Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
பிளஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - பிளஸ் ரிசல்ட் : நாமக்கல் மாணவி முதலிடம் - பிளஸ் ரிசல்ட் : முதல் 4 இடத்தையும் தட்டிச்சென்றது நாமக்கல் - கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மாதிரி எரிபொருள் அகற்றும்பணி தீவிரம் - ஆந்திராவில் ரெயில்கள் மோதி தீ பிடித்து 14 பேர் பலி - இலங்கை: இந்தியா ஒப்பந்தத்தை அனுமதித்திருந்தால் எந்த துன்பமும் வந்திருக்காது : ஞானதேசிகன் - இலங்கை சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் : சீமான் கோரிக்கை

சேதுபதி

பூவை கண்ணன்

மயக்கம் தெளிந்த சேதுபதி சுற்றும் முற்றும் பார்த்தார். தான் நாற்காலியில் கட்டப்பட்டிருப்பதையும், தலையில் வலிப்பதை வைத்து தனக்கு அடிப்பட்டு இருப்பதையும் உணர்ந்தார்.

வெளியில் மழை சோவென்று பெய்துக் கொண்டிருந்தது. பக்கத்தில் ஏதோ சத்தம் கேட்க சேதுபதி திரும்பி பார்த்தார். டிரைவர் சுந்தரம் படிக்கட்டில் இறங்கிக் கொண்டிருந்தான். சேதுபதி கண் விழித்திருப்பதை பார்த்த சுந்தரம், சந்தோஷப்பட்டு மேல்மாடியைப் பார்த்து மேனேஜர் சார், மேனேஜர் சார் என்று கூப்பிட்டான். இவன் குரல் கேட்டு மேலேயிருந்து எட்டிப் பார்த்த பசுபதி. ஏண்டா கத்தறே என்று கேட்டுக் கொண்டே படியிறங்கியிருந்தான். இருவரையும் ஒருசேர பார்த்த சேதுபதி. லேசாக அதிர்ந்தார். தான் வசமாக மாட்டிக் கொண்டோம் என்பதை உணர்ந்தார்.

பசுபதி தான் பேச தொடங்கினான். என்ன சேதுபதி அய்யா சௌக்கியமா? என்னை மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். ஏதோ உங்களுக்கு தெரியாம எஸ்டேட்டிலிருந்து கொஞ்சம் பணத்தை திருடினதுக்கு எங்கள் வேலையையே எடுத்துட்டே இல்லே. கோடிக் கணக்கான சொத்துல சில லட்சம் குறைஞ்சா நீ என்ன குறைஞ்சா போயிடுவே. கண்டுக்காம விட்டிருக்கலாம் இல்ல. இப்ப ஆபத்துல மாட்டிக்கிட்டப் பார்.

ஜமீன் பரம்பரை தப்பு செஞ்சவங்களை மன்னிக்கிறது கிடையாது. தண்டனை தரணும் அப்படிதானே சேதுபதி அய்யா. பசுபதி விட்டதை சுந்தரம் முடித்தான்.
இதோ பாருங்கடா நாயீகளா............ கர்ஜித்தார் சேதுபதி. என் எஸ்டேட்லே வேலை பார்த்தவரைக்கும் என்னடா குறை வெச்சேன் உங்களுக்கு. இந்த மலை மேலேயிருக்கிற மற்ற எஸ்டேட்ல வேறே யாரும் தராத சம்பளமும் சலுகையும் உங்களுக்கு நான் தந்தேன் இல்லே. இருந்தும் உங்க திருட்டு புத்தி உங்களை விட்டுப் போகலையே. அதனாலதான் உங்களை வேலையை விட்டு எடுத்துட்டேன். இருந்தாலும் உங்களுக்கு சேர வேண்டிய பணத்தையும் கொடுத்து தானே அனுப்பினேன்.

இருந்தாலும் அது பத்தலையே- சுந்தரம்.

அதனால உன் கதையை முடிக்கறதுன்னு நாங்க முடிவு பண்ணிட்டோம். இரண்டு மாசமா திட்டம் போட்டு காலைல நீ எத்தனை மணிக்கு வாக்கிங் போறேனு தெரிஞ்சுகிட்டோம். அப்போதான் டிரைவர் கூட இல்லாம நீ தனியா வரேனும் தெரிஞ்சுக்கிட்டுதான் இன்று காலைலே தனியா வாக்கிங் வரப்போ
லேசா தலைல தட்டி இங்கு கொண்டு வந்து கட்டிப் போட்டுட்டோம். இங்கேதான் உனக்கு சமாதி. உன் முன்னோர்கள் வாழ்ந்த காட்டு பங்களா. சந்தோஷம் தானே என்றான் சுந்தரம்.

டேய் சுந்தரம் அவர்கிட்டே என்னடா பேச்சு. சாகப்போற மனுஷன்கிட்டே. நம்ம திட்டபடி ஏற்பாடு செய். இன்னும் ரெண்டு மணி நேரத்துல நாம மலையை விட்டு இறங்கி எஸ்கேப் ஆகி இருக்கனும் என்றான் பசுபதி.

மேனேஜர் ஸார் என்ன இருந்தாலும் இவர் நம்ம பழைய முதலாளி இல்லையா. இவர் எப்படி சாகப்போறர்னு இவர்கிட்ட சொல்லிடலாம் சார். என்றான் சுந்தரம்.

சரி ஏதோ பண்ணு. நான் போய் மேலேயிருக்கிற கேஸ் சிலிண்டரை கீழே கொண்டு வரேன். பசுபதி படியேறி மேலே போனான்.

ஐயா, ஐயா. என்ன ஐயா என்ன மரியாதை வேண்டிக் கிடக்கு. சாகப்போற மனுஷனுக்கு. சொல்றேன் கேளு. பக்கத்து அறையில இந்த சிம்னி விளக்கை கொளுத்தி வைக்கப் போறோம். மேலேயிருக்கிற
கேஸ் சிலிண்டரை கொண்டு வந்து இங்க வச்சு கேஸை திறந்து விடப் போறோம். கேஸ் பரவி சிம்னி விளக்குல இருக்கற நெருப்பு பிடிச்சு, சிலிண்டர் வெடிச்சு. உயிரோடயே எறிஞ்சு சாம்பலாயிடுவே. இது நடக்கறதுக்குள்ளே நாங்க மலையை விட்டு கீழே இறங்கி எவ்ளவோ தூரம் போயிருப்போம். போலீஸ் எங்களை தொடவும் தொடாது. சந்தேகமும் படாது. எப்படி எங்க ஐடியா என்றான் சுந்தரம்.

தன்னை சுற்றி பிணையப்பட்டிருக்கும் சதிவலை வலுவாகவே பின்னப்பட்டிருப்பதை நினைத்து சேதுபதி மனதளவில் சோர்வடைந்தார். படியேறி மேலே போன பசுபதி கீழேயிருக்கும் சுந்தரத்தை சப்தம் போட்டு கூப்பிட்டான். சுந்தரம் சீக்கிரம் மேலே வா. இந்த சிலிண்டரை குரங்கு தள்ளியிருக்கும் போலயிருக்கு. கேஸ் மூடி உடைந்து கேஸ் லீக்காகி இருக்கு. வரும்போது லைட் சுவிட்சைப் போடாதே, சிகரெட் பத்த வெக்காத என்றான் பசுபதி.

இதோ வந்துட்டேன் சார். கவலைப்படாதீங்க இந்த பங்களா ரொம்ப பழசு. இங்கே கரண்டே கிடையாது என்று சொல்லிக் கொண்டே இரண்டு இரண்டு படியாக மேலேறி அவசர அவசரமாக ஓடினான் சுந்தரம்.

அவன் மாடியில் போய் சேறுவதற்கும் பக்கத்தில் இருக்கும் மரத்தின்மீது இடி விழுவதற்கும் சரியாக இருந்தது. இடியில் உண்டான நெருப்பு இமைப் பொழுதில் கேஸ் பரவியிருந்த அறையில் தொற்றிக் கொண்டது.

சுந்தரமும் பசுபதியும் பயங்கரமாக அலறினார்கள். உடலெங்கும் நெருப்போடு சுந்தரம் மட்டும் படியில் உருண்டான். நடுக் கூடத்தில் அலங்காரத்திற்கு வைத்திருந்த நீர்த்தொட்டியிலிருந்த தண்ணீரில் மூழ்கி எழுந்தான். காயத்தோடு அலறினான். யோசிப்பதற்குள் நடந்து முடிந்த அந்த கோர விபத்தைப் பார்த்து பயந்துப் போனார் சேதுபதி. தன்னை காப்பாற்றும்படி மன்றாடிக் கொண்டிருந்த சுந்தரம் தொட்டியிலிருந்து கஷ்டப்பட்டு, மேலேறி சேதுபதியை கட்டியிருந்த கட்டுகளை அவிழ்த்து விட்டான். மேலே படியேறி பார்த்த சேதுபதிக்கு சாம்பலாகிப் போன பசுபதிதான் கிடைத்தான். ஆஸ்பத்திரியில் சேர்£க்கப்பட்ட சுந்தரம், மரண வாக்குமூலம் சொல்லிவிட்டு, கண்களை மூடிவிட்டான்.

 

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter