|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

பச்சை வானம்

 

முகம். காலத்தின் முகம். மார்கழி மாதம் என்கிற காலத்தின் முகம். உயர்திணைப் பொருட்களுக்குத்தான் அழகிய முகமா என்ன என்று கல்பனாவுக்குத் தோன்றியது. இதோ இந்த மார்கழி மாதம் எத்தனை அழகு? சாம்பல் பூத்தது போல பனிச்சிதறல்களைத் தாங்கிய புல்தரையும், காத்திருந்த மாதிரி சிறு இடுக்கு கிடைத்தவுடனே ஓடி வருகிற குளிர்காற்றும், இன்னும் கலாச்சாரத்தை விடாமல் பற்றிக் கொண்டிருக்கிற பெரிய பெரிய புள்ளிக் கோலங்களும்...... மார்கழிக்கு எழிலான முகம்தான்.
ஹாலிலிருந்த டெலிவிஷனில் ஒரு பாடகியின் தேன்குரல் ஆண்டாள் கவிதையை காற்றில் நிறைத்திருந்தது.

`தீங்கின்றி நாடெல்லாம்
திங்கள் மும்மாரி பெய்து’

கல்பனா ஒரு கணம் கண்களை மூடிக் கொண்டாள். மறுபடி அந்த வரிகளை உள்ளுக்குள்ளே ஓட விட்டாள்.

மழை பெய்ய வேண்டும், மாதம் மூன்று முறை பெய்ய வேண்டும், தீங்கின்றி பெய்ய வேண்டும், நாடெல்லாம் பெய்ய வேண்டும். பிரமிப்பாக இருந்தது. எப்படிப்பட்ட சமுதாய சிந்தனை அந்த எளிய பெண்ணுக்கு என்று தோன்றியது. அரங்கனை வேண்டி பாவை நோன்பு இருக்கின்றபோதும் கூட நாட்டு மக்கள் நன்றாக வாழ வேண்டும் என்று நினைக்கிற உயர்ந்த மனோபாவம் ஆண்டாளுக்கிருந்தது என்கிற நிஜம் உணர்வுகளை செம்மைப் படுத்தியது.

கல்பனா பாடல் முடிந்ததும் கண்களை திறந்தாள்.

ஏழு மணி அடித்தது.

இன்றைக்கு முதல் தேதி என்பது ஞாபகத்திற்கு வந்தது. ஏகப்பட்ட ஸ்டேட்மென்ட்கள் பாக்கி இருந்தன எடுப்பதற்கு. டவலை எடுத்துக் கொண்டு நடந்தாள். ஹாலைத் தாண்டியபோது அப்பாவும் அம்மாவும் சட்டென்று பேச்சை நிறுத்தினார்கள்.

அவளை லேசாக நிமிர்ந்து பார்த்துவிட்டு அம்மா `குக்கர் வெயிட் போடணும்’ என்று முணுமுணுத்தபடி நடக்க, அப்பா எப்போதும் போல் அகலமாக புன்னகைத்தார்.

என்னம்மா குளிக்க கௌம்பிட்டியா, ஏழு மணியா? என்றார்

ஆமாம்பா........ சாருமதி ஹெல்ப் பண்ண வர முடியுமான்னு கேட்டா, ஸ்டேட்மென்ட் காபி எடுக்கணுமாம்.

எவ்வளவு நேரம்மா ஆகும்?

ரெண்டு, ரெண்டரை..... ஏம்பா?

ஒண்ணுமில்லே..... நாலு மணிக்கு கௌம்பி நீயும் அம்மாவும் டி.நகர் வந்துட்டா, நகை பர்சேஸ் முடிச்சிடலாமேன்னுதான்.

நகையா?..... என்றாள் குழப்பத்துடன். எதுக்குப்பா?

என்ன கல்பனா, இப்ப கேக்கறே? அப்பாவின் குரலில் ஒலித்தது ஆதங்கமா ஏமாற்றமா தெரியவில்லை. கல்யாணத்துக்குதான். உங்க இஷ்டம்பான்னு எப்பவும் போல சொல்லிடாதே..... நகைங்கறதும் உடைங்கறதும் ரசனையை வெளிப்படுத்தற விஷயம்னு பேசற காலமில்லையா இது? நீ கண்டிப்பா வந்துதான் ஆகணும்.

அப்பா...... அவள் மென்மையாய் அழைத்தபடி தந்தையின் எதிரில் உட்கார்ந்தாள். கல்யாணத்தப்பத்தி இப்ப எதுக்கப்பா பேசணும்? ஒரு வருஷம் போகட்டும்னு நான் சொல்லி நீங்களும் ஒத்துக்கிட்டு முடிவுக்கு வந்துட்டமே.... மறுபடி ஏன்?

அம்மா கரண்டியுடன் விடுவிடுவென்று வந்தாள். ஒரு வருஷத்துக்கு அப்புறம் மட்டும் என்னடி அதிசயம் நடந்துடப் போகுது? வானம் பச்சையாகுமா, கடல் மஞ்சளாய்டுமா? அதது அததுவாத்தான் இருக்கும். அரசாங்க உத்யோகம்னா இப்படித்தான்.... மூணு பொண்ணுங்களை பெத்தா இப்படித்தான். கைக்கும் வாய்க்கும் போறாத வாழ்க்கை வாழ்ந்துட்டு போய்ச் சேர வேண்டியதுதான். இருபதாயிரத்துக்காக நல்ல வரனை விடறது புத்திசாலத்தனமில்லை. அப்பாவுக்கும் போட்டோஞ்சுதான் ஒத்துக்கிட்டார். சாருமதிக்கு ஹெல்ப் பண்றேன், சந்திரமதிக்கு ஹெல்ப் பண்றேன்னு சமூக சேவையெல்லாம் குறைச்சிட்டு ரெஸ்ட் எடு. தாய் வீட்டு சுகம் அப்புறம் கானல் நீர்தான்........

அதே வேகத்துடன் அம்மா திரும்பிப் போனாள்.

கல்பனா இமைகளை படபடத்தபடி அப்பாவைப் பார்த்தாள்.

என்னப்பா இது?

ஆமாம்மா.... யோசிச்சுதான் முடிவெடுத்தோம்...... நல்ல குடும்பம், சிரிச்ச மொகமா, ஆரோக்யமா, படிச்சவனா, நல்ல வேலைல இருக்கிறவனா இருக்கான். மத்த எல்லா விஷயமும் திருப்தியா இருக்கு, வெறும் இருபதாயிரம்தான் உதைக்குது..... எவ்வளவோ சமாளிச்சுட்டோம் இதுல என்னம்மா? எப்படியாவது பொரட்டிப்போட்டு நல்லபடியா முடிச்சுக்கறதுதான் புத்திசாலிதனம்.

கல்பனா அப்பாவின் முகத்தை உற்றுப் பார்த்தாள். குரலில் மாற்றமில்லாமலேயே கேட்டாள். எப்படியாவதுன்னா...... எப்படிப்பா?

விடேம்மா..... உனக்கேன் இந்தக் கவலை சொல்லு... கல்யாண பொண்ணும்மா நீ. அவர் உதடுகள் விரித்து சிரிக்க முயன்றார்.

இப்ப உங்க பொண்ணுப்பா.... சொல்லுங்க..... கழுத்து வரைக்கும் கடன் இருக்கு?... இந்தியாவிக்கு மூணு பக்கம் கடல், நாலு பக்கம் கடன்னு வைரமுத்து சொல்ற மாதிரி நீங்களும் இந்தியாவும் ஒண்ணுதாம்பா....... இருபதாயிரத்துக்கு எங்கேப்பா கையேந்தப் போறீங்க?

ஏம்மா கை எந்தணும்? ஜாம் ஜாம்னு வீடு தேடி வந்து குடுத்துட்டுப் போவானுங்கம்மா எனக்கு..... ஏம்மா கை எந்தணும்? ஜாம் ஜாம்னு வீ ஏம்மா கை எந்தணும்? ஜாம் ஜாம் ஏம்மா கை எந்தணும்? ஜாம் ஜாம் ஏம்மா கை எந்தணும்? ஜாம் ஜாம்னு வீடு தேடி வந்து குடுத்துட்டுப் போவானுங்கம்மா ஏம்மா கை எந்தணும்? ஜாம் ஜாம்னு வீடு தேடி வந்து குடுத்துட்டுப் போவானுங்கம்மா எனக்கு.....£ கை எந் ஏம்மா கை எந்தணும்? ஜாம் ஜாம்னு வீடு தேடி வந்து குடுத்துட்டுப் போவானுங்கம்மா ஏம்மா கை எந்தணும்? ஜாம் ஜாம்னு வீடு தேடி வந்து குடுத்துட்டுப் போவானுங்கம்மா எனக்கு.....£ கை ஏம்மா கை எந்தணும்? ஜாம் ஜாம்னு வீடு தேடி வந் ஏம்மா கை எந்தணும்? ஜாம் ஜாம்னு ஏம்மா கை எந்தணும்? ஜாம் ஜாம்னு வீடு தேடி வந்து குடுத்துட்டுப் போவானுங்கம்மா எனக்கு.....£ கை எந்தணும்? ஜாம் ஜாம்னு வீடு தேடி வந்து குடுத்துட்டுப் போவானுங்கம்மா எனக்கு.......... தாத்தா பாடுபட்டு உழைச்சு சம்பாதிச்ச கையகல காணி அது...... கடைசி சொத்து...... கஷ்டத்துக்கு வித்து நஷ்டத்துக்கு வித்து..... வேணாம்பா.... இருபதாயிரம் இப்போ பெரிய தொகைப்பா....

அப்பா ஒரு தடவை அவள் முகத்தை பார்த்தார்.

இல்லே கல்பனா என்றார். நெறய யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்தாச்சு- இனிமே மாத்தறதா இல்லே.

இறுக்கமாக பேசிவிட்டுச் செல்லும் தந்தையை அவள் கவலையுடன் பார்த்தாள்.

தனியா பேசணும்னு ஆசையாம்...... அன்னிக்கு சந்தர்ப்பம் சரியா இல்லையாம். இப்ப தானா வந்திருக்கு அந்தப் புள்ள. போ கல்பனா...... நல்லபடியா சிரிச்சு..... அழகா பேசு.

படபடப்புடனும் பரபரப்புடனும் அம்மா கைகாட்டி விட்டு சமையலறைக்கு ஒடினாள். எதற்காக வீடு தேடி வந்திருக்கிறான் என்று குழப்பமாக இருந்தது. எழுந்தாள். அறை வாசலில் போய் நின்றாள். காத்திருந்தவனாய் அவன் முகம் மலர்ந்தான்.

ஹலோ கல்பனா..... வா வா நைஸ் மீடிங் யூ!...... என்று சிரித்தான்.

ஹலோ.... என்று அவள் ஓரமாக உட்கர்ந்திருந்தாள். வெல்கம் டு அவர் ஹோம்.

அகெய்ன்... என்று மறுபடி சிரித்தான். என்னமோ உன்னை பாக்கணும்னு ஒரு ஃபீலீங்..... குரலைக் கூட கேக்கலையேன்னு..... யு நோ ஒன் திங்க்? கண்ணு, குரல், சிரிப்பு, பேசற ஸ்டைல் இதெல்லாம் ரொம்ப பர்ட்டிகுலர் எனக்கு... யு ஆர் ஸோ ஒண்டர்ஃபுல் போட்டோயலி.....

இஸிட்? என்றாள்

யெஸ். யு ஆர் கிஃப்ட்டட்.... என்றான் புருவம் தூக்கி, இயற்கையாகவே அழகான முகம், எழிலான கண்கள், ஷார்ப்பாக மூக்கு, அளவான சிரிப்புன்னு பர்ஃபெக்ட் காம்பினேஷன். எனக்கு முன்னே பாத்தியானா கோணல் மூக்கு, நேர்ப்புருவம்னு இருந்தது. தாங்கலே எனக்கு. அதுவும் என்ஜினியரிங் தேர்ட் இயர் பண்ணும்போது பொறுக்க முடியலே. அப்பாவை பி.எஃப்லே லோன் போடச் சொல்லி இருபதாயிரம் வாங்கினேன். மூக்குக்கு பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கிட்டு நேராக்கினேன். புருவத்துக்கும் காஸ்மெடிக் சர்ஜரி. அப்புறம்தான் புஸ்தகத்தையே தொட்டேன் என்று வாய்விட்டு சிரித்தான்.

எவ்வளவு பணம்?

இருபதாயிரம்...

எதுக்காக?

அழகுக்காக.... ஏன்?

எப்படி வந்த பணம்?

லோன் போட்டார் அப்பா..... பி.எஃப்.... ஏன்? என்றான் குழப்பமாக.

கடன் வாங்கறது தப்பில்லையா விக்ரம்.

எப்படி தப்பு?

செயற்கை அழகுக்காக கடன் வாங்கறது..... அவள் நிதானமாக சொன்னாள். ஸாரி விக்ரம் அழிய போகிற அழகைவிட எப்பவும் இருக்கிற அன்புதான் எனக்கு வேணும். அதை உங்ககிட்ட எதிர்பார்க்க முடியாதுன்னு நினைக்கிறேன். குட் பை.

 

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter