Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
பிளஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - பிளஸ் ரிசல்ட் : நாமக்கல் மாணவி முதலிடம் - பிளஸ் ரிசல்ட் : முதல் 4 இடத்தையும் தட்டிச்சென்றது நாமக்கல் - கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மாதிரி எரிபொருள் அகற்றும்பணி தீவிரம் - ஆந்திராவில் ரெயில்கள் மோதி தீ பிடித்து 14 பேர் பலி - இலங்கை: இந்தியா ஒப்பந்தத்தை அனுமதித்திருந்தால் எந்த துன்பமும் வந்திருக்காது : ஞானதேசிகன் - இலங்கை சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் : சீமான் கோரிக்கை

செல்லாக் காசு

கௌசல்யா ரங்கநாதன்

அப்பா.........

என்ன குமார்........

நீங்க எப்ப போட்டோடையராகப் போறீங்க?

ஏன் உனக்கு தெரியாதா...... இன்னும் ஆறுமாசம் தான் இருக்கு...எதுக்கு கேட்கிறேன்னு தெரிஞ்சுக்கலாமா......

வந்து....வந்து...நான் பார்க்கிற இந்த கவர்மெண்ட் உத்தியோகம் எனக்கு பிடிக்கலைப்பா....என் குவாலிஃபிகேஷனுக்கு தகுந்த வேலையில்லை.

ஊம்.....

என்னை எவ்வளவு படிக்க வெச்சிருக்கீங்க. என் படிப்புக்கு தக்க வேலையா கிடைச்சிருக்கு? நீங்க மனசு வெச்சா வேற வேலை கெடைக்கலாம்.

இப்ப நீ பார்க்கிற வேலைக்கு என்னப்பா குறைச்சல்..... நாம் படிச்ச படிப்பு இந்த தேசத்துக்கு பயன்படனும்....தனிப்பட்ட ஒருத்தன்கிட்ட அவன் முன்னேற உழைக்கிறப்போ கொஞ்சம் சம்பளம் வேணாக் கூட கிடைக்கலாம்...ஆனா மன நிம்மதி போயிடும். இங்கே நீ ராஜாவாட்டம் இருக்கே உனக்கு கீழே சில பேர்களை விரட்டி வேலை வாங்க முடியுது.

இருந்தாலும் செக்குமாடு போல இந்த அரசாங்க உத்தியோகம் எனக்கு பிடிக்கலைப்பா. இங்கே 15000 கிடைக்குது வருஷத்துக்கு 300 தான் இன்கிரிமென்ட் மேலே முன்னுக்கு வர உடனடியா வாய்ப்பில்லை. என்ன செய்யனும்கிற சொல்லு.............

உங்களுக்கிருக்கிற செல்வாக்குக்கு.....

ஸ்டாப்பிட்....இதப் பார் என் செல்வாக்கை உபயோகிச்சு உனக்கு வேலை வாங்கிக் கொடுக்க முடியும்தான்...ஆனா அது சரிப்பட்டு வராது.

என் அப்பா மத்திய அரசில் தொழில் அமைச்சகத்தில் ஐ.ஏ.எஸ். அந்தஸ்த்தில் ஒரு அதிகாரி. அவர் தயவை நாடி நிற்கும் தொழிலதிபர்கள் ஏராளம்....ஏராளம்.... பிழைக்கத் தெரியாத மனிதர் அப்பா. என் வீட்டுக்கே அப்பாவை தேடி எத்தனை எத்தனை தொழிலதிபர்கள். அப்பா நினைத்திருந்தால் கோடி கோடியாக சேர்த்திருக்கலாம். பணமாக இல்லாவிட்டாலும் பொருள்களாக சேர்த்திருக்க முடியும். எதையும் எதிர்ப்பார்க்காத நேர்மையாளர் அவர். ஒரு முறையல்ல பல முறைகள் வீட்டுக்கு அப்பாவைப் பார்க்க வந்தவர்கள் பார்வையில் நான் பட்டபோதெல்லாம் அப்பாவிடம் தம்பி என்ன செய்யறாப்ல என்பார்கள். சொல்வார் அப்பா. என்ன படிச்சிருக்கு? அதற்கும் பதில் சொல்வார். என்ன சம்பளம் கிடைக்குது? இப்போது நான் முந்திக் கொண்டு சொல்வேன்... பதினையாயிரம் வாங்கறேன். வாட்?

வெறும் 15000 மட்டுமா.. அலவன்ஸ்.... பேசிக் பே 8000...டி.ஏ....ஹெ.ஆர். சி.சி.ஏ. டிரான்ஸ்போர்ட் அலவன்ஸ் எல்லாம் சேர்த்தா? வெட்கக்கேடு... 14000 தான் கிடைக்கும். பெயர்தான் அஸிஸ்டென்ட் டைரக்டர். கெஜட்டட்
போஸ்டு.

என்னது? இவ்வளவு பெரிய உயர்ந்த பதவியில் இருக்கிற உங்க அப்பாவால உங்களுக்கு ஒரு நல்ல வேலை வாங்கிக் கொடுக்க முடியலையா தம்பி.. அதுவும் இவ்வளவு படிப்பு படிச்சு, எக்ஸ்பீரியன்ஸான உங்கள் சம்பளம் வெறும் 14000-மா.

என் தலையெழுத்து சார்... இத பாருங்க தம்பி..என் பாக்டரிகளில் ஒவ்வொருத்தனும் எவ்வளவு வாங்கறான் தெரியுமா.... உங்களுக்கு விருப்பம்னா எங்க ஃபுட் பிராஸஸிங் யூனிட்டில் ஆர் அண்ட்டில் சேர்ந்திடுங்க, டைனமிக் பொஸிஷன்....

சார் இது நடக்குமா? என்னது நடக்குமாவா. மை டியர் யங்மேன் உன்னை மாதிரி டைனமிக் பர்சனாலிடிதான் இன்னைய பாரதத்துக்கு தேவை... உனக்கு எப்ப விருப்பமோ வந்து என்னைப்பார். உனக்காக எப்பவும் அந்த இடம் காலியாய் இருக்கும். சம்பளம் 50000 அப்புறம் வெல் பர்னிஷ்டு ஹவுஸ், ஒரு கார்.

அப்புறம் மேலே மேலே முன்னுக்கு வரலாம். அதை விட்டுட்டு அரசாங்க உத்தியோகத்துல உன் டேலண்டை வீணாக்கலாமா.... யோசி. இதுபோல எத்தனை எத்தனை பேர்கள் அப்பாவின் தயவு வேண்டி நின்றவர்கள் ஆசை வார்த்தைகள் என்னுள்ளே சைத்தான் போல பாடுபடுத்த ஆரம்பிக்க அப்பாவை துளைத்தெடுக்க ஆரம்பித்தேன்.

இதப்பார் குமார்... நான் உன்னை நிறைய படிக்க வெச்சேன். இப்ப அரசாங்க உத்தியோகமும் கிடைச்சது... எப்படி? உன் தகுதியின் அடிப்படையில். இதை காப்பாத்திக்கப் பார். முன்னுக்கு வரணும்னா எங்கேயும் வரமுடியும். இன்னைக்கு தொழில் அமைச்சகத்தில் என் தயவு வேண்டி வரவங்க உன் மூலமா என்னை வளைச்சுப் போடனும்னு நினைக்கிறாங்க. அவங்களை நான் குற்றம் சொல்ல மாட்டேன். பிஸினஸ்மேன் எப்பவும் எப்படியாவது எதையாவது செஞ்சு தொழிலில் லாபம் சம்பாதிக்கனும்னு பாக்கறது இயல்பு. இந்த வலைல மாட்டிக்காதேன்னுதான் சொல்வேன். இன்னைக்கு எனக்காக என்னால் ஆகவேண்டிய போட்டோயத்துக்காக உனக்குவேலை கொடுத்து நிறைய சம்பளம் கொடுத்து உன் மூலமா என்னை வளைச்சுப் போட நினைக்கிறவங்க நாளைக்கே போட்டோடையராயிட்டா உன்னை தூக்கியெறிய தயங்கமாட்டங்க.

அப்பாவின் பேச்சையும் மீறி அப்பாவை சந்திக்க வந்த ஒரு பெரும் தொழிலதிபரின் ஃபுட் பிராஸஸிங் யூனிட்டில் உயர் பதவி ஆசைக் காட்டப் படவே சேர்ந்தாகிவிட்டது. வேலையை ராஜினாமா செய்துவிட்டு. சம்பளம் 50000 மற்றும் படிகள். டெலிபோன், கம்பெனி செலவில். எனக்கென்று சில உதவியாளர்கள். தனி காபின், தனி கார், டிரைவர் என்று ஆரம்பம் அட்டகாசமாக இருந்தது. மாதம் ஐம்பதாயிரம் சம்பளம் மற்றும் அலவன்சுகள், கார் சுகமாக இருந்தது. என் பேச்சுக்கு எல்லோரும் செவி சாய்த்தனர். என்ன இன்டலிஜென்ட் யங்மேன் தெரியுமா மிஸ்டர் குமார்... உன் டேலன்டை அரசாங்க உத்தியோகத்தில் வேஸ்ட் பண்ணிட்டியேப்பா இவ்வளவு காலமும் என்றார் என் முதலாளி என் அப்பாவிடம்.

அப்பா பதிலேதும் பேசவில்லை. என்னப்பா நான் எவ்வளவு உசரத்துக்கு போயாச்சு. என்னை முன்னேற விடாம எதை எதையோ சொல்லி அழுத்தியே வச்சிருந்தீங்களேப்பா...இப்ப என்ன சொல்றீங்க?

இப்பவும் சொல்றேன்.. நீ அவசரப்பட்டு அரசாங்க வேலையை உதறினது எனக்கு பிடிக்கலை. நான் முன்னுக்கு வரது உங்களுக்கு பிடிக்கலையோன்னு தோணுதுப்பா.... என்னை அந்த கம்பெனியின் சார்பில் வெளிநாட்டுக்கு பயிற்சிக்காக அனுப்பப் போவதாகவும், பயிற்சி முடிந்து திரும்பியவுடன் சம்பளம் ஒரு லட்சம் மற்றும் வசதிகள், கம்பெனி செலவில் வீடு என்றெல்லாம்
சொன்னார் முதலாளி.

பலமுறை என் வீடு தேடி வந்து விடுவார் பொசுக் பொசுக்கென்று. அன்று அப்பா வேலையிலிருந்து ஓய்வு பெறவேண்டிய நாள். எவ்வளவு பெரிய மாலை, நினைவுப்பரிசு எல்லாம் கொடுத்து கௌரவித்தார். அப்பா பேச்சைக் கேட்டுக் கொண்டு அரசு உத்தியோகத்தில் தொடர்ந்திருந்தால் இன்றும் அதே 14000/15000 தான் சம்பளமாக கிடைக்கும். ஆனால் இன்று என் ரேஞ்சே வேறு. இது ஏன் அப்பாவுக்கு இன்னமும் போட்டோயவில்லை.

ஒரு மாதம் போயிற்று. என்னை வெளி நாட்டுக்கனுப்ப எந்த முயற்சியும் நிர்வாகம் எடுக்கவில்லை. இப்போதெல்லாம் என் முதலாளி என்னை தவிர்க்கிறார். அவர் போக்கு எனக்கு பிடிபடவில்லை. முகம் கொடுத்து பேசுவதைக்கூட தவிர்க்கிறார். எப்போது வேண்டுமானாலும் தன்னை கம்பெனியிலோ, வீட்டிலோ, தொலைபேசி மூலமாகவோ, போட்டோலோ தொடர்புக் கொள்ளலாம் என்றவர், அடிக்கடி அப்பாவை தேடி சிரித்த முகத்துடன் வந்தவர், உன்னை மாதிரி புத்திசாலி அரசு உத்தியோகத்தில் இருக்கலாமோ என்றெல்லாம் தேனொழுக பேசியவர் இப்பொழுது கடுகடுக்கிறார், பார்க்கவே மறுக்கிறார்.

உனக்கு கொடுக்கிற சம்பளம் தண்டம் என்றவர் காரை திரும்ப பெற்றுக் கொண்டார். யூனிட் நஷ்டத்துல ஓடுது. உன்னை வேற ஊருக்கு மாத்தனும். அதுவும் இவ்வளவு நபர்களை வெச்சுக்க முடியாது. என்னய்யா படிச்சிருக்கே... உனக்கெல்லாம் எவன்யா பட்டம் கொடுத்தான்... நான் பட்டமெல்லாம் வாங்கலை. ஆனாலும் சொல்றேன். உன் படிப்பு ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாது. உன்னை மாதிரி ஆளுங்க அரசாங்க உத்தியோகத்துக்குதான் லாயக்கு...... பல பேர் முன்னிலையில் சாடித் தீர்த்தார்.

அப்பா சொன்னார் என்னிடம். இதுபோல நடக்கும்னுதாப்பா உன்னை அரசாங்க வேலையை விடாதேன்னு சொன்னேன். வேலை உனக்கு கொடுத்தது உன் திறமைக்கோ படிப்பை மெச்சியோ இல்லை. என் பொஸிஷன்... ஆமாம்பா தொழில் அமைச்சகத்தில் எனக்கு முக்கியமான பதவி. உங்க முதலாளியைப் போல எத்தனை எத்தனை முதலைகளைப் பார்த்திருப்பேன். அவங்களுக்கு வேண்டிய லைசன்சு, ஏற்றுமதிக்கு தேவையானவைகள் எல்லாம் செய்துக் கொடுப்பேன். எதையும் எதிர்பார்த்ததில்லை அவர்களிடம். எனக்கு ஏதாவது செஞ்சாத்தான் அவங்க பிழைப்பு நடக்கும்னு போலித்தனமான எண்ணம் அவங்களுக்கு.

அப்படி கணக்கு போட்டுத்தான் உன்னை வளைச்சுப் போட எத்தனையோ தொழிலதிபர்கள் முயற்சி பண்ணினாங்க. நான் எவ்வளவோ தடுத்தும் நீ கேட்கலை. எல்லாம் எதுவரையில். நான் வேலையிலிருந்து ஓய்வு பெரும் வரைதான். இப்ப நான் செல்லாக் காசு. என் தயவு உன் முதலாளி போன்றோர்க்கு தேவையில்லை. இப்ப என் பொசிஷன்ல இருக்கிறவனை சுத்தி சுத்தி எதையோ செஞ்சு கொடுத்து போட்டோயம் சாதிச்சுப்பாங்க இதுதாம்பா உலகம். அப்பா நான் ஏமாந்துட்டேன் இப்ப.........

டோன்ட் வொர்ரி மை சைல்ட். வேற வேலை கிடைக்கும் உனக்கு. ஆனா இவ்வளவு சம்பளம் கிடைக்காது. இது ஒரு எக்ஸ்பீரியன்ஸ். மறுபடி கஷ்டப்பட்டு உழைச்சுதான் முன்னுக்கு வரனும் நீ.

 

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter