Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
பிளஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - பிளஸ் ரிசல்ட் : நாமக்கல் மாணவி முதலிடம் - பிளஸ் ரிசல்ட் : முதல் 4 இடத்தையும் தட்டிச்சென்றது நாமக்கல் - கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மாதிரி எரிபொருள் அகற்றும்பணி தீவிரம் - ஆந்திராவில் ரெயில்கள் மோதி தீ பிடித்து 14 பேர் பலி - இலங்கை: இந்தியா ஒப்பந்தத்தை அனுமதித்திருந்தால் எந்த துன்பமும் வந்திருக்காது : ஞானதேசிகன் - இலங்கை சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் : சீமான் கோரிக்கை

நம்பிக்கை

சுகந்தி

வெறுப்பாக இருந்தது....ஏன் பாழாய்ப் போன இந்த இருட்டு, கெட்டவனின் மனதைப் போல கறுப்பாக அப்பிக் கொண்டு கிடக்கிறது? போட்டோயன் கூட தூங்குமூஞ்சியாய் போய் விட்டான் போலிருக்கிறது என்று நினைத்தான் ஜகன். பிறகு ஏன் இன்னும் வெளிச்சம் வரவில்லை? கண்கள் இரண்டிலும் நெருப்பு கங்குகளை வைத்து கட்டி விட்டார்களா என்ன? இரவு தூக்கம் இல்லாவிட்டால் கண்கள் என்ன இப்படி தர்மபுரி பஸ் போலவா எறியும்? எழுந்து உட்கார்ந்தான். ஜன்னலின் மேல் கம்பிகள் வழியாக வெளியே பார்த்தான். பருவமடைந்த பெண் கொஞ்சம் கொஞ்சமாய் அழகு பெறுவதுபோல வானம் சிறிது சிறிதாக வெளுத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. இன்றைய நாள் எப்படி இருக்கும் என்று மிக லேசான எதிர்பார்ப்பு குமிழ்கள் மனதில் தோன்றின. தோன்றின வேகத்திலேயே உடைந்தும் போயின. நாளை என்பது எந்த விசேஷமுமின்றி சாதாரண ஒரு நாளே என்று
எப்போதும் சிவப்பு வண்ணத்தில் மட்டுமே சட்டை அணியும் இளங்கோ அடிக்கடி சொல்வது நினைவுக்கு வரவே ஜகன் அப்படியே சரிந்தான்.

நடைமுறை வாழ்க்கையில் எந்த அதிசயமும் சாத்தியமல்ல என்கிற தத்துவம் அவனுக்கு தெரிந்தது. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்கிற சித்தாந்தம் பற்றிய பயமே இப்போது அவனுக்கு உண்டாகியிருந்தது.

எழுந்திட்டியா?...... இப்ப என்ன பாழாப் போகுதுன்னு முழிச்சிக்கிட்டேடா? ராத்திரி பூரா நை நைன்னு அழுது உயிரை எடுத்தது போதாதா?.... சனியன்.... சனியன் சரோஜாவின் குரல் விடியற்காலையில் நிசப்தத்தில்கூட நாராசமாய்க் கேட்டது. கல்யாணமான புதிதில் அவள் குரல் காதில் விழுந்ததும் தேன் மாதிரி இனிக்கும். அவள் பதில் பேசவேண்டுமென்பதற்காகவே அவளிடம் என்னென்ன பேச வேண்டுமென்று யோசித்து வைத்திருப்பான் ஜகன்.

நகர்புறத்திலே பிறந்திருந்தாலும் அவளிடம் நிறைய புராண அறிவிருந்தது. வருஷம் தவறாமல் கூத்தும், மயிலாட்டமும், வில்லுப்பாட்டும், பாகவதமும் ராமாயணமும் கேட்டுக் கேட்டு, பார்த்துப் பார்த்து இதிகாச, புராண உபகதைகள் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தாள் சரோஜா. நளன் ஏன் அன்னத்தை தூதுவிட்டான் புறாவை விடாம? என்றோ, ராமர் குளிக்கப் போகும் போது ஒத்தை அம்பை தவளை மேலே குத்திட்டு போறாராமே, செய்யலாமா அப்படி? என்றோ, புருஷன் கிட்டே நியாயம் கேட்காத கண்ணகி எப்படி பாண்டியராஜாகிட்டே நீதி கேட்கலாம்? என்றோ, காட்டுல பொறந்து வளர்ந்த வள்ளி ஏன் யானையை பார்த்து பயப்படனும்? என்றோ கேட்டுவிட்டு கண்களை மூடிக் கொள்வான் ஜகன்.

எல்லாவற்றுக்கும் சரோஜா உற்சாகமாக பதில் சொல்வாள். தான் முழுமையாக நம்புகிற விஷயத்தை ஆர்வமாக கேட்கிற ஆளிடம் விவரமாக எடுத்துச் சொல்லும் போது இவ்வளவு ஒளியை வீசுமா முகம் என்று அதிசயப்பட்டு போவான் ஜகன். அதுவும் சரோஜா தன் பதில்களை ஏற்ற இறக்க குரலில் உணர்ச்சி நிரம்ப சொல்லும்போது இன்னும் அவள் பேச மாட்டாளா என்ற ஏக்கமும் தவிப்பும் அவன் மனதில் தோன்றும்.

சனியன்.....சனியன்...... என்னைத் தூக்கி கட்டைல வைக்கன்னே பொறந்திருக்கு....... சரோஜா கத்தினாள். குழந்தைக்கு என்ன தெரியும் அது அழுதது. அடிவயிற்றை எக்கிக் கொண்டு அழுதது. நாசமாகப் போகாம ஏன் என்னை பாடா படுத்தறே?...... இப்போ நிறுத்தப் போறியா இல்லே, உன்னை கொன்னுடட்டுமா?

அதற்கு என்ன கஷ்டமோ? சரோஜா கத்த கத்த வால்யூமை கூட்டியது போல அதன் அழுகை அதிகமாகிக் கொண்டே போயிற்று. ஒன்றரை வயது குழந்தைக்கு இப்படி தொடர்ந்து அழ எங்கிருந்து அவ்வளவு பலம் வந்தது என்று நினைத்தான் ஜகன்.

பசியும் பட்டினியுமாக மூன்று மாதங்கள் ஓடியபின், ஓட்டை நாற்காலியையும், ஒளியில்லாத டெலிவிஷனையும் தவிர எல்லாவற்றையும் விற்று சாப்பிட்டபின், என்றைக்கு பூட்டிய கம்பெனியின் கதவு திறக்கும், எப்பொழுது வேலை செய்து சம்பளம் வாங்குவோம் என்கிற நம்பிக்கை நீர்த்துப் போய்விட்ட பின், பேச்சு வார்த்தைக் கூட நின்று போய் அவனும் அவளும் ஒரே வீட்டில் வாழும் அந்நியர் போல் ஆகிவிட்ட பின், குழந்தை மட்டும் எந்த பலத்தின் போட்டோல் இப்படி பெருங்குரலெடுத்து அழுகிறது. அழ முடிகிறது?

அழுகையை இப்ப நிறுத்தல, கழுத்தை நெறிச்சுக் கொன்னுடுவேன்..... என்று ஆவேசமாக கைகளை நீட்டியபடி குழந்தையை நோக்கி ஓடிவந்த சரோஜாவை தடுத்து நிறுத்தின ஜகன், சரோஜா நீ ஒரு தாய்தானா? அழற குழந்தைக்கிட்ட இரக்கமில்லையா உனக்கு? என்று கத்தினான். குழந்தையை தூக்கி அவன் கைகளில் பொத்தென்று போட்டாள் சரோஜா.

இரக்கத்தைப் பத்தி நீங்க பேசறீங்களா?......நாள் பூராவும் இவனோட மல்லாடறது நானு.....வீடு வீடாய்ப்போய் கையேந்தி சோறு வாங்கி வந்து இந்த குழந்தைக்கு போடறது நானு..... தட்டித் தட்ட தூங்க வைக்கிறது நானு......... கை வலிக்க தொட்டில் ஆட்டறது நானு...... சிகரெட் பிடிச்சுகிட்டு தெருத் தெருவா சுத்திட்டு வந்து என்னையா கேள்வி கேக்கறீங்க? குழந்தை எதுக்கு அழுது தெரியுமா? விளையாடனும்னு அழறான். விளையாட அதுக்கு ஒரு கிலுகிலுப்பை வேணும். அதை வாங்கிக் கொடுக்க வக்கில்லை. இரக்கத்தைப் பத்தி பேச வந்துட்டீங்க பெரிசா! ஒவ்வொரு பேச்சும் சாட்டையடியாக வந்து விழுந்து உள்ளத்தை காயப்படுத்தி ரணமாக்க அவமானம் தாங்காமல் தலையை குனிந்து கொண்டான் ஜகன். அம்மா அப்பாவை நருக்கென்று பேச வேண்டும், அதற்கு தான் அழ வேண்டும் என்று தீர்மானித்து இதுவரை அழுது கொண்டிருந்த குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு அவனை பார்த்தது. பிறகு
அவன் கையிலிருந்து இறங்கி சமையலறையை நோக்கி மண்டியபடி நகர ஆரம்பித்தது.

உடம்பின் ஒவ்வொரு பாகமும் கூனி குருகிப்போக வீட்டை விட்டு வெளியே வந்தான் ஜகன். இல்லானை இல்லாளும் வேண்டாள் என்று எங்கோ எப்போதோ படித்தது அவனுக்கு இப்போது நினைவுக்கு வந்தது. ஒன்பது மணிக்கே பஜார் கடைகள் திறக்கப்பட்டு மனித சஞ்சாரம் தொடங்கி விட்டிருந்தது. புடவை தலைப்பில் வெங்காயம், தக்காளியுடன் கையில் ஒரு முருங்கைக்காயுடன் பெண்கள் காய்கறி மார்க்கெட்டிலிருந்து வந்து கொண்டிருந்தார்கள். சைக்கிள் டீக்காரன் சின்ன டம்ளர் நிறைய சாயா நிரப்பிக் கொண்டிருந்தான்.

கீரைக்காரர்கள் பெரிய கீரைக் கட்டை பிரித்து சின்ன சின்ன கட்டுகளாக கட்டிக் கொண்டிருந்தார்கள். ஜகன் எங்கே போகிறோம். என்ன செய்யப் போகிறோம் என்பது தெரியாமல் மவுனமாக சென்று கொண்டிருந்தபோது பிளாட்பாரத்தில் விரிக்கப்பட்டிருந்த கடை ஒன்றைப் பார்த்தான். அதில் சீப்பு, பவுடர் டப்பா, கண்ணாடி, சோப்பு டப்பா, ஸ்லைடு, ஹேர் பின்கள், கிலுகிலுப்பை......... கிலுகிலுப்பையை பார்த்ததும் ஜகன் அப்படியே நின்றான். ஒரு கிலுகிலுப்பை வாங்க வக்கில்லை! சரோஜா அடித்த சாட்டை அடி சுரீர் என்று வலித்தது. கடைக்காரன் யாரென்று பார்த்தான்.

கிட்டு........ அவன் நண்பன்தான்! என்னப்பா கிட்டு....... இவ்வளவு சீக்கிரமா கடைப் போட்டுட்டே? என்று கேட்டபடி கடையை நெருங்கினான் ஜகன். காற்றில் கைகளால் துழாவி விற்பனைப் பொருட்களை சீராக அடுக்கி வைத்துவிட்டு கிட்டு சிரித்தான்.

யாரு ஜகனா?.... வா ஜகன்...... கம்பெனியை தெறந்தாங்களா இல்லையா?........ பேச்சு வார்த்தை நடக்குதா? என்று கேட்டான் கிட்டு.. அதை ஏன் கேக்கறே கிட்டு. வீட்டிலே அடுப்படியில பூனை தூங்குது. பொண்டாட்டிக்கிட்ட பேச்சு அடி வாங்கி மனசு மரத்துப் போச்சுப்பா! என்றான் ஜகன்.

டீ சாப்பிடறியா ஜகன்?

வேணாம் கிட்டு.

இல்ல சாப்பிடு. என்று சொன்ன கிட்டு வெளி பக்கமா திரும்பி காதர் அண்ணே ரெண்டு டீ என்றான்.

கிட்டு.... எங்காவது போய் செத்துடலாம்னு தோணுது என்று குரல் கம்ம சொன்னான் ஜகன்.

அப்படியெல்லாம் பேசாத ஜகன். பார்வை இல்லாத நாங்களே சாகற வரை வாழணம்னு பிடிவாதமா வாழ்ந்துகிட்டிருக்கோம். நம்பிக்கையை தளர விடாதே........... டீயைக் குடி.....வாழறதுக்கு என்ன வழின்னு யோசி....... அதை விட்டுட்டு........... யோசிச்சுகிட்டே போ..........கடவுள் வழிகாட்டுவாரு என்றான் கிட்டு.

கிட்டுவின் பேச்சு தந்த நம்பிக்கையில் நடக்க ஆரம்பித்தான் ஜகன்.

அட, குழந்தைக்கு கிலுகிலுப்பை வாங்கிட்டு வந்துட்டீங்களே. இதென்ன அமுக்கினா கீ...கீன்னு கத்தற கிளி பொம்மை! என்று ஜகன் வாங்கி வந்த பொருட்களை பார்த்து வியந்தாள் சரோஜா.

கைப்பையிலிருந்து அரிசி, பருப்பு, எண்ணை பாக்கெட், காய்கறி, கோவா பொட்டலம், அல்வா பொட்டலம், மல்லிகைப்பூ என்று ஒவ்வொன்றாக எடுத்து வெளியில் வைத்த ஜகன் சரோஜாவிடம் இரண்டு ரூபாய் நோட்டையும் நீட்டினான்.

இவ்வளவு சாமான்கள் வாங்கிட்டு வந்ததுமில்லாம ரூபாய் வேறே ஏதுங்க? என்று வியப்பால் விழிகள் விரிய கேட்டாள் சரோஜா. நமக்கு இந்த ஒரு குழந்தையேப் போதும்னு தீர்மானம் பண்ணிட்டேன் சரோஜா என்றான் ஜகன்.

 

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter