|
நேரம் வந்தாச்சு
தென்கச்சி சுவாமிநாதன்
சார் என்ன யோசிக்கிறீங்க?
அடுத்தபடியா என்ன நாவல் எழுதலாம்ன்னு யோசிக்கிறேன்.
நீங்க தொடர்ந்து எழுதணும். நிறைய எழுதி குவிக்கணும். அதான் என்னோட ஆசை.
எனக்கு இப்படி ஒரு விசிறியா? ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. நீ என்னை போட்டோஞ்சுகிட்ட அளவுக்குக்கூட பத்திரிகைகாரங்க போட்டோஞ்சுக்க மாட்டேங்கறாங்க. அதை நினைச்சாத்தான் வருத்தமா இருக்கு.
அதை பொருட்படுத்தாதீங்க சார். நீங்க எழுதிகிட்டேயிருங்க. மேல் நாட்டு எழுத்தாளர் ஒருத்தர் அப்படிதான்... பல நாடகங்களை எழுதினார். அவருடைய படைப்புகளைப் பிரசுரிக்கறதுக்கு யாரும் முன்வரலை! பசியாலும் பட்டினியாலும் வாடினார். ஒரு நாள் அவருடைய நாடகங்கள் அத்தனையையும் ஒரு மூட்டையா சுமந்துகிட்டு போய் ஒரு மளிகைக்கடையில் எடை போட்டு வித்துட்டார்! மளிகைக் கடைக்காரர் ஒவ்வொரு ஏடாக் கிழிச்சு பொட்டலம் கட்டறப்போ சில பக்கங்கள் அவர் கண்ணுலபட்டது. அற்புதமா தெரிஞ்சுது. உடனே அவரே ஓடிப்போய் ஒரு பதிப்பாளர்கிட்டே சிபாரிசு பண்ணினார். அதுவரைக்கும் பொட்டலம் கட்டப்படாமல் இருந்த பல நாடகங்கள் அச்சாகி
வெளிவந்தது. அதுக்கப்புறம் அந்த நாடக ஆசிரியருக்கு நல்ல கிராக்கி!! ஏகப்பட்ட புகழ., பணம் எல்லாம் வந்து சேர்ந்தது!!!
யார் அவர்?
அவருதான் பிரபல நாடக ஆசிரியர் இப்சன்.
அவரு மாதிரியே நானும் ஒருநாள் பிரபலமாவேன்.
அதுக்கு நேரம் வந்தாச்சி! அதுதான் நான் வந்திருக்கேன் எங்க படைப்புகளை வாங்கறதுக்கு.
ரொம்ப நன்றி. எந்த பதிப்பகம் நீங்க?
பதிப்பகம் இல்லே சார். பலசரக்கு கடை.
நன்றி-வானதி பதிப்பகம் |