Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
பிளஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - பிளஸ் ரிசல்ட் : நாமக்கல் மாணவி முதலிடம் - பிளஸ் ரிசல்ட் : முதல் 4 இடத்தையும் தட்டிச்சென்றது நாமக்கல் - கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மாதிரி எரிபொருள் அகற்றும்பணி தீவிரம் - ஆந்திராவில் ரெயில்கள் மோதி தீ பிடித்து 14 பேர் பலி - இலங்கை: இந்தியா ஒப்பந்தத்தை அனுமதித்திருந்தால் எந்த துன்பமும் வந்திருக்காது : ஞானதேசிகன் - இலங்கை சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் : சீமான் கோரிக்கை

உணர்வுகள் தொடர்கதை

செந்தில் குமார்

ரொம்ப திட்டிட்டேனா, அந்த பொண்ணை. சுரேஷின் மடியில் இருந்து முகம் பார்த்து கேட்டாள் மாலா.

இல்லம்மா.

இல்லீங்க, உங்க கூட அவ்ளோ க்ளோசா நிக்கும் போது என்னால தாங்க முடியலை. சாரிங்க.

என்ன இது குழந்தையாட்டம், உன் புருஷன் கூட யார் பேசினாலும், நீ அடிக்கலாம், உதைக்கலாம், சண்டை போடலாம் அது போட்டோமைம்மா. தலை கோதினான் சுரேஷ்.

உங்களை லவ் பண்ணி உங்களை கட்டிக்கணும்னு எல்லாத்தையும் விட்டுட்டு உங்ககூட ஓடி வந்தவ நான். எனக்கு எல்லாமே நீங்கதான், இடையில யாருமே வரக்கூடாதுங்க, என்னால தாங்க முடியாது. உச்சி முடியில் இருந்து உள்ளங்கால் வரைக்கும் எனக்கு மட்டும்தான். எழுந்து கட்டி அணைத்தாள் மாலா. என் மேல சத்தியமா-

மாலா. உன் மேல வேண்டாம் என் மேல சத்தியமா, அப்படி ஒண்ணும் நடக்காது. தன் தலை மீது கை வைத்து சொன்னான் சுரேஷ். என்னதான் இருந்தாலும் வயசு வந்த பொண்ணை நான் நாலு பேர் முன்னாடி அப்படி பண்ணி இருக்க கூடாது. பாவம் அவ...... மெல்ல மெல்லமாய் சுரேஷின் மார்பின் மீது தூங்கிப் போனாள் மாலா அலுவலகம் செல்ல லிப்ட் ஏறினான். உள்ளே ஸ்வப்னா இவனையே பார்த்து கொண்டிருந்தாள்.

ப்ளீஸ்.... கொஞ்சம் வெளியே வாங்க படில போகலாம், உங்க கூட பேசணும். மெல்லமாய் ஏறினார்கள். சுரேஷ் ஆரம்பித்தான். மன்னிச்சுக்குங்க, நாம சாதாரணமா பேசிட்டு இருந்ததை, அவ தவறா போட்டோஞ்சுக்கிட்டா.

இல்ல அவங்க தவறா நினைச்சது கரெக்ட்தான். கேள்வியோடு திரும்பினான் சுரேஷ்- முதல் மாடி சமீபித்திருந்தார்கள்.

ஆமாம் நீங்க எப்படி பழகறீங்கன்னு எனக்கு தெரியாது, ஆனா நான் உங்களை பார்த்ததில இருந்து உங்ககூட வாழ்ந்துக்கிட்டு வர்றேன் என்று சொல்லி தலை குனிந்தாள் ஸ்வப்னா.

விளையாட்றியா

விளையாட்டு இல்ல நிஜம். -நிமிரவில்லை ஸ்வப்னா.

இது என்ன மடத்தனம். அழகு, படிப்பு, வசதி, நல்ல பேரண்ட்ஸ் இருந்து இது மாதிரி நினைக்கிறது அபத்தம். சுதாரித்து திரும்பிய சுரேஷ், உனக்கு பின்னாடி சுத்தற வயசு பசங்க எத்தனை தெரியுமா? உனக்கு தெரியாது. எனக்கு தெரியும். -கோபமாய் சொன்னான் சுரேஷ்.

எனக்கு தெரிய தேவையில்லை. உங்களை மனசுக்குள்ளே கொஞ்சம் கொஞ்சமா இன்சர்ட் பண்ணிட்டேன்- காசு பணம் இருக்கான்னு பார்க்கலை உங்களோட அப்பியரன்ஸ் எதுவுமே எனக்கு தெரியல. காரணம் தெரியாம காதலிக்க ஆரம்பிச்சு இப்ப மூழ்க ஆரம்பிச்சிட்டேன். உண்மையான லவ் எதுவுமே பார்க்காது. இன்குலூடிங் மெரிட்டல் ஸ்டேட்டஸ். ஸோ உங்க அட்வைஸ் வேஸ்ட். அலுவலகம் சமீபித்திருந்தது.

வர்றேன் கோபமாய் சீட்டுக்கு சென்றான். பார்த்துக் கொண்டே இருந்தாள் ஸ்வப்னா. அலுவலகம் முடிந்த நேரம் சுரேஷ் ஸ்வப்னாவிடம் வந்தான். உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்று மொட்டை மாடிக்கு அழைத்து சென்றான்.

ஏன் ஏன் இப்படி பண்றே- அயவரசநன இல்லாம... பதினாறு, பதினேழு வயசு பொண்ணுங்க மாதிரி என்றான் சுரேஷ். போட்டோயன் மறைந்துக் கொள்ள ஆயத்தமானான். சுரேஷ்,

காதலிக்க ஆரம்பிச்சிட்டா, முதிர்ச்சி இத எல்லாத்தையும் மறந்திடனும், ஒரு தவம் மாதிரி- ஊடி«உநவேசயவ¬டி« ன¬எநசவ ஆகாம கடவுளை நினைச்சி தியானிக்கிற மாதிரி உங்களை நினைச்சி உருகி உருகி கரைந்து போகனும். மீரா மாதிரி....... ஸ்வப்னா.

ரொம்ப சினிமா பார்ப்பியா?

ஏன்? சினிமா எங்களுக்கு காதல் சொல்லித் தர தேவை இல்லை, நாங்க தான் சினிமாவுக்கு காதல் சொல்லி தருவோம்- ஆங், சினிமான்னு சொன்னவுடனே ஞாபகம் வருது! அஜீத், விஜய்க்கு கல்யாணம் ஆன பிறகும் இரண்டாந்தாரமா ஏன் மூன்றாந்தாரமா கூட இருக்க இன்னும் எத்தனை பொண்ணுங்க தயாரா இருக்காங்க தெரியுமா?

அது எனக்கு தேவையில்லாத விஷயம். பாப்புலாரிட்டி பணம்தான் தாரங்களோட எண்ணிக்கையை முடிவு பண்ணுதுன்னா, சாரி நான் அதற்கு
உடன்படமாட்டேன். ஆர்வமாய் திரும்பினாள் அங்கு சுரேஷ் இல்லை.

மேனேஜர் அறை

சார் எனக்கு சென்னைக்கு ட்ரான்ஸ்பர் வேணும் என்றான் சுரேஷ். ஏன் தம்பி இங்க என்னாச்சி அந்த கிழ மேனேஜர் ஆர்வமாய் கேட்டார். சில பர்சனல் காரணங்களுக்காக நெற்றி சொறிந்தான்.

உங்களோட சர்வீஸ் இந்த பிராஞ்சுக்கு வேணும் தம்பி. விடாப்பிடியாய் கிழம்.

ப்ளீஸ் ஸார்.

எந்த ஆப்ளிகேஷனுக்கும் வர்றாதவன் நீ. ஓகே..... ஹெட் ஆபிஸ§க்கு ரெகமண்ட் பண்றேன் சோகமாய் சொன்னார் மேனேஜர்.

தேங்க்ஸ் சார். வெளியேறினான் சுரேஷ். சில வாரங்களுக்கு பிறகு, அமைதியாய் இருந்த வீட்டில் ஆர்ப்பாட்டமாய் நுழைந்து மாலா, எல்லாத்தையும் பேக் பண்ணு, ட்ரான்ஸ்பர் கிடைச்சிடுச்சி, நாளைக்கே சென்னைக்கு போறோம்.

சரிங்க என்று உள்ளறையில் இருந்து குரல் கொடுத்தாள் மாலா. சமையல் செய்யாதே- வெளியே போறோம். அப்படியே ஓட்டல்ல சாப்பிட்டு வந்திடறோம் ஓகே...... சத்தியத்தை காப்பாற்றிய நிம்மதியில் உரக்க குரல் கொடுத்தான் சுரேஷ்.

சில மாதங்களுக்கு பிறகு சென்னையில் குடும்பத்துடன் எங்கோ சென்று விட்டு ஆட்டோவில் திரும்பி கொண்டிருந்த சுரேஷ் பார்வையில் ஜீப்ரா லைனில் மவுண்ட் ரோட்டை கிராஸ் செய்துக் கொண்டிருந்த ஸ்வப்னா பட்டாள்.

ஆட்டோ.... ஸார் ஆட்டோ நிறுத்துங்க... என்று பதட்டமாய் கத்தினான். நின்றது. இறங்கினான். குழந்தையை கூட்டிக்கிட்டு வீட்டுக்கு போ நான் பின்னாடியே வர்றேன். பணம் கொடுத்தான். யாருங்க ஆர்வமாய் கேட்டாள் மாலா.

ஃபிரண்டு. என் கூட வேலை செய்தவன்! பதிலுக்கு காத்திராமல் ஓடினான் சுரேஷ். ஆட்டோ சீறியது. ஸ்வப்னா பின்னால் ஓடி, அருகே சென்ற பின் குரல் கொடுத்தான்.

சொல்லுங்க சுரேஷ் மெல்லமாய் திரும்பினாள் ஸ்வப்னா.

நான்தான் கூப்பிட்டேன்னு எப்படி......?

தெரியும்.......... காதல்.

கண்ணில் கருவளையத்துடன், கண்ணாடியும் அணிந்து தேஜஸ் ஆக தெரிந்தாள். உனக்கு கல்யாணம்.........?

எனக்கு தெரியாம நீங்க ஓடிட்டா உங்களை மறந்துட்டு நான் கல்யாணம் பண்ணிப்பேனா என்று கேட்டு சிரித்தாள் மின்னல் கோடாய்.

நீ என் பக்கத்தில பார்வையில இருந்தப்போ உன் ஞாபகமே கிடையாது. உன்னை விட்டு வந்த பிறகு இப்போ எப்படி இருப்பேன்னு அடிக்கடி நினைச்சி பார்க்கிறேன். ஆனாலும் அது காதல் இல்லை,

இரக்கம். உன் லைப் வீணாயிட கூடாதேன்னு இரக்கம் தலை குனிந்தான். தெருவில் வாகனங்கள் வேகமாய் கிறீச்சிட்டு கொண்டு இருந்தது. அது முதல் படி. வருவீங்க. என்னை மாதிரி, முக்தி நிலைக்கு நீங்களும் வருவீங்க. காதல் ஒரு தவம் மாதிரி, அதிலேயும் முக்தி உண்டு. முக்தின்னா என்ன தெரியுமா?ஆவலாய் அவள் கண்களை பார்த்தான்.

நீங்க இந்நேரம் என்ன பண்ணுவீங்க, என்ன பேசுவீங்க- உங்களையே நினைச்சி எல்லாத்தையும் முன்னாடியே கிரகிக்கிற விஷயம். நீங்க எதிர்ல இல்லாமலே உங்களோட பேசறது. உங்க ஆன்மாவோட உறவாடறது எல்லாத்துக்கும் மேல, அஃறினை கூட நீங்கன்னு நினைச்சா அது நீங்களாயிடும் என்று பேசிக் கொண்டே போனாள் ஸ்வப்னா. திடமாய், தீர்க்கமாய் பேசினாள். ஏனோ அவள் பேசுவதை கேட்டு கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது சுரேஷ§க்கு. ஆறுதலாய் பேச வேண்டும் போல் தோன்றியது. கண்கள் திரை கட்டியது போல் மங்கலாய் தெரிந்தது.

நானும் காதலிக்கிறேனா? மனதிற்குள் நினைத்தது ஸ்வப்னாவுக்கும் கேட்டது போல் பேசினாள். ஆமாம் நீங்க என்னை நேசிக்கிறீங்க, வெளியே சொல்ல பயப்படறீங்க. வெளியே சொல்ல தைரியம் வர்ற வரைக்கும் என்னை நல்ல ஃப்ரண்டா நினைச்சுக்குங்க, வேதாந்தமாய் கொட்டினாள்.

இன்னொரு விஷயம் நம்ம உறவுக்கு நீங்க சரி சொன்னாலும் ஒரேயரு கண்டிஷன் என்றாள் ஸ்வப்னா. நமக்கு குழந்தை கிடையாது. காரணம், குழந்தை மூலமா பொருளாதார சிக்கல் வந்துறக்கூடாது. காதல் காயம் பட நான் விடமாட்டேன். இது எல்லாமே எல்லாருக்கும் சரின்னு சொல்லலை எனக்கு சரி. எனக்கு மட்டும் சரி. வர்றேன் என்று ஏக்கமாய் பார்த்தாள். எதிர்பார்ப்பேன் என்று அட்ரஸ் எழுதி கையில் கொடுத்தாள். உற்று படித்து விட்டு கிழித்தெறிந்தான் சுரேஷ்.

இவ்ளோ சொல்லியும், என்னை போட்டோஞ்சுக்கலை -கலங்காத ஸ்வப்னா கலங்கினாள். மெல்லமாய் தலை நிமிர்ந்து பார்த்தான். இந்த அட்ரஸை பர்சுக்குள்ள வச்சிக்கறதை விட மனசுக்குள்ளே வச்சிக்கறது தான் ஸேஃப். திரும்பி நடந்தான் சுரேஷ்.

என்னுள் உனை வாங்கி
உன்னுள் எனை வாங்கி
உயிருக்கு உயிர் வாழாமல்
உணர்வுக்கு உயிர் வாழ்வதே
காதல்!
எங்கேயோ படித்த ஞாபகம்.

 

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter