|
காதலுக்கு கண் இல்லை
செந்தில்குமார்.ஆர்.
எத்தனை சினிமாக்கள்ள, கை கால் இதயம் நாக்குன்னு, ஹீரோ ஹீரோயினுக்கு, ஹீரோயின் ஹீரோவுக்குன்னு தானம் பண்ணி உங்களை சந்தோசப்படுத்தியிருப்பாங்க, ஏதோ எங்களால முடிஞ்சது.,, மேல படிங்க.......
அன்றைய தினம் அவனுக்கு மெதுவாய் தொடங்கியது. போட்டோயன் கூட சோம்பலாய் முறுவலித்து எழுந்தான் . தன்னுடைய ஒவ்வொரு செயல்களும் அவளுக்காகவே என்பதில் பெருமிதம். எங்கிருந்தோ அவள் அவனை பார்த்துக் கொண்டிருப்பதாக ஒரு சைக்கோத்தனம்.
கண்ணாடியை முறைத்து பார்த்தான். தலை வார மனசில்லை. தாடியை நீவி விட்டான்.... தனக்குள் என்னென்னவோ பேசிக்கொண்டான்... அவள் தனக்காகவே வாழ்ந்துக் கொண்டிருப்பதாக குருட்டாம்போக்காய் ஒரு குருட்டு வாழ்க்கை. பேச தைரியமில்லாத அவனுக்கு அவளின் பார்வையே சொர்க்கமானது. எத்தனை மணித்துளிகள் அவளுக்காக வீணடித்திருப்பேன் இல்லை அப்படி சொல்வது காதலுக்கு மரியாதையுமில்லை செலவழித்திருப்பேன் என்று வேண்டுமானால் சொல்லலாம்... அவளின் ஒரு பார்வை வீச்சு வேண்டுமா? அல்லது குரோர்பதி கோடி வேண்டுமா என்றால், அவளின் பார்வை மட்டும் போதும் என்பேன்...ஒருநாள் சுண்ட விரல் பேண்ட் எய்ட் போட்டிருந்தால் அவள் ஏதோ அடிப்பட்டிருக்க வேண்டும். என்னவென்று தெரியவில்லை, அவள் சந்தோசமாக இருந்தால், நானும் அப்படியே, அடிபட்டிருந்தால்...
தேவதையே உன்னை நினைத்த நினைத்த.. தேய்ந்து போகுதல் கூடி சுகம்தானடி...என்னை நான் வருத்திக்கொண்டது எனக்கு மட்டுமே தெரியும்
உயிர்போகும் வலி! ஆனால் சுகமான வலிகள்!!
பேனாவையும் பேப்பரையும் எடுத்தான்
பெயர் தெரியாத அன்பு காதலிக்கு முகம் தெரியாத காதலன், பார்வை தெரியாத யாரே ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொள்ளப்போவதாய் கேள்விப்பட்டேன். அப்படி என்றால் என்னை பார்த்து காதலால் இல்லையா?
ஏன் எதற்காக பார்த்தாய், நினைக்கும் போதே தரைபிளந்து ஆழமாய் எங்கோ போகிறேன். சரி நடந்தது நடந்து விட்டது, உன்னை நினைத்த இதயத்தில், இன்னொருத்திக்கு இடமில்லை. ஆதலால் சென்று வருகிறேன்.
அடுத்த ஜென்மத்தில் சந்திப்போம்!
பின் குறிப்பு : உன் காதல் திருமணத்திற்காக என் சிறு போட்டோசு. என் கண்கள் அதை உன் வருங்கால கணவருக்கு பொருத்தி நீடூழி வாழ்க என வாழ்த்துகிறேன்.
சூரியன் அதே சோம்பலாய் மறைந்து போனான்.
இறந்த போன ரமேஷின் கடிதத்தை படித்து விஷயத்தை தெரிந்து கொண்டு, அவனுடைய கண்களை, பூஜாவின் பார்வை தெரியாத காதலன் பாலுவிற்கு பொருத்தினர். திருமணத்திற்கு தேதி குறித்தனர்.
சுபமாய் திருமணம் முடிந்தது.
முதலிரவு.
மல்லிகை பந்தலின் நடுவே பாலு களைப்பாய் ஆனால் எதிர்பார்ப்புடன் உட்கார்ந்திருந்தான்.
ஊதுபத்தி வாசனையும், பூக்களின் வாசனையும் அந்த இடத்தை சொர்க்க பூமியாய் மாற்றியிருந்தது. கையில் பால் செம்புடன் பல சினிமாக்களில் பார்த்த அதே வெட்கத்துடன் + சிரிப்புடன் வந்தாள்.
வெளியே தோழிகளின் சிரிப்பொலி மெல்லமாய் தேய்ந்து மறைந்தது.
புரண்டு எழுந்தான் பாலு, சிதறிய மல்லிகையின் நடுவே கொத்தாய் காகிதங்கள் கிடக்க அதில் ஒன்றில் முத்து முத்தாய் பூஜாவின் கை எழுத்தில் கடிதம் ஓடியிருந்தது.
அன்புள்ள பாலுவிற்கு,
உன் அன்பு மனைவி பூஜா எழுதுவது, நம்முடைய முதலிரவில் நான் ஒத்துழைக்காததற்கு மன்னிக்கவும், உங்களை பார்க்கும் போதும் நெருங்கும் போதும் உங்களுக்கு கண் தானம் செய்த அந்த முகம் தெரியாத மனிதனின் பிம்பமே என் முன்னால் தெரிகிறது. நான் உங்களுக்கு வேண்டுமானால் மீண்டும் பார்வையை துறந்து பழைய பாலுவாய் என்னை தேடவும், நான் கிடைப்பேன். வருகிறேன்.
நொடிந்து போனான் பாலு. முதன் முதலாய் உலகை பார்க்க செய்த பார்வை வேண்டுமா? இல்லை அன்பு காதலி வேண்டுமா? யோசித்தான்...
இங்க பாருங்க பாலுவை திருப்பி கண் தானம் செய்ய வச்சிட்டு பூஜாவை தேட வைக்கலாம்னு யோசிச்சோம், இல்லையென்றால் ஓடிப்போன பூஜா தன் காதலனுக்கு பார்வை கொடுத்த அந்த முகம் தெரியாதவனின் கண்களை பார்க்காம இருக்க தன்னோட கண்களை குருடாக்கிக்கிற மாதிரியும் யோசிச்சோம், பாவம் நீங்க, எத்தனை முறை தானம்.. தானம்னு அறுவை சிகிச்சையால உங்களை நோகடிக்கிறது. முடிவு உங்க கையிலேயே கொடுத்திடறோம். ஓ.கே. ஜுட்!
|