Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
பிளஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - பிளஸ் ரிசல்ட் : நாமக்கல் மாணவி முதலிடம் - பிளஸ் ரிசல்ட் : முதல் 4 இடத்தையும் தட்டிச்சென்றது நாமக்கல் - கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மாதிரி எரிபொருள் அகற்றும்பணி தீவிரம் - ஆந்திராவில் ரெயில்கள் மோதி தீ பிடித்து 14 பேர் பலி - இலங்கை: இந்தியா ஒப்பந்தத்தை அனுமதித்திருந்தால் எந்த துன்பமும் வந்திருக்காது : ஞானதேசிகன் - இலங்கை சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் : சீமான் கோரிக்கை

தனிமையில் ஒரு தவிப்பு

வல்லிக்கண்ணன்

கிளிவ்........

அது என்ன சத்தம்? ஒரு புத்தகத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் ஆழ்ந்திருந்த சுந்தரம் திடுக்கிட்டான். ஏதோ சத்தம் கேட்டதே? புத்தக வரிகளில் தீவிரமாக மொய்த்து கிடந்த அவன் விழிகள் ஒருவித மிரட்சியுடன் அங்கும் இங்கும் புரண்டன.

எங்கும் இருட்டு. அவன் முன்னே இருந்த அரிக்கன் லாந்தரின் வெளிச்சம் சூழ்நிலை இருளின் அடர்த்தியை அதிகப்படுத்தி காட்டியது.

சர்ர்.......சர்ரட்.........

சுந்தரத்தின் உடல் அவனை அறியாமலே நடுங்கிக் கொடுத்தது. என்ன ஓசை? யாரோ நடந்து வருகிற மாதிரி முதலில் எழுந்த ஒலி கதவு நாதாங்கியை லேசாக குலுக்கிய சத்தமாக இருக்குமோ? அவன் உள்ளத்தில் ஒரு பதைப்பு. செவிகள் கூர்மையாக மென் ஓசைகளையும் பிடித்து இழுக்கத்
தயாராக இருந்தன. சத்தம் எதுவும் வரக்காணோம். அவன் மீண்டும் படிப்பதில் ஆழ்ந்தான். பயங்கர கதை. எத்தகைய பயங்கரச் சம்பவங்கள்! ரத்தக் காட்டேறி பற்றியது. இறந்து கிடந்தவரின் உடலில் இருந்து ஒரு தீயசக்தி எழுந்து செல்கிறது. வவ்வால் வடிவத்தில். பழந்தின்னி வவ்வால் மாதிரி. அதை அழைப்பது போல் திறந்து கிடந்த வீட்டின் ஜன்னல் வழியே உள்ளே போகிறது. தன்னை மறந்து தூங்கும் ஒரு பெண்ணின் கழுத்தில் தனது போட்டோய பல்லால் சிறு துளை செய்து ரத்தத்தை உறிஞ்சுகிறது. தூங்கும் பெண் விழித்து விடாமல் இருப்பதற்காக தன் போட்டோய பெரிய இறக்கைகளை மென் காற்றெழ அசைத்துக் கொண்டே இருக்கிறது. திருப்திகரமாக ரத்தம் குடித்ததும் அது பாதுகாப்பாக இருக்கிற செத்த உடலை நோக்கி சென்று அதில் ஐக்கியமாகி விடுகிறது. சூடான ரத்தம் அந்த உடலில் பரவுகிறது. இப்போது அது சவம் இல்லை. உயிர்பெற்று உலவக்கூடிய உடல் ஆகிறது. இருட்டில் அது அவனாக எழுகிறது. அந்த கோர மனிதன் ஊருக்குள் சஞ்சரிக்கிறான். கொடுமைகள் போட்டோகிறான். புனிதமான இளம் கன்னியை சீர்குலைக்கிறான். சாகடிக்கிறான். வெற்றிச் சிரிப்புடன் வீதியில் நடக்கிறான். விடிவின் மெல்லிய ஒளிக்கீற்று வானின் அடிப்பகுதியில் சிறு ரேகை தீட்டுவதற்கு முன்னதாக திரும்பி, சவப்பெட்டிக்குள் பதுங்கி விடுகிறான். கண் துயிலும் பிணமாகிறான். இனி இன்னொரு இரவு இதே லீலை மீண்டும் நடைபெறும். ஊர் பயந்து சாகிறது. மனிதர்கள் அஞ்சி ஒடுங்கி வீட்டுக்கள் பம்மி கிடக்கிறார்கள்.

இருப்பினும் என்ன? ரத்த காட்டேறிக்கு எப்படியோ ஏதோ ஒரு வீட்டிலிருந்து சமிக்ஞை எட்டுகிறது. கெட்ட ஆவி வவ்வால் வடிவில் அங்கே செல்கிறது......
இந்த அமானுஷ்ய தீயசக்தியின் கோர விளையாடல்களை உயிர்துடிப்புடன் விவரிக்கும் நெடுங்கதை அது. அதை போட்டோருள் செறிந்த இரவு வேளையில் படிப்பதில் ஈடுபட்டது சுந்தரம் செய்த பெறும் தவறாகும். என்ன செய்வது? அதை அவனுக்கு படிக்கக் கொடுத்த நண்பன், இது ரொம்ப சுவாரசியமான கதை.

பயங்கர நிகழ்ச்சிகள் நிறைந்தது. ராத்திரி தனியாக இருந்து படித்தால் பயம் உன்னை கவ்விக் கொள்ளும். ஆனாலும் படிக்க வேண்டிய புத்தகம். இதை நாளைக்கே நான் திருப்பிக் கொடுத்தாக வேண்டும்.. ஒரு ராத்திரியில் படித்து விடலாம். தைரியமாக படித்து முடிக்க இயலுமென்றால், இந்தா படி. என்று எச்சரித்துவிட்டுத்தான் கொடுத்தான்.

அப்படி என்ன பூச்சாண்டி எழுத்து! நான் என்ன பொட்டைப் பிள்ளையா புத்தகத்தைப் படித்து விட்டு இருட்டிலே பயந்து நடுங்க!- இவ்விதம் தான் சுந்தரத்தின் மனம் கெக்கலித்தது. இரவு உணவை ஓட்டலில் முடித்து விட்டு சுந்தரம் வீட்டுக்கு வந்தான். தெருவின் ஒடுங்கிய ஒரு ஓரத்தில் இருந்த சிறு வீடு. குடிசை போன்றது. சுற்றிலும் வெட்டவெளியும் தோட்டமும். அடுத்த வீடு சற்று தள்ளித்தான் இருந்தது. எதிர்பக்கத்தில் வரிசையாக வீடுகள் இல்லை. தள்ளி தள்ளி குடிசைகள். குட்டி குட்டி வைக்கோல் போர்கள். கோணல் மாணலாக வளைந்து நிற்கும் மரங்கள்.

நிலாக் காலத்தில் பார்க்க ரம்மியமாகத் தான் இருக்கும். கிராமச் சூழ்நிலை. மின் விளக்குகள் அந்த பகுதிக்கு வரவில்லை. ஒரு நண்பர் தனது சிறுவீட்டை
சுந்தரம் தங்குவதற்கு தாராளமாக உதவியிருந்தார். வாடகை தர வேண்டாம் என்பது அவனுக்கு மிகக் கவர்ச்சி அம்சமாக இருந்தது. மேலும், கிராமப்புறத் தோற்றமும் தனிமைக்கு உதவும் சூழலும் அவனுக்கு பிடித்திருந்தன.

இப்போது அவையே அவனை மிரட்டின. அவன் மனம் அரித்தது. மெய்யாலுமே ஓசை எழுந்ததா? யாரோ கதவை பிராண்டுவது போல? மெல்ல மெல்ல அடி எடுத்து வைக்கிற மாதிரி? அல்லது, என் மனப்பிரமையா?

டொக்..... டொக்...... சன்னல் கதவு தட்டப்படுகிறதா என்ன? அவன் சன்னலை நன்கு சாத்தி வைத்திருந்தான். தடால் என்று ஒரு ஒலி. வெளியேதான். தொடர்ந்து ஒரு நாயின் குரைப்பு. சுந்தரம் மனம் பதைபதைத்தது. இந்த புத்தகத்தை நான் இப்ப படிக்கத் தொடங்கியதே தப்பு
என்று நினைத்து கொண்டான். சாதாரணமாகவே எந்தப் புத்தகத்தை படிக்க தொடங்கினாலும் அவன் கவனம் முழுவதும் அதில் லயிக்க ஆழ்ந்து விடுவான். சுற்றுப்புற பிரக்ஞையே இராது அவனுக்கு.

பக்கத்தில் எவர் வந்தாலும் சரி, அது அவன் உணர்வில் படாது. அவர் குரல் கொடுத்தால் அவன் திடுக்கிட்டு விடுவான். திடுமென ஓசை எழுந்தாலும் அப்படித்தான். பகலிலேயே அந்த நிலையென்றால், இப்போது கன்னங்கரேல் என்று இருட்டு எங்கும் கனத்துக் கிடந்த நடுராத்திரியில்.....

மணி என்ன இருக்கும்? அவன் கடிகாரத்தைப் பார்த்தான். 11.30. பேய்கள் நடமாடும் சாமவேளை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்ற எண்ணம் அவனுள் நெளிந்தது. மனசை திடப்படுத்திக் கொண்டு அவன் கதையை படிக்கலானான். விறுவிறுப்பாகச் சென்றது அது. அதன் சுவாரசியத்தில் லயித்து போனான். திடீரென்று விசித்திரமான ஒரு அலறல் ஒலி எழுந்து ஓய்ந்தது. மீண்டும் அலறியது.

திடுக்கிடலால் குலுங்கியது சுந்தரத்தின் உடல். என்னது அது? இருட்டில் எது இப்படி கத்துது? கூர்ந்து கவனித்தான். மறுபடியும் அந்த ஒலி மிதந்து வந்தது. சே, ஆந்தை!......... சனியன் ஆந்தைதான் கத்துது. அவன் அறிவு தெளிவுபடுத்தியது. ஒரு புத்தகத்தை படிப்பதனால் நான் இப்படி பயந்து நடுங்குவேன்னு இதுவரை நினைத்ததேயில்லையே! எண்ணம் தானாக ஓடியது அவனுள்.

பயங்கர விஷயங்களை கொண்ட ஒரு கதையைப் படிக்கிற போதே பய உணர்வால் பீடிக்கப்பட்டவர்கள், அப்படிப்பட்ட கதையை படித்த பாதிப்பினால் பின்னர் பயத்தால் அலைக்கழிக்கப்பட்டவர்கள் பற்றி அவன் கேள்விப்பட்டிருந்தான். அத்தகையவர்கள் ஒரு சிலர் தமது அனுபவங்களை அவனிடமே சொல்லியதும் உண்டு. அப்போதெல்லாம் அவன் உள்ளம் எள்ளி
நகையாடும். அவர்களுக்காக அவன் போட்டோதாபப்பட்டான். ஆனால் இப்பொழுது அவன் தனக்காகவே போட்டோதாபம் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதே!
கொடூர செயல்கள் போட்டோந்து அட்டகாசமாக வாழ்க்கை நடத்திய ஒருவனை பழிவாங்குவதற்கு இன்னொரு வல்லவன் மந்திர தந்திர சாகசங்களை கையாண்டு போட்டோய சித்தி பெற்றதை விவரிக்கும் ஒரு கதையைப் படித்து ரசித்த ஒரு போட்டோன் மனைவி- அதை ராத்தரி வேளையில் படித்தவள் பயத்தினால் வெகுவாக பாதிக்கப்பட்டு விட்டாள். அதோ அந்த மூலையிலே என்ன அது? பாம்பு சுருண்டு கிடக்கிற மாதிரி தெரியுதே?...... இங்கே பெரிய நட்டுவாக்கலி வந்து தெரியுது.... பெரிய நாய் கொல்லைப்புறத்திலே கோரமா பல்லைக் காட்டி உறுமியபடி நிக்குதே?........ இப்படி காணாததை எல்லாம் கண்டு கண்டு பயந்தாள். இரவில் தனியாக வீட்டின் பின்பக்கம் செல்ல அஞ்சினாள்.

தூங்கும் போது கூட அய்யய்யோ, புனுகு பூனை மேலே விழுந்து புடுங்குதே! அது கண்ணு கொள்ளித் தீ மாதிரியல்லவா இருக்கு! என்று காட்சிகள் கண்டு உளறி அடித்து பதறி எழுந்து புலம்பினாள். நாளடைவில் தனது தைரியத்தை திரும்பப் பெற்றாள் அவள். நண்பர் மூலம் இதை கேள்வியுற்ற சுந்தரம் சிரித்தான். ஒரு கதை இப்படி எல்லாமா மனிதரை பாடாய்படுத்தும் என்று நினைத்தான். வலிய எழுத்து உள்ளத்தையும் உணர்வுகளையும் பாதிக்கும்தான் என்பதை இப்போது அவன் நன்கு போட்டோந்து கொண்டான்.

சுந்தரம் சிறிது தண்ணீர் குடித்து தொடர்ந்து புத்தகத்தை படிக்கலானான். பயங்கர நிகழ்வுகள் விவரிக்கப்பட்டிருந்தன. அவன் தன் பின்னால் யாரோ அல்லது எதுவோ நின்று எட்டி பார்ப்பது போன்ற ஒரு உணர்வை அனுபவித்தான். திடுக்கிட்டு திரும்பி பார்த்தான். கூரை அருகில் ஏதோ ஒன்று பம்மி அவனையே முறைத்து பார்க்கிறதே? அது என்னவாயிருக்கும்? அவன் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.

டார்ச் விளக்கை எடுத்து அத்திசையில் ஒளி வீசினான். ஒன்றும் இல்லை. எலி கிலி பம்மியிருக்கும் என்று எண்ணிக் கொண்டான். ஒரு மணிக்கு மேலாகிவிட்டது. புத்தகத்தை புரட்டிப் பார்த்தான். இன்னும் முப்பது பக்கங்கள் பாக்கியிருந்தன. இதை காலையில் படித்து முடித்து விடலாம். இப்ப படுத்து தூங்கலாம் என்று மனம் தீர்மானம் கொண்டு வந்தது. அவன் அதை நிறைவேற்ற தயாரானான். விளக்கு எரியட்டும், அணைக்க வேண்டாம் என்றது மனம். திரியை தணித்து ஒளியை மட்டுபடுத்திவிட்டு படுத்தான். சிறிது நேரத்திலேயே தூக்கம் அவனுடன் உறவு கொண்டது. எவ்வளவு நேரம் கழிந்திருக்கும் என்று தெரியாது. திடுமென உலுக்கி குலுக்கப்பட்டவன்போல் எழுந்து உட்கார்ந்து மிரள மிரள விழித்தான் சுந்தரம். கனவில் எதுவோ அவனை அச்சுறுத்தியிருக்க வேண்டும்.

அப்போது அவன் நடுக்கத்தை அதிகப்படுத்தும் தன்மையில் வெளியே, தோட்டத்து பக்கம், கோரமான கூச்சல் எழுந்தது. ஒரு குழந்தை பயங்கரமாக அலறுவது போல் கிரீச்சிட்டது அது. எதிரொலியாக மற்றொரு கூவல் தொடர்ந்தது. கழுத்து நெரிக்கப்படுகிற, யாரோ கத்துவது மாதிரி.

முதல் கிரீச்சிடல் தொனி கனத்து நீண்டு ஒலித்தது. மற்ற ஒலியின் கோரத்தன்மை கூடியது. இரண்டு ஒலிகளும் மாறிமாறியும், ஒரே சமயத்திலும், வேறுவேறு தொனிகளில் எழுந்து பரவி இரவின் அமைதியை கொன்று கொண்டிருந்தன.

சுந்தரம் உண்மையாகவே பயந்து போனான். அவன் தேகத்தின் உதறல் வெளிப்படையாக தெரியலாயிற்று. இது என்ன கூப்பாடு? மனிதக்குரலா? மிருகக்குரலா? பேயின் கூச்சலா? அவனது இதயத்தின் துடிப்பு அதிகமாயிற்று. காமக் களியாட்டத்தில் ஒன்றை ஒன்று துரத்தித் திரிகிற இரண்டு பூனைகளின் வெறிக்கூச்சல்களே அவை என்பது அவன் அறிவில் உறைக்க சிறிது நேரம் தேவைப்பட்டது. அட கடவுளே! நான் ஏன் இப்படி இருக்கேன்! அவன் உள்ளம் சிரித்தது. ஆயினும் அவனது உள்பயம் முற்றிலும் ஒடுங்கி ஓய்ந்து விடவில்லை. லாந்தரின் திரியை தூண்டி வெளிச்சத்தை பெரிதாக்கிவிட்டு அதையே பார்த்தபடி குறுகுறு என்று உட்கார்ந்திருந்தான் சுந்தரம். அறையின் அமைதியில் கடியாரத்தின் டிக் ஒலி கனத்த ஓசையாய் அவன் காதைத் தாக்கியது. சே, என்னமா சத்தம் போடுது சனியன்! அவன் வாய் முனகியது இப்படி!

 

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter