Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
பிளஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - பிளஸ் ரிசல்ட் : நாமக்கல் மாணவி முதலிடம் - பிளஸ் ரிசல்ட் : முதல் 4 இடத்தையும் தட்டிச்சென்றது நாமக்கல் - கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மாதிரி எரிபொருள் அகற்றும்பணி தீவிரம் - ஆந்திராவில் ரெயில்கள் மோதி தீ பிடித்து 14 பேர் பலி - இலங்கை: இந்தியா ஒப்பந்தத்தை அனுமதித்திருந்தால் எந்த துன்பமும் வந்திருக்காது : ஞானதேசிகன் - இலங்கை சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் : சீமான் கோரிக்கை

புருஷன்

நடிகை கல்பா வீட்டுக் கிசுகிசு என்பதால் மிகுந்த பரபரப்புடன் படிக்கப்பட்டது. கல்பாவும் அதைப் படித்தாள். முதலில் கோபம் வந்தது. பிறகு, எல்லாம் நன்மைக்கே என்று அமைதிபடுத்திக் கொண்டாள்.

கல்பாவை அந்த நிருபருக்கே நன்றாகத் தெரியும். விசாரிக்காமல் இந்த கிசுகிசுவை அவரே எப்படி வெளியிட்டார்? ஒரு வார்த்தை அவளிடம் கேட்டிருக்கக் கூடாதோ?

நிருபர் கண்ணன் வரவழைக்கப்பட்டார். ஒரு விதமான தயக்கத்துடன்தான் அவர் அந்த வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தார். ஹாலில் கல்பா இருந்தாள். அவளருகே சிரித்த முகத்துடன் அவள் கணவனும் இருந்தார்.

வணக்கம் மேடம்.

வழக்கமான உற்சாகம் கண்ணனின் குரலில் காட்டப்படவில்லை.

விவாகரத்து விவகார சேதி எப்படியோ வெளியே கேட்டுவிட்டது! என்று கல்பாவே பேச்சை தொடங்கினாள்.

எப்படி கிடைச்சது இந்த நியூஸ்னு கேட்கப் போறீங்களா?

இல்லே கண்ணன். கேட்கமாட்டேன். பத்திரிகை தர்மம்னு சொல்லி நீங்களும் பதில் சொல்லாம தப்பிச்சிடுவீங்க.....

சிரித்தாள் கல்பா.

கண்ணனும் அந்த சிரிப்பில் சேர்ந்து கொண்டார்.

மேடம் சொல்றனேன்னு தப்பா நெனைக்காதீங்க. இவரோடு என்ன மனக்கசப்பு ஏன் டைவர்ஸை பத்தி நெனைக்க தொடங்கிட்டீங்க?- கண்ணன் இழுத்தவாறு கேட்டார்.

உங்க தவிப்பு எனக்கு போட்டோயுது கண்ணன்.....கூல் டிரிங்ஸ் எடுத்துக்கோங்க.

மிரளாமல் மிராண்டாவை ஒரே மூச்சில் குடித்தார் அவர்.

சொல்லுங்க மேடம்.

நானும் இவரும் அஞ்சு வருஷமா சேர்ந்து வாழறோம். எங்களுக்குள்ள சண்டை இல்லை. பூசல் இல்லை. மனக்கசப்பும் இல்லை....

அப்ப வந்த கிசுகிசு பொய்யின்னு வருத்தம் தெரிவிச்சிடவா?

அவசரப்படாதீங்க கண்ணன். இநத் வீட்டில் ஒரு விவாகரத்து நடந்தாகணும்......

கண்ணன் அதிர்ச்சியில் கல்பாவின் கணவரை பார்த்தார். அவர் முகத்திலிருந்து எதையும் ஊகிக்க முடியவில்லை.

எனக்கு தெரிந்து உங்களுக்கு விரோதமா இவர் நடந்துக் கொண்டதே கிடையாதே?

இதைக் கேட்டதும் மீண்டும் சிரித்தாள் கல்பா. ஆனால் அந்த சிரிப்பில் சற்று விரக்தி வெளிப்பட்டது.

விவாகரத்து விஷயமாக நானும் இவரும் காரசாரமாக வீட்டில் பேசிக் கொண்டது உண்மைதான் கண்ணன். அதனால்தான் எப்படியோ அது வெளியே லீக்கும் ஆகிவிட்டது.

புரியும்படி சொல்லுங்கம்மா.

ஒரு பெண் தன் கணவனை எப்போதெல்லாம் விவாகரத்து செய்யலாம்?

கண்ணன் இந்த கேள்விக்கு பதில் கூற தயங்கினார்.

சொல்லுங்க. உங்க விளக்கம் இப்ப ரொம்ப தேவை.

கண்ணன் ஒப்புவித்தார்.

கணவன் அவளைக் கொத்தடிமைகுள்ளாக்கும்போது! அவளை கொத்தடிமையாக நடத்துகிறபோது! அவளை வெறுத்து ஒதுக்கி வேறு ஒருத்தியோடு வாழ்கிறபோது! பணம் கேட்டு துன்புறுத்துகிற போது.........

இத்தனை கொடுமைகளையும் ஒருத்தி சகித்துக் கொண்டு அவனை விலக்காமலும், விவாகரத்து கோராமலும் வாழலாமா?

கூடவே கூடாது மேடம். பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கணும். அதற்கு வானமே எல்லைன்னு சொல்லிடக்கூடாது. இந்த அஞ்சு வருஷத்துல நீங்க இதில் எதை அனுபவிச்சீங்க? கண்ணன் படப்படப்பாக கேட்டார்.

இந்த முறை கல்பா சிரிக்கவில்லை. அருகிலிருந்த கணவரை பார்த்தாள். அவர் எழுந்து உள்ளே போய்விட்டார்.

என்ன டிராமா நடக்குது மேடம் இங்கே?- வியப்பில் கண்ணன் புருவத்தை உயர்த்தி கேட்டார்.

வாழ்க்கைதான் ஒரு டிராமாபோல நடக்குது...... என்று கல்பா சொல்லிக் கொண்டிருந்தபோதே அவளது கணவர் உள்ளேயிருந்து ஒரு பெண்ணை கூட்டி வந்தார்.

கண்ணன் அந்த பெண்ணை பார்த்தார்.

ஏறத்தாழ கல்பாவின் சாயலில் இருந்தாள் அவள்.

ஒரே கணத்தில் முடிவுக்கு வந்தார் கண்ணன்.

இந்தப் பொண்ணு கல்பாவின் தங்கை. இவள்தான் இவங்க வீட்டுக் குழப்பமே!

கல்பா குறுக்கிட்டாள்.

என்ன யோசனை கண்ணன்? இவளைப் பாத்தீங்களா? இவள் என் சிஸ்டர்.

ஓரளவு போட்டோஞ்சுக்கிட்டேன் மேடம்.

இதுவரையில் பேசாமல் இருந்த நடிகையின் கணவர் இப்போது பேசினார்.

அவசரப்படாதீங்க கண்ணன். உங்களை வரச்சொன்னது செய்தி வாங்கிப் போக இல்லை. விவாகரத்துக்கு ஆதரவாகப் பேசி ஒரு வழி சொல்லிட்டு போகத்தான்.

கண்ணன் பேசாமல் இருந்தார்.

கல்பா சொன்னாள்- இவள் கிராமத்தில் இருக்கிறாள். நான்தான் பணம் காசு தந்து கல்யாணமே பண்ணி வெச்சேன். இவள் ஒரு அப்பாவியா, இல்லே ஒரு முட்டாளான்னே எனக்கு இன்னமும் விளங்கலே......

கண்ணன் சுறுசுறுப்பு அடைந்தார்.

இவளைக் கைபிடித்த நாளில் இருந்து இவள் புருஷன் இவளைக் கொடுமை செய்கிறான்.அதாவது நீங்கள் பட்டியல் போட்ட அத்தனைக் கொடுமையும். என் பண உதவி இவள் படுகிற கொடுமையை அதிகம்தான் ஆக்குது. அவனை விவாகரத்து செய்துவிடச்சொல்லி அட்வைஸ் பண்ணி நாங்க ரெண்டு பேரும் அலுத்து போயிட்டோம். கொஞ்ச நேரம் முன்னால சொன்னேனே...... இவ ஒரு அப்பாவியா முட்டாளான்னு போட்டோயலேன்னு? இப்ப சொல்றேன் இவள் ஒரு பெரிய கோழை. ஒரு வாரமா புத்தி சொல்றோம். மசியல. உங்களைப் போல நண்பர் யாராவது வந்து சொன்னா நல்லதுன்னு நினைச்சுத்தான் உங்களை வரவழைச்சேன்.

கண்ணனுக்கு இப்போது எல்லாமே விளங்கிவிட்டது.. அந்த பெண்ணிடம் சொன்னார்.

கல்பா மேடம் சொல்றதுலே தப்பு இருக்கிறதா தெரியலம்மா. உங்க புருஷன் நல்லவரா இருந்தா நீங்க அவர் பேச்சை கேட்கறது தப்பு. அவள் ஒரு மிருகமா இருந்தா இந்த முடிவை நீங்களே மத்தவங்க எதிர்த்தாலும் எடுத்திருக்கணும். துணிச்சல், தைரியம், பெண் போட்டோமைன்னு எல்லாம் வார்த்தைகளை அடுக்கி உங்களை உசுப்பிவிட நான் தயாரில்லை. உங்கள் வாழ்க்கையும், சுதந்திரமும், மகிழ்ச்சியும் பறி போயிருக்கிறது. விழுந்தது நீங்களாக இருந்தால் எழுவதும் நீங்களாகத்தான் இருக்க வேண்டும்........

கண்ணன் சொல்லிக் கொண்டிருந்தபோதே அந்தப் பெண் அழுதபடி உள்ளே ஓடினாள்.

உள்ளே போய்விட்டு வந்த கல்பா, நன்றி கண்ணன் அவள் கொஞ்சம் அசைந்துக் கொடுக்கிறாள்! என்றாள்.

வெளியான கிசுகிசுப்படி நீங்கதான் விவாகரத்துக்கு ஆளாகி இருக்கணும்....

அதையும் வழக்கமானதுதான்னு ஊரும் உலகமும் ஒத்துக்கும். ஆனா வழக்கத்துக்கு மாறா நான் வேறு ஒரு பெண்ணை விவாகரத்துக்கு வற்புறுத்துகிறேன். இது கொஞ்சம் வித்தியாசமாகக்கூட இருக்குமே?

கொஞ்சமில்லை மேடம். நிறையவே!

கண்ணன் விடைப்பெற்று ஸ்கூட்டரை உதைத்தார். சண்டித்தனம் செய்தது அது. வெளியே தள்ளிக் கொண்டு போய் முயற்சி செய்தார். கால் ஸ்கூட்டரை உதைத்தபோது மனம் உதைத்தது.

இத்தனை நேரம் உள்ளே நடந்தது நாடகமா? நிஜமா? கல்பா வீட்டிலிருந்துதானே எனக்கு போன் மெசேஜ் வந்தது. அப்படியானால் யார் அந்த புரளியை கிளப்பினது?

உள்ளே- என்னை மன்னிச்சிடு கல்பா. நான்தான் இந்தக் கிசுகிசுவை கண்ணனின் பத்திரிகை ஆபிசிற்கு போன் செய்து சொன்னேன். என்னை விவாகரத்துக்கு வற்புறுத்துகிற உனக்கு, உன்னை பற்றி இப்படி ஒரு சேதி கிளம்பினாள் எப்படி இருக்கும்னு நினைச்சி இந்த தப்பை செய்துட்டேன். கோபப்பட வேண்டிய கட்டத்திலும் நீ நிதானமாகத்தான் இருக்கே.... அந்த பெண் கல்பாவிடம் கெஞ்சினாள்.

பேசினது போதும், வக்கீல் வீட்டுக்கு கிளம்பு. கல்பா அவளை அவசரப்படுத்தினாள்.

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter