|
இலைகள் பேசும்
தமயந்தி
பஸ் கிளம்பின வரைக்கும் எந்த பிரக்ஞையும் இல்லை. ஒரு குலுக்கல் குலுங்கி முன்னால் நகர்ந்து போட்டோவர்சில் பின்னால் வந்து திரும்புகையில் பச்சை பாசியாய் நினைவு மனசில் படர்ந்தது. இரண்டு வருஷங்களுக்கு முன்னால் விட்டு வந்த கிராமம். சின்னத் தீப்பெட்டியாய் வீடு. சுற்றிவர நாலு தென்னை மரம். இரண்டு மைனா சின்ன அலுமினியக் கூண்டில் பழைய சோப்பு டப்பா மூடியில் உள்ள சோற்றுப் பருக்கைகளைக் கொத்திக் கொண்டிருக்கும். பாரதி பாடின காணி நிலம் மாதிரி சந்தோஷம் கூடின நிலம். இலைகளின் நிழல் படர்ந்து கிடக்கிற சுற்றுப்புரத்தில் அடர்த்தியான மரங்கள் கீழே உட்கார்ந்து கீற்றுக் கொட்டகை நெய்த மாதிரி விழுந்த வெயிலை வெறித்துக் கொண்டு கவிதை எழுதுவது சுகம். எழுதின கவிதைகள் ஜானுவுக்குப் பிடிக்கும்.
பிடித்ததைக் கண் மூலமாய்ச் சொல்வாள். வாசித்து விட்டு வாயால் சொல்ல முடியாது. பிறந்த உடனே தெரிந்து போயிற்று. குழந்தை அழலம்மா என்று டாக்டர் நீட்டினப் போது அவள் அம்மா அழுதாளாமே. ஒரு தடவை சைகையால் ஜானு சொன்னாள். லிப்-மூவ்மென்ட் கற்றுக் கொண்டதை சொன்னாள். பேசுவதற்கான தனது இஷ்டங்களைச் சொன்னாள். ஆசைகளினால் பயனில்லை என்று தெரிந்தும் மனசெங்கும் ஆசை. ஆர்வம்.
பாதிநாள் ஜானு குடும்பத்திலிருந்து ஒதுக்கப்பட்டாள். அடர்த்தியான மரங்களின் நிழலில் உட்கார்ந்து எதைப் பற்றியோ யோசித்துக் கொண்டிருப்பாள். கண்களில் கலக்கமிருக்கும். சின்ன வயசிலிருந்தே யாரும் இல்லாத அனாதையாய் கூடவே வளர்கிற அத்தை பையன் ராஜ[¨ மட்டும்
துணை. வேலை கிடைத்து ராஜூவும் கிளம்பியபோது கண்களில் கலக்கத்தோடுதான் கையசைத்தாள். கிளம்புவதற்கு முன்னால் மரத்தடியில் நின்று கையை விரித்து, இனி எனக்கு யாரிருக்கா? என்று உதட்டைப் பிதுக்கினாள். ராஜூ நிமிர்ந்து மனசு வரை ஆறுதல் தொடுகிற மாதிரி பார்த்தான்.
கவலையும் இயலாமையும் சூழ்ந்த, தனக்குள் அடக்கிக்கொண்டு தனக்குள் பேசிக் கொண்டு சப்தங்கள் உணராத பிரதேசத்தில் வாழ்கிற மனசு போட்டோந்தது.
இலை உதிர்கிற சப்தம் கேட்காது. ஒன்றோடொன்று உரசுகிற சப்தம் கேட்காது. தெருப்புழுதி சினிமாவின் கனவுசீன் புகை மாதிரி தெருவெங்கும் படர, கிழித்துக் கொண்டு போகிற பஸ் டயர் ரோட்டின் கல்லைத் தொட்டு நகர்கிற சப்தம் கேட்காது. சப்தமில்லாமல் சப்தமிடாமல் ஒரு வாழ்க்கை. தனது ரீயாக்ஷனைக் காட்ட வேண்டும் என்றால் கூட யோசிக்க வேண்டும். நெருப்புத்துகள் பட்டதும்ம்மா.... என்று அலற முடியாது. யாராவது அதைக் கவனிக்கிற வரைக்கும் யாருக்குமே போட்டோயாத கம்பி இழுக்கிற மாதிரி ஒரு குரலில் அழ வேண்டியிருக்கும்.
யாரிருக்கிறார்கள் ஜானுவுக்கு? பெரியண்ணன், சின்னண்ணண், இரண்டு அக்கா எல்லோருமே அவரவர் குடும்பம் என்று விலகியாகிவிட்டது. மிஞ்சியது ராஜுவும், அம்மாவும்தான். ராஜுவையும் இரண்டு வருஷங்களுக்கு முன் வேலை பிரித்துவிட்டது. அம்மாவும் படுத்துவிட்டாள் என்று உருண்டையான கையெழுத்தில் நேற்று கடிதம் வந்தது. கடிதம் முழுக்க ஜானு சத்தமாய் பேசியிருந்தாள்.
நீ போன பிறகு கஷ்டமாய் இருக்கிறது ராஜு. நீ போன பிறகு எனக்கு யாரிருக்கா? என்றதற்குச் சுற்றி வரக் கை காட்டினாய். இலை, இலை, இலை நாலாபக்கமும் பச்சை பச்சையாய் அசைகிற இலை. ஆனால் இலை எனக்கு நீ ஆகாது ராஜு. நீ போன வெற்றிடத்தை இலை நிரப்பாது. இலை ஒரு ஆறுதல் மட்டும்தான். போனவாரம் அப்பாவின் சொத்தைப் பிரித்தார்கள். பெரிய சண்டை! காச்மூச் என்று கத்தினதில் தெருமுழுக்க தெரிந்து விட்டது. பதினைந்து ஏக்கர் நிலத்தை ஏழரை ஏக்கராய் இரண்டு அண்ணனும், இரண்டு அக்காவும் பிரித்துக் கொண்டார்கள். ஆளுக்கு மூணே முக்கால் ஏக்கர் என்று பேச்சு. எனக்கு இந்த வீடு மட்டும். மற்ற வயல், பண்ணை எல்லாமே அவர்களுக்குதான். அம்மாதான் ரொம்ப அழுதாள். எதற்காக என்று தெரியவில்லை. தன்னிச்சையாய் வாழ்க்கையில் இதுவரை தான் தாண்டி வந்த எல்லா துக்கங்களுக்காகவும் அழுகிறவள் மாதிரி அழுதாள். யாரும் அவளை சமாதானப்படுத்தியதாகவும் இல்லை. வெளியே மர இலைகள் மட்டும் அடிக்கடி அசைந்தன.
இவளை மறந்துட்டீங்களே, என்று சொத்து பிரிக்கப்பட்டதும் அம்மா கேட்டாள். அண்ணன், அக்கா எல்லாரும் கூடிப் பேசினார்கள். ஆளுக்கொரு சாக்கு சொன்னார்கள். அதான் இவளுக்குன்னு வீடு இருக்கே இங்கேயே இருக்கட்டும் என்றார்கள். இதனால் அம்மாதான் நிரம்பவும் நொடிந்து விட்டாள். கல்யாணம் பண்ணிக்கோ ஜானு என்றாள். நான் வேண்டாம் என்று விட்டேன். ஏனோ எனக்கு அதில் விருப்பமில்லை ராஜு. மற்ற பெண்கள் மாதிரி கனவும் இல்லை. இப்படியே மைனா, தோட்டம், தென்னை மரம், நிழல்,
லீவுக்கு வருகிற நீ, நீ கிளம்பி போன பிறகு நீ எழுதின கவிதைகள் என்று காலத்தை ஓட்டி விட வேண்டும். நீ ஓய்வுப் பெற்ற பிறகு இங்கே வருவாய். உன் கவிதைகளைக் கேட்டுக் கொண்டே இலைகளின் அரவணைப்பில் செத்து விடவேண்டும்.
நான் கல்யாணம் வேண்டாம் என்றதில் அம்மாவுக்கு நிறைய வருத்தம் ராஜு. அதிலிருந்து எழும்பவே இல்லை. எப்போதாவது நீராகாரம், அவ்வளவுதான். ஒரு நிமிஷம் நினைத்துப் பார்த்தால் பயமாகவும் இருக்கிறது. என் பிரபஞ்சத்தில் சப்தங்கள் கிடையாது. நீ சிலசமயம் தோட்டத்தில் இருக்கும்போது புருவங்களை உயர்த்துவாய். ஏன் எனறு கேட்டால் குயில் கூவுகிறது என்பாய். கூவுதல் என்றால் என்ன என்பது எனக்கு தெரியாது. ராஜு, சில சமயம் என்னை வெளிபடுத்த ஆசைபடும் போது ஏதாவது உரு சக்தியால் பேசி விட முடியாதா என்று தோன்றுகிறது. நான் பேச ஆசைபட்டிருக்கிறேன் ராஜு.
இன்னமும் விருப்பப்படுகிறேன். நீ கண்மூடி ரசித்து சொல்வாயே எம்.எஸ்ஸின் குரல் அதைக் கேட்க வேண்டும். லிப்-மூவ்மெண்டிலேயே நீ பேசிக் கேட்டிருக்கிற உன் குரலைக் காது குளிரக் கேட்க வேண்டும். எனக்கு இப்போதெல்லாம் நான் பாடுகிற மாதிரி கனவு வருகிறது. அடிக்கடி, கனவிலேயே நம்ப முடியாமல் விழிப்பும் வந்து விடுகிறது. வெளியே ஜன்னல் வழியே இருட்டு அசைகிற மாதிரி அசைகிற மர இலைகள் தெரியும். போன கடிதத்தில் போட்டோல் மட்டும்தான் சொல்ல முடிகிற விஷயம் என்று எழுதியிருந்தாயே- என்ன அது? ரொம்ப நேரம் மரத்தடியில் உட்கார்ந்து பால் பொங்கி வடிகிற மாதிரி வடிகிற வெயிலைப் பார்த்துக் கொண்டே யோசித்துக் கொணடிருந்தேன். போட்டோயவில்லை. முடிந்தால் சனி, ஞாயிறு வா. அம்மாவிற்கும் தெம்பாயிருக்கும். இருட்டின விடியற்காலையில் பஸ் கிராமம் வந்து நின்றது. ராஜு ஹோல்ட் ஆலைத் தோளில் மாட்டிக் கொண்டு இறங்கினான். அங்கங்கே வீடுகளில் வாசல் தெளித்துக் கொண்டிருந்தார்கள். பழகின முகங்களைப் பார்த்து சிரித்து நல விசாரிப்புகளுக்குச் சின்னதாய் பதில் சொல்லி அவசரமாய் நடந்தான்.
ஜானு வாசலில் பெரிசாய்க் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். பின்னால் யாரோ வந்து நிற்கிற சப்தம் கேட்காமல் கம்பியை வளைத்துச் சுற்றுப்புள்ளியில் இணைத்தாள். எழும்பி பின்னால் வந்து, திருப்தியாய் வந்திருக்கிறதா? என்று பார்க்க நகர்ந்தவள் ராஜு மேல் இடித்துப் பதறி திரும்பினாள்.
எப்படியிருக்கே ஜானு? கண் பெரிசாகி நம்ப முடியாமல் நம்ப முடியாத அளவுக்குக் கருவிழி விரிந்தது. சூட்கேஸை வாங்கிக் கொண்டாள். உள்ளே போய் நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்தவுடன் என் கடிதம் கிடைச்சிடுச்சா? என்று கை சுட்டுவிரல் நீட்டிக் கேட்டாள்.
நேத்து கெடச்சிச்சு ஜானு. அம்மா எங்க?
இரண்டு கைகளையும் நமஸ்காரம் செய்கிற மாதிரி கோத்து வலது பக்க தலையின் அடியில் வைத்துத் தூங்குகிற மாதிரி பண்ணினாள். நிறைய மெலிந்திருந்தாள். இவளிடம் எப்படி சொல்லமுடியும்? தாங்குவாளா? சகலமும் நிரந்தரம் என்று நினைக்கிறவள் எதுவும் நிரந்தரமில்லை என்று உணர்வாளா? பொய் சொல்லாதே ராஜு என்கிற மாதிரி மூக்கு சுழிக்க பாவனை செய்வாளா?
சுக்கு மணம் ஈரக்காற்றை துளைக்கிற காப்பி கொண்டு வந்தாள். ஜானு அம்மா எழும்பி யாரென்று கண் மேல் கை வைத்து பார்த்தாள்.
ராஜுவா எப்படியப்பா இருக்கே? பதில் சொல்வதற்குள் மீண்டும் படுத்துக் கொண்டாள். இயலாமை அந்த சுருண்டுப் படுத்துக் கொண்ட தொனியில் தெரிந்தது. மகள் பற்றிய கவலை பாதி அரித்திருக்கும். வயசு மீதிப் பாதி இயலாமையாயிருக்கும். காப்பி குடித்துவிட்டு தோட்டத்திற்கு வந்தான். மரங்கள் அதே அடர்த்தியோடு இருந்தன. ஜானு முகம் முழுக்க சந்தோஷத்துடன் கூட வந்தாள். மைனா கூண்டு பக்கத்தில் புதுசாய் கிளிக்கூண்டு இருந்தது. ஒரே ஒரு வால் வெட்டப்பட்ட கிளி பேசாமல் ஒரு ஓரத்தில் முடங்கிக் கிடந்தது.
ராஜு மரத்தடி நிழலில் உட்கார்ந்துக் கொண்டான். வெயில் நீர் பாய்ச்சுகிற மாதிரி வீசிற்று. குடையில் நீளமாய் ஓட்டை விழுந்த மாதிரி, தையல் விட்ட மாதிரி..... சாயங்காலம் போகனும் ஜானு. ஏன் என்கிற மாதிரி நிமிர்ந்துப் பார்த்தாள். நாளைக்குப் போகலாமே? என்று கண் கெஞ்ச சொன்னாள். இல்லை ஜானு.... போகனும். உன்னிடம் ஒன்னு சொல்லத்தான் வந்தேன். என்ன என்கிற மாதிரி நிமிர்ந்து பார்ப்பாள் என்று எதிர்பார்த்தான். ஆனால் அவள் நிமிரவில்லை. வருத்தமாயிருக்கும். வந்த சந்தோஷம், ஆனந்த அதிர்ச்சி, போவதில் கலைந்திருக்கும்.
நீ கல்யாணம் பண்ணிக்கனும் ஜானு... போட்டோயுதா? அம்மாவுக்கு அப்புறம் உன்னைப் பார்த்துக்கொள்ள, உங்கூட இருக்க யாராச்சும் வேணாமா? நீயில்லையா என்று கையசைத்தாள். ராஜு கண்களை இறுக மூடிக் கொண்டான். போட்டோயுமா இவளுக்கு? யாரும் நிரந்தரமில்லை என்பது-சாஸ்வதமில்லை என்பது? நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன் ஜானு. டெல்லி பிராஞ்சுக்குப் போக போறேன். எங்க எம்.டி.யோட பொண்ணுதான். பேரு பத்மா. ஒரே பொண்ணு. அவங்க வீட்டில் நான் இருந்தா நல்லதுன்னு அபிப்ராயப்படுறாங்க. சரின்னுட்டேன். எனக்கும் யாரிருக்கா ஜானு? ஜானு பேசாமல் இருந்தாள். மணலில் நான் பேசனும் ராஜு என்று கையால் பெரிய எழுத்துகளால் எழுதினாள். போட்டோயுது ஜானு. நீ பேசுற, இப்ப எங்கூட போட்டோயுதா? உனக்குள்ளேயே அடங்கிப் போயிடாதே ஜானு. யாரும் யாருக்கும் நிரந்தரமில்லை.
ராஜுவுக்கு தன்னைத் தானே ஜானு நிமித்தம் ஏமாற்றிக் கொள்வது போட்டோந்தது. சுயநலமா? இத்தனை வருடங்களாய் சோறு போட்ட வீட்டை எட்டி உதைத்து விட்டு, யாரிருக்கா? என்று கேட்கிற அல்பத்தனம் போட்டோந்தது. அவமானம். ஆனால்... போக வேண்டும். டெல்லி-பிறகு அமெரிக்கா பயணம். ஜானுவுக்கு ஆபரேஷன் பண்ண முடியுமா என்று பார்க்க வேண்டும். பத்மா சம்மதித்தால்.
நான் சீக்கிரத்துல அமெரிக்கா போயிடுவேன் ஜானு. உனக்கு ஆபரேஷன் பண்ணிடலாம். நீ பேசிடுவே!
ஜானு அவசரமாய் வேண்டாம் என்று வேகமாகத் தலையசைக்க இலை காற்றில் பெரிய இரைச்சலோடு ராஜுவை திட்டுகிற மாதிரி அசைந்தது. சருகு மாதிரி காய்ந்த இலைகள் கீழே விழுந்தன. பேசி ஓய்ந்த இலைகள், தாங்கள் பேசினது தங்களுக்கே கேட்காமல் செத்துப் போன இலைகள். ஜானு அவற்றையே வெறித்தாள். இலை பேசி ஓய்ந்து கீழே விழும். மீண்டும் வேறு இலை துளிர்க்கும். கிளையில் விரியும், காற்றடித்தது ஜானுவோடு பேசும்
கல்கி தீபாவளி மலர்
மற்றும் போதி பதிப்பகம்
|