Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
பிளஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - பிளஸ் ரிசல்ட் : நாமக்கல் மாணவி முதலிடம் - பிளஸ் ரிசல்ட் : முதல் 4 இடத்தையும் தட்டிச்சென்றது நாமக்கல் - கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மாதிரி எரிபொருள் அகற்றும்பணி தீவிரம் - ஆந்திராவில் ரெயில்கள் மோதி தீ பிடித்து 14 பேர் பலி - இலங்கை: இந்தியா ஒப்பந்தத்தை அனுமதித்திருந்தால் எந்த துன்பமும் வந்திருக்காது : ஞானதேசிகன் - இலங்கை சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் : சீமான் கோரிக்கை

மௌன அழகு

சரண்யா

ஏய் ஹேமா என்று அழைத்தபடி ஓடிவந்த ரம்யா என் கைகளை பிடித்துக் கொண்டு, நாளைக்கு உன்னை பெண் பார்க்க வராங்களாமே? என்று கேட்டாள்.

`ஆமாம்’ என்றேன் எங்கோ பார்த்தபடி.

என் முகத்தை பாத்து ஏண்டி ஹேமா பேச மாட்டேங்கறே? என்று என் தாடையைப் பிடித்து முகத்தை திருப்பியபடி கேட்டாள் ரம்யா.

ஏன் அவள் முகத்தைப் பார்த்து பேசவில்லை என்பதை நான் சொன்னால் அவள் தாங்குவாளா?

பிரம்மன் சந்தோஷ மூடில் இருந்தபோது ரம்யாவை படைத்தானோ என்னவோ அவளை கொள்ளை அழகாக படைத்திருந்தான். அவள் கூந்தல் அழகு, நாசி அழகு, கண் அழகு, உதடு அழகு, பற்கள் அழகு, தோலின் நிறம் அழகு, குழி விழும் கன்னம் அழகு....... அழகு, அழகு, அழகு அப்படியரு அழகு ரம்யா. குதித்து அவள் வந்தால் மான் துள்ளி வருவது போலிருக்கும். கலகலவென அவள் சிரித்தாள் தங்க மணிகளை தட்டிவிட்ட மாதிரி இருக்கும். இனிமையாக அவள் பேசினால் தேனருவி கொட்டுவது மாதிரி இருக்கும்.

அப்படி அவளை அழகாக படைத்துவிட்ட பிரம்மனுக்கு என்னை படைக்கும்பொழுது மனசு சரியில்லையோ என்னவோ என்னை சுமாராக படைத்து விட்டான். சுமார் என்றால் சாதாரண சுமாரல்ல.... ரொம்ப ரொம்ப சுமார். அழகில் குறைந்த பெண் கல்யாண சந்தையில் அவ்வளவு சீக்கிரம் விலை போய் விடுவாளா என்ன?

என்னை இதுவரை பெண் பார்த்து விட்டுப் போன ஏழு பிள்ளைகளுக்கும் என்னை பிடிக்கவில்லை அவர்களுக்கு என்னை பிடிக்காமல் போய்விட்டதற்கு காரணம் என் தோல் சிவப்பாக இல்லை என்பதாக இருந்தாலும் இந்த ரம்யாவும் தான் ஒரு காரணம்.

அவள் என் பள்ளித் தோழி. பக்கத்து வீடு. அதனால் அவள் எங்கள் வீட்டிற்கு ஓடி ஓடி வந்து விடுவாள். என்கூடவே இருப்பாள். அவள் அம்மா வந்து வாடி என்று கையை பிடித்து இழுத்துக் கொண்டு போவாள். அவ்வளவு ஒட்டுதல், பிரியம் என்னிடம். அதற்காக நான் என்னுள் சந்தோஷப்பட்டதெல்லாம் உண்மைதான், ஆனால் அதற்காக இப்பொழுதெல்லாம் வருந்துகிறேன் என்பதும் கூட ஒரு உண்மைதான்.

என்னை பெண் பார்க்க பிள்ளை வருகிற அன்று காலையிலேயே என் வீட்டுக்கு வந்து விடுவாள் ரம்யா. ஸ்வீட், காரம் செய்வதில் என் அம்மாவுக்கு ஒத்தாசை செய்வாள் ரமயா. அப்பாவுக்கு உதவியாக ஹால் ஒட்டடை அடித்து சோபா, நாற்காலிகளை இழுத்துப் போட்டு ஜன்னல், டிவியை துடைத்து வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டு, டேப் போட்டோகார்டரில் பையன் வருகிற நேரத்துக்கு சரியாக நாதஸ்வர கேசட்டை போட்டு வைத்து எனக்கு தலை வாரி பின்னி, பொட்டு வைத்து, ஸ்டிக்கர் இட்டு, புடவை பிளவுசை மாட்சிங்காக எடுத்து அணிய செய்து.....

பம்பரமாக சுழன்று, பார்த்து பார்த்து இப்படி ஒவ்வொரு போட்டோயத்தையும் கவனமும் போட்டோசனமுமாக செய்ய ஒரு ஆள் தேவைதான் என்று நான், என், அப்பா, அம்மா எல்லாம் எண்ணிக் கொள்வோம்.

அப்படி எண்ணிக் கொண்டது எங்களை ஏமாற்றம் அடைய அல்லவா செய்து விட்டது?

பெண் பார்க்க பிள்ளையும் அவருடன் வந்தவர்களும் ஹாலில் வந்து உட்கார்ந்து பிரயாணம், வெயில், கரண்ட் கட், விலைவாசி எல்லாம் பற்றி கொஞ்சம் பேசிவிட்டு பெண்ணை வரச சொல்லுங்க என்றதும் குனிந்த தலை நிமிராத என்னை கை பிடித்து அழைத்து வருவாள் ரம்யா.

அங்கேயே என்னுடன் என்னருகிலேயே அவளும் உட்கார்ந்து கொள்வாள் அவள். போட்டோயும் வைரமும் போல இருக்கிறார்களே என்று பிள்ளையும் அவருடன் வந்தவர்களும் நினைப்பதை அவர்கள் முகத்திலிருந்து நான் அறிந்ததும் என்னுள் நொறுங்கிப் போவேன்.

அது சரிதான் என்பதுபோல் பிள்ளை வீட்டார்கள் ஊருக்குப் போய் கடிதம் எழுதுவதாக சொல்லிவிட்டு சொஜ்ஜி, பஜ்ஜி, டிகிரி காப்பி சாப்பிட்டுவிட்டு போவார்கள்.

தினசரி எங்கள் தெருவுக்கு தபால்கார் வந்து கொண்டு தானிருப்பார். ஆனால் என்னை பெண் பார்த்து விட்டுப்போன பிள்ளை வீட்டாரிடமிருந்து கடிதம் மட்டும் வராது. கடிதம் வராத ஒவ்வொரு நாளும் பிள்ளைக்கு என்னை பிடிக்கவில்லை என்பதை ஊர்ஜிதப்படுத்தும்! அப்புறம் ரம்யாவிடம் அழகான நீ என் பக்கத்தில் இருந்ததால் தான் என்னை பார்க்க வருகிற எந்த பிள்ளைக்கும் அழகில்லாத என்னை பிடிக்கவில்லை என்று சொல்ல என் மனமும் வாயும் துடிக்கும். சிரமப்பட்டு அடக்கிக் கொள்வேன். என்னை எவருக்கும் பிடிக்காவிட்டால் அதற்கு நான் அழகில் குறைந்தவளாக இருப்பதனால்தானே என்று என்னை நானே சமாதானம் செயதுக் கொள்வேன்!

ஏன் என் முகத்தை பார்த்து நீ பேச மாட்டேங்கிற என்கிறதை நானே சொல்றேன் ஹேமா. உன்னைவிட அழகா இருக்கிற நான் உன் பக்கத்திலே இருந்ததாலேதான் உன்னை எந்த பிள்ளைக்கும் பிடிக்கலே. இல்லையா ஹேமா? என்றாள்.

ஆமாம் என்று சொல்வதுபோல் அவளைப் பார்த்தேன்.

நான் அவர்கள் கண்களுக்கு அழகியாக தெரிந்திருந்தால் என்னை மணக்க அவர்களில் ஒருவராவது முயற்சி செய்தருப்பார்களல்லவா ஹேமா என்று பொட்டில் அடித்த மாதிரி கேட்டாள் ரம்யா.

அவளை அந்த பிள்ளைகளில் எவரும் பெண் கேட்டு வராதது எனக்கு அப்பொழுதுதான் ஞாபகத்திற்கு வந்தது. அழகற்ற என்னை விரும்பாத அவர்கள் அழகான ரம்யாவை ஏன் விரும்பி செல்லவில்லை?

இதுவரை அழகான நீதான் என் கல்யாணத்துக்கு தடையாக இருக்கிறாய் என்றென்னினேன் ரம்யா. நீ சொன்னதிலிருந்து அப்படி எண்ணியது தவறு என்று இப்போது தோன்றுகிறது. நாளை பெண் பார்க்க வருகிற சமயம் எப்போழுதும் போல நீ என்கூடவே இருக்க வேண்டும் ரம்யா! என்றேன்.

இருந்தாள் ரம்யா.

பிள்ளை என்னை ஒரு முறை பார்த்துவிட்டு ரம்யாவை அடிக்கடி அடிக்கண்ணால் பார்ப்பதை கவனித்தேன். இவனும் ஒரே குளத்தில் ஊறிய மட்டைதானோ?

பெண்ணை பாடச் சொல்லுங்களேன்! என்றான் பிள்ளை.

என் சார்.... எங்க ஹேமாவை கல்யாணம் பண்ணின்ட அப்புறம் அவளை மேடை மேடையா கச்சேரி செய்ய வெச்சு பணம் சம்பாதிக்கப் போறேளா, இல்லை தினசரி அவளை பாட வெச்சு கேட்டு ஆனந்திக்கப் போறேளா? எங்கே சொல்லுங்க பாப்போம்? என்ன ராகம், என்ன தாளம்? என்று படபடவென கேட்டாள் ரம்யா.

ஹால் அப்படியே ஸ்தம்பித்துவிட்டது. விருட்டென்று எழுந்து விட்ட பையன் என் அப்பாவின் எதிரே வந்து நின்று சார்... உங்கள் பெண்ணை பாத்துட்டு இந்த வாயாடியை பாத்து இவள் அழகாயிருக்காளே, இவளை நாம கல்யாணம் பண்ணின்டா என்னன்னு ஒரு கணம் எனக்கு தோணிச்சு சார்..... அதுக்கு நல்ல தண்டனையை அனுபவிச்சுட்டேன். பாடச் சொல்லுங்கோ கேப்போம்னு பெண்ணை சொல்றது வாழ்நாளெல்லாம் அவள் பாடிண்டே இருப்பாளான்னு தெரிஞ்சுக்க இல்ல சார். அவள் குரலை கேட்கத்தான். நான் அப்படி கேட்டதாலேதான் அழகான இந்தப் பெண் பெரிய வாயாடி என்கிறது எனக்கு தெரிஞ்சது. அழகா இல்லாவிட்டாலும் அடக்கமா பதவிசா இருக்கிற உங்கள் பெண்ணுடைய மௌனமான அழக ரொம்ப பெரிசு சார், ரொம்ப பெரிசு..... உங்கள் பெண் ஹேமாவை எனக்கு பிடிச்சிருக்கு என்றான்.

ஒரு சில நிமிடங்களில் அந்த இடத்தில் மகிழ்ச்சி குடிக் கொண்டுவிட்டது.

தனிமையில் ரம்யாவிடம், ஏன் ரம்யா அப்படி படபடன்னு பேசினே? என்று கேட்டேன்.

உன்னை பாத்துட்டு பிள்ளை அடிக்கடி என்னை பாக்க ஆரம்பச்சதும் அவன் மனசுலே நான் அழகானவளா இருந்தாலும் வாய் துடுப்புக்காரின்னு நினைப்பு உண்டாக்கணும், அவன் உன்னை விரும்பணும் என்கிறதுக்காகத்தான் அப்படி நடந்துண்டேன் ஹேமா. அது மாதிரியே நடந்துடுத்து. எனக்கு இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்னாலே தடைப்பட்டு போய்கிட்டிருந்த உன் கல்யாணம் இப்போ என்னாலேயே நடக்கப் போறது பாத்தியா? என்றாள் ரம்யா.

 

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter