Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
பிளஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - பிளஸ் ரிசல்ட் : நாமக்கல் மாணவி முதலிடம் - பிளஸ் ரிசல்ட் : முதல் 4 இடத்தையும் தட்டிச்சென்றது நாமக்கல் - கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மாதிரி எரிபொருள் அகற்றும்பணி தீவிரம் - ஆந்திராவில் ரெயில்கள் மோதி தீ பிடித்து 14 பேர் பலி - இலங்கை: இந்தியா ஒப்பந்தத்தை அனுமதித்திருந்தால் எந்த துன்பமும் வந்திருக்காது : ஞானதேசிகன் - இலங்கை சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் : சீமான் கோரிக்கை

அவள் காத்திருந்தாள்

வி.உஷா

முழுமையாக இருபது வருடங்கள் முடிந்தபின் ஊர் மண்ணை மிதித்தேன். ஆச்சரியமாகத்தான் இருந்தது. நகரத்திலிருந்து மிக விலகி இருக்கிற கிராமங்களில்கூட இப்போதெல்லாம் மின்வசதியும் சாட்டிலைட் டெலிவிஷனும் வந்து விட்டன. ஆனால் சிங்கபுரம் இன்னும் சுத்தபுரமாகவே சொல்லப்போனால் சுத்தக்குக்கிராமமாகவே இருந்தது.

ஜனங்கள் இன்னும் விவசாயத்தை ஆதாரமாக வைத்திருந்தார்கள். செம்மண் ரோடுகளில் ரப்பர் டயர் சுமந்த மாட்டு வண்டிகள். நெல்வயலின் ஓரம் பூராவும் கமகமக்கும் மருதாணி மரங்கள் நட்ட நடுவில் கவலையேற்றத்துடன் பெரிய வட்டக்கிணறு. உள்ளே பதினெட்டு படிகள் இருக்குமே அதுதானே என்று ஞாபகசெல்களில் ஒன்று குரல் கொடுத்தது. ஆர்வமாய் நடந்தேன். காற்றில் டீஸல் புகை இல்லாமல் வடிகட்டின சுத்தத்துடன் இருந்தது. இளம்பச்சையில் நாற்றங்கால் நிறைந்து, நீர் இன்னிசைப்பாடகி போல கலைநயத்துடன் சலசலா என்று ஓடிக் கொண்டிருந்த அழகை ஒரு கணம் நின்று போய் பார்த்தேன்.

தாங்க் யூ ஆஷா என்று மனதிற்குள் சொன்னேன்.அவள்தான்வற்புறுத்தினாள். கல்யாண வீட்டில் மூணு நாள் இருந்தே ஆகணும். பத்து வருஷத்துக்கப்புறம் இண்டியா வந்திருக்கோம். அடுத்த ட்ரிப் எப்போன்னு யாருக்குத் தெரியும்? ஐம்பது கிலோ மீட்டர்ல சொந்த ஊர்...... போங்க.... போய் என்ஜாய் பண்ணிட்டு நாளைக்கு சாயங்காலம் மாப்பிள்ளை அழைப்புக்கு முன்னாடி வந்து சேந்துடுங்க என்று திருநெல்வேலி வந்து இறங்கிய கையோடு ஆஷாதான் என்னை முதுகில் பிடித்து தள்ளி விட்டாள். ஏனோ தெரியவில்லை. அமெரிக்கா என்னை முழுவதுமாக அபகரித்து விட்டது. குறைந்த ஜனங்கள், உயர்ந்த கட்டிடங்கள், உச்சக்கட்ட போட்டோகம், டாலர் சம்பளம், அபார சுத்தம், திகைப்பூட்டும் மருத்துவம், உயர்ரக வாழ்க்கை என்று கட்டாந்தரையிலிருந்து வானவில் ரகத்திற்கு அழைத்துப் போய்விட்டது.

இந்தியாவில் அதுவும் மிக சாதாரண கிராமத்திலே பிறந்தவன் என்பதோ, இருபது வயது வரைக்கும் பட்டணத்தின் பகட்டு பற்றிய மெல்லிய ஞானம் கூட இல்லாதவன் என்பதோ, குருக்கள் அப்பா படிப்பு படிப்பு என்று சுவாசத்தைப் போல ஜெபித்ததால் கம்ப்யூட்டர் என்ஜினியர் ஆனவன் என்பதோ சரியான நேரத்தில் சரியான வயதில் சரியான அமெரிக்க கம்பெனியால் தத்தெடுக்கப்பட்டவன் என்பதோ சுத்தமாக மறந்து போய், க்ரீன் கார்டு ஹோல்டராக நானும் ஒரு அமெரிக்கனாகவே மாறிப் போய் எத்தனையோ காலமாகிவிட்டது. ஷ§ முழுக்க செக்கச் செவேல் என்று ஆகிவிட, மண்ணில் கால் பதியபதிய நடந்தேன். போட்டோங் டாக்கீஸ் தூரத்தில் இருந்தாலும் ஆலால கண்டா ஆடலுக்கு தகப்பா என்ற பாட்டு ஒரு பாராவை காற்று இறைத்து விட்டு போனது.

அக்கிரஹாரத்தில் வீடுகள் அதே வரிசையில் அதே சாயம் போன பெயின்டுகளுடன் நெருக்கமாய் தெரிந்தது. அதோ அந்த மூன்றாவது வீடுதான் எங்களுடையது. சொந்த வீடெல்லாம் இல்லை. அப்பாவுக்கு கோயில் கொடுத்த வீடு. ஆனால் அவர் உயிரையே வைத்திருந்த வீடு. எப்படிடா வருவேன் வீட்டையும் கோவிலையும் விட்டுட்டு, உன்னோட வெளிநாட்டுக்கு! என்று கண்கலங்கியதும், அன்றைக்கு ராத்திரியே மார் அடைப்பில் அவர் போய் சேர்ந்ததும் நினைவுக்கு வந்தன. அப்பா மட்டுமல்ல. அவர் போல எத்தனை உள்ளங்கள்? தாய்மண், சொந்த பாஷை, பழகின இடம் என்று பாசம் கொண்டு மூச்சு விட்டுக்கொண்டு வியாபாரத்தனமான தளுக்கு மினுக்குகளிலிருந்து தங்களை மீட்டுக்கொண்டு... எத்தனை மனிதர்கள்? வெட்கமாக இருந்தது. வலது பக்கம் திரும்பியபோது...... சட்டென்று பள்ளிக்கூடம் தென்பட்டது. அப்படியே நின்று விட்டேன். தமிழரசியின் ஞாபகம் அப்படியே மேகம் போல வந்து என் மேல் கவிந்து கொண்டது.

தமிழரசி! தமிழரசி! எப்படி மறந்து போனது எனக்கு! வேகமாக நடந்தேன் வாசலில் போய் நின்றேன். உள்ளே குழந்தைகளின் கதம்பக் குரல்கள் கேட்டன. சுலோசன முதலியார் பள்ளி என்கிற பெயர்பலகை இன்னும் கூட அதே உயரத்தில் அதே காரை பெயர்ந்த சுவரில் பதிக்கப்பட்டு என்னை பார்த்து புன்னகைத்தது. புதிதாக ஒரு கட்டிடம் வகுப்பறைகளுக்கு அருகில் கட்டப்பட்டிருந்தது. வேப்ப மரங்களும் ஒரே ஒரு ஆலமரமும் அதே விஸ்தீரணத்துடன் நிழல் கொடுத்துக் கொண்டிருந்தன.

நானும் தமிழரசியும் பத்தாவது வரை இங்குதான் படித்தோம். சலவை தொழிலாளியின் மகள் தமிழரசி. அபார புத்திசாலி. எனக்கும் அவளுக்கும்தான் படிப்பில் போட்டி. சீசா விளையாட்டு போல எங்கள் மதிப்பெண்கள் மாறும். இந்த தடவை நான் கணக்கில் நூறு, சயின்சில் எண்பது என்றால் அடுத்த தடவை அவள் அதே போல வாங்கி விடுவாள். எல்லா பாடங்களையும் கரைத்து குடிப்பாள். ஒருமுறை தமிழ் வாத்தியார் திருநாவுக்கரசு கம்பராமாயணம் நடத்தியபோது இவள் எழுந்து, படித்த கவிதை ஒண்ணு சொல்லட்டுமா சார்? என்று அனுமதி வாங்கி, பரதனுக்கு ராஜ்யம், ராமனுக்கு பூஜ்யம் என்று சொல்லியபோது பிரமித்து பார்த்தேன். மெல்லிய பெருமைகூட ஏற்பட்டது.

சாயங்காலம் மணியடித்து வெளியே வந்தபோது அவள் எப்போதும் போல புன்னகைத்தாள். நான் அரைகுறையாக புன்னகை செய்ய பார்த்து தோற்றுப் போனேன். வாலி எழுதிய புத்தகம் அது. உனக்கு வேணும்னா தரட்டுமா கிருஷ்ணா என்றாள். எதுக்கு பாடபுஸ்தகத்தை விட்டு கவிதை புஸ்தகமெல்லாம் படிக்கிறாய் நீ என்றேன் மரத்தை பார்த்தபடி. தமிழரசின்னு பேர் வெச்சுக்கிட்டு தமிழ் மேல ஆர்வம் இல்லாம இருக்கலாமா? என்று முறுவலித்தபோது மிக எழிலாக இருந்தாள். அப்படின்னா கிருஷ்ணன்னு பேர் வெச்சிண்டிருக்கிற நான் ரதத்தை அழுத்தி கர்ணனைக் கொன்னு அர்ஜுனனைக் காப்பாத்தின அந்த கண்ணன் போல நடந்துக்கணுமா? என்றேன். வேண்டாமே...... கடமையை செய், பலன் தானா வரும் என்கிற தத்துவத்தை வாழ்ந்து கட்டலாமே என்றாள் மிக மென்மையாக. அதற்கு பின் என் போக்கில் நிறைய மாறுதல்கள். புத்தகத்தை பார்த்தால் அவள் முகம்தான்
வந்து உட்காரும். அந்த மிருதுவான குரல் காதோரம் ஒலித்தபடி இருக்கும். கண்களில் இருக்கும் கருணை நெஞ்சைத் தொட்டு வருடும்.

எந்தவித காம்ப்ளெக்சும் இல்லாத அந்த தன்னம்பிக்கை பிரமிப்பை கொடுக்கும். மெல்ல மெல்ல அவள்பால் ஈர்க்கப்பட்டு விட்டேன் என்பது முழுமையாக தெரிந்தபோது பள்ளிவிட்டு விலக வேண்டிய நாள் வந்துவிட்டது.
டீச்சர் டிரெயினிங் படிக்கப் போறேன் கிருஷ்ணா.... நீ? என்றாள். என் கனவு அமெரிக்கா என்றேன் நிமிர்ந்து. அப்பா போட்ட விதை.... டவுனுக்கு போய்
படிப்பை தொடரப் போறேன்...... எந்த என்ஜினியர் காலேஜ்ல சீட் கெடைச்சாலும் சரி.... ஒரே ஒரு கவலைதான்........

கவலையா? என்ன கிருஷ்ணா?

உன்னை பார்க்காம எப்படி இருப்பேன் தமிழரசி? உடனே கண்கள் பளபளத்து விட்டன. மின்னல் போல போட்டோரென்று வெளிச்சம் வந்து பார்வையில் உட்கார, அவள் கரகரத்தாள்,

நெஜமாவா கிருஷ்ணா சொல்றே? சத்தியமா தமிழ்....... ஒண்ணு கேக்கட்டுமா?

கேளு கிருஷ்ணா.......

காத்திண்டிருப்பியா எனக்காக?

எவ்வளவு ஜென்மம் வேணும்னாலும்....... என்றாள் உடனடியாக. இதே ஸ்கூல்ல..... இதே வகுப்பறையில......உனக்காக காலம் பூரா காத்திட்டிருப்பேன்..... மறக்க மாட்டியே கிருஷ்ணா?

உயிரை உடம்பு மறக்குமா தமிழரசி? பள்ளிக்கூடம் முடிந்து விட்டது. குழந்தைகள் ஹோவென்ற சத்தத்துடன் ஓடினார்கள். குடையும் கொண்டையுமாக ஒரு பெண்மணி வெளியே வந்தாள். குட் ஈவினிங் மேடம்.... என்று அருகில் போனேன். யாரு? என்று என் நாகரீக ஜீன்ஸை வியந்து பார்த்தாள். தமிழரசின்னு ஒரு டீச்சர்..............

தமிழரசியா?............ யாரும் இல்லையே.............. இதே ஊர்க்கார பொண்ணு........ சிவப்பா......... உயரமா...... ஓ... அந்த சலவைக்கார பொண்ணு... அவங்களா? தமிழ் டீச்சர்?

அவங்களேதான்.......... இருக்காங்களா? வரச்சொல்றீங்களா? என்றேன். இதயம் படப்படத்தது.

விஷயம் தெரியாதா? அவங்க உயிரோடவே இல்லை இப்போது... சாகறதுக்கு முன்னால சொன்னாங்களாம், அதுபடி அவங்க எலும்புக்கூடு ஸ்கூல் லெபாரட்டரில இருக்கு...... எனக்கு தெரிஞ்சு பதினெட்டு வருஷமா...........
என் நெஞ்சு துடித்தது.

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter