Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
பிளஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - பிளஸ் ரிசல்ட் : நாமக்கல் மாணவி முதலிடம் - பிளஸ் ரிசல்ட் : முதல் 4 இடத்தையும் தட்டிச்சென்றது நாமக்கல் - கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மாதிரி எரிபொருள் அகற்றும்பணி தீவிரம் - ஆந்திராவில் ரெயில்கள் மோதி தீ பிடித்து 14 பேர் பலி - இலங்கை: இந்தியா ஒப்பந்தத்தை அனுமதித்திருந்தால் எந்த துன்பமும் வந்திருக்காது : ஞானதேசிகன் - இலங்கை சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் : சீமான் கோரிக்கை

உம்மணாம்மூஞ்சி
அகத்தியா

பெரிய பெரிய தூங்கு மூஞ்சி மரங்களில் ஏதோ ஒரு கிளையில் உட்கார்ந்து கொண்டு அந்த காக்கை கரைந்தது. பதிலுக்கு தலையை உயர்த்தி கா, கா என்று கத்தியிருக்கலாம். நான் பேசாமலிருந்து விட்டேன். வேறொரு மயமாயிருந்திருந்தால் கையை சுடுவது போல் நீட்டி, அது பயத்துடன் இறக்கையை அடித்துக் கொண்டு பறப்பதை ரசித்திருக்கலாம். இப்போது அது முடியாது. வரிசையிலிருந்து லேசாய் நகர்ந்தாலும் பார்வதி டீச்சருக்கு தெரிந்து விடும்.

ஒவ்வொரு காலை நேரமும் அவஸ்தையாய்த்தான் ஆரம்பிக்கிறது. கால் இடுக்கில் இரண்டு கைகளையும் குறுக்கிக் கொண்டு, மரவட்டை போல் படுத்துக் கிடக்கையில் அம்மா எழுப்புவாள். எழுந்து, கணபதி கடைக்குப் போய் டீ வாங்கி வர வேண்டும். மாட்டுக்கு வைக்கோல் பிடுங்கி கவணையில்
போட்டுவிட்டு குளக்கரைக்கு போனால் யாரிடமும் பேசாமல் உம்மணாம் மூஞ்சியாய் இருக்கும் குளம்! பொத்தென்று விழ வேண்டும். நீண்டு முன் நெற்றியில் விழும் தலைமுடியை காயவைக்க நேரம் இருக்காது. வயிறு முட்ட பழையது தின்று விட்டு இங்கு வந்தால் பத்து நிமிடமாய் வரிசையில் நின்று கொண்டு ஒரே நீராடும் கடலுடத்த வை ஆயிரத்து ஓராவது தடவையாய்க் கேட்டுத் தொலைக்க வேண்டும்.

ஆட்டு மந்தையைப் போல் எல்லோரையும் நிற்க வைத்து பிரேயர் என்ற பெயரில் டிசிப்ளின் சொல்லிக் கொடுப்பார்கள். ஜன கன மண கண பாடும்போது, குண்டு போட்டால் கூட அசையக்கூடாது என்று அவ்வப்போது டீச்சர் கிளாசில் சொன்னது மனசிலேயே நிற்கும். ஆனால் அந்த நேரம் பார்த்துதான் காலில் எறும்பு ஊரும். நடு முதுகில் அரிக்கும். பல்லைக் கடித்துக் கொண்டு நிற்க வேண்டும். லேசாய் அசைந்தாலும் பார்வதி டீச்சருக்கு தெரிந்து விடும். அசைந்த மாணவன் மட்டும் ஓரம் கட்டப்படுவான். அதன் பிறகு எத்தனை பிரம்புகள் உடையுமோ, அந்த ரவீந்திரநாத் தாகூருக்கே வெளிச்சம்! அடிக்கும் போது எங்கள் அழுக்கு சட்டைக்கும் சேர்த்து அடி விழும். புழுதி படிந்த கிராமத்தில் அழுக்கு சட்டைகளே அதிகம் என்பதை யார் சொல்வது டீச்சரிடம். மொட மொட பருத்திப் புடவையும், மெல்லிசாய் பிரேம் போட்ட கண்ணாடியும், கண்டிப்பு நிறைந்த பார்வையும் கலந்தால், பார்வதி டீச்சர்.

டீச்சர் சிரித்து பார்த்தவர்கள் அந்த ஊரில் யாராவது இருக்கிறார்களா என்று விசாரிக்க வேண்டும். இல்லையென்றால் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு டீச்சரிடமே கேட்டுத் தொலைக்க வேண்டும். ஆனால் எனக்கு டீச்சரிடம் ரொம்ப பிடித்த விஷயம் அந்த ரோஜா! டீச்சரின் கண்டிப்புகளையும் மீறி, காதோரத்தில் உட்கார்ந்து கொண்டு லேசாய் சிரிக்கும். அதுவும் இல்லையென்றால் பார்வதி டீச்சர் எப்படியிருப்பார்? கற்பனை செய்யவே கொஞ்சம் பயமாக இருந்தது.

பார்வதி டீச்சருக்கு மட்டும் ஏன் இந்த கோபம்? டிசிப்ளின் என்பது பார்வதி டீச்சருக்கு மட்டும் கண்டு பிடிக்கப்பட்ட வார்த்தையா? அழுக்கு சட்டையும் முன் நெற்றியில் விழும் முடியும் டீச்சரை மட்டும் காயப்படுத்துவது ஏன்? கேட்டால்தான் என்ன. கேட்டுவிட வேண்டும். இன்றே, இப்போதே ஒத்திகை பார்த்துக் கொண்டேன்.

டீச்சர்! மொதல்ல அடிக்கறத நிறுத்துங்க. இந்த அழுக்கு சட்டய வேணும்னு போடல. அடிக்கடி துவைச்சா இன்னொரு புது சட்டைக்கு, எனக்கு அடுத்த தீபாவளி வரணும். முன் நெற்றியில் விழும் இந்த முடியை வேணும்னு வளத்ததில்லை. ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவைதான் அம்பட்டனுக்கு காசு கொடுக்கணும். இது வீட்ல அப்பாவோட சட்டம். மத்த வாத்தியாருக்கு இல்லாத கோபம் உங்களுக்கு மட்டும் ஏன்? இதுக்கு பிறகு அடிக்கறதுன்னா அடிங்க. உங்க இஷ்டம். பேசி விடலாமா? ஒன்பதாவது படிக்கிற பையன் இதைவிட அதிகமாய் வேறென்ன பேசிவிட முடியும்? ஒரு முடிவோடு என் அழுக்கு சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பினேன். போகிற வழியில்தான் பார்வதி டீச்சர் வீடு. வாசலில் பெரிசாய் போட்டிருக்கும் கோலமும், இரண்டு புறங்களும் பூத்திருக்கும் பூச்செடிகளும், பார்க்கவே அற்புதமாயிருக்கும். பூக்கள் இறைந்து கிடக்கும் டீச்சர் வீட்டு வாசலுக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல வரட்டி காயும் என் வீட்டு வாசல்! பூக்கள் அழகுதான். ஆனால் அதுவே பசி தீர்த்து விடாது.

இதை டீச்சரிடம் சொல்ல வேண்டும் முகத்திலடித்தது மாதிரி. ஆவேசத்துடன் கால்களை எட்டி வைத்தேன். போஸ்ட் ஆபிஸ் தாண்டியதும் டீச்சர் வீட்டில் கொஞ்சமாய் கூட்டம் தெரிந்தது. என்னவாக இருக்கும்? வீட்டை நெருங்க நெருங்க ஆளாளுக்கு பேசிக் கொண்டிருந்தார்கள். இடுக்கில் புகுந்து உள்ளே நுழைந்தேன். அதிர்ச்சியாய் இருந்தது. டீச்சர் தலையிலிருந்து ரத்தம் வழிந்துக் கொண்டிருந்தது. மொட மொட பருத்தி புடவையில் முகத்தை மூடிக் கொண்டு விசும்பிக் கொண்டிருந்தார், பார்வதி டீச்சர். எதிரே நின்று கத்திக் கொண்டிருந்த அந்த ஆள் நன்றாக குடித்திருப்பான் போலிருந்தது. அவன் போட்டிருந்த சட்டை துவைத்து பல நாளாயிருக்கும். லுங்கியை வழித்து தொடைக்கு மேல் கட்டியிருந்தான். வெளியே தெரிந்த அன்டிராயரின் பாக்கெட்டில் சாராய பாட்டில் துருத்திக் கொண்டிருந்தது.

டேய், இது எனக்கும் என் பொண்டாட்டிக்கும் உள்ள பிரச்சனை, அவனவன், அவனவன் வேலய பாருங்க. நான் அவள அடிப்பேன் உதைப்பேன், அத கேக்க நீங்க யாரு? போங்கடா டேய். அவன் போதையின் உச்சத்தில் கத்திக் கொண்டிருக்க, கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் கலைந்தது. இப்போது டீச்சரை தெளிவாக பார்க்க முடிந்தது. டீச்சரின் தலையில் இருந்த ஒற்றை ரோஜா பாதியாய் சிதைந்து தலையில் கொஞ்சமும் தரையில் கொஞ்சமுமாய் இறைந்து கிடக்க, நான் திரும்பி நடந்தேன். டீச்சர் ஏன் டிசிப்ளின் விஷயத்தில் கண்டிப்பாய் இருக்கிறார் என்று லேசாய் போட்டோய ஆரம்பித்தது.

 

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter