First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
ஆஸ்திரேலியாவில் விடுதலைப்புலிகளை தடைசெய்யக்கோரி இலங்கை அரசு கோரிக்கை - மதிமுகவிலிருந்து எல்.கணேசன், செஞ்சிராமசந்திரன் நீக்கம் - தமிழ்நாட்டிற்கு தினமும் 100 மெகாவாட் மின்சாரம் மத்திய அரசு ஒப்புதல்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15

அத்தியாயம் 14

புஷ்பா தங்கதுரை
எழுதும்
காதல் நெருப்புகள்
தொடர் கதை

தமாவும், விஜய்யும் தங்கள் பார்வையிலேயே பஸ்பம் ஆனார்கள்.

பார்வைகள் இணக்கமாகக் கலந்து கொண்டன. பார்வைகளே ஒன்றுக்கொன்று மோதி ஆலிங்கனம் செய்து கொண்டன. பின்னர், பார்வைகள் செய்ததைத்தான் அவர்கள் மேனிகளும் செய்தன. இருவரும் மெய்மறந்தார்கள்.

உலகம், பந்தம், துன்பம், துயர் எல்லாம் இல்லாத ஒரு அற்புத உல்லாச வெளியில் ஆனந்தமாக உலாவினார்கள். அன்று முதல் உல்லாசங்கள் ஆரம்பமாயின.

அவைகளில் மனங்கள் ஒன்றுக்கொன்று கிரங்கிக் கலந்தன. அவர்கள் இணை பிரியாமலே இருக்க விரும்பினார்கள். சமயங்களில் தமா காலைச் சமையலுக்கும் பிறகு வீட்டுக்கே போகவில்லை. மெள்ள மெள்ள ஓசையில்லாமல் நழுவி அவனது அறைக்குள் போய்விடுவாள்.அப்படிச் சில நாட்கள் நடக்க, அதில் ஆபத்து என்பதை அறிந்தார்கள். சுகுணா சமயத்தில் வீடு முழுதும் சுற்ற ஆரம்பித்தாள்.

வீட்டின் ப்ளான் எல்லாம் சுகுணாவின் மனக் கண்ணில் அத்துப்படி. எங்கே சமையல் அறை, எங்கே விஜய்யின் அறை, எங்கே அவள் அறை, கூடம் எங்கே, சாமான் அறை எங்கே என்று எல்லாம் நீள, அகல அளவுகளோடு மனப்பாடம் ஆகிவிட்டன. நடந்தால், காலே கணக்குப் பார்த்து, இதோ சமையல் அறை என்று கூற ஆரம்பித்தது.

ஏன் சுகுணா? வீட்டிலே உலாத்தறயே? என்றான் விஜய் ஒருநாள்!

எனக்குப் பொழுது போக வேண்டாமா? எக்ஸர்ஸைஸ§ம் வேண்டாமா? என்று ஒரு வெடுக் பதிலாகக் கூறினாள். அவளது சுமுகமான, இதமான பதில்கள் குறைந்துவிட்டன.

ஒன்று அவனுக்குப் போட்டோந்தது. அவளுக்கு மனதுள் ஏதோ சந்தேகங்கள் புகுந்துவிட்டன.

என்னதாக இருக்கும்? விஜய் யோசித்தான். தமாவும் யோசித்தாள். ஏதாவது வாசனை அவளுக்குப் புதிதாகப் போட்டோகிறதா? வியர்வை வாடை கூட புதிதாக இருந்தால் சிலரால் உணர முடியும். ஒரு நாள் சுகுணாவைக் காணவில்லை. விஜய் அவளைத் தேடிக் கொண்டு ஒவ்வொரு அறையாகச் சென்றான்.

அவனுக்குக் கவலை ஏற்பட்டது. சுகுணாவின் மனத்தில் ஏதோ ஒரு எண்ணம் புகுந்துவிட்டது! சந்தேக எண்ணம். அதனால்தான் அவள் இதுபோல................ நினைக்கும்போது, பின்புறத்தில் ஏதோ விழும் சத்தம் கேட்டது. சட்டென்று ஓடினான். கிணற்றுக்குப் பக்கத்தில் சாதாரண பாத்ரூம். நாலு சின்னச் சுவர் எழுப்பி ஆஸ்பெஸ்டர் கூரை போட்டது. அதில் அவள் இருந்தாள். தலை உடம்பு எல்லாம் தூசி, சிலந்தி வலை! சின்ன பாத்ரூம் அறையின் சுவரோடு ஒட்டி நடந்து கைகளால் தடவி இருக்கிறாள் என்பது போட்டோந்தது.

அந்த அறைக்கு அவள் போனது இதுதான் முதல் தடவை!

சுகுணா! என்றான். பேசாமல் நடந்து வந்தாள்.

உடம்பெல்லாம் தூசி! என்றான். அதைத் துணியில் தட்டப் போனான். ஒரு முறை செய்ததுமே அவள்,

நிறுத்துங்க! என்றாள்.

நான் போய்ச் குளிச்சுக்கறேன்! நீங்க என்மேலே சாணி ஓட்டறமாதிரி துணியை அடிக்க வேண்டாம். என்றாள். அவள் பின்னால் நடந்தான். உள்ளே போனதும், அவள் திரும்பினாள்.

இந்தப் பாருங்க! இந்த சோப் ஏது? திடுக்கிட்டான். திரும்பவும், இது மெடிகல் சோப்! அந்த பாத்ரூமில் இது............. எதுக்கு?
என்றாள்.

அதுவா? அந்த சமையல் மாமி முகம், கை கழுவ இதைத்தான்.........

பூசி மெழுகாதீங்க! சீயக்காய் மஞ்சள் பொடி தவிர எதையும் அவள் உபயோகிக்க மாட்டா!

அப்போ? அவன் யோசித்தான்.

இது தமாதான் உபயோகிப்பா!

கொஞ்ச நாள் முன்னாலே வந்துட்டிருந்தாளே, அப்போஉபயோகிச்சிருக்கணும்!

லட்சணமா சொல்றீங்களே? சோப்பைப் பாருங்க? ஈரம் இருக்கு! கீழே தரையிலே.......... வேறே ஈரம்.. தமா வராளா?

சுகுணா கோபத்துடன் நேராகப் பாத்ரூம் போய் குளித்தாள். புதிது உடுத்திக் கொண்டாள். நேராகக் கட்டிலில் போய் விழுந்தாள். அழ ஆரம்பித்தாள். அவன் உள்ளே போனான்.

சாப்பிடல்லையா? என்£றான்.

வேண்டாம்! பட்டினி கிடந்துட்டுப் போறேன்! ................

வா, சாப்பிடு!

வேண்டாம். இந்தச் சாப்பாட்டுக்குத்தானே ஒரு ஆளை உள்ளே விட வேண்டியிருக்கு............. அவன் பதில் பேசவில்லை.

சமையல்காரி வரா என்கிறீங்க! அவள் குரலை காணல்லை. சீக்கிரம் வந்துட்டுப் போனா என்கிறீங்க! அப்புறம் சமைச்சுக் போட்டோயர்லே கொடுத்து அனுப்பினா என்கிறீங்க. இதென்ன எல்லாம் மூடு மந்திரமா இருக்கு! எனக்கு கண் தெரியாததனாலே ஏமாத்தறீங்களா?

சுகுணா........... தவறா எதையும் நினைக்காதே. மனசில் அனாவசிய நினைப்பை வைக்காதே.

இந்த சோப் எப்படி வந்தது? காலைலே தேய்ச்ச மாதிரி ஈரம்! நாடகம் நடிக்கிறீங்களா? விஜய் அகப்பட்டுவிட்டான்.

இந்தப் பாருங்க! என்னை வீணா புண்படுத்தாதீங்க! இந்த ஈர சோப்பை கூரை இடுக்கிலே வச்சிருக்கு! சோப்பை அதுக்கு உண்டான ஸ்டாண்டிலேதானே வைக்கணும்! ஆனா இடுக்கிலே வச்சிருக்கு. யார் இதைச் செஞ்சாங்க? ஏன் செஞ்சாங்க? ஒரு கூப்பாட்டில் நிறுத்தினாள் அவள்.

வீடு அதிர்ந்தது.

அவனும் அதிர்ந்தான்.

வாய் பேச எழவில்லை..

சுகுணா அந்த கிணற்றடி பாத்ரூம் போய்ப் பார்ப்பாள் என்று நினைக்கவில்லை. அது எப்போதும் தூசியும் தும்பையுமாக இருக்கும். யாரும் உபயோகப்படுத்த மாட்டார்கள்.

ஆனால் தமா, தனது அவசர கால கழுவல்களுக்காக அதை உபயோகித்துக் கொண்டாள். அப்போது கூட சோப்பை உயரமான இடத்தில் வைத்திருந்தாள். அதுவும் அறையின் ஆஸ்பெஸ்டர் கூரை, சுவர் மீது உட்கார்ந்திருக்கும்; இடத்தில் ஏற்படும் இடுக்கில் தமா சோப்பை வைத்திருந்தாள். யாரும் எளிதில் கண்டுபிடிக்க முடியாது.

ஆனால் சுகுணா எல்லா இடுக்குகளிலும் கையை விட்டுத் தேடி இருக்கிறாள். அதனால் தான் உடம்பில் தூசியும் சிலந்தி நூலும்! அங்கே நிச்சயம் ஒளித்து வைத்திருக்கக் கூடும் என்பதை சுகுணா ஊகித்திருக்கிறாள்.

அடுத்த இரண்டாம் நாள். காலை நாலரை மணி! சுகுணா எழுந்தாள். விஜய்யை எழுப்பினாள்.

உடம்பு என்னவோ பண்ணுது! உடனே டாக்டரை அழைச்சிட்டு வாங்க! என்றாள். அவன் தயங்கினான். தமா வரும் நேரம் அது. அவன் இல்லாத நேரத்தில் அவள் வந்து............

போறீங்களா? இல்லையா? என்று அதட்டினாள்.

அவன் உடனே எழுந்து போனான்.

தமாவுக்கு எச்சரிக்க வேண்டும் என்று நினைத்தான். தமா தினம் வரும் வழியிலேயே நடந்து போனான். ஆனால் அன்றைக்கு தமா பால் வாங்க வேண்டி இருந்தது.

அதை வாங்கிக் கொண்டு வேறு வழியாக தமா அவர்கள் வீட்டுக்குச் சென்றாள். அதனால் தமாவை விஜய் சந்திக்கவில்லை. வழக்கம் போல் நேராகப் போனவள்,

முதல் கதவைத் திறந்து உள்ளே போனதுதான் தாமதம். அவளை யாரோ முரட்டுத்தனமாக கழுத்தைப் பிடிப்பது தெரிந்தது. அந்த அதிர்ச்சி அவளை உள்ளே தாக்கியது.

Next page.....

|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter