Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
பிளஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - பிளஸ் ரிசல்ட் : நாமக்கல் மாணவி முதலிடம் - பிளஸ் ரிசல்ட் : முதல் 4 இடத்தையும் தட்டிச்சென்றது நாமக்கல் - கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மாதிரி எரிபொருள் அகற்றும்பணி தீவிரம் - ஆந்திராவில் ரெயில்கள் மோதி தீ பிடித்து 14 பேர் பலி - இலங்கை: இந்தியா ஒப்பந்தத்தை அனுமதித்திருந்தால் எந்த துன்பமும் வந்திருக்காது : ஞானதேசிகன் - இலங்கை சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் : சீமான் கோரிக்கை

அதற்கு முன்னால்...

பரிமளா தலைகீழாக நிற்பதாக உணர்ந்தாள். விர்ரென்று மண்டைக்குள் ரத்தம் கெய்சால் நகரத்து ரயில் வண்டி போல பாய்வதை உணர்ந்தாள். இருதய துடிப்பு வினாடியில் எகிறி கொண்டு போயும் இதயம் தெறித்து விடாமல் உயிருடன் இருப்பதை உணர்ந்தாள்.

எதிரில் பிரதான சாலை. துடிப்புடன் வாகனங்கள் எரிகின்ற கட்டிடத்திலிருந்து தப்பிக்கிற வேகத்துடன் ஜனங்கள். சம்பந்தம் இல்லாத ஒரு ஜோடி மாடுகள். ஆனால் அவையும் நடப்பதில் காட்டும் வேகம். போட்டோமளா தன்னை இடிக்கிற மாதிரி வந்த ஆட்டோவிலிருந்து தப்பிப்பதற்காக சற்றே பின்னால் நகர யத்தனம் செய்தபோது ஒரு ஸ்கூட்டர் தொப்பிக்காரன் சீ, வருதுங்க பார் சாவறதுக்குன்னு என் வண்டி முன்னாடி என்று முகம் பூரா அருவருப்பு வழிய சொல்லிவிட்டு போனான்.

காத்திருந்த அழுகை குமுறிக்கொண்டு வந்தேவிட்டது. நடுரோட்டில் நான்கு பேர் பார்க்க அழுவது அநாகரிகம் என்று கட்டிக் காத்த துக்கம் கிளறப்பட்டு விட்டது. திறக்கப்பட்ட குழாய் நீராய் வழிகின்ற கண்ணீருடன் போட்டோமளா நகர்ந்து பின்னால் போனாள். குட்டை தூங்கு மூஞ்சி மரத்தடியில் நின்றாள்.
எதிரே லாட்ஜ் அமைதியாக இருந்தது. அசோகா லாட்ஜ் என்று பெயர் பொறித்த பலகை தினம் துடைக்கப்படுகிறது போலும். விசித்திரம்! அன்புக்கும் பண்புக்கும் பெயர்போன அசோக மன்னன். மகா பதிவிரதை என்று இதிகாசம் சுட்டிக் காட்டுகிற சீதைக்கு பக்கபலமாக இருந்த அசோகவனம். இந்த பெயரை வைக்க வேண்டும் என்று எவனுக்கு தோன்றியது? ஒழுக்க கேடுகளும், பண்பாடு மீறல்களும், கலாசார சீரழிவுகளும் நிறைந்த இருட்டுவாழ்க்கை மனிதர்களுக்கு இடம் கொடுப்பதற்காகவே கட்டப்பட்ட லாட்ஜ்.

பரிமளா இன்னும் உலராத விழிகளுடன் அந்த கட்டிடத்தையே பார்த்தாள். கையில் இருந்த கூடையில் சற்று நேரத்திற்கு முன்னால் பத்து ரூபாய் கொடுத்து வாங்கிய காலிஃபிளவர் பளிச்சென்று உட்கார்ந்திருந்தது. இந்த மாதிரி ஆரோக்கியமான காய்கறி வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிற நாட்டார் கடையில் கிடைக்காது. பஸ் பிடித்து மெயின் ஏரியாவிற்கு வரவேண்டும். என்னடி எப்ப பார்த்தாலும் வெண்டக்காயும்! சுண்டைக்காயும்! மஞ்சூரியன், கோஃப்தா, இப்படி எதுனாச்சும் பேராவது தெரியுமா! என்னத்த வளர்த்திருக்காளோ உங்கம்மா- என்று கங்காதரன் நேற்று ராத்திரி சாப்பாட்டின்போது அலுத்துக்கொண்டான். நான்கு பெண் குழந்தைகளுக்கு சோறும், கல்வியும், கல்யாணமும் தரவேண்டுமென்றால் பள்ளி வாத்தியாரான
புருஷனும் பெண்டாட்டியும் எப்படி தலையாலே தண்ணி குடிக்க வேண்டும் என்று கங்காதரனுக்கு தெரியாது. அபார்ஷன் செய்கின்ற டாக்டருக்கு கத்திரிக்கோல் எடுத்து தருகிற வேலை பார்க்கிற தாதி அவன் அம்மா. கருவிலே திருவை அழிக்கிற வேலையை மட்டும் செய்பவள் பிள்ளையை எப்படி இரக்க சுபாவம் உள்ளவனாக வளர்த்திருக்க முடியும்.

அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என்றாகிவிட்டது இப்போது. வெகுநாட்களாக, நான்கைந்து மாதங்களாக, மனசுக்குள்ளேயே ஊறிக்கொண்டிருந்த சந்தேகத்திற்கு இப்போது விடை கிடைத்துவிட்டது. மஞ்சூரியனுக்கு ஒரு வகையில் நன்றி கூட சொல்லலாம். கங்காதரனும் அவனுக்கு கீழே வேலை செய்கிற ஸ்டெனோ கோமளாவும் ஆபிஸிற்கு வெளியிலும் ஒன்றாகவே இருக்கிறார்கள் என்று அரசல் புரசலாக காதில் விழுந்து கொண்டுதான் இருந்தது. என்னதான் இருந்தாலும் என் புருஷன் அந்த அளவு மோசமில்லை என்று எல்லா பெண்களையும் போல அவளும் மாங்கல்யத்தை கண்ணில் ஒற்றிக் கொண்டுதான் இருந்தாள். அசோகா லாட்ஜ் வாசலில் நிற்கிற ஹீரோ ஹோண்டாவைகூட சரியாக கவனிக்கவில்லை. அளவுக்கு மீறிய பெண்ணின் சிரிப்பு காதில் விழுந்ததால்தான் உற்றுப் பார்த்தாள். கங்காதரனின் புலித்தோல் ஸீட் கவர் கொண்ட வண்டி அது என்றும், சிரிப்புக்காரியின் தோள்மேல் கைப்போட்டுக் கொண்டு நடையிலேயே தெனாவட்டு காட்டி உள்ளே நுழைந்து போட்டோசப்ஷனில் பேசுபவன் அவன்தான் என்று அப்போதுதான் தெரிந்தது.

திடீரென்று தான் தலைகீழாக நிற்பதாக தோன்றியது. நகரும்மா.. லஞ்ச் நேரம்.... காரெல்லாம் வெளியில வர்ற நேரம் என்று காக்கி இளைஞன் சொன்னான். நடந்தாள். தொண்டை கவ்விக் கொண்டது. என்ன செய்யப்போகிறேன்? படுபாவி எவ்வளவு துணிச்சல்? என்ன துரோகம்? அப்படியென்ன குற்றம் செய்துவிட்டேன்? இரண்டு தடவை உண்டானபோதும் கலைக்க வைத்தவன் அவன். அடிமை ரோஜாவைப் போல தினம் தினம் நசுக்கப்படுவதும், சுடச்சுட சமைத்து வைத்து காத்திருந்தும், குற்றம் கண்டுப்பிடித்தே தீருவேன் என்று தேடி அவள் மேல் குற்றச்சாட்டுக்களை வீசுவதும்... அநியாயம் என்று தெரிந்தும் அவ்வளவையும் பொறுத்துக் கொண்டாள். சமுதாயம் தந்திருந்த கொடையா அது? சகிப்புதன்மை. பதிலுக்கு பதில் பேசினால்- போடி உன் வீட்டுக்கு- என்று முடிப்பான். மீண்டும் தண்டச்சோற்று வாழ்க்கை. தாயின் கண்ணீர், தந்தையின் ஊமைக் குமுறல்,

சகோதரிகளின் பயம். பெண்ணின் வாழக்கையை அவளைத் தவிர அத்தனை விஷயங்களும் தீர்மானிக்கின்றன. பாவம் அப்பா! கஷ்டப்பட்டுதான் பி. ஏ. படிக்க வைத்து டைப்பெல்லாம் சொல்லிக் கொடுத்தார். ஸ்டேட், சென்ட்ரல், பாங்க், எல்.ஐ.சி என்று நிறைய பரீட்சைகள் எழுதினாள். அவளைவிட புத்திமான்கள், சாமர்த்தியசாலிகள் இருந்து தொலைத்தார்களே! வெயில் ஏறியிருந்தது. தலை பயங்கரமாய் வலித்தது.

எப்படி சிரித்தாள் அந்தக் கொண்டைக்காரி? இடுப்பை தழுவிச் சென்ற அந்த கைகளின் லாவகம் பார்த்தால் அனுபவமிக்க அணைப்பென்று தெரிகிறது. போட்டோமளாவுக்கு நெஞ்சு வலித்தது இப்போது. மறுபடி அவன் முகத்தை பார்த்துத்தான் தீரவேண்டும் என்ற நினைப்பே புரட்டியது. அதே கைகளுடன் அவன் பக்கத்தில் வருவான். ஐயோ! ஒரு தாலி அந்தஸ்துக்காகவும், மூன்றுவேளை சோற்றுக்காகவும், நாலு புடவைகளுக்காகவும் அவனோடு வாழந்துதான் ஆகவேண்டுமா? கேடுகெட்ட அந்த விதி எனக்கா? வீடு வந்து சேர்ந்தபோது தபால்காரர் காத்திருந்தார். போட்டோஜிஸ்ட்டர் போஸ்ட்மா, போட்டோமளா நீங்கதானே? என்றார். ஆமா சார் கொடுங்க - என்றாள். கையெழுத்து போடுகையில் எழுத்துக்களே மறந்து போய்விட்ட மாதிரி இருந்தது.

அது ஒரு வேலைக்கான நியமன உத்தரவு. மத்திய சர்க்£ரின் மினிஸ்ட்ரீ ஆஃப் இன்கம். டிபார்ட்மெண்ட் ஆஃப் எக்ஸ்பென்டிச்சர். வித் ரெஃபரன்ஸ் டு யுவர் அப்ளிகேஷன் டேட்டட்..... என்றதை மளமளவென்று படித்தாள். ஆரம்ப சம்பளம் ஐயாயிரத்தை தொடுகிறது. என்னடி அது..? - கங்காதரன் வந்திருந்தான். ஆபிஸ் வேலையா மத்யானமே கௌம்பிட்டேன். ரொம்ப அசதியா இருக்கு. சூடா மொதல்ல ஒரு காஃப்பி கொடு - என்றான். போட்டோமளா நிமிர்ந்தாள். என்னடி பாக்கறே? - என்றான். புன்னகைத்தாள். காஃபியெல்லாம் இருக்கட்டும். அதுக்கு முன்னால பேச வேண்டியது நிறைய இருக்கே...

 

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter