|
பந்தம்
சைக்கிளை தள்ளிக் கொண்டிருந்த முனுசாமியை அணைத்தவாறு காரை நிறுத்தி கோபமாக இறங்கினான் ரவி.
என்னடா அது மூட்டையிலே? - கேட்ட ரவிக்கு முப்பத்தெட்டு வயதிருக்கும். கட்டிட காண்ட்ராக்டர்
ஒண்ணுமில்ல சாமி - சொன்ன முனுசாமிக்கு நாற்பத்தைந்து வயதிருக்கும். கட்டிட வேலை செய்யும் கல்தச்சன். சம்பவம் நடப்பது கட்டிட வேலைக்குப் பக்கத்திலேயே.
ஒண்ணுமில்லாததையா மூட்டையா கட்டி போட்டோயர்ல வைச்சு, பொழுது சாய்ஞ்சவுடனே திருட்டுத்தனமா எடுத்திகிட்டு போற? துண்டு கம்பிங்கதானே? திருட்டு நாயே, ஏன்டா இந்த பிழைப்பு! வா ஸ்டேஷனுக்கு-என்று சொல்லிக்கொண்டே தாடையிலும், முதுகிலும் இரண்டிரண்டு அறைவிட்டான். முனுசாமியின் வைரம் பாய்ந்த உடலால் இவன் கை வலித்ததை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
மன்னிச்சுகுங்க ஐயா, எல்லாம் ஒரு அடி துண்டு கம்பிங்க, எதுக்கும் உதவாது, அதான் .... உதவுமா, உதவாதான்றதை நான் பாத்துக்கறேன்! வயித்துக்கு சோறுதானேடா திங்கறீங்க?
இல்ல..... குழந்தைக்கு உடம்பு சரியில்லை டாக்டர்கிட்டே போவணும்.. அதுக்கெதுக்கடா நாயே இங்க திருடறே? என்னை கேக்க வேண்டியதுதானே? கேட்டால் கொடுக்கமாட்டான் என்று முனுசாமிக்கு தெரியும். சனிக்கிழமையன்று வாரக் கூலி வரும். மத்த நாளில் பைசா பெயராது.
இனிமே பண்ணமாட்டேன்யா இந்த தபா வுட்டுடுங்க
இன்னொரு வாட்டி மாட்னே மவனே, உள்ளே வச்சு முட்டிக்கு முட்டி தட்டச் சொல்லிடுவேன். தொலைஞ்சு போ. கம்பியை எறக்கிட்டு போ!!
இத்தனை திட்டையும் வாங்கிக் கொண்டு சும்மா இருக்கும் முனுசாமி குற்ற உணர்வாக இப்படி இருக்கிறானா? இல்லை!! அப்படி எல்லாம் எது சரி, எது தவறு என்று யோசிக்குமளவிற்கு அவன் அறிவு படைத்தவனில்லை. இல்லை என்றால் சொரணையே இல்லாத மனித ஜாதியா? அதுவும் இல்லை. மனித ஜாதிதான். ஆனால் அந்த மனிதனில் ஜாதிகள் இரண்டொழிய வேறில்லை, பணம் இருப்போர் பெரியோர் இல்லாதோர் இழி குலத்தோர்! என்ற அகராதிப்படி இரண்டாம் இனத்தவன். வயதில் சிறியவனான ரவி ஏசிய ஏக வசனங்களை மேற்கண்ட இலக்கணப்படி பெரியவர் சொன்னது பெருமாள் சொன்னது போல என்று விட்டு விட்டவன்.
என்னங்க லேட்டு?-ரவி வீட்டுக்குள் நு¬ழுயும்போதே அவன் மனைவி மீனா கேட்டாள் இதோ புறப்படலாம் சைட்ல கொஞ்சம் பிரப்ளம். பாபு, கோபு எங்கே?
அவங்க ரெடியாகி அரைமணி ஆவுது. மேலே டி.வி. பார்த்துக்கிட்டு இருக்காங்க ஹை டாட்!!-மேலேயிருந்து குரல் கொடுத்தார்கள்-போலாமா? டென் மினிட்ஸ் முகம் கழுவிகிட்டு வந்துடறேன். எல்லோரும் போட்டோல் புறப்பட்டார்கள். வாரத்திற்கு ஒரு நாள் இப்படி வெளியே ரவுண்டு அடித்துவிட்டு அப்படியே ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வருவார்கள்.
எந்த ஓட்டலுக்குடா போகலாம்? பனகல் பார்க்ல புதுசா ஒரு த்ரீ ஸ்டார் ஓட்டல் திறந்திருக்காங்க டாட், அங்க போகலாம். பாபுவுக்கு பனிரெண்டு வயது, கோபுவுக்கு பத்து புது ஓட்டலுக்கு போனார்கள். அதன் பிரம்மாண்டமான லாபியிலேயே கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தனர். ரவி எவ்வளவு செலவாகியிருக்கும் என்று கணக்கு போட்டுக் கொண்டிருந்தான். அந்த சாண்டிலியர் விளக்கு மட்டும் ஒரு லட்சத்தை தாண்டும். என்றைக்காவது ஒரு நாள் இவ்வளவு பெரிய ஓட்டலை கட்டிக் விட்டு ஹாயாக ரெஸ்ட் எடுக்க வேண்டும். ரெஸ்டாரண்டு இன்னும் சிறப்பாக இருந்தது. புது ஓட்டல் என்பதால் சோபா போட்டோக் மணமும், மேலமைன் வாடையும் இன்னும் இருந்தது. கருவாட்டுக்காரிக்கு அவள் கூடை மணம் என்பது போல ரவிக்கும் இதெல்லாம் மிகவும் பிடித்திருந்தது.
ஒன்பது அயிட்டங்கள் வாங்கி தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள். டேஸ்ட் பிரமாதம். பில் வந்தது. வரி உட்பட நானூற்றி எண்பது ரூபாய். அடப்பாவிகளா, பகல் கொள்ளையாயிருக்குதே. சரி தொலையட்டும் என்று ஐநூறு ரூபாயாக வைத்து வெயிட்டரை கூப்பிட்டு கொடுத்தனுப்பினான். திரும்பி வந்தவனிடம் மீதி இருபதை டிப்ஸாக வைத்தான்.
பில்லை எடுத்துக்கொண்டு மனைவியின் காதில் கிசுகிசுத்தான்-ஒன்பதுக்கு பதிலா எட்டுக்குதான் பில் போட்டிருக்கான்.
கூப்பிட்டு சொல்லிடுங்க அம்மா யோக்கிய ராணி வாம்மா போகலாம்! சென்னை சாலைகளில் இரவு பத்து மணிக்கு மேல் கார் ஓட்டுவது சுகமானது. போட்டோல் எல்லோருக்கும் தூக்கக் கலக்கமோ என்னவோ உம்மென்று வந்தார்கள். மௌனத்தை கலைக்க ரவிதான் முயற்சித்தான். கோபு உன் வயசுப் பொண்ணு ஒருத்தி பக்கத்து சீட்டுல உட்கார்ந்ததே கவனிச்சியா? ப்ளூ ஜீன்ஸ் போட்டுகினு, பாஃப் வெட்டிக்கினு, சிவப்பா சேட்டு பொண்ணாட்டம் இருந்ததே, அதுவா டாட்?
பரவாயில்லைடா நல்லா கவனிக்கிறே! பாபுவும், மீனாவும் சிரித்தார்கள்.
அப்பாவுக்கு பொம்பள குழந்தைகள்னா ரொம்ப பிடிக்கும்டா கோபு அப்படியா டாடி, உங்களுக்கு ஒண்ணும் வயசாகலையே, இப்ப கூட ட்ரை பண்ணலாமே-என்றான் பெரியவன் அம்மாகிட்ட சொல்லு!
வாய மூடிகிட்டு இருங்க. அப்பனும் பிள்ளையும் பேசிக்கிற பேச்சா இது? எனக்கு அதுபோல மாடர்னா இருந்தா பிடிக்காதுடா
பின்ன?
நிலா காய்கிறது, நிதம் தேய்கிறது யாரும் ரசிக்க வில்லையே..ன்னு ஒரு பத்து வயசுப் பொண்ணு சினிமாப் பாட்டு பாடும் பாரு, அதாட்டம் இருக்கணும். முகத்திலே கல்மிஷமே இருக்கக்கூடாது. சின்ன சின்னதா கட்டம் போட்ட பச்சைப் பட்டு பாவாடை, அதுக்கு கான்ட்ராஸ்டா சிவப்பு பட்டு ப்ளவுஸ் போட்டு இருக்கணும்! அப்புறம் உடம்பு முழுக்க நகை நட்டுன்னு மாட்டி, மெத்துன்னு இருக்கிற அவ கைளை புடிச்சிகிட்டு வாக் போகணும். அவ கேக்குறதெல்லாம் வாங்கிக் கொடுக்கணும். கார்ல போனா முன் சீட்டுல என்
பக்கத்துல உக்கார வெச்சிகிட்டு ஜோக்கடிச்சுகினே போவணும். அவ சிரிச்சுகினே வரணும். இப்படியெல்லாம் ஆசைடா!!
அவனவன் ஆம்பிளை புள்ள இல்லையேன்னு கவலைப்படுவான், நீங்க எது நம்பகிட்ட இல்லைன்னு தேடி கண்டுபிடிச்சு ஆசை படுறீங்களாக்கும். அண்ணாநகர் ரவுண்டனாவில் திரும்பி வீட்டை நோக்கி காரை செலுத்தினான் ரவி. அந்த தூங்கு மூஞ்சி மரத்துக்கு கீழே வேட்டியை மடித்து கட்டி மாரில் துணி இல்லாமல் துண்டு போட்டுக் கொண்டு கை கட்டி சோகமாக நின்றிருந்தான் முனுசாமி. அவன் குடும்பம் வாழ்வதே அந்த மரத்தைச் சுற்றித்தான். அவன் சொத்து மொத்தமும் மரத்தின் மேலுள்ள மூட்டையில் இருக்கிறது. ரவிக்கு அவன் நின்றிருந்த விதம் என்ன விஷயம் என்று கேட்கவேண்டும் போல் தோன்றியது. காரை நிறுத்தி இறங்கினான்.
மரத்தின் பின்புறமிருந்த கடையின் ப்ளாட்பாரத்தில் ஓரமாக ஒண்டிக் கொண்டிருந்த முனுசாமியின் மனைவி, ரவியை பார்த்தவுடன் ஓ என்று அழத்தொடங்கிவிட்டாள். அவளும் அவ்வப்போது கட்டிட வேலை செய்பவள்தான். அவள் இருந்த இடத்தில் அவ்வளவாக வெளிச்சம் இல்லை.
இருட்டில் அவள் யாரென்று ரவிக்கு தெரியவில்லை. குழந்தை உடம்புக்கு சரியில்லை என்று சொன்னேனில்ல சார் சாயந்திரம்? நேத்துதான் சோத்திலே ஒண்ணுக்கு விட்டு பார்த்தோம். மஞ்சக்காமாலை. நான் இங்க வர்றத்துக்கு லேட்டாயிடிச்சு. அதுக்குள்ள குழந்தைக்கு ரொம்ப முடியலைன்னுட்டு இவ கேஎம்ஸி எடுத்துகினு போயிருக்கா, அங்க போவர்த்துக்கும் உயிர் போவர்த்துக்கும் சரியாப் போச்சு. ரவி கூர்ந்து பார்த்தான். மங்கலான வெளிச்சத்தில் முனுசாமியின் மனைவி பக்கத்தில் அதை கிடத்தியிருந்தது தெரிந்தது. குழந்தைன்னு சொன்ன... கொஞ்சம் பெரிய பொண்ணு போல இருக்குதே?
பத்து ஆவுது ஸார். காலையிலேயே டாக்டர்கிட்ட காட்டியிருக்கணும். விதி சாரு. வேறு என்ன சொல்றது. ஐயர் வூட்ல வேலை செய்துக்கினு இருந்தது. அந்தம்மாவுக்கு இத்தனி வருஷமாயும் கொழந்தையே இல்லயாம். இன்னா நெனைச்சுக்கிச்சோ, அது சின்ன வயசுல போன வாரந்தான் எம்மவளுக்கு கொடுத்தது. இது இன்னா நினைச்சுதோ இன்னிக்கு மத்தியானம்தான் அதையெடுத்து போட்டிகிச்சு. என்ன பந்தமோ, எழவோ?
கொஞ்சம் இரு ஒரு மாலை வாங்கிக்கிட்டு வரேன். மனபாரம் இழுத்தி பிடிக்க, ரவி காரை அமைந்தகரை லக்ஷ்மி டாக்கீஸ் பக்கம் விட்டான். கடைக்காரனை தட்டி எழுப்பி மாலையை பேரம் பேசாமல் வாங்கிக் கொண்டு காரை திருப்பினான். மீனா, பாபு, கோபு எல்லோரும் சோகித்து இருந்தார்கள்.
முனுசாமி, துண்டு கம்பி, த்ரீ ஸ்டார் ஹோட்டல், ஒரு அயிட்டத்துக்கு பில் போடாதது, இப்போது இந்த சாவு என்று ரவியின் மனசு மாறி மாறி நாடகமாகியது. தான் ஏதோ விதத்தில் இந்த பெண்ணுடைய சாவிற்கு பாத்தியப்பட்டு விட்டோமோ என்று சலனப்பட்டான். உள்ளுக்குள் அழுதான். அந்த பெண்ணிற்கும் தனக்கும் என்ன பந்தம்? தான் ஏன் இவ்வளவு துக்கப்படுகிறோம்? அவனுக்கே விநோதமாக இருந்தது.
ஹோட்டல்காரனை போன்ற பணக்காரனை, தன்னை போன்ற பணக்காரன் ஏமாற்றலாம். ஆனால் தன்னை, முனுசாமி போல ஒன்றுமே இல்லாதவன் ஏமாற்றியது தன்னை எப்படியெல்லாம் கோபப்பட வைத்தது என்பதை ஒரு கணம் எண்ணி வெட்கப்பட்டான். முனுசாமி கோபப்பட்டு திட்டாதது அவன் பெருந்தன்மையை காட்டியாதாகப்பட்டது ரவிக்கு. மாலையை எடுத்துக்கொண்டு இறங்கினான். பத்து வயதுப் பெண் பாவம். ரவி திரும்பி வருவான் என்றோ என்னவோ ஒரு பெட்ரோமாக்ஸ் லைட்டை கொண்டு வந்து வைத்திருந்தான்.
இப்பொழுது பிணம் முழுமையாக தெரிந்தது. கல்மிஷம் இல்லாத முகம்! குனிந்து மாலையை சாத்தினான். திரும்பியவன் திடுக்கிட்டு மீண்டும் திரும்பி கூர்ந்து பார்த்தான். முதலில் முனுசாமியின் மனைவியை.... செவ்வந்தியா அது? பிறகு கல்மிலும் இல்லாத பத்து வயது பெண் போட்டிருந்த உடை..
சின்னசின்னதாக கட்டம் போட்ட பச்சை பட்டு பாவாடையும், அதற்கு கான்ட்ராஸ்டாக சிவப்பு பட்டு பிளவுசும் விக்கித்து நின்றான். இந்த பெண்ணுடன் தான் உண்மையில் தான் பாத்திய பட்டிருக்கிறோம். பந்தம் ஐயர் வீட்டு அம்மாவுக்கு இல்லை. தனக்கு தான் என்பதை உணர்ந்து உருகினான்.
ஆமாம் செவ்வந்தி பதினோரு வருடங்களுக்கு முன்பு ஒரு முறை ரவிக்கு போட்டோச்சியமானவள்தான். தன்னை பார்த்து அவள் அதீதமாய் அழுததற்கு இப்போது அவனுக்கு காரணம் போட்டோந்தது!!
பாவம் ரவி, அவனால் வாய்விட்டு அழ முடியாது. ஏனெனில் இது ஒரு சொந்தமில்லாத பந்தம்.
|