Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
பிளஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - பிளஸ் ரிசல்ட் : நாமக்கல் மாணவி முதலிடம் - பிளஸ் ரிசல்ட் : முதல் 4 இடத்தையும் தட்டிச்சென்றது நாமக்கல் - கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மாதிரி எரிபொருள் அகற்றும்பணி தீவிரம் - ஆந்திராவில் ரெயில்கள் மோதி தீ பிடித்து 14 பேர் பலி - இலங்கை: இந்தியா ஒப்பந்தத்தை அனுமதித்திருந்தால் எந்த துன்பமும் வந்திருக்காது : ஞானதேசிகன் - இலங்கை சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் : சீமான் கோரிக்கை

தாய்மை

தமிழன்பன்

மேஸ்திரி, போட்டோமளா... அவ ரெண்டு குழந்தைகளையும் கெணத்துல போட்டுட்டு அவளும் போயிட்டா. மூச்சிறைத்தபடி ஓடி வந்து சொன்னாள் விஜயா. என்னதான் புருஷன் பொண்டாட்டி சண்டைன்னாலும் இப்படியா அநியாயமா ரெண்டு கொழந்தைகளையும் கொன்னுட்டு போறது என்றாள் அவளே. அதிர்ச்சியில் எனக்கு ஒன்றும் ஓடவில்லை. இப்படி நடக்கும் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. எழுதிக் கொண்டிருந்த நோட்டை மூடி வைத்துவிட்டு, இப்போ அவ புருஷன் எங்கே? என்று கேட்டேன்.

அவன் அங்க தான் இருக்கான். பொணத்து மேல வுழுந்து பொரண்டு கத்திகிட்டு இருக்கான். இப்ப கத்தி என்ன பிரயோசனம் மொதல்லயே புத்தி இருந்திருக்கணும் என்றாள். ஒவ்வொன்றையும் சொல்லிவிட்டு கூடவே தன்னுடைய கமெண்டையும் சேர்த்து சொல்லும் விஜயா மீது எரிச்சலாக இருந்தது.

சரி, சரி போ பட்டறையில போய் மொதலாளி கிட்ட விஷயத்த சொல்லிட்டு வா, ந்தா நில்லு. அங்கபோய் விஷயத்த மட்டுஞ் சொல்லு உன் திருவாயால சண்டை கிண்டைன்னு சொல்லிகிட்டு திரியாதே என்று சொல்லி விஜயாவை அனுப்பி வைத்தேன்.

காற்றாடியைக் கொஞ்சம் வேகமாக சுழலவிட்டு சுவரோடு சாய்ந்து உட்கார்ந்து கொண்டேன். என்னால் ஒரு சாய்மானம் இல்லாமல் நேராக உட்கார முடியவில்லை. மனசெல்லாம் போட்டோமளா கண்ணீரும் கம்பலையுமாய் நிறைந்திருக்கிறாள். அந்த பாரத்தை தாங்க எனக்கு வலு இல்லை. ஊரெல்லாம் அவள் சாவுக்கு அவள் புருஷன்தான் காரணம் என்று நினைத்துக் கொண்டிருக்கும். உண்மை யாருக்கும் தெரியாது.

மனித மனங்கள் வெற்றிடங்களை ஏற்றுக் கொள்வதில்லை. ஏதாவது ஒன்றையிட்டு அந்த இடங்களை நிரப்பி விடவே நினைக்கின்றன. அது முறையோ இல்லையோ அதையெல்லாம் பார்ப்பதில்லை.

பரிமளாவுக்கும், தன் கணவனின் அன்பு கிடைக்காமல் போக, அந்த இடத்தில் சோமு தன்னைச் சரியாகப் பொறுத்திக் கொண்டான். அவளே சொன்ன மாதிரி இது சரியா? தப்பா? இதை சமூகம் ஏற்குமா? ஏற்காதா? என்ற சிந்தனைகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு சோமுவை மனதார ஏற்றுக் கொண்டாள்.

அது அந்த நேரத்து நிகழ்வாக போய்விட்டது. ஆனால் இப்போது அந்தக் கட்டத்தையெல்லாம் தாண்டி, இனிமேல் தன் புருஷனா? சோமுவா? என்றபோது சோமுதான் என்று முடிவெடுத்து விட்டாள். அதனாலேயே அவள் சோமுவுக்காக எதையும் இழக்க தயாராக இருப்பாள் என்று நினைத்தது தவறாகப் போய்விட்டது. இந்நேரம் சோமு என்ன செய்துக் கொண்டிருப்பான். அவனுக்கு செய்தி தெரியுமா? தெரியாதா? மனதில் கேள்விகள் அலைபாய்ந்தன.

நான் ஒரு மேஸ்திரி. விஜயா, போட்டோமளா, அவள் புருஷன், சோமு இன்னும் சிலர் என்னோடு எங்கள் தறிப்பட்டறையில் வேலை செய்பவர்கள். எங்கள் முதலாளி பட்டறையின் முழு நிர்வாகத்தையும் என்னிடமே ஒப்படைத்திருக்கிறார். அப்படி ஒரு நம்பிக்கை. ஏழு வருடங்களாக எந்தப் பிரச்சினையும் இல்லாமல்தான் நான் நிர்வகித்து வருகிறேன். முதலாளி வீட்டுக்கும் பட்டறைக்கும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம்தான் இருக்கும். நான் தனிமரம். ஊர் விட்டு ஊர் பிழைக்க வந்தவன். பட்டறையிலேயே தங்கிக் கொள்வேன். மூன்று,. நான்கு மாதங்களுக்கு ஒரு முறை என் பெற்றோரை பார்க்க ஓரிரு நாட்கள் போய் வருவதுண்டு.

சோமு வேலைக்கு சேர்ந்து ஆறு மாதங்கள் ஆகின்றன. அதற்குள் நான் சற்றும் எதிர்பாராத பிரச்சனைகளைக் கொண்டு வந்து விட்டான். போட்டோமளா இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். முதலில் நானே நம்பவில்லை. நல்ல உடல்வாகு. காம உணர்வு சற்று கூடுதலாக இருக்கும் ஆண்மகன்கள் அவளைப் பார்த்த இரவுகளில் தூக்கத்தைத் தொலைத்து விடுவார்கள். நானே சமயங்களில் சபலத்தில், வெட்கத்தை விட்டு அவளிடத்தில் கேட்டு விடலாமா என்று யோசித்ததுண்டு. இதனால் என்னைக் கேவலமானவன் என்ற கருதி விடாதீர்கள். நானும் சராசரி மனிதன்தான்.

பரிமளா புருஷன் ஒரு ஞானி மாதிரி. வேலை நேரத்தில் மாங்கு மாங்கென்று வேலை செய்வான் மற்ற நேரங்களில் யாரோடும் பேசாமல் பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு ஓரமாய் அமர்ந்து புகை விட்டுக் கொண்டிருப்பான். பீடியைத் தவிர வேறு கெட்ட பழக்கங்கள் எதுவும் அவனிடத்தில் இல்லை. ஆனாலும் அவனைக் கண்டால் யாருக்கும் பிடிக்காது. மனுசன்னா கொஞ்சம் கலகலப்பா இருக்கனும், அவனப் பாருங்க பொண்டாட்டி செத்துப் போனவன்
மாதிரி எந்நேரமும் ஆகாயத்தைப் பாத்துக்கிட்டு, ச்சே அவனப் பாத்தாலே உடம்பெல்லாம் எரியுது என்பான் சோமு. அவன் எப்படி இருந்தா உனக்கென்ன உன் வேலையப் பாத்துக்கிட்டு இருடா என்று அவனிடம் சொன்னாலும் எனக்கே போட்டோமளா புருஷனைப் பார்த்தால் அப்படித்தான் இருக்கும்.

இவ்வளவு அழகான, அடக்கமான பொண்டாட்டிக்கிட்ட அவன் சிரிச்சுப் பேசி ஒரு நாள்கூட பார்த்தது கிடையாது. அவர்களுக்குள் ஏதாவது பிரச்சனை இருக்குமோ? என்ற கேள்வி எப்போதும் மனதைக் குடைந்துக் கொண்டேயிருக்கும். ஆனால் அந்தப் பெண்ணிடம் அவள் குடும்ப விஷயம் பற்றி நான் நேரடியாக எதுவும் பேசுவதில்லை. சாதாரணமாகப் பேசினாலே, மேஸ்திரி கணக்கு பண்றாரு டோய் என்று பேசி சிரிப்பார்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால் சோமு என்ன செய்தானோ எப்படி செய்தானோ போட்டோமளாவை மயக்கி விட்டான்.

அவளுக்கும் தன் கணவன் சரியில்லையே என்ற ஏக்கம் மனதுக்குள் இருந்து வந்திருக்கிறது. அதை பக்குவமாய் பேசி போட்டோந்து கொண்ட சோமு சரியாக அவளுடைய வீக் பாயிண்டைத் தொட்டு விட்டான். நேருக்கு நேர் பார்க்கும்போது அன்பு வழியும் பார்வை, ஆறுதலான வார்த்தைகள் என்று அவள் மனதைத் தொட்டு விட்டான். பேச்சு நீண்டு நீண்டு எல்லையை தாண்டிவிட்டது. இப்போதெல்லாம் போட்டோமளா நல்ல கலகலப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கிறாளே என்று நான் யோசித்ததுண்டு. அதற்கு என்ன காரணம் என்று எனக்குப் போட்டோயவில்லை. அவள் புருஷன் எப்போதும் போலவே இருந்து வருகிறான். கொஞ்ச நாளில் அவனிடம் ஒரு புதுபழக்கம் தொற்றிக்
கொண்டு விட்டது. திடீரென்று ஒரு நாள் நன்றாக குடித்துவிட்டு வந்தான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என்னப்பா இதெல்லாம்? என்று கேட்டவுடன் அழுதே விட்டான்.

மேஸ்திரி நா உங்ககிட்டச் சொல்லாம வேற யார்க்கிட்ட சொல்லப் போறேன். நான் அவளுக்கு என்ன துரோகம் செஞ்சேன். எனக்கு இல்லாட்டியும் அவளுக்கு எப்பவும் நல்ல சாப்பாடு, துணிமணி கெடைக்கணும்னு தானே எப்பவும் வேல, வேலன்னு இருக்கேன். நா என்னைவிட அவளத்தான் அதிகம் நம்பினேன். அவ இப்படிப் பண்ணுவான்னு நா கொஞ்சங்கூட எதிர்பார்க்கல மேஸ்திரி. என்னால ரெண்டு கொழந்தைக்கு தாயானவ, இப்ப எனக்கு பச்சையா துரோகம் பண்றா மேஸ்திரி என்று சொல்லி அழுதான்.

எனக்கு லேசாக விஷயம் போட்டோந்தாலும் அவனிடமே கேட்டேன். என்னப்பா உளர்றே உம்பொண்டாட்டி என்ன செஞ்சுடுச்சுன்னு துரோகம் பண்ணிட்டான்னு புலம்பறே, என்ன செய்யனும், இதுக்கு மேல என்ன செய்யனும். கிழங்காட்டம் இன்னொருத்தனுக்கு முந்தி விரிச்சுட்டாளே, இதவிட வேற என்ன செய்யனும் அவன் குரலில் கடுமை ஏறியிருந்தது.

ஏய்....... என்ன சொல்ற உனக்கு புத்திகித்தி பேதலிச்சுப் போச்சா. போட்டோமளாவப் போயா அப்படிச் சொல்ற, போ போய் பேசாம படு. இப்படி குடிச்சிட்டு எங்கிட்ட உளர்ற மாதிரி வேற யார்க்கிட்டயும் போட்டோ வைக்காதே போ என்றதும் வெகுண்டு எழுந்து விட்டான். மேஸ்திரி நானும் அப்படித்தான் நெனச்சிருந்தேன். ஆனா என் கண்ணு முன்னால பாத்தப்புறமும் என்னால நம்பாம இருக்க முடியுமா? நேத்து ராத்திரி நான் சினிமாவுக்குப் போறேன்னு சொல்லிட்டு போய்ட்டு டிக்கெட் கிடைக்காம திரும்பி வந்தா வீட்டுக்குள்ள இவங்க ரெண்டு பேரும்.... அய்யோ எம்பொழப்பு இப்படியாகனுமா என்று நெஞ்சில் அடித்துக் கொண்டான். அன்றிலிருந்து தினமும் போட்டோமளாவிற்கு அடியும் உதையும் தாராளமாகக் கிடைத்தது. ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி அடித்துத் துவைத்தான். அவனை சாந்தப்படுத்த யாராலும் முடியவில்லை. எனக்கும் வழி தெரியவில்லை. விஷயம் தெரியாததால் அனைவரும் இவனையே சபித்தனர். இப்படியா குடிச்சுட்டு வந்து போட்டு அடிக்கறது. இவனுக்கு திடீர்னு என்ன ஆச்சு? ஏன் இப்படி பண்றான்? என்றே
பேசிக் கொண்டிருந்தார்கள்.

சோமு அன்றிலிருந்து வேலைக்கு வரலில்லை. என்னிடம் கூட எதுவும் சொல்லாமல் போய்விட்டான். பக்கத்து ஊர்லதான் அவன் அம்மா அப்பா எல்லாம் இருந்தார்கள். இவன் அங்கேயே போய்விட்டான். அவனுடைய நண்பன் ஒருவன் வந்து சோமு வேலைக்கு வரமாட்டான் என்று சொல்லி சென்றான். இங்கு போட்டோமளாவின் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே இருந்தது. ஒரு நாள் போட்டோமளா என்னிடம் வந்தாள். அவள் புருஷன் எங்கோ வெளியில் போயிருந்தான். அநேகமாக குடிக்கத்தான் போயிருப்பான்.

மேஸ்திரி, நா வெட்கத்தவிட்டுச் சொல்றேன் எம்புருஷன் எனக்கு சாப்பாடு துணிமணியில எந்தக் கொறையும் வச்சதில்லை. ஆனா ஒரு பொம்பளைக்கி அது மட்டும் போதாது. சோத்துக்கே இல்லைன்னாலும் புருஷன் அன்பா, ஆதரவா இருந்தா போதும்னு நெனைக்கிறவ நான். ஆனா எம்புருஷன் என்ன மதிச்சதில்லை. பொம்பளைன்னா சாப்பாடு துணிமணி இருந்தா போதும். அப்புறம் புருஷன் கூப்பிடுறப்போ படுத்துக்கனும்னு நெனக்கிற ஆளு. என்னோட ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் அந்த ஆளு மதிக்கவே இல்லை. என்னை வெறும் மிஷின்னு நெனச்சுட்டிருந்தான். நானும் ஊரு ஒலகத்துப் பேச்சுக்கு பயந்துக்கிட்டு, நமக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதான்னு பொழச்சுகிட்டு இருந்தேன். அதெல்லாம் அவர் வர்ற வரைக்கும்தான். அவர் என்பது சோமுவை என்பதைப் போட்டோந்துக் கொண்டேன். அவர் எம்மனச கலைச்சிட்டாரு. இது சரியா? தப்பான்னு யோசிக்கக்கூட முடியாதபடி அவர் என்னை அன்பால ஆட்டிப் படைச்சாரு. நாங்க எல்லை மீறிப் பழகினோம். அது எம்புருஷனுக்கு தெரிஞ்சுப் போச்சு. அதனாலதான் இப்படி தெனமும் அடியும் உதையும். அது மட்டுமில்லாம எந்நேரமும் அதையே குத்திக் குத்திக் காட்டி என்னை கொல்லாம கொல்றாரு.

இப்படியே அடி உதை வாங்கிட்டு இருக்க உடம்புலேயும் மனசுலயும் தெம்பு இல்ல. நா எம்புருஷன விட்டுட்டு அவரோடயே போயிரலாம்னு இருக்கேன். அவர் என்னைக் கண்டிப்பா ஏத்துக்குவாரு, அதனால நீங்கதான் அவரை இங்க வரவழைக்கனும் என்றாள். இவள் இப்படியெல்லாம் பேசுவாளா என்று வியந்துக் கொண்டிருக்கும்போதே அவளின் வேண்டுகோள் என்னை திடுக்கிட வைத்தது.

ஏம்மா.... என்ன பேசறேன்னு தெரிஞ்சுதான் பேசறியா? நீ கல்யாணமாகி ரெண்டு கொழந்தைக்கு தாயானவ, அவன் கல்யாணமாகாத பையன். இப்படி இருக்கறப்ப நீ எப்படி அவனோட சேர்ந்து வாழ முடியும். இதை யார் ஏத்துக்குவாங்க. அவனை யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. எம்பேருதான் நாறிப் போகும். போ, போயி உம்புருஷன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுக்கிட்டு பொழைக்கிற வழியப் பாரு என்றேன். ஒடைஞ்சது ஒடைஞ்சதுதான் மேஸ்திரி. இனிமே காலம் பூராவும் இப்படித்தான் இருக்கும்.
எம்புருஷன் இனிமே எந்த காலத்திலேயும் என்னை நம்ப மாட்டான். அதனால என்னை அவரோட சேர்த்து வச்சிருங்க என்று காலில் விழாக்குறையாக கெஞ்சினாள்.

இதுக்கு மொதல்ல சோமு ஒத்துக்குவானான்னே தெரியலியே? அவரு கண்டிப்பா என்னை ஏத்துக்குவாரு. கைவிடமாட்டாரு. எப்படி இவ்வளவு உறுதியா சொல்ற, பிரச்சனையான அன்னிக்குப் போனவன் இன்னும் இந்தப் பக்கம்கூட வரல. உங்களுக்கு சந்தேகமா இருந்தா அவர இங்க வரவழைச்சோ, நீங்களே அங்க போயோ தெரிஞ்சுக்கங்க என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

எனக்கு ஒன்றும் ஓடவில்லை. இது சாத்தியமா? எப்படி சோமு இவளை கல்யாணம் பண்ணிக்குவான்? அவங்க வீட்டுல ஒத்துக்குவாங்களா? அவனே கல்யாணம்னா ஒத்துக்குவானா. இவள் இவ்வளவு உறுதியாக சொல்கிறாளே. ஒரே குழப்பமாக இருந்தது. அடுத்த சில நாட்களில் வேகமாகப் பல போட்டோயங்கள் நடந்துவிட்டன.

சோமு போட்டோமளாவை கல்யாணம் செய்துக் கொள்ள ஒப்புக்கொண்டான். அவன் வீட்டை விட்டு வந்து கல்யாணம் செய்துக் கொள்ள முடிவெடுத்தான். அவன் உறவுக்காரர் ஒருவர் அவனுக்கு பக்கபலமாக இருந்தார். போட்டோமளா புருஷனிடமும் நான் போய் பேசினேன். இப்படி தெனமும் அடிச்சு உதச்சுட்டு இருக்கறதவிட பேசாம அறுத்து வுட்டுரு அப்புறம் அது எப்படியோ போயிட்டு போவுது என்றேன். அவன் எதிர்க்கவும் இல்லை, ஆமோதிக்கவும் இல்லை. பேசாமல் போய் விட்டான். ஆனால் அவன் முடிவு வேறுவிதமாக இருந்தது. நான் எம்பொண்டாட்டியை வுட்டுட்டு இருந்தா என்ன எவன் மதிப்பான். நா எங்கியாவது கண்காணாமப் போயிடறேன். அவ இங்கயே இருந்து எப்படியோ போகட்டும் என்றான். அப்ப கொழந்தங்க, அதயும் கூட்டிக்கிட்டே போயிடறியா? கொழந்தைங்க அவக்கிட்டயே இருக்கட்டும். நானே பரதேசி மாதிரி சுத்திகிட்டு இருக்கும்போது குழந்தைங்க வேற வீணாப் போகணுமா? என்றான். இப்போதுதான் திடீர் சிக்கல். குழந்தைகளை உடன் அழைத்து செல்ல சோமு விரும்பவில்லை. இன்னொருத்தனுக்கு பொறந்த கொழந்தைகளை நான் காப்பாற்ற முடியாது. கொழந்தைகளை விட்டுட்டு அவ தனியாத்தான் வரணும் என்றான். அவன் அதில் உறுதியாக இருந்தான்.

பரிமளா என்னிடம் வந்து கண்ணீர் மல்க, என் குழந்தைங்க எம்புருஷன்கிட்ட இருந்தா வீணாப் போயிடும் மேஸ்திரி. நீங்கதான் எப்படியாவது என் கொழந்தைங்க என்னோட இருக்கற மாதிரி செய்யனும். நீங்க சொன்னா அவரு தட்டமாட்டாரு என்றாள். ஆனால் சோமுவின் உறவுக்காரர் தீர்மானமாக மறுத்தார். இப்ப ஒண்ணும் தெரியாது. நாளைக்குக் கொழைந்தங்க வளர்ந்து பெருசாகும்போது பல சிக்கல்கள் வரும். அப்புறம் சோமுவுக்கு கொழைந்தங்க பொறந்தா இன்னும் நிலமை மோசமாகும் என்றார்.

அவன் ஒரு பக்கமும், உறவுக்கரார் ஒரு பக்கமும் பிடிவாதமாக இருக்க, கடைசியில் தீர்ப்பு சொல்லும் அதிகாரம் என்னிடம் வந்தது. நான் என்ன சொன்னாலும் சரி என்று இருவரும் ஒப்புக் கொண்டனர். நான் குழந்தைகளை போட்டோமளா கூட்டிப்போனால் ஏற்படும் பிரச்சனைகள் ஒரு புறம் இருக்க, குழந்தைகளும் இல்லாவிட்டால் அவள் புருஷன் நிலை இன்னும் மோசமாகிவிடும். குழந்தைகள் அவனோடு இருந்தாலாவது அவன் மீண்டும் நல்லபடியாக வாழ ஒரு வாய்ப்பு இருக்கும் என்று நினைத்தேன். சோமுவுக்காக புருஷனை இழக்கத் தயாரான போட்டோமளா, குழந்தைகளை விட்டுவிட்டு வருவாள் என நினைத்தேன். அவளை ஒரு சராசரி மனுஷி, ஒருவன் மனைவி என்ற கோணத்திலேயே பார்த்த நான் அவளின் தாய்மை உணர்வை போட்டோந்துக் கொள்ளாமல் போய்விட்டேன்.

குழந்தைகளை விட்டுட்டு நீ போய் சோமுவோடு இரு என்று போட்டோமளாவிடம் சொன்னேன். அவள் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது அவள் முகத்திலிருந்தே தெரிந்தது. ஒன்றும் பதில் சொல்லாமல் அழுதுக் கொண்டே போய்விட்டாள். விடிந்ததும் அவள் சாவு செய்தி. ஊரார் கண்களுக்கு அவள் புருஷன் கொடுமை தாங்காமல் செத்து போய் விட்டாள் என்றுதான் தெரியும்.

 

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter