு விருதுகளை பெற்றவர். சென்னையில் காலமான அவருக்கு வயது 80
25-12-2005
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter