|
வேலை
சுகந்தி
மார்க்கெட்டில் பச்சை காய்கறிகளை பார்த்ததும் எனக்கு அம்மாவின் ஞாபகம் வந்தது. அம்மாவுக்கு பிஞ்சு கத்திரிக்காயும், வெண்டைக்காயும் ரொம்பவும் பிடிக்கும். விலை சற்று கூடுதலாகத்தானிருந்தது. தோட்டத்திலிருந்து நேரடியாக விற்பனைக்கு வரும் காய்கறிகள். சில கத்திரிக்காய்களின் காம்புகளில் இலைகளும் இருந்தன. அதன் காம்பு அமைந்துள்ள பாவாடையில்
சின்ன சின்னதாய் இதமாய் குத்தும் முட்கள்!
வாங்கிக் கொண்டு பையை சைக்கிள் ஹேண்ட் போட்டோல் மாட்டிக் கொண்டேன். அம்மா குக்கரில் அரிசியும் பருப்பும் வைத்துவிட்டு நான் வாங்கி வரும் காய்கறிகளுக்காக காத்திருப்பாள். கத்திரிக்காய் பொரியலும், வெண்டைக்காய் சாம்பாரும் செய்ய சொல்ல வேண்டும்.. அம்மா வைக்கிற சாம்பார் தெரு முழுதும் மணக்கும்.
பெடல் மிதித்தபோது என் பெயரை சொல்லி, ஆனந்த் என்று யாரோ கூப்பிடுவது கேட்டது. போட்டோச்சயமான அந்த குரல் சேதுவினுடையது போலிருக்கவே திரும்பினேன். சேதுதான்!
ஆனந்த்! என்று அழைத்தப்படி ஓடி வந்த அவன் என் கைகளை பற்றிக் கொண்டு எப்படி இருக்கே ஆனந்த்? உன்னை பார்த்து ரெண்டு வருஷமாயிடுச்சே? என்று கேட்கவில்லை. மீனா எப்படி இருக்கா என்று கேட்டான். அடி வயிற்றிலிருந்து விவரிக்க முடியாத ஒரு துக்கம் பஞ்சாக திரண்டு வந்து என் தொண்டையை, நெஞ்சை எல்லாம் அடைத்தது.
மீனா நல்லா இருக்கா என்று சொல்வதற்குள் எனக்கு நாக்கு உலர்ந்து விட்டது. கண்களில் கண்ணீர் திரண்டது. கஷ்டப்பட்டு என்னை அடக்கிக் கொண்டு உனக்கு வேல கெடைச்சிடுச்சா சேது? என்று கேட்டேன்.
கெடைச்சிடுச்சு ஆனந்த்.... அதான் பட்டணத்திலே இருந்து ஓடி வந்திருக்கேன். அந்த நல்ல சேதியை சொல்ல என்று சந்தோஷமுடன் சேது சொன்னபோது என் வயிற்றில் சங்கடமுண்டானது. மீனாவுக்கு கல்யாணமாகி அவள் கணவன் வீட்டிற்கு சென்று விட்டாள் என்பதை சேது அறிந்தால் அவன் எப்படி ஏமாந்து போவான்........ ஏமாற்றத்தில் என்ன செய்வானோ? மீனாவும் சேதுவும் காதலர்கள் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த விஷயமாகத்தான் இருந்தது.
முதலில். பிறகு அது அவள் அப்பாவுக்கும் தெரிந்து விடவே ஒரு அப்பாவுக்கே போட்டோத்தான பொறுப்புணர்ச்சி மீனாவின் அப்பா சபாபதிக்கு உண்டானபோது, காதல் எவ்வளவு வேகமாக மீனா- சேதுவிடையே வளர்ந்ததோ அதே வேகத்துக்கு பிரிந்து போகும்படியாகி விட்டது. மீனா அப்பா சொல்வதிலும் நியாயம் இருக்கிறதை கொஞ்சம் நீ யோசித்து பார்த்தே
ஆகவேண்டும் சேது....... அவர் தன் மகள் மீனாவை உனக்கு கல்யாணம் செய்து கொடுக்க மாட்டேன் என்று சொல்லவில்லை. ஒரு தகப்பன் தனக்கு வருகிற மருமகன் தன் பெண்ணை கண் கலங்காமல் வைத்து காப்பாற்ற வேண்டும் என்று சொல்வதிலும் எதிர்பார்ப்பதிலும் எந்த தவறுமில்லையே சேது? என்றேன் அவனுடன் பார்க்கில் அமர்ந்து.
தன் நிலை போட்டோந்து கொண்டதாலோ என்னவோ சேது தலை குனிந்தபடி உட்கார்ந்திருந்தான். அவன் யோசிக்கத் தொடங்கி விட்டான் என்பது எனக்கு போட்டோந்தது. நீ வேலையில்லாமல் இருக்கிறாய் சேது. வேலையில்லாத ஒருவனுக்கு தன் பெண்ணை எந்த தகப்பனும் கல்யாணம் செய்து கொடுக்க
மாட்டான் என்பது போட்டோயாமலிருக்க நாம் ஒன்றும் சின்ன குழந்தைகள் இல்லை சேது.......
உனக்கும் மீனாவுக்கும் திருமணமாகாமலிருப்பதற்கு தடையாக இருப்பது நீ
வேலையில்லாமலிருப்பதுதான். அதற்கு நீ உன்னைத்தான் நொந்துக் கொள்ள வேண்டுமே தவிர மீனாவையோ அவள் அப்பாவையோ அல்ல சேது......
சேது எழுந்து பேண்ட்டின் பின்புறம் ஒட்டிக் கொண்டிருந்த மண்ணை தட்டியபடி ஆனந்த்...... நீ சொன்னது அவ்வளவும் சரி...... தவறை என் மீது வைத்துக் கொண்டு பிறரை குற்றம் சொல்வதில் அர்த்தமில்லை.... நான் நாளையே மெட்ராஸ் போறேன் என்றான்.
அவன் கைகளை பிடித்து குலுக்கி, முதுகில் தட்டிக் கொடுத்து வெரிகுட் சேது என்ற நான் அவனுக்கு உடனடியாக ஆயிரம் ரூபாய் கொடுத்து, ஆல் த பெஸ்ட் சேது! என்றேன்.
கண்களில் நீர் மல்க ஆனந்த்...... இந்த பணத்தின் ஒவ்வொரு காசையும் விரைவில் எனக்கொரு வேலை கிடைக்க மட்டுமே செலவழிப்பேன் என்று நாதழுதழுக்க கூறினான் சேது. பிறகு, ஆனந்த்..... வேலை கிடைத்து நான் இந்த ஊருக்கு வரும்வரை மீனா எனக்காக காத்திருப்பாளா? என்று கேட்டான்.
அவளிடமே கேட்டு தெரிந்துக் கொள் சேது. அதுதான் உனக்கு மனபலத்தை கொடுக்கும் என்றேன். மீனாவிடம் கேட்டான் சேது. காத்துக் கொண்டிருப்பேன் சேது......சேது ஊருல மீனா எனக்காக எவ்வளவு காலம் வேண்டுமானாலும் காத்துக் கொண்டிருப்பாள் என்ற எண்ணத்தோடு வேலை தேடும் முயற்சியில் ஈடுபடாதீர்கள். அது உங்கள் முயற்சியின் வேகத்தை குறைத்து விடும். மீனாவை கல்யாணம் செய்து கொள்ள நான் வேலை செய்து சம்பாதிக்கிறவனாக ஆக வேண்டும் என்று மட்டும் ஒவ்வொரு கணமும் நினையுங்கள்! என்றாள் மீனா. அவள் கண்கள் கண்ணீரை பெருக்கின.
மீனாவின் கண்ணிரை துடைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டான் சேது.
சேது..... நான் ஒரு பெண் என்பதை மறந்து விடாதீர்கள் என்று சொல்லி அவனை வழியனுப்பினாள் மீனா.
திருநெல்வேலி சந்திப்பில் நெல்லை எக்ஸ்பிரஸ்சில் சேதுவை நான் ஏற்றிவிட்ட பொழுது மீனாவும் வந்திருந்தாள். கண்கலங்க அவள் அவனை பார்த்து கொண்டிருந்தாள். பிரிவு துயரத்தில் அவள் மார்புகள் லேசாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தன. ரயில் ஜன்னலில் வைத்திருந்த மீனாவின் கைமீது தன் கையை வைத்து, வெகு விரைவில் சம்பாதிக்கிற ஒரு ஆண்மகனாக வந்து இந்த கைகளை பிடிப்பேன் என்று சேது சொன்ன பொழுது மீனாவுக்கு மட்டுமல்ல எனக்கும் அவன் ஒரு வேலை தேடி கை நிறைய சம்பாத்யத்துடன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கை உண்டாயிற்று. அது வெகு சீக்கிரம் பொய்த்து விட்டது.
சேது சென்னைக்;கு சென்று விளையாட்டு போல ஒரு வருடம் ஆகிவிட்டது. அவனுக்கு வேலை கிடைத்ததா, கிடைக்கவில்லையா அல்லது வேலை கிடைத்து சென்னையில் வேறு ஏதாவது ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு விட்டதா? வேலையே கிடைக்காதுபோய் அதை எனக்கும் சரி மீனாவுக்கும் சரி தெரிவிக்காமலிருக்கிறானா? ஒன்றுமே போட்டோயவில்லை.
சேது சென்னை செல்லும்முன் மீனா அவனிடம் நான் ஒரு பெண் என்று சொன்னது ஒரு கால அளவுக்குப்பிறகு என்னை மீறிக் கொண்டு நான் எதுவும் செய்யமுடியாது என்கிற தன் பலவீனத்தை வெளிபடுத்தித்தான் என்பது நாளைடைவில் தெரிந்துவிட்டது. சேது என்ன ஆனான் என்கிற தகவல் எதுவும் தெரியவே தெரியாது போகவே மீனாவின் அப்பா அவளுக்கு
ஒரு வரன் பார்த்து விட்டார். பையன் நல்ல வேலையிலிருந்தான். ஆயிரக்கணக்கான ரூபாய் சம்பளம். வீடு வாசல் இருந்தது. கார்கூட இருந்தது. கூடப்பிறந்தவர்கள் எவருமில்லை. அப்பா, அம்மா மட்டும்தான். மீனாவின் அதீத அழகும் சாந்தமான தோற்றமும் பிள்ளையை மிகவும் கவர்ந்துவிட்டன. சேது வருவான் என்ற நம்பிக்கை தளர்ந்து போன மீனா அப்பா அம்மாவின் முடிவுக்கு எதிராக செயல்பட திராணியற்று போனாள். என்னிடம், உங்கள் நண்பர் வரமாட்டாரா, வரவே மாட்டாரா? என கேட்டு அழுவாள். நம்பிக்கையாக என்ன பதில் அவளுக்கு நான் கொடுப்பேன்? உனக்கு வேலை கிடைத்ததில் ரொம்ப சந்தோஷம் சேது என்ற நான், எவ்வளவு சம்பளம் என்று கேட்டேன்.
இரண்டாயிரம் ரூபாய் என்றான் சேது என்னவோ லட்சரூபாய் சம்பளம் என்பதுபோல.
வேலை மெட்ராசில்தானே சேது?
ஆமாம்.
அறைவாடகை எவ்வளவு?
எழுநூற்றைம்பது
சாப்பாட்டுக்கு?
கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய்.
துணிமணி, பஸ் மற்ற செலவுகளுக்கு?
மிச்ச ரூபாய்தான்.
போதுமா?
எப்படி போதும்? என்று திருப்பி கேட்ட சேது, மாசக்கடைசியிலே அம்பது நூறு கைமாற்று
வாங்கித்தான் வண்டி ஓடுது என்றான்.
பிறகு ஆனந்த்....... நான் உடனே மீனாவை பார்க்க வேண்டும். நான் மெட்ராஸ் செல்லும்போது அவள் அப்பாவுக்கு டிரான்ஸ்பர் வரப்போகிறது என்று சொல்லி கொண்டிருந்தாள் மீனா....... அவள் இங்கேதான் இருக்கிறாளா அல்லது ஏதாவது வெளியூருக்கு போய் விட்டாளா? என்றான்.
வெளியூர் போய்விட்டாள் மீனா.
உடனடியாக மீனாவை பார்க்க முடியாது என்கிற ஏமாற்றமும் ஏக்கமும் சேதுவின் முகத்தில் தெரிந்தது.
சேது...... மெட்ராஸ் போனபின் இன்றுவரை உன்னைப் பற்றி எதுவுமே எனக்கும் சரி, மீனாவுக்கும் சரி ஏன் தெரிவிக்கவில்லை என்று கேட்டேன். வேலை சரிவர கிடைக்கவில்லை ஆனந்த். நீ கொடுத்த ஆயிரம் ரூபாய் சில நாட்கள் தாக்கு பிடிக்கத்தான் உதவியது. அதற்குப்பிறகு என் வயிற்றை கழுவிக் கொள்ள கொஞ்சம் சம்பளத்தில் சின்ன சின்ன வேலைகள் கிடைத்தன. அந்த வேலைகளும் சம்பாத்தியமும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லாததால் உங்களை மனம் தளர வைக்க வேண்டாம் என்றுதான் தெரிவிக்கவில்லை ஆனந்த்..... இப்பொழுதுதான் இரண்டாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தது. உடனே ஓடி வந்துவிட்டேன் ஆனந்த்..... எனக்கு வேலை கிடைத்து விட்டது. மீனாவின் அப்பா எனக்கு அவளை கொடுக்க இனிமேல் தடை சொல்ல முடியாது! என்றான் சேது.
நான் மௌனமாக இருந்தேன். ஆனந்த்....... மீனா......அதற்குமேல் எனக்கு மூடி மறைக்க முடியவில்லை. மீனாவுக்கு கல்யாணமாகிவிட்டதை சொன்னேன்.
அதைக் கேட்டதும் சேதுவின் முகம் சிவந்தது. உதடுகள் துடித்தன. என்னை மீனா ஏமாற்றி விட்டாள். அவளுக்காக நான் பட்ட கஷ்டங்கள், துன்பங்கள் வீணாகிவிட்டன. என்னுடன் வாழாது போய்விட்ட மீனாவை இன்னொருவனுடன் வாழ விடமாட்டேன்..... வாழ விடவே மாட்டேன்.... என்ன செய்ய போற சேது?
அவள் எழுதிய காதல் கடிதங்கள் என்னிடம் உள்ளன. அவைகளை கொண்டுபோய் அவள் கணவனிடம் கொடுத்து அவள் சந்தோஷமான வாழ்க்கையை நிர்மூலமாக்கிடுவேன். அவளை அழச் செய்வேன். வேண்டாம் சேது, வேண்டாம் என்றேன்.
கேட்கவில்லை அவன். என் அம்மாவிடம் மீனாவின் வெளியூர் விலாசத்தை வாங்கிக் கொண்டு அப்பொழுதே சென்றுவிட்டான் சேது. என்ன ஆகப்போகிறதோ மீனாவின் வாழ்க்கை என்று கதி கலங்கிப் போனேன்.
இரண்டு நாள் கழித்து திரும்பி வந்தான் சேது. அவனது தோற்றம் அமைதியாக இருந்தது. கண்களிலிருந்த பழிவாங்கும் பார்வையை காணோம். உதடுகள் அமைதியாக இருந்தன. சேது மீனாவை பாத்தியா? என்றேன்.
பாத்தேன் ஆனந்த்.... என்றான் சேது.
அவள் கணவனை?
அவனையும்.
மீனாவை பழிவாங்க அவள் கணவனிடம் அவள் எழுதிய காதல் கடிதங்களை கொடுத்து விட்டாயா?
இல்ல
ஏன்?
இரண்டு நாட்களுக்கு முன்பு நான் வந்தபோது நீ என் சம்பளத்தையும் என் செலவு விபரங்களையும் கேட்டாய் அல்லவா ஆனந்த்..... அதன் பொருள் மீனாவையும் அவள் வாழ்கிற வாழ்க்கையின் செழிப்பையும் பார்த்த பொழுதுதான் எனக்கு போட்டோந்தது. அதனால்தான் கொடுக்கவில்லை என்றான் சேது.
என்ன சொல்றே சேது?
மீனாவின் கணவன் மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கிற வேலை பார்க்கிறான். அது தவிர தனிப்பட்ட முறையில் ஏதோ பிஸினெஸ் செய்கிறான். பணம் கொட்டுகிறது. கார், பங்களா, அன்பான கணவன், லட்சலட்சமாக பணம், வேலையாட்கள் என்று மீனா அமோகமாக இருக்கிறாள். ஒரு பெண்ணின் சந்தோஷ வாழ்க்கைக்கு என்னவெல்லாம் தேவையோ அவ்வளவும் அவளுக்கு திருமணம் மூலம் கிடைத்திருக்கிறது. இரண்டாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் நான் சென்னையில் அவளை குடித்தனம்
வைத்து ஒரு வேளை சாப்பாடு கூட போட முடியாது. வருஷத்துக்கு இரண்டு சேலைகூட வாங்கிக் கொடுக்க முடியாது. வறுமையிலும் கஷ்டத்திலும் வாழ்ந்துக் கொண்டிருப்பாள் மீனா. காதலித்தவனை கல்யாணம் செய்துக் கொண்டு விட்டோம் என்கிற மனதிருப்தி வேண்டுமானால் அவளுக்கு ஒரு சில மாதங்கள் மட்டும் ஏற்பட்டிருக்கும். ஆனால் மனதிருப்தி ஒன்று மட்டுமே வாழ்வதற்கு போதாதே ஆனந்த்! மீனா
இன்று நல்ல நிலையில் இருக்கிறதை பார்க்கிற போது எனக்கு நல்ல வேலை கிடைக்காது போனதுகூட நல்லதாகத்தான் தோன்றுகிறது..... மீனா எனக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை ஆனந்த். அவள் எனக்கு எழுதிய காதல் கடிதங்கள் என்னிடம் உள்ளன. அவைகள் எனக்கு ஆறுதல் அளிக்கும் என்று
சேது சொன்ன பொழுது அவன் முகத்தில், பேச்சில் பெரிய அமைதி தெரிந்தது எனக்கு. |