Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
பிளஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - பிளஸ் ரிசல்ட் : நாமக்கல் மாணவி முதலிடம் - பிளஸ் ரிசல்ட் : முதல் 4 இடத்தையும் தட்டிச்சென்றது நாமக்கல் - கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மாதிரி எரிபொருள் அகற்றும்பணி தீவிரம் - ஆந்திராவில் ரெயில்கள் மோதி தீ பிடித்து 14 பேர் பலி - இலங்கை: இந்தியா ஒப்பந்தத்தை அனுமதித்திருந்தால் எந்த துன்பமும் வந்திருக்காது : ஞானதேசிகன் - இலங்கை சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் : சீமான் கோரிக்கை

வானவில்

ராஜசேகர

கடிதத்தை பிரித்தது முதல் அவன் இதயதுடிப்பு கூடியிருந்தது. முகம் அழுத்தமாய் சிவந்து இருந்தது. துணிகளை பையினுள் திணித்துக் கொண்டிருந்தான். எங்கோ உலைந்து போன அவன் சட்டையில் இருந்து அவன் கரம் தழுவி நழுவி விழுந்த அந்த புகைப்படம் அவனை பார்த்து சிரித்தது.

கோலப் பொடியாய் சாரல். ரயில் நிலையம் மிக அவசரமாய் இருந்தது. பரபரப்பான கூட்டம் சார்ட்டில் பெயர் தேடி இடம் தேடி விரைந்து கொண்டிருந்தது. வாழ்க்கையை தொலைத்ததாய் அவனுள் இருந்த உணர்வு மெது மெதுவாய் கரைந்து கொண்டிருந்தது. சிகரெட் பற்ற வைத்தான். வாட்டர் பாக்கெட் பையனை அலட்சியப்படுத்தி விட்டு கம்பார்ட்மென்டினுள் நுழைந்தான். ரயில் முன்னேற, சிகரெட் புகையோடு இவன் நினைவுகளும் பின்னோக்கி நகர்ந்தன.

பத்து ரூபா இருபத்தைஞ்சு, இருபத்தஞ்சு ஐம்பது என பையன் மெதுவாக காதுகளில் ஊதி விட்டுப் போனான். தியேட்டரில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
ஐயோ.........ஃப்ரீயா இருக்கும்னு நினைச்சா........ சரி ஊத்திக்கிச்சு. திரும்பினான்.

எக்ஸ்கியூஸ் மீ

திரும்பி பார்த்தான்.

வீ ஆர் ப்ரண்ட்ஸ். நாலு பேருக்கு டிக்கெட் எடுத்தோம். ஒருத்தி மிஸ். நீங்க....

எங்கக்கூட.... இஃப் யூ டோன்ட் மைன்ட். ஒரு வாலிப பிள்ளை நம்பள தைரிமா வந்து கூப்பிடறா, அவ நல்லவளா, கெட்டவளா ஏதும் பிரச்சனை வருமா! சிட்டி பொண்ணுங்க இப்படித்தான் இருப்பாங்களா. உனக்கு ஏண்டா இந்த குழப்பம் டிக்கெட் கிடைக்குது போய் பாருடா மனசாட்சி அதட்டியது. தலையாட்டினான். ஒரு குளிர் நிலவின் அருகே அமர்ந்தான்.

ஈஸ்வர் எங்கூட இருபது வருஷம் இருந்திருக்கான்.. அவனுக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா, இந்த சூர்யா இருக்க மாட்டான். படம் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. காற்றில் பறந்த அவள் புடவை இவன் காதோரம் மெதுவாக வருடியது. இதுவரை வந்திராத ஒரு உணர்வு. மனம் படத்தில் ஒட்டவில்லை.

குனிந்து உட்கார் சார், பின்னால் இருந்தவன் தோளைத் தொட்டான். திரும்பி பார்த்தான். முந்தானை சரிபடுத்தப்பட்ட போது இவன் முகத்தில் தவழ்ந்து சென்றது. இருட்டிலும் அவள் முகம் ஜொலித்தது. புத்தம் புது பூ பூத்ததோ பாடல் தொடர்ந்து கொண்டிருந்தது. அவளோட புடவை படும்போது, மேகம் என் மீது தவழ்ந்தது மாதிரி ஒரு உணர்வு. அவள் புடவை
வருடும் போது சொல்ல முடியாத கற்பனை. அவள் விரல்கள் அறியாமல் தீண்டியபோது என்ன ஒரு மென்மையான உணர்வு. என்னால் படம் பார்க்க முடியவில்லை. பார்த்தால், பக்கத்தில் உட்கார்ந்தால் காதலா? காதல்னா ரெண்டு பேரும்னு அர்த்தம். அவளால் படம் பார்க்க முடிந்ததா? தெரியலையே. நண்பனைக் கேட்டால் காதலே கிடையாதும்பான். காதல்னா கழுத்துக்கு கீழே என்பான். அங்கதானடா இதயம். அப்படீன்னா, அந்த இரண்டு பக்கம் என்பான். ச்சீ...... அசிங்கம்.

அருவருப்பு. தொடும்போது படும் உணர்வு காதலா! காமமா! காமம்தான். காமம்னு வெளியில் சொல்ல அசிங்கம். அதான் காதல்னு டீசண்டா.........இவள பார்த்தவுடனே ஏன் இப்படி? மறக்க முடியுமா? தெரியல. படம் இன்னோரு தரம் தொடர்ச்சியா ஓடாதா..........முடியாம இருக்குமா! பல வருஷம் பார்த்த மாதிரி. சூர்யா அது உன் குடும்பம்னா, எனக்கும் அப்படித்தான்டா. என்னை அநாதையாக்கிடாதடா, வா சரண்டர் ஆயிடலாம். க்ளைமாக்ஸ் நோக்கி இவன் உணர்வும் படமும் நகர்ந்தது. ரொம்ப டேங்க்ஸ். உங்களை முதல்ல கூப்பிடும் போது பயந்தோம். பட் நீங்க ரொம்ப டீஸண்டா நடந்துக்கிட்டீங்க. ஐ ஆம் லதா. இவ ரோஸி. இவ தேவி. தேவி. அந்த பெயரை மறுபடி உச்சரித்துக் கொண்டான். அவளை இவன் இதயம் படம் பிடித்துக் கொண்டது.

என்னடா இவன் படத்துக்கு போனானாம். புடவ உரசிச்சாம், முடி உரசிச்சாம், நகம் பட்டுச்சாம். டேய்....டேய்..... இதுல எல்லாம்........ டேய் அவ யாருன்னு தெரியுமாடா? இல்லடா. அவள பார்த்தது முதல் ஏதோ ஒரு பந்தம் இருக்கிற மாதிரி உணர்வுடா. வாழ்க்கையிலே ஏதோ நம்பிக்கை கிடைக்கிற மாதிரி தெம்பு. டேய் பாலு, பேஜர் அடிக்குது பாருடா. என்னடா இருக்க போகுது. ப்ளீஸ் கான்டாக்ட் மீ அப்படீன்னு இருக்கும். போடா பொல்லாத பேஜர். கற்பனை உலகில் பறந்தான். டேய் பாருடா, ஏதாவது அர்ஜெண்டா இருக்க போகுது. பேஜரை ஆன் செய்தான். ஜீறீமீணீsமீ நீஷீஸீtணீநீt ணீt 8212156. பீமீஸ்வீ.

டேய் தேவிடா.

ஏய்.... தேவின்னு உலகத்துல எத்தன பேர் இருப்பாங்க. இவ மட்டும்தானா?
இல்லடா என் மனசுல தோணுது. அவன் முகத்தில் ஆயிரம் வால்ட் பிரகாசித்தது.

கால் பண்ணுடா, பார்க்கலாம். ஸ்நேகிதன் அவசரப் படுத்தினான். டயல் செய்தான். மறுமுனையில் எஸ்...... குட் ஐ டாக் டூ மிஸ்.தேவி.

அஃப் கேர்ஸ். லைன் மாற்றப்பட்டது.

நான் பாலு. பேஜர் கிடைத்தது. நீங்க.....

எஸ் சார், அவர் எம்.டி வாண்ட்ஸ் டு டாக் டூ யூ

என்னை எப்படி..............

மே பி எங்க பாஸ் உங்க பாஸோட ப்ரண்ட். குட் யூ கம் ஓவர் க்ஷியர்?

எஸ்.

ரிஸீவர் மறுமுனையில் கட் ஆனது. டேய் அவக்கிட்ட கேட்டிருக்கலாமில்ல. இல்லடா நான் போன்ல கேட்கும் போது அவ இல்லன்னு சொல்லிட்டு, நேர்ல அவளாயிருந்தா...... வேணான்டா நேர்லயே பார்த்துடறேன்.

எக்ஸ்க்யூஸ் மீ

எஸ்

இங்கே தேவின்னு.....

ஆர் யூ பாலு?

எஸ்

யூ கேன் கோ ஸ்ட்ரெய்ட், டேக் லெப்ட், லாஸ்ட் கேபின்.
அவள் மெல்லிய விரல்கள், கம்ப்யூட்டர் கீ போர்டோடு பேசிக் கொண்டிருந்தது. அவள் கூந்தலை மெதுவாக என் மனது எடைப் போட்டுக் கொண்டிருந்தது. இந்த கூந்தல்தானே நேற்று என் காதோரம்....

எக்ஸ்க்யூஸ் மீ. குரல் கேட்டு, திரும்பி நிமிர்ந்தவளின் சிரசு இவன் சிமிழோடு உரசிக் கொண்டது. இவளின் கரம் அவன் நகத்தை அறியாமல் தீண்டினாற்கூட அந்த நகத்தை பேழையில் பாதுகாத்தான். இவள் சிரம் பட்ட சிமிழை..... மனதில் சிரித்து கொண்டான்.

நீங்க..... நேற்று.......

எஸ் ஐ அம் பாலு.

சேம் தேவி.

இவ்வளவு சீக்கிரம் நம்ம......

எதிர் பாக்கவே இல்ல.

அவன் இதயம் கண்களுக்குள் லப்டப் சொல்லிவிட்டு சென்றது.

இங்கு காதல் கிரகாம்பெல்லின் உதவியோடு பேச்சாய், பாட்டாய், கட்டுரையாய், வணக்கம் தமிழகமாய், ஆனந்தமான அறுபது நிமிடமாய், தினமலராய் போட்டோமாறப்பட்டுக் கொண்டிருந்தது.

பேச்சு வார்த்தை மாதங்கள் சிலவற்றை உருட்டிக் கொண்டு ஓடின. ஒருநாள்,
தேவி, நான் உங்ககிட்ட ஒண்ணு தனியா பேசணுமே....

பேசலாமே.....

பட் போன்ல முடியாது. மே பி போட்டோல்........

இன்னைக்கு முடியாதுப்பா. அம்மா கூட கோயில், ஷாப்பிங். நாளைக்கு முடியுமா?

அஃப் கோர்ஸ்.

புடவைகளால் பல முகங்கள் மூடப்பட்டு, சிறிது சிறிதாய் மெரீனா நிரம்பிக் கொண்டிருந்தது.

தேவி.... இப்படி உட்கார்ரது உங்களுக்கு பிடிக்குமா?

நிறைய... காற்று சுகாதாரத்தோட கிடைக்குதே.

உன்கூட உட்கார்றது பிடிக்கும்னு சொன்னா குறைஞ்சா போய்டுவே மனதுக்குள் திட்டிக் கொண்டேன்.

இந்த லவ், காதல் பற்றி..... மெரீனாவில் உட்கார்ந்து லவ்வை பத்தி கேட்டீங்கன்னா சுண்டல் விக்கிற மாதிரின்னு சொல்லுவேன். இங்க காதல் விற்கிற மாதிரி ஃபீலிங். அசிங்கமா இருக்கு. பட் காதல் நல்ல விஷயம். காதல்ங்கறது கட்டி பிடிக்கறது அப்படீன்னு எல்லாரும் தப்பா போட்டோஞ்சுக்கிட்டாங்க.

அதுதான் இப்படி. காதல் அழகான விஷயம். நம்பிக்கை. அர்த்தமுள்ள மௌனம். நிறைகுடம்.

நான் அதை அர்த்தமுள்ள மௌனமா எடுத்துக்கிறேன். அந்த மௌனம் நீங்கதான்னு தோணுது. என் மனசுல ஆழமான விஷயமா பதிந்து விட்டது காதல் மட்டுமல்ல.

ஸ்ரீதேவி
காலை நீராடி
மனமுருகி
தினமும் வேண்டுகிறேன்
கடவுளை
மட்டுமல்ல!
காதல் விதை ஊன்றப்பட்டது. கடல் அலை காலை நனைத்து விட்டு ஆனந்தமாய் உள்வாங்கியது.

தேவி.... இந்த கடல் அளவு உன்னை புடிச்சிருக்கு. கடல் பார்க்க பிடிக்கும், பட் உப்புக் போட்டோக்கும்.

ஏய்......... ஓகே. தேவி ஒரு டெஸ்ட். இப்போ நம்ம காதலை ரெண்டு வீட்டிலேயும் ஆதரிக்கலின்னா வாட் ஷேல் வீ

டூ? நெக்ஸ்ட் ப்ளேன், ஓடிடலாமா?

இல்ல பாலு, இருபத்தைஞ்சு வருஷமா வளர்த்தவங்க. வாழ்க்கைன்றது ஒரு மரம்னா, அதுல காதல் என்பது ஒரு பூ மாதரி, காய் மாதிரி, பழம் மாதிரி மேலோட்டமா இருக்கும். பார்க்க அழகாயிருக்கும் பட் பெற்றோர்ங்கறது வேர் மாதிரி. அதுவும் ஆணி வேர். வேரை எப்படி வெட்ட முடியும்.

அப்புறம் மரத்தை யார் தாங்குவா? அந்த வேர்தான் நம்மள தலைல வைத்து ஆடும். நிறைய கன்வின்ஸ் பண்ணுவோம். பெர்மிஷன் வாங்குவோம்.

ஓகே. ஒன் மோர். சப்போஸ் உன் வீட்டில் பெர்மிஷன் சொல்லி, என் வீட்டில் இல்லைன்னா உன் வீட்டில் அரேஞ்ச் பண்ணுவாங்களா?

இது இப்ப சரியா படும். அப்புறம் தவறுன்னு படும். பெரியவங்க அதாவது என் அப்பா, அம்மா ஏன் அறிவுறை பண்ணல, வளைச்சு போட்டுட்டாங்களோன்னு தோணும். அப்போ நான் உன் உயிரை சுமந்துகிட்டிருப்பேன். நான் உன்னை தேடணும். நீ உன் அப்பா அம்மாவை தேடணும். நிம்மதி போயிடும்.

பாலு, நீ ஊருக்கு போ, உன் பெற்றோரோடு பேசு. காதல்னா பயப்படுவாங்க. கன்வின்ஸ் பண்ணு. காதல் மேகம் இல்ல. வானம்னு போட்டோயவை. நான் உனக்காக காத்திட்டிருப்பேன்.

பல சிந்தனைகளோடு ரயிலை விட்டு இறங்கினான்.

ஆட்டோ, காந்தி ரோடு போகுமா?

ஆட்டோ சீறி பாய்ந்தது.

மெட்ராஸ்ல நல்ல மழையா சார்?

கடுமையான வெயில்ப்பா.
டேய்......தே......பசங்க நாலு சுவருக்குள்ள நடக்குறதை வெளியில போய்...........
பைக்கில் கட்டிப் பிடித்துப் போன காதலர்களை திட்டினான் டிரைவர்.

ஏம்பா உனக்கு காதல்னா பிடிக்காதா!

காதல்னா, ஏமாற்று வேலை சார். காதல்னா போட்டி சார். உன்னை நான் ஏமாத்துறேனா அல்லது நீ என்னை ஏமாத்திறியா அப்படிங்கற போட்டி சார். காதல்ங்கறது மழையில நனையுற மாதிரி. நனையும் போது சுகமா இருக்கும். மழை விட்ட பிறகு காய்ச்சல் வரும். கஷ்டப்படணும்.

இல்லப்பா... காதல்னா தெய்வீகம்.

யாரையாவது லவ் பண்றியா சார். சொல்றேன்னு தப்பா நினைக்காதே. இந்நேரம் உன் ஆளு வேற எவன் கூடவாவது.....

அவன் சட்டையை பிடித்து இழுத்து போட்டோர் என அறைந்தான். வண்டி நிலை தடுமாறியது. ஆட்டோ நின்றது. கலர் சட்டையும், காக்கி சட்டையும் மோதிக் கொண்டது. காக்கி சட்டை, கலர் சட்டையை அழுத்தி பிடித்து மறுகையால் ஆட்டோவினுள் எதையோ தேடியது. அடுத்த விநாடி. கலர் சட்டை ரத்தத்தில் கரைந்து கொண்டிருந்தது. மெதுவாய் இந்த உலகம் அவனுக்கு இருட்டாகிக் கொண்டிருந்தது.

ஹாஸ்பிட்டல்- திருநெல்வேலி. இன்டென்ஸிவ் கேர் டிப்பார்ட்மெண்ட். மௌனமாக இரந்தது. ஜோதி, செல்லதுரை மார்பில் புதைந்து அழுதுக் கொண்டிருந்தாள். பாலுவோட அப்பா- டாக்டர் எஸ். ஐ அம் செல்லதுரை.

கேஸ் சீரியஸ். ப்ளட் ரொம்ப வேஸ்ட் ஆகியிருக்கு. லேட் அட்மிட். சொல்றதுக்கு வேற ஒண்ணுமில்ல.

சார் ஒரே பையன், எங்களுக்கு வேணும். வயசான ரெண்டு பேர் இருக்கும்போது.......... இவனுக்கு போய்.......

மனைவிக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய நீங்களே இப்படி........ ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர்ஸெல்ஃப்.

அரைகுறையாய் கண் திறந்தான். உதடுகள் அசைந்தன. ஜோதி அவன் காலை பிடித்து அழுதாள். அவர்கள் தூங்கி பல நாட்கள் ஆனது கண்களில் தெரிந்தது. பாசமாய் பார்த்தார்கள். தலையை வருடினார்கள். கடவுளை பல முறை அழைத்தார்கள்.

அவன் சுய நினைவிற்கு திரும்ப நான்கு நாட்களாயிற்று. மெதுவாய் தேறினான். கண்ணில் தேவி தோன்றி சிரித்து மறைந்தாள்.

பாசம் காதலை மெதுவாய் மறைத்தது. டாக்டர் அறிவுறுத்தினார். மூன்று மாதம் பெட் ரெஸ்ட். கட்டிலை விட்டு இறங்க விடவில்லை. தாங்கினார்கள். தலை மேல் தூக்கி ஆடினார்கள். ஆணிவேர் என்ன என்பதை உணர்ந்தான். பூவையும், காயையும், கனியையும் மறக்க முடியவில்லை. பட்டி மன்ற நடுவர் நிலையானது. பல முறை சிந்தித்தான். சொல்வதென முடிவெடுத்தான்.

வீடு- திருநெல்வேலி.

அம்மா, நான் மெட்ராஸ் போகணும். மனசு ஏனோ பாரமா...... உடம்புக்கு இன்னும் முடியவில்லை. மனசு நிறைஞ்சதுன்னா உடம்பு சரியாயிடுன்னு தோணுது.

ஏதாவது காதலா!
........................................
காதல்னா அர்த்தம் தெரியுமாடா. காதல் மனசை மௌனம் ஆக்கிடும். புத்தியை செயல்படவிடாது. பட் இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் மாறும். மனசு பேசும். புத்தி யோசிக்கும். மனசும், புத்தியும் வேற வேற ஆயிடும். ஈகோ வரும். அந்தஸ்த்துக்கு அர்த்தம் போட்டோயும். இதெல்லாம் போட்டோயும்போது காதலுக்கு அர்த்தம் போட்டோயாம போயிடும்.

அம்மா நீ நினைக்கிற மாதிரி என் காதல் இல்ல. அந்த வானம் மாதிரி அமைதி, இந்த பூமி மாதிரி பொறுமை.

இல்லடா, காதல் என்பது கடலும், வானம் மாதிரி. நாம் பார்க்கும் போது சேர்ந்து இருக்கிற மாதிரி தோணும். பட் சேராது. கானல் நீர் மாதிரி. விவாதம் வளர்ந்து கொண்டிருந்தது.

பாசத்தின் முன் காதல் தோற்க்கத்தான் செய்தது. பாசம் விட்டுக் கொடுத்தது. சென்னை.

மனசு முழுவதும் தேவி ஆக்கிரமித்து இருந்தாள். கண்களில் வந்து வந்து மறைந்தாள். அவள் வீட்டு ஃபோன் நம்பர் கண்முன் வந்து ஓடியது. டயல் செய்தான்.

மறுமுனையில் ஹலோ என்றாள்.

தேவி, நான் பாலு.

உங்களுக்கு யார் வேணும்?
தேவி, என்ன நடந்தது தெரியுமா? நீ எப்படி.....

நான் பிஸியா இருக்கேன்.

ஆபிஸ§க்கு கூப்பிடவா.

சாரி. போட்டோஸீவர் கட் ஆனது.

ஆபிஸ்.

குட் ஐ ஸ்பீக் டூ தேவி.

ஸாரி சார். நெக்ஸ்ட் மந்த் அவங்க மேரேஜ். அவங்க வரமாட்டாங்க நீங்க.....

அவங்க தூரத்து உறவு.

மனம் கனமானது. எப்படி அம்மாவை எதிர்கொள்வது. நம்ம விவாதங்கள் என்ன ஆனது. காதல்ன்னா எப்படி மறக்க முடியும். அவ்வளவு எளிதா! ஆட்டோக்காரன் சொன்னது உண்மையா! காதல் கடலும் வானும் மாதிரியா! அய்யோ ஷாஜகான், மும்தாஜ் காதலும் காதல்தானே. எப்படி தாஜ்மகால் உருவாச்சி. காதல் ஊசியாய் அவன் இதயத்தை இப்போது தைத்தது. வருங்கால நினைப்பில்லை. சவரம் செய்ய தோணவில்லை. நாலு சுவருக்குள் நாட்களை கடத்தினான்.

வாரம் கழிந்தது. ஒரு நாள், சார் போஸ்ட், தபாலை பிரித்தான். உள்ளே இருமண இணைப்பு விழா அத்துடன் கடிதம்.

டியர் பாலு, நாம் ஏன் சேர்ந்தோம். இப்ப ஏன் பிரிந்தோம். எல்லாம் சூழ்நிலை.
சூழ்நிலையை நாம் மாற்ற முடியாது. நாம் மாறனும். நம் காதலை ஏன் நாம் பழைய தலைமுறையாய், யுகமாய் எடுக்க கூடாது. புதிய உயிர் நண்பர்களாய் ஏன் இருக்கக் கூடாது. நட்பும் புனிதமானதுதானே!

கடிதத்தை முகத்தில் பொத்தி அழுதான். நிறைய தடவை படித்தான். சிந்தித்தான். தீர்க்கமாய் ஒரு பேப்பர் எடுத்து எழுத ஆரம்பித்தான்.

தேவி,

ஃப்ரம் பாலு,

காதல் வேறு, சூழ்நிலை வேறு. மழை பெய்யும்போது வானம் கருப்பா தெரியும். வெயில் அடிக்கும்போது நீலமா தெரியும். அது சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவது போல நமக்கு தெரியும். பட் வானம் வானமாத்தான் இருக்கும். காதலும் அப்படித்தான். காதலை ஒரு மலர் என்று எடுத்துக் கொண்டால், அதற்கு நிறைய நிலைகள் இருக்கு. அந்த மலரின் மகரந்தம், காற்றிலோ, வண்டிலோ அதே இன மலரிலோ சேரலாம். காதல் கை சேர்ர மாதிரி. வேற மலர்ல கூட சேரலாம். அது திருமணம் மாதிரி. காதலனை இழந்த திருமணமாய். ஆனால் இன்னொரு ரகம் இருக்கு. அது உயர்ந்தது. அந்த மலர் யார் கூடவும் சேராமல் செடியிலேயே காய்ந்து, தரையில் விழுந்து, உலர்ந்து, மக்கி இன்னொரு மலர் மலர உதவும். அதுதான் நட்பு. இறந்த பிறகு கூட வாழ வைப்பது. காலையில் பிறந்து மாலையில் வாடிப் போற காதலையே உன்னால் வாழ வைக்க முடியலையே நீ எப்படி இறந்த பிறகு கூட வாழற நட்பை.........

பிரிவுடன், பாலு.

கடிதம் பெட்டியில் சேர்க்கப்பட்டது. துணிகளை எடுத்து பையில் திணித்தான். எங்கோ உலைந்த சட்டையிலிருந்து அவன் கரம் தழுவிய புகைப்படம் அவனை பார்த்து சிரித்தது. அதை தாண்டி நடந்தான்.

ரயில் நிலையம் அவசரமாய் இருந்தது. காதல் வானவில் மாதிரி. வசந்த காலத்தில் வரும். வெயில் காலத்தில் போயிடும். வானவில்

வானத்துக்கு சொந்தமல்ல. அவளும் வானவில் போல் வந்தாள். இது என்ன வெயில் காலமோ! தீர்க்கமாய் உணர்ந்தான்.

வாழ்க்கையை தொலைத்ததாய் இருந்த உணர்வு மெது மெதுவாய் குறைந்தது.
இப்போது நினைவுகள் முன்னோக்கி சென்றன.

முற்றும்!!

 

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter