Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
பிளஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - பிளஸ் ரிசல்ட் : நாமக்கல் மாணவி முதலிடம் - பிளஸ் ரிசல்ட் : முதல் 4 இடத்தையும் தட்டிச்சென்றது நாமக்கல் - கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மாதிரி எரிபொருள் அகற்றும்பணி தீவிரம் - ஆந்திராவில் ரெயில்கள் மோதி தீ பிடித்து 14 பேர் பலி - இலங்கை: இந்தியா ஒப்பந்தத்தை அனுமதித்திருந்தால் எந்த துன்பமும் வந்திருக்காது : ஞானதேசிகன் - இலங்கை சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் : சீமான் கோரிக்கை

புத்தாண்டு தள்ளுபடி

பர்வதவர்த்தினி

புத்தாண்டு திட்டம் என்ன? என்று எந்த நிருபரும் தொலைக்காட்சிக்காரரும் வந்து இதுவரை என்னிடம் கேள்வி எதையும் கேட்கவில்லை. இருந்தாலும் சொல்கிறேன்.

பழைய ஆண்டுகளைப் போல, இந்தப் புத்தாண்டில் யாரிடமும் ஏமாந்து நிற்க மாட்டேன். இப்படி நான் சொல்கிறபோது, இதுவரை ஏமாந்துபோய் நிற்பதையே ஒரு புத்தாண்டு லட்சியமாகக் கொண்டவனைப் பார்ப்பது போல் ஏளனமாக நீங்கள் என்னைப் பார்ப்பது தெரிகிறது. நான் ஒரு சர்க்கஸ் கோமாளியைப் போல. கீழே விழுவேன். அனுதாபத்தை பெற இல்லை. மற்றவர்கள் சிரிக்க வேண்டுமே என்பதற்காக. அதாவது என் ஏமாளித்தனத்தால் மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது தான் இதன் சாராம்சம். என்னுடைய இந்த முன்னேற்பாடான முடிவுக்கு என்ன காரணம் என்று நீங்கள் யாரும் மூளையை கசக்கிக் கொள்ள வேண்டாம். போன புத்தாண்டு தினத்தில் நடந்ததைச் சொன்னால் போதும் என் முடிவுக்கான காரணம் உங்களுக்கு விளங்கி விடும்.

பத்துக் குடித்தனம் இருக்கிற ஒரு பழங்கால வீட்டில் நானும் ஒரு பழங்குடி. அதாவது சீனியர் குடித்தனக்காரன். புதியதாக வந்த ஜுனியர் மோஸ்ட் குடித்தனக்காரன்தான் இந்த கேதாரி. நல்ல பர்சனாலிடி, கவர்ச்சி புன்னகைக்காரன்!

டிசம்பர் மாதக் கடைசியில் குடிவந்து மறுநாளே எல்லாரையும் கவர்ந்து விட்டான் தலா ஒரு புதுவருட காலண்டரை அன்பளிப்பாக தந்து!

`உங்க கம்பெனி காலண்டரா’ என்றவாரே எல்லாரும் கையில் சுருட்டிக் கொண்ட போது கடைசி போர்ஷன் கிழவர் மட்டும், என்ன கம்பெனி? என்று விலாவாரியாய் பார்த்தார். `ஓ! டூத் பவுடர்! ஆயுர்வேதிக்’.

உடனே கேதாரி பிடித்துக் கொண்டான்.

கிழவருக்கோ இந்த கால பேஸ்ட், பல் பொடியின் மீதெல்லாம் சுத்தமாக நம்பிக்கையே கிடையாது. ?ஆலங்குச்சி, வேலங்குச்சி, மிஞ்சிப் போனால்- கருவேலம் பொடி! என்று இவற்றின் போட்டோல் கொஞ்சம் நம்பிக்கை உண்டு. ஆனால் இருக்கிற ஓரிரு பற்களும் அழுத்துபவர் மேல் பழி சொல்ல காத்து ஆடிக்கொண்டிருந்த நிலையில் இவற்றின் மேலும் அவர் நம்பிக்கையை இழக்கத் தொடங்கிவிட்டார்.

இருந்தாலும் தன் கம்பெனி பல்பொடியை தலையில் கட்ட கேதாரி கிழவரை பிடித்தான்.

எங்க கம்பெனி பல்பொடியில்.... மிளகிலிருந்து தொடங்கிப் பல மூலிகைகள் அடங்கியிருக்கும்!

உடனே கிழவர், நிக்கறியே! உட்கார் என்றார்.

காலண்டரைப் போல இதையும் சாம்பிளுக்காக இலவசமாகத் தரப்போகிறான் என்ற வீண் நம்பிக்கையை அவர் வளர்த்துக் கொண்டிருப்பவர் போல் தோன்றியது.

கையில் வைத்திருந்த ஓசி பேப்பரை மடித்து கீழே போட்டுவிட்டு நானும் அங்கே ஆஜரானேன்.

இது வடநாட்டில் நல்ல பாப்புலர். வெளி நாட்டுக்கு எல்லாம்கூட ஏற்றுமதி செய்கிறோம் என்றான் கேதாரி.

டப்பாவை கையில் வாங்கி பார்த்தேன். பளபளவென்று கேதாரியைப் போலவே இருந்தது.

நியூ இயர் டிஸ்கவுண்ட் ஏதாவது உண்டா? என்று கேட்டேன்.

உண்டு. கடைவிலைக்கு பத்து பர்சண்ட் தள்ளுபடி என்றான்.

இன்னிக்கு பல் தேய்ச்சிருப்பீங்க. நாளை காலையில் இந்தப் பல்பொடியில் பல் விளக்கிவிட்டு காப்பியை குடிங்க. பேஸ்ட் வாய்க்கும் இதுக்கும் வித்தியாசம் தெரியும்.

முதல் போணி நான்தான்.

என்னைத் தொடர்ந்து கீழ் போர்ஷனில் ஆறு குடித்தனங்கள்!

காலண்டருக்கு காலண்டர்! டிஸ்கவுண்ட் வேற! என்றனர்.

என் வீட்டுக்காரி விவரமானவள்! (யாராவது சினிமா தலைப்புக்கு இதை பயன்படுத்திக் கொள்வதானால் எனக்கு மகிழ்ச்சிதான்)!

சீறினாள்.

இந்த மாச பட்ஜெட்டில் பேஸ்ட்டுக்கே இடம் போடல நான்,. இதை வேற ஏன் வாங்கினீங்க?

பட்ஜெட்டுல இடமே பெறாம உன்னிடம் வசவு மட்டும் வாங்கிட்டு இருக்கேனே! அதுக்கென்ன சொல்றே? என்று பதில் கேள்வி போட்டேன்.

இதுல எதுவும் குறைச்சல் இல்லை. புத்தாண்டு முதல் தேதியா இருக்கேன்னு பார்க்கிறேன்!

நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு அவளை எழுப்பிப் புத்தாண்டு வாழ்த்து சொல்லி, வாயில் ஒரு ஸ்பூன் சர்க்கரையும் போட்டதற்கான பலன் கிடைத்துவிட்டது. எனக்கு மேற்கொண்டு அந்த நல்ல நாளில் திட்டு கிடைக்கவில்லை.

அடுத்த நாள். கையில் பல்பொடியுடன் பாத்ரூமில் நின்றபோது குழாயடியில் ஒரு குரல் கேட்டது.

என்ன கேதாரி! உங்க பல்பொடியை பிரஷ்ல கூட தேய்க்கலாமா? கையில் பிரஷ்ஷோடு நிக்கறீங்களே? அதுகூட ஆயுர்வேதிக் பிரஷா?

சக குடித்தனக்காரர் சந்தானத்தின் குரல்.

பொடி விழுந்த வாயனாக நானும் எட்டிப் பார்த்தேன்.

கேதாரியின் வலது கையில் பிரஷ். இடது கையில்?-

வேகமாக அவனிடம் போய் நின்று கோபமாக கேட்டேன்.

என்ன இது? பேஸ்ட்?

ஆமாம் பேஸ்ட்தான். பத்து வருஷமா இதை நான் தேய்க்கிறேன். வேற பேஸ்ட் மாத்தினா உடனே வாயில் குழி புண் வந்துடும். மாத்தக் கூடாதுன்னு டாக்டர் அட்வைஸ்! அதனால்தான் உசத்தயான எங்க கம்பெனி பல்பொடியைக்கூட உபயோகிக்கறதில்லை., எங்க வீட்ல எல்லாரும் இந்த பேஸ்ட்தான்!

அவசர அவசரமாக வாயைக் கொப்பளித்தேன். காபி குடிக்கும்போது வீட்டில் கோடி அர்ச்சனைதான்.

நெற்றியில எழுதி ஒட்டியிருக்கு........ என்றாள் அவள்.

எதை? பல்பொடியின் பெயரையா? என்றேன் விஷமத்தனமாக.

இதுல குறைச்சலே கிடையாது!

இன்னோர் போர்ஷன்காரர் வந்தார்.

என்ன சார் இது? இப்படி எல்லாரும் ஏமாந்துட்டோம். எல்லாம் உங்களால்தான் வந்தது. நான் பாட்டுக்கு பேஸ்ட்டில் தேய்ச்சிக்கிட்டு இருந்தேன். அவசியமே இல்லாம உங்களாலதான் இதை வாங்கினேன். இதப் பாருங்க.. இத நமக்கு வித்தவன்கூட பேஸ்ட்தான் உபயோகப் படுத்தறான்!

நான் காரணமா? என்ன சொல்றீங்க?

விபரம் தெரிஞ்சவர். நீங்களே வாங்கினா நல்லாத்தானே இருக்கும்னு நாங்களும் வாங்கினோம். இப்படி நீங்களும் ஏமாந்து எங்களையும் ஏமாற வெச்சிட்டீங்களே எப்படி சார்? நீங்க கெட்டிக்காரர் ஆச்சே? ஏமாற மாட்டீங்களே?

அடுக்களையில் அவள் ஏதோ ஓர் அடுக்கை `டங்’ என்று கீழே வைத்தது கேட்டது.

இந்த மனுஷன் எத்தனை பெரிய ஏமாளி, அசடுன்னு எனக்குத்தானே தெரியும்? நாளைக்கு எவனாவது வேற எதையாவது வித்துட்டு வருவான். போணி செய்ய ஓடப் போறார் பார்!

அவள் முணுமுணுத்த வாசகத்தை முழுசாக உங்களுக்கு தந்திருக்கிறேன்.

எந்த கவலையும் இல்லாமல் கேதாரி குளிக்கப் போனான். கையில் ஒரு பெட்டியுடன் கவர்ச்சிப் புன்னகையுடன் வெளியே கிளம்பியும் விடுவான்.

இந்தப் புத்தாண்டு பிறக்க ஒரு வாரம் இருக்கிறது.

இந்த வருஷமும் கேதாரி காலண்டர் தருவானா? என்று சந்தானம் கேட்டது என் காதில் விழுவதற்கு முன்பாக பை- பாஸ் வழியாகப் போய் என் மனைவியின் காதில் விழுந்துவிட்டது.

இந்த வருஷம் டைரிகூடப் போடறாங்களாம். எல்லாருக்கும் தலா ஒண்ணு குடுத்துட்டு தலையில புதுசா எதையோ கட்றானாம்..... போய் நில்லுங்க.

நான் பேசவில்லை.

புத்தாண்டின் லட்சியத்தை உறுதியாக நினைத்துக் கொண்டேன்.

யாரிடமும் ஏமாறமாட்டேன்.

இரண்டு காரணம். ஒன்று- எத்தனை நாள்தான் முந்திக் கொண்டு ஓடிப் போய் ஏமாறுவது? இரண்டு-

அவள் சும்மா விடமாட்டாள்!

 

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter