Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
பிளஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - பிளஸ் ரிசல்ட் : நாமக்கல் மாணவி முதலிடம் - பிளஸ் ரிசல்ட் : முதல் 4 இடத்தையும் தட்டிச்சென்றது நாமக்கல் - கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மாதிரி எரிபொருள் அகற்றும்பணி தீவிரம் - ஆந்திராவில் ரெயில்கள் மோதி தீ பிடித்து 14 பேர் பலி - இலங்கை: இந்தியா ஒப்பந்தத்தை அனுமதித்திருந்தால் எந்த துன்பமும் வந்திருக்காது : ஞானதேசிகன் - இலங்கை சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் : சீமான் கோரிக்கை
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15

அத்தியாயம் 15

புஷ்பா தங்கதுரை
எழுதும்
காதல் நெருப்புகள்
தொடர் கதை

தமா வசமாக சுகுணாவிடம் அகப்பட்டுக் கொண்டாள். இடுப்பில் கட்டிய ஒரு பையில் சுகுணா சமையல் கத்தி வைத்திருந்தாள். விருட்டென்று எடுத்தாள். இமைக்கும் நேரத்தில் தமாவின் இடுப்புக்கு மேல் அழுத்திச் சொறுகினாள். தமாவுக்குள் தீ போல் எஃகு பாய்ந்தது.

அதிர்ச்சியில் வாய் பிளந்தது. கை பலம் இழந்தது. சுகுணாவும் பிடியை விலக்க, தமாவின் உடல் வழுவிக் கொண்டு கீழே விழுந்தது. அதன் பிறகு அவள் உடலில் ஒரு சின்ன இயக்கம் தான். உயிர் பிரிந்து விட்டது.

சிறிது நேரத்தில் விஜய் வீட்டுக்குள்ளே வந்தான். சம்பவத்தின் கோரத்தைப் பார்த்ததும் மனம் சுருண்டது. வாசல் கதவை விரைவாக அடைத்தான். பாவி ! என்றான் சுகுணாவைப் பார்த்து.

அவள் வெறி பிடித்தது போல நின்றாள். அவள் கையைப் பிடித்து தனியாக அறைக்குக் கொண்டு போனான். நடுபகல் பூராவும் விஜய் பேசினான். அவள் ஆசவாசமடைந்த பிறகு அழுதுகொண்டே இருந்தாள். அப்போது அவள் சொன்ன ஒரு விஷயம் விஜய்க்குப் பிடித்தது.

அவளிடம் அப்போது ஒரு பரந்த மனம் இருந்தது. ஒருவேளை தமாவும் விஜய்யும் தவறினாலும் தவறிட்டுப் போகட்டும். அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். தன்கிட்டே கிடைக்காத இல்லற சுகத்தை அவள்கிட்டேயாவது விஜய் பெறட்டுமே என்று தாராளமாகக் கூட அப்போது நினைத்தாள்..

அதனாலே ஏதாவது விபரீதம் நிகழ்ந்தால்கூட அவள் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்தாள். தானே தியாகம் செய்து விடலாம் என்று கூட நினைத்திருந்தாள். ஆனால் இப்போது நிலை வேறு. இப்போது அவளுக்குக் கண் போய் விட்டது. ஊனமாகி விட்டாள். ஊனமான அவளுக்கு விஜய்போல் ஒரு ஏகபத்தினி புருஷன் கிடைப்பது ரொம்ப துர்லபம். அவளது ஊன வாழ்க்கைக்கு அவன் தான்; ஒரே ஆதாரமாக இருந்தான்.

வேறு ஆதாரம் அவளுக்குக் கிடையாது. இந்த நிலையில் தனது ஒரே ஆதாரத்துக்கு எந்தவித தீங்கும் ஏற்பட விரும்பவில்லை. ஆதாரம் போய் விட்டால் அவள் வாழ்க்கை போய் விடும்! அதனால் விஜய் போல உள்ள ஒரு உண்மையான புருஷனை இழக்க அவள் தயாராயில்லை.

தமா மூலம் அவனை இழந்துடுவோம் என்று அவள் நினைத்த போது பதறிப் போய் விட்டாள். தமாவும் தனது வீட்டுக்குள் ரகசியமாக நடமாடுகிறாள் என்று தெரிய வந்ததும் அது அவளுக்கு பெரிய ஆத்திரத்தை உண்டாக்கிட்டுது. தனது வாழ்க்கையின் அஸ்திவாரத்துக்கே அது ஆபத்துன்னு நினைச்சு அதை எப்படியும் தவிர்த்துவிட வேண்டுமென்று தீர்மானித்தாள்.

மடியிலே கத்தியை மறைத்து வைத்துக் கொண்டு வெறியா பல நாள் தமாவைத் தேடி அலைந்தாள். தமா கிடைத்தவுடனே அவளைக் கொன்று விட்டாள். அவள் சொன்ன இத்தனையையும் இரக்கத்தோடு கேட்டான் விஜய்.

உண்மையிலே சுகுணா கட்சியிலே அப்படி ஒரு கோணம் இருக்கிறது என்று அதுவரை அவன் போட்டோந்ததில்லை.

தன் பாதுகாப்புக்காக அவள் தமாவை அழிக்கத் தயாராக இருந்திருக்கிறாள். இது ஒரு சுபாவமான மனித உணர்ச்சிதான்! அதுவும் அவள் கண்ணில்லாத ஊனம் ஆனதனாலே இதை அதிகமாகவே நினைத்துப் பயந்திருக்கிறாள்! அவள் வாழ்வதற்கு ஒரு பெரிய பாதுகாப்பு விஜய் என்பது முக்கியமாகிவிட்டது.

தமாவைத் தீர்த்துவிட்டாள். மாலையில் தமாவைக் கொன்றதாகச் சொல்லி விஜய் போலீஸ்லே சரணடைஞ்சான். தமாவை அவன் விரும்பின மாதிரியும், அவள் அவனைப் புறக்கணித்த மாதிரியும், இதனாலே ஆத்திரம் அடைந்து அவளைக் கொன்று விட்ட மாதிரியும் போலீசுக்கு ஜோடித்தான். சுகுணா எவ்வளவு தடுத்தும் விஜய் இணங்கவில்லை. தன் மீதே குற்றத்தைப் போட்டுக் கொண்டான். அது மட்டுமல்ல, சுகுணா இது விஷயத்தில் எதுவும் பேசக்கூடாது என்று கூறி அவளிடம் உறுதிமொழி வாங்கிக் கொண்டான். இத்தனையும் சொல்லி வந்த விஜய், திடீரென்று சிறிது நேரம் மௌனமானான்.

அவன் மனசில் அந்தக் கடைசி சம்பவங்கள் மீண்டும் நடந்திருக்க வேண்டும். சோகமான கட்டம் அது. சோதனையான கட்டம். கண்ணில் வரும் நீரை வழித்தார். ஜெயில் சூழ்நிலை அப்போது சந்தடி இல்லாத நிசப்தமாக இருந்தது. ஜெயில் சூப்பிரண்டெண்ட் குணசாகர் அந்தக் கதை சம்பவங்களில் மூழ்கி இருந்தார். உண்மையில் அவர் முன்னிலையில் அத்தனை சம்பவங்களும் வீடியோ போல சர சரத்து மறைந்தன.

ஆபீசர்! இப்போ உங்க முன்னாலே பேசிட்டிருக்கிறது அந்த விஜய்தான்! எனக்கு அப்பா வச்ச முழுப் பெயர் விஜய சந்திரன். செய்யாத ஒரு கொலைக்கு இரக்கம் காரணமாக நான் இந்த ஜெயிலுக்கு வந்திருக்கேன். பாதி வருஷம் ஓட்டியாச்சு. ஆனந்தமா இருக்கேன். தியானம் பண்றேன். யோகம் பண்றேன். சுகுணா மாசம் ஒருமுறை இங்கே வந்து என்னிடம் பேசிவிட்டுப் போகிறாள்! வரும்போதெல்லாம் கண்ணீர் விடுவாள்.

நான் நினைச்சுப் பார்க்கிறேன். திருப்பதி ஏன் போனேன்? சுகுணாவை ஏன் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன்? இளமையிலே நம்ப காதல் இனிமையானது, மிருதுவானதுதான். ஆனால் காதல் ஒரு நெருப்பும்கூட.

நான் சுகுணாவை மணந்திருக்காட்டா இவ்வளவு சோதனை என் வாழ்க்கையிலே வந்திருக்காது. நானும் மற்றவங்களைப் போல அப்பா சொல்ற பெண்ணைக் கட்டிக்கிட்டு சராசரி மனிதனாக அதிக மேடு பள்ளம் இல்லாம வாழ்க்கையிலே வாழ்ந்திருப்பேன்.

என்னை சுகுணாவிடம் தள்ளி அவளை மணக்க வைத்தது. என் கடமை உணர்வுள்ள காதல்தான். சுகுணா என்னை ஏற்றுக் கொண்டதும் அதே காதலால்தான். ஆனால் அவளது காதலே பின்னாடி எனக்கு நெருப்பாக மாறும்னு நினைக்கலை. அது என்னைத் தகிச்சிடுச்சு! ஆபீசர் சார்! என் கதையைக் கேட்டீங்க. இந்த சிறைக்கு வந்துபோன ஆயிரம் பேர் கதைகளிலே
இது ஒண்ணு.

இதுக்கு விசேஷ அர்த்தம் எதுவும் கிடையாது. என்னிடம் பொறுமையாகக் கேட்டதற்கு ரொம்ப நன்றி. விஜய சந்திரன் தமது கைகளைக் கூப்பினார். என் கண்களில் ஏனோ ஒரு திரை மறைத்திருந்தது. எழுந்தேன்.

வரேன்! என்று சொல்லி வெளியே வந்தேன். மெல்லிசான நிலவு என்மேல் பலவீனமாகப் பதிந்தது. சோகமாக வீட்டுக்கு வந்தேன். அந்த சோகம் இன்றுவரை என்னிடம் தங்கி வருகிறது.

 

முற்றும்

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter