Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
பிளஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - பிளஸ் ரிசல்ட் : நாமக்கல் மாணவி முதலிடம் - பிளஸ் ரிசல்ட் : முதல் 4 இடத்தையும் தட்டிச்சென்றது நாமக்கல் - கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மாதிரி எரிபொருள் அகற்றும்பணி தீவிரம் - ஆந்திராவில் ரெயில்கள் மோதி தீ பிடித்து 14 பேர் பலி - இலங்கை: இந்தியா ஒப்பந்தத்தை அனுமதித்திருந்தால் எந்த துன்பமும் வந்திருக்காது : ஞானதேசிகன் - இலங்கை சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் : சீமான் கோரிக்கை

நேசம் மறந்துவிட்ட நெஞ்சங்கள்

கௌசல்யா ரங்கநாதன்

டெல்லியில் நீண்ட கால வாசம்.... ஒரு மாத விடுப்பில் சென்னைக்கு தம்பி வீட்டுக்கு வந்தேன். பல வருடங்கள் கழித்து தமிழ் மண்ணை மிதிக்கையில் ஒரு பரவசம், புத்துணர்ச்சி, இனம் போட்டோயாத மகிழ்ச்சி. இத்தனையும் சில நாட்களில் வீணானது. பழைய அலுவலக நண்பர்கள்.

பள்ளி கல்லூரித் தோழர்கள், உறவினர் கூட்டம் என்று எல்லோரும் பட்டும் படாமலும் இருந்தனர். எத்தனை எதிர்ப்பார்ப்புகளுடன் தமிழகம் வந்தேன். அத்தனையும் நொடியில் பாழ். போலித்தனம் உதடு ஒன்று உள்ளத்தில் கள்ளம். பணம், பணம், பணம் மட்டுமே வாழ்க்கை என்ற எண்ணம். தன்னைவிட வசதி குறைந்தவனிடம் பழகக்கூட பயம். அனாவசிய ஈகோ... சக மனிதனை நேசிக்கத் தெரியாத பொறாமைப் பிடித்த கும்பல்.

என் தம்பி அடுக்கு மாடி வீட்டில் மூன்றாவது மாடியில் இருந்தான். அங்கு என் தம்பியை விடவும் அந்தஸ்தில் பல படிகள் அதிகமானவர்களே இருந்தனர். தம்பியோ சாதாரண குமாஸ்தா. பக்கத்து ஃபிளாட்டில் இருக்கிறது யார் தம்பி என்றேன். தெரியாதுண்ணா என்றான் பதிலுக்கு.

பக்கத்து வீட்டை கேட்கலை தம்பி. பக்கத்து போர்ஷன்?

அதான் அண்ணா எனக்கு தெரியாது. அப்ப இங்கே இந்த ஃபிளாட்டில் எத்தனை வீடுகள் இருக்கு, யார் யார் இருக்காங்கனும் அவங்க எங்க வேலை செய்யறாங்கனும்... அரசல் புரசலா பெயர்கள் மட்டும்...அதுவும் சில பெயர்கள் மட்டும் தெரியும். இங்கே இருக்கறவங்க ஒவ்வொருத்தரும் வீட்டுக்குள்ள வந்தா கதவை அடைச்சிப்பாங்க. யாரோடையும் பழக மாட்டாங்க. அப்படியே நாமே போய் வலுவில் பழக ஆசைப்பட்டாலும் நறுக்குத் தெறித்தாற்போல் ஓரிரு வார்த்தைகள் பேசிட்டு படக்குனு கதவை சாத்திக்கிட்டு உள்ளே போயிடுவாங்க. அதிக நேரம் பேசினா நாம் எதையோ கேட்டுடுவோம்னு பயமா கூட இருக்கும்....

எனக்கு எரிச்சலாக வந்தது. தேசிய ஒருமைப்பாட்டு தினம் எல்லாம் கொண்டாடுகிறோம். வன்முறை எதிர்ப்புதினம் கொண்டாடுறோம் ஆனா... அண்ணே இன்றைய உலகம் இப்படிதான். அவனவனுக்கு ஆயிரத்தெட்டு பிரச்சனைகள். இதில் இன்னொருத்தன்கிட்ட பேசக்கூட நேரமில்லை. மெஷின் லைப் தான். அன்று இரவு பத்து மணி இருக்கும். அருகில் உள்ள சினிமா தியேட்டருக்கு போய்விட்டு திரும்பிக் கொண்டிருந்தேன் என் வீட்டுக்கு. நுழை வாயிலை நெருங்குகையில் ஒரே ஜே ஜே என்று கூட்டம். விளக்குகள் எல்லாம் போடப்பட்டிருந்தது, இது என் தம்பி குடியிருப்புதானா அல்லது இடம் மாறி வந்து விட்டேனா என்றுகூட தோன்றியது.

ஒருக்கால் சினிமா ஷ§ட்டிங் ஏதாவது நடைப்பெறுகிறதா. இவ்வளவு கூட்டம் எப்படி சேர்ந்தது. தவிர தெருவாசிகள் வேறு கேட்டருகில் மொய்க்கத் தொடங்கியிருந்தனர். வாயிற் கதவு எப்போதும் பூட்டப்பட மாட்டாது. இரண்டு வாட்சுமேன்கள் ராப்பகலாக காவலில் இருப்பார்கள். இரவு 12 மணிக்கு மேல் வாயிற் கதவு லேசாக சாத்தியிருக்கும். அப்போது கூட சிலர் வேலை முடித்து வருவதுண்டு. அவசரமாக டாக்டர் வீடு தேடி போவோருமுண்டு. இரவு காட்சி பார்த்துவிட்டு வருவோருமுண்டு. ஆனால் இன்று அந்த இரவு 10 மணிக்கே வாயிற்கதவு பூட்டப்பட்டு வெளியில் வேறு கூட்டம் கூடி நின்றது. என்னையே உள்ளே விட மறுத்தான் வாட்ச்மேன். ஒருவனை சிலர் கூடி அடித்துக் கொண்டிருந்தனர். பிறகு தம்பி வந்து அழைத்துப் போனான் உள்ளே.

என்ன இந்த ஃபிளாட்டில் திருடு போயிடுச்சா தம்பி? என்றேன்.

இல்லை அண்ணா. பின்ன ஏன் இந்த கூட்டம்? ஏன் அந்த ஆளைப் போட்டு இந்த அடி அடிக்கறாங்க?

வா அண்ணா உள்ளே போயிடுவோம். நமக்கென்ன வந்திச்சு, நமக்கேன் வம்பு?

இருப்பா தம்பி என்னதான் விவகாரம்னு பார்க்க வேணாமா. இப்படி ஒருத்தனை பலர் வாயில் வந்தபடி திட்டறதும் அடிக்கறதும் எதுக்குன்னு தெரிஞ்சுக்க வேணாமா? இதற்குள் அந்த குடியிருப்பில் இருந்த பெண்கள் சிலர் கூட அடிச்சு நொருக்குங்க. இவனுங்களை சும்மா விடக்கூடாது. செருப்பால் அடிங்க, துடைப்பக்கட்டையால் அடிங்க என்றனர். விஷயம் ஏதோ
விபரீதம் என்பதை உணர்ந்துக் கொண்டேன். யாராவது இங்குள்ள பெண்களிடத்தில் தப்பு தண்டாவாக நடந்து கொண்டிருக்கலாம் என்று நினைத்துக் கேட்டேன். இதற்குள் ஒருவர் இன்னொருவரிடம் இவனுங்களை சும்மா விடக்கூடாது சார் என்றார். ஆவேசம் கொண்ட அந்த மனிதர் அவனை பாய்ந்து பாய்ந்து அடித்தார். செருப்பால், கம்பியால் எல்லாம் முகத்தில் முஷ்டியால் குத்தினார். அடிப்பட்டவன் என்னை விட்டுடுங்க, என்னை விட்டுடுங்க என்று அலறினான். எப்படிடா உன்னை விட முடியும். இரு இரு போலீஸில் உன்னை ஒப்படைக்காமல் விடமாட்டேன் என்றார். அடித்து துன்புறுத்தியவர். ஆமாம் ஆமாம் இது மாதிரி சமூக விரோதிகளை சும்மா விடக்கூடாது சார்.

போலீசில் ஒப்படைங்க என்றார் இன்னொருவர். தெருவில் போய்க் கொண்டிருந்த ஆட்டோ ஒன்றைப் பிடித்து அடிப்பட்டவனை அதில் ஏற்றி அடித்தவரும் ஏறிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு விடுப்பா என்றார். இது நடந்து முடிய கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலாகியது. அங்கு கூடியிருந்த ஃபிளாட் வாசிகள் இன்னமும் ஆக்ரோஷமாக இருந்தனர். இன்னமும் அந்த இரவு 11/12 மணி வேளையிலும் திட்டுத்திட்டாகக் கூட்டம். அதிலும் அவரவர் தராதரத்துக்கு ஒத்த மக்களுடன்தான் பேசிக் கொண்டிருந்தனர். என்னப்பா இதெல்லாம்? என்றேன் தம்பியிடம். எதை சொல்றதுண்ணு போட்டோயலைண்ணா. அடிப்பட்டவன் இருக்கானே அவனும் இந்த
ஃபிளாட் வாசிதான். அடிச்சவனும் இங்கே குடித்தனம் இருக்கிறவன்தான். சரி எதுக்கு அடிக்கனும். கொடுக்கல் வாங்கல் தகராறா? பெண் விஷயத்தில் ஏதாவது தப்புத் தண்டா பண்ணிட்டானா?

அதெல்லாம் எதுவுமில்லைண்ணே. வரதட்சணை தகறார்னு பேசிக்கறாங்க. அதாவது அடிப்பட்டவன் பெயர் சுந்தரம். இப்ப ஆறு மாசம் முன்னால் தான் கல்யாணமாச்சாம். மாமனார் வரதட்சணை பாக்கி கொடுக்கலையாம். சதா பெண்ணை கொடுமைப்படுத்தியிருக்கான்னு தெரியுது. பொறுத்துப் பொறுத்துப் பாத்திருக்கான் இந்த பையன் சுந்தரம். கெரசினை ஊத்தி பொண்டாட்டியைக் கொளுத்திட்டான் போல இருக்கு. அக்கம் பக்கத்தினர் சும்மா இருப்பாங்களா. கலாட்டாவா ஆயிடுச்சு. ஆஸ்பத்திரிக்கு அழைச்சிக்கிட்டு போயிருக்காங்க. இரண்டு நாட்கள் டாக்டர் ஆஸ்பத்திரியில் போராடியிருக்காங்க. ஆனா பலனில்லை. அந்தப் பெண் இறந்துட்டா. பணத்தைக் கொடுத்து ஆஸ்பத்திரி நிர்வாகத்தை சரி பண்ணிட்டாங்களாம். போலீஸையும்கூட இப்ப ராத்திரி 7 மணி சுமாருக்கு அந்த பெண்ணோட பூத உடலை இங்க கொண்டு வந்தாங்க. இங்குள்ளவர்கள் கொண்டு வரக்கூடாதுன்னு ஆட்சேபம் தெரிவிச்சிரிக்காங்க. உடனே சுடுக்காட்டுக்குப் போயிட்டு அந்தப் பெண்ணோட அந்திமக் கிரியைகள் செய்துட்டு இங்கே நேரா வந்துட்டான். அவன் தன் உடமைகளை எடுத்துக்கிட்டுப் போக. அவன் முகத்தில் துளிக்கூட வருத்தமோ செய்த தவறுக்கு வருத்தமோ தெரியலையாம். அதனால்தான் இங்கேயிருக்கறவங்கக் கூடி அடி பின்னிட்டாங்க. நடந்த விபரங்களை போலீஸ§க்கு சொல்ல அவனை ஆட்டோவுல அழைச்சுக்கிட்டு போயிருக்காங்க.

பரவாயில்லையே... அன்னைக்கு இந்த ஃபிளாட்டில் எத்தனை குடித்தனங்கள் இருக்கு யார் யார் என்னனென்ன வேலை செய்யறாங்கன்னு கேட்டப்போ தெரியாதுன்னியே இப்பப் பார்த்தியா ஒரு சமூக விரோதிய பிடிச்சுக் கொடுத்து தண்டனையும் வழங்கி... பரவாயில்லைப்பா நாடு கெட்டுப் போகலை. அதற்குள் தம்பி மனைவி சொன்னாள்.

இது வரதட்சணைக் கொலை இல்லைனு எனக்கு படுது. எப்படி எதை வெச்சு சொல்ற? வெவ்வேறு சூழ்நிலைகள்ல வளர்க்கப்படற ஆணும் பெண்ணும் கல்யாணம்னு ஆனவுடனே சில சிக்கல்கள், சின்ன சின்ன மனத்தாங்கல்கள் இவைகளை சமாளிக்கத்தான் வேணும். இந்தப் பெண் அதான் கொளுத்திக்கிட்டாளே அவ பேர்லதான் தப்புன்னு எனக்குப் படுது. அதென்ன கொளுத்திக்கிட்டாளேன்னு நீ சொல்ற? இங்கே இருக்கிறவங்க எல்லோரும் அவ புருஷன்தான் கெரசினை ஊத்தி கொளுத்தி விட்டுட்டான்னு சொல்றாங்க. இல்லை, இல்லை இருக்காது.

கொளுத்தறவனா அவனைப் பார்த்தா தெரியல. பயந்த சுபாவம். சதா அந்தப் பெண்தான் அவனை திட்டித்தீர்ப்பா. அதையும் கவனிச்சிருக்கேன் அந்த மாடி மேலேயிருந்து. இவங்களுக்குள்ள அந்தஸ்த்து பேதம் இருந்திருக்கு. அதாவது அந்தப் பெண் நல்ல சுண்டியிழுக்கிற அழகு. ஓரளவுக்கு படிச்சிருக்கா. மாப்பிள்ளை தனக்கு எந்த விதத்திலேயும் சமமில்லைன்னு ஒரு நினைப்பு. அப்பா தன்னை பாழுங்கிணற்றில் தள்ளிட்டதா பல முறைகள் கத்தினதை நான் பார்த்திருக்கேன், ஏன் இங்கேயுள்ளவங்க எல்லோருக்குமேகூடத் தெரியும். தினம் தினம் காலைல அவங்களுக்குள்ள சண்டை போட்டுக்கிறதும் அந்தப் பையன் சுந்தரம் அவளை சமாதானம் பண்றதும் தெரிந்த கதைதான். ஏதாவது சொன்னா நான் தற்கொலை பண்ணிப்பேன். உங்களை மாட்ட வெச்சிடுவேன். வரதட்சிணை கேட்டதாக சொன்னதையும் நான் ஒருமுறை கேட்டிருக்கேன். இதிலிருந்து என்ன தெரியுதுன்னா அவ இது போல பூச்சி காட்டியிருக்கா தினம்தினம். ஒரு நாள் அவன் சரிதான் போடி பூச்சிக் காட்டாதேன்னு சொல்லியிருக்கலாம். உடனே அவனை பயமுறுத்த வேண்டி தன் உடம்பில் கெரசினை ஊத்திக்கிட்டு வேடிக்கை காட்ட நினைச்சிருக்கா. எப்படியும் உடனே வந்து நெருப்பை அணைச்சிடுவான்னு. அன்னைக்குனு பாத்து சமையல்கட்டில் கொளுத்திக்கிட்ட உடனே கதவை திறக்க முடியலயாம் அவளுக்கு. இதுக்குள் தீ பரவிடுச்சு. அவ புருஷன்காரன்தான் அவசர அவசரமா கதவை உடைச்சி அவளை வெளியில் கொண்டு வந்து மயக்கம் தெளிய வெச்சிருக்கான். உடனே ஆட்டோ ஒண்ணு பிடிச்சுக்கிட்டு வந்து அவளை ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டுப் போயிருக்கான். என்ன காரணமோ தெரியல அந்தப் பெண் இரண்டு நாட்களில் உசிரை விட்டுடுச்சு. இதுதான் நடந்த உண்மை. இது தெரியாம நொந்துப் போயிருக்கிற சுந்தரத்தை இவங்க போட்டு அடிக்கறதும், காலால் மிதிக்கறதும், செருப்பால் அடிக்கறதும் என்ன நியாயம்?

இதெல்லாம் எப்படி உனக்குத் தெரியும்?

எனக்கு அந்த பெண்ணின் தாயார் சொன்னார். சுந்தரம் அவங்களுக்கு தூரத்து உறவுக்காரப் பையனாம். வசதி குறைஞ்சவங்களாம். பையனுக்கு வேலை வாங்கிக் கொடுத்து பெண்ணை கல்யாணம் செய்து வெச்சாங்களாம். ஆனா பெண்ணுக்கு என்ன காரணத்தாலோ சுந்தரத்தை பிடிக்கலை. அவனோட வாழப் பிடிக்கலை. சொற்ப சம்பளம். அவன்தான் என்ன செய்வான்? தினம் தினம் சண்டை சச்சரவு. நினைத்ததை உடனே சாதிச்சுக்கனும்கிற மனோபாவம் உள்ள அந்தப் பெண். பாவம் பெண்ணை வளர்க்கத் தெரியாத வளர்த்துட்டேன். இப்ப என் பெண்ணால இன்னோரு அப்பாவியின் வாழ்க்கையும் பலியாயிடுச்சுன்னு எங்கிட்ட அழுதாங்க.

இதெல்லாம் தெரியாம ஏன் இங்கே ஒரு கூட்டம்கூடி ஒரு தலை பட்சமா ஒரு முடிவு எடுத்து ஒருத்தனைப் போட்டு கன்னாபின்னானு அடிக்கனும்! போலீஸ் ஸ்டேஷனுக்கு அவனைக் கூட்டிக்கிட்டு போகனும்?

அதான் அண்ணே... இங்கே தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்தான். ஒருத்தர் கஷ்டப்படறப்போ உதவிக்குன்னு யாரும் வரமாட்டாங்க. ஆனா இது போல தேவையில்லாத விஷயத்தில் எல்லாம் மூக்கை நுழைச்சுக்கிட்டு தாங்களே நீதிபதிகளாகி கோர்ட், விசாரணைனு எதுவுமில்லாம இவங்களாகவே தண்டனையும் கொடுப்பாங்க.

மறுநாள் போலீஸில் ஒப்படைத்ததாக சொல்லப்பட்ட சுந்தரம் எங்கள் குடியிருப்புக்கு வந்தான் சில ஆட்களுடன். அவர்கள் கைகளில் சைக்கிள் செயின்கள், கத்திகள், கம்புகள். எவண்டா அவன் நேத்து என்னை அடிச்சது? என்னை அடிக்க விளக்குமாறு, செருப்புகளைக் கொடுத்து அடிக்கத் தூண்டினவங்க எல்லாம் யார்டா? பொட்டப் பசங்களா...தைரியம் இருந்தா வெளியில் வாங்கடா...நாய்களானு கத்தினான். அவன் மேலும் சொன்னான். எங்க குடும்ப விஷயம்... என்ன ஏதுனு விபரங்கள் கேட்காம எப்படிடா பேடிப்பசங்களா என்னை அடிக்க தூண்டி விட்டீங்க. இருங்கடா ஒருத்தன் ஒருத்தனா கவனிக்கிறேன். முதல்ல நேத்து என்னை அடிச்சவனை கவனிச்சுட்டு என்று கத்தினான். மறுபடி சிலர் போலீஸ§க்கு போன் செய்ய ஒரு காவல் நிலைய ஜீப் வந்து அவனை அள்ளிப் போட்டுக் கொண்டு போனது. மறுநாள் காலை மறுபடி ஜீப்பில் போலீசார் வந்து இறங்கி யார் அன்னைக்கு சுந்தரத்தை அடித்தது என்றனர்.

நான்........... நான்தான்...என்றான் அவன்.

உன் பெயர் என்ன?

ராசையா

என்ன செய்யறே?

பிசினஸ்

சரி உனக்கும், சுந்தரத்துக்கும் என்ன முன் விரோதம்?

யார் சுந்தரம்? என்றான் ராசையா

என்னய்யா இது- இப்பதான் அன்னைக்கு ராத்திரிப் போட்டு சுந்தரத்தை அடிஅடின்னு அடிச்சு போலீஸ் ஸ்டேஷனில் கொண்டு வந்து சேர்த்தே?

எனக்கு அவன் யார்? என்ன பெயர் என்றெல்லாம் தெரியாது.

அப்ப ஏன் அவனை அடிச்சே?

நான் மட்டுமா அடிச்சேன்... இங்குள்ளவங்க எல்லோருமே அவன் மேல எவ்வளவு ஆத்திரமா இருந்தாங்க தெரியுமா?

அப்படி என்ன முன்விரோதம் சுந்தரத்துக்கும், உனக்கும், இங்கேயுள்ளவங்களுக்கும்...?

முன் விரோதம் எதுவுமில்லை- அவன் தன் மனைவியை கெரசின் ஊத்தி கொளுத்தி கொன்னுட்டான்.

அப்படினு யார் சொன்னாங்க?

இங்கே இருக்கறவங்க எல்லோருமே பாத்தாங்க.

என்ன பாத்தாங்க அவன் பொண்டாட்டியை கொளுத்தினதையா?

பதில் சொல்ல முடியாமல் திணறினான் ராசையா.

சொல்லுய்யா- அவன் அதான் சுந்தரம் தன் பொண்டாட்டியை கெரசின் ஊத்தி கொளுத்தினதை நீயோ இங்குள்ளவங்களோ பாத்தாங்களா... அப்படி பார்த்திருந்தா அப்பவே ஏன் அவனை தடுத்திருக்கக் கூடாது?

சார் அவங்களுக்குள்ளாற சண்டை நடக்கும் தினமும். அன்னைக்கு அந்தப்பெண்ணை கொளுத்திட்டான் போல இருக்கு. அவன் செய்யறதையும் செஞ்சுட்டு உடனே ஒரு ஆட்டோவையும் பிடிச்சு அவளை ஆஸ்பத்திரிக்கும் கூட்டிக்கிட்டுப் போனான்.

போய்யா போ.. அவங்களுக்குள்ளாற சண்டை நடந்தது வாஸ்தவம். அதுக்கு காரணம் அந்தப் பொண்ணுக்கு சுந்தரத்தை பிடிக்கலை. அவளை வற்புறுத்தி கல்யாணம் பண்ணி வெச்சிருக்காங்க அவங்க வீட்டில். அதனால்தான் சண்டை தினமும். அவன் ஏதாவது சொன்னா தற்கொலை பண்ணிப்பேன்னு பயமுறுத்துவாளாம். அன்னைக்கும் ஏதோ ஒரு உப்பு பெறாத காரணத்துக்கு சண்டை போட்டிருக்கா புருஷனோட. சமையல் கட்டுக்குள்ளார போய் கதவை சாத்திக்கிட்டு கெரசினை ஊத்தி கொளுத்திக்கிட்டிருக்கா. கதவுத் தாழ்ப்பாள் என்னவோ இறுகிப் போய் கதவைத் திறக்க முடியலை. அப்பதான் அவளுக்கே தன்னுடைய அசட்டுத்தனம், வீண் பிடிவாதத்தின் விளைவு தெரிஞ்சிருக்கு. ஆனா அதுக்குள்ள தீ வேகமா பரவிடுச்சு. பதறிப்போன சுந்தரம் கதவைத் திறக்க முடியாம உடைச்சிருக்கான். இதுக்குள்ள பாதி உடம்பு எரிஞ்சு போச்சு அவளுக்கு. அவசர அவசரமா ஆட்டோ ஒண்ணு பிடிச்சு ஆஸ்பத்திரிக்கு அழைச்சுக்கிட்டு போயிருக்கான். எங்களுக்கும் ஆஸ்பத்திரி நிர்வாகம் தகவல் கொடுக்க நாங்க போய் சுந்தரத்து மனைவிக்கிட்ட வாக்குமூலம் வாங்கினோம்.

அப்பதான் சுந்தரத்து மேல எந்த தப்பும் இல்லைனும் எல்லாம் தன் அசட்டு வீண் பிடிவாதத்தால் தன் வாழ்க்கையை பாழடிச்சுக்கிட்டதாகவும் நடந்த விபரங்கள் பூராவையும் சொன்னாங்க. இது தெரியாம நீங்க வேற பாவம் சுந்தரத்தை போட்டு புரட்டி எடுத்திருக்கீங்க. லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு அன்னைக்கு ராத்திரி கொண்டு போய் எதை எதையோ சொல்லி லாக்கப்பில் அடைச்சிருக்கீங்க. அப்புறம் எங்களை அந்த போலீஸ் நிலையம் தொடர்பு கொள்ள நடந்ததை நாங்க சொல்லி விடுவிச்சிட்டோம். இப்ப சுந்தரம் உங்களை பழிவாங்க வருவான்னு தெரியும். அது போலவே ஆட்களைக் கூட்டிக்கிட்டு இங்கே வந்திருக்கான். இப்ப என்ன செய்யப் போறீங்க?

தெரியலை சார்- என்னை மன்னிச்சிருங்க. ராசையா தலை குனிந்து நின்றான். மற்ற ஃபிளாட் வாசிகளும் மௌனம் காத்தனர். இந்த கேசிலிருந்து எங்களை எப்படியாவது காப்பாத்துங்க என்று சொல்லி ராசையா கொஞ்சம் பணம் கொடுத்தான். சரி பார்ப்போம் என்று சொல்லி அந்த காவலர் சென்றார். மறுநாள் மறுபடி அந்தக் காவலர் இன்னும் இரண்டு காவலர்களை அழைத்துக் கொண்டு ராசையா வீடு தேடி வருகிறார். என்ன சார் மறுபடி? மறுபடியா.. சுந்தரம் உங்க மேல கோபமாயிருக்கான். உங்க மேலேயும் இங்குள்ளவங்க மேலேயும் மானநஷ்ட வழக்கு போடப் போறானாம். கலாட்டா பண்ணினான்னு மறுபடியும் உள்ள போட்டிருக்கோம். ஒரு வாரம்தான். மறுபடி வெளிய வந்து உங்களை குறிவச்சுத்தான் தாக்க வருவான். நீங்க யார்யா தண்டனை கொடுக்க? என்ன செய்யறது சார், தெரியாம.... மறுபடி கொஞ்சம் பணம் செலவழியும். எவ்வளவு? சொன்னார். அம்மாடியோவ்... ராசையா தன் சகக் குடித்தனக்காரர்களிடம் தன் நிலையை
சொன்னார். உதவுமாறு கேட்டார். எல்லோருமே ஒரு கணிசமான உதவி செய்வதாக சொன்னார்கள்.

பணமும் வசூலித்துக் கொடுத்தனர்.

மறுபடி இரண்டு நாட்கள் போன பின்பு இன்னும் இரண்டு காவலர்கள், ஒரு எஸ்.ஐ சகிதம் வந்து பணம் கேட்டனர் ராசையாவை. மறுபடி மறுபடி பணம் கேட்டால் என்ன செய்வது? என்றான் ராசையா.

அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. பணம் கொடு. இல்லைனா சுந்தரம் கொடுத்திருக்கிற போட்டோன் அடிப்படையில் உன்னை கைது செய்வோம். நிம்மதி இல்லாமல் தவித்தான் ராசையா.

மற்ற ஃபிளாட் வாசிகளும் இப்போது ராசையாவை ஓரம்கட்ட ஆரம்பித்தனர். ராசையா செய்தது தப்புதான்....அவன் ஏன் சுந்தரத்தை அடிக்க வேண்டும் என்றனர்... ராசையாவுடன் நட்பு வைத்திருந்தால் தாங்களும் போலீஸ் என்றும், கோர்ட் என்றும் அல்லல்பட வேண்டும் என்று எண்ணினார்கள்.

தினம் தினம் காலை, மாலை வேளைகளில் ராசையாவின் வீடுதேடி போலீஸ்காரர்கள் வந்து பணம் கேட்டனர். ஒரு பெருந்தொகையை கொடுத்துவிட்டால் வழக்கிலிருந்தும், சுந்தரத்தின் தொல்லையிலிருந்தும் ராசையாவை விடுவித்து விடுவதாக சொன்னார்கள். அலுவலகத்திலிருந்து அவர்கள் கேட்ட தொகையை கடனாகப் பெற்றுக் கொடுத்தான் ராசையா...இது தேவையா என்றாள் ராசையாவின் மனைவி. அடிக்கடி போலீஸ் வந்ததால் ராசையாவை வீட்டை காலி செய்ய சொன்னார் வீட்டுக்காரர். அவனை சப்போர்ட் பண்ண யாருமில்லை. இவ்வளவையும் நான் என் தம்பி வீட்டிலிருந்து கவனித்துக் கொண்டிருந்தேன்.

பாத்தியா அண்ணே.... இதுதான் இன்னைய நிலமை ஒரு சக மனிதனுக்கு ஆபத்துன்னா யாருமே உதவிக்கு வரதில்லை. மனிதாபிமானமே அத்துப் போச்சு.... ஆனா ஒருத்தனை எவனாவது எதுக்குன்னு கூட தெரியாம போட்டு அடிச்சா இவங்களும் சேர்ந்து தர்ம அடி அடிக்கிறானுங்க. இந்த நிலையில்தான் தேசிய ஒருமைப்பாட்டு தினம் கொண்டாடுறாங்க... பயங்கரவாத எதிர்ப்பு தினம்னு இந்திரா காந்தி இறந்த தினத்தை கொண்டாடுறோம். ஆனா மனிதாபிமானம்கிறது அத்துப் போச்சு.... சக மனிதனை நேசி. கஷ்டத்தில் இருக்கிறவனுங்களுக்கு உதவி செய்னு யாரும் நினைக்கிறதில்லை.

மூலிகையிலிருந்து பெட்ரோல் தயாரிக்கிறோம்னு சொல்றாங்க..... இன்டெர்நெட் மூலமா சகலத்தையும் சாதிச்சுக்கிறோம்... மெடிகல் சயன்ஸ் வேகமா முன்னேறிக்கிட்டிருக்கு.... என்ன முன்னேற்றம் வந்து என்ன மனித மனம் குறுகிக்கிட்டே வருது. ராசையா என்ற அந்த மனிதன் வழக்கிலிருந்து வெளிவர பிறகு என்ன என்ன கொடுத்தானோ..... கடவுளே!

 

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter