|
அத்தியாயம் 13
புஷ்பா தங்கதுரை
எழுதும்
காதல் நெருப்புகள்
தொடர் கதை
இன்னும் சில விநாடிகள் போயிருந்தால் அவர்கள் தங்கள் நிலை இழந்து இருப்பார்கள். அதற்குள் தடாம் என்று ஒரு சத்தம். திடுக்கிட்டு விஜய் எழுந்தான். அவளும் பதறி எழுந்தாள்.
விஜய் உள்ளே ஓடினான். சுகுணாவின் படுக்கை அறைக்குச் சென்றான். அங்கே விஷயம் போட்டோந்தது. மேஜை மீது இருந்த அவனது தட்டு கீழே விழுந்திருந்தது.
சுகுணா! என்றான். அவள் கோபத்தில் முகத்தைத் திருப்பினாள். அவனுக்கு கலக்கம் ஏற்பட்டது.
சுகுணா! என்று அருகில் சென்று அமர்ந்தான். என்ன விஷயம் எனக்கு சொல்லு? கை தட்டி கீழே விழுந்ததா? என்று கேட்டான்.
நான் தான் வேணுமின்னே தட்டினேன்! என்றாள் வெடுக்கென்று.
ஏன் என்ன விஷயம்?
நான் உங்களை அழைச்சிட்டே இருக்கேன். காதுல விழலியா? எப்படி உங்களை கூப்பிடறது.
என் மேலே பூச்சியோ என்னவோ விழுந்தது. அது என்னதுன்னு தெரியாம நான் அலறிட்டுத்தான் உங்களைக் கூப்பிட்டேன். நீங்கள் வரவேயில்லை. அப்புறம் பூச்சி ஓடியாச்சு!
அவன் திகைத்தான். பதில் சொல்ல ஓடவில்லை.
அதென்ன அவ்வளவு நாழி வாசலில் போய் நின்று விட்டீங்க? என்றாள்.
ஒண்ணுமில்லை! போட்டோக்ஷா கிடைக்கணுமில்லே அதுக்காகத்தான்.
இல்லையே, நீங்கள் வாசலை விட்டு உள்ளே திரும்பி வந்த சத்தம் கேட்டாச்சே. வந்துட்டேன்! ஆனா அங்கேதான் நின்னுக்கிட்டு இருந்தேன்! என்றான்.
சிறிது நேரம் அவளை சமாதானம் படுத்தினான். பிறகு வாசல் அருகே சென்றான்.
அங்கே அவன் கண்ட காட்சி இரக்கமாக இருந்தது. தமா ஒரு ஓரத்தில் முட்டுகளை கைகளால் கோர்த்து உட்கார்ந்திருந்தாள். அவள் இன்னும் போகவில்லை.. அவன் அவள் அருகில் சென்றான். சட்டென்று அவன் கையைப் பற்றினாள்.
நோ, நோ, என்றான் விஜய்.
ஏன் இப்படி நடுங்கும் ஜந்துவாக இருக்கிறீங்க? என்று கேட்டாள். அவனுக்கு வெறுமையான புன்னகை வந்தது.
நான் ஜந்து இல்லை. மனிதன். அதனால் தான் நடுங்குகிறேன்! என்றான். யாருக்கு நடுக்கம்? ஏன் நடுக்கம்? ஏதோ ஒரு வாழ்க்கை முறை வைத்திருக்கிறோமே, அந்த நெறியை நினைத்து நடுக்கம். அதன் தர்மத்தை நினைத்து நடுக்கம்! என்றான்.
அவள் அவனை, போதுமே! என்று கேலியாக வாய்க் கோணிக் கூறினாள். ஆத்திரம் அவள் முகத்தில் பளபளத்தது.
இதுதான் உங்கள் முடிவா? என்று கேட்டாள்.
ஆமாம்! என்பது போல் தலை அசைத்தான்.
எனக்கு ஒரு விடிவு கொடுக்க தெரியவில்லை. நீங்கள் மனிதரா? என்று சொல்லி எழுந்தாள்.
வாசல் பக்கம் சென்று கொட்டும் மழையை பார்க்காமல் நடந்து சென்றாள். அதற்குப் பிறகு அவள் ஒவ்வொரு நாளும் வரும்பொழுதும் பேசவில்லை. அவன் முகத்தைப் பார்க்கவும் இல்லை. எட்டமாக விலகிக் கொண்டாள்.
ஒரு வாரம் போய்விட்டது. ஒரு நாள் சமைத்துவிட்டு போகும் போது அவள் அவனை சற்றுத் தள்ளியே நின்று பார்த்தாள். சமையல் அறையில் ஏதோ இருக்கிறது போல் கையை சைகை செய்து விட்டு வெளியே விரைந்து சென்றாள்.
பின்னர் அவன் சென்று பார்த்த பொழுது கரண்டியின் அடியில் அவள் கடிதம் வைத்திருந்தாள். எடுத்து வந்து தனியான இடத்தில் படிக்க ஆரம்பித்தான். வாழ்க்கையில் எதுவுமே தவறு அல்ல. தவறு என்று நாம் கற்பித்தால் தவறு. இல்லாவிட்டால் இல்லை. என்னைப் பொறுத்தவரை தவறு என்பது பிறருக்கு துன்பம் இழைக்காமல் இருப்பது. அவ்வளவுதான்!
தற்போது நீங்கள் நடந்து கொண்டது ஆச்சரியமாக உள்ளது. வாழ்க்கையில் எந்தவித சுகமும் இல்லாமல் இருந்து விட்டேன். நான் நினைத்தால் பிறரிடம் போய் இருக்கலாம். அப்படி ஒரு வாழ்க்கையை நான் விரும்பவில்லை.
சந்தர்ப்பத்தால் உங்கள் முன்னிலையில் தள்ளப்பட்டேன். சந்தர்ப்பங்கள் தொடர்ந்து வந்து உங்களை அணைத்துக் கொள்ளும் அளவுக்கு கொண்டு விட்டது.
நீங்கள் அன்று நிச்சயம் என்னோடு இணைந்து இருப்பீர்கள். ஆனால் விதி வசத்தால் விடுபட்டு ஓடினீர்கள். ஒரு பெண்ணின் விருப்பத்தை நிறைவேற்றுவது தவறு அல்ல. அதுவும் அவள் ஒரு இரக்கப்படத் தகுந்த நிலையில் இருக்கிறாள் என்ற பொழுது நிச்சயம் நீங்கள் அவள் விருப்பத்தை நிறைவேற்றலாம். இதில் தர்மம், அதர்மம் இல்லை. தவிர, தாங்கள் வாழ்க்கையில் ஒரு தனிமையான வாழ்கையில் ஒரு இனிமையான சுகத்தை இழந்து இருக்கிறீர்கள். நானும் இழந்து இருக்கிறேன். இப்பொழுது நமக்கு தகுந்த வயதுகள். இதை விட்டால் இந்தச் சுகத்தை இனி வாழ்வில் பெறவே முடியாது.
இனி இன்னொரு வாழ்விலா சந்திக்கப் போகிறோம்? இப்படி பெறாமலேயே இறப்பது தான் மேலா? நாம் இப்படி வாழ்ந்தோம் என்று நம்மை பின்னால் பாராட்டப் போகிறார்களா? கொண்டாடப் போகிறார்களா?
அவரவர்கள் அவரவர் சொந்த வாழ்க்கையின் சுயநலத்தைத் தான் பார்த்துக் கொண்டே போகிறார்கள். எனவே தான் உங்களது அறிவுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். வாழ்க்கையில் இதெல்லாம் சாதாரணமாக நாம் உண்டாக்கிக் கொள்ளக் கூடிய இன்பங்கள். வாழ்க்கையில் ஆயிரம் துன்பங்கள் இடையே நமக்கு மகிழ்வு கொடுக்கும் சின்னச் சின்ன இன்பங்கள்!
இதில் தர்ம அதர்மம் பேசி தயவு செய்து அந்த சுகத்தை புறக்கணிக்காதீர்கள். நான் நாளை உங்கள் வீட்டுக்கு வரும்பொழுது உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். கையால் எழுதிய பதிலை அல்ல! செய்கையால் செய்யும் பதிலைத்தான் எதிர்பார்க்கிறேன்.
உங்கள் தமா.
பின்குறிப்பு: தொடர்ந்து நீங்கள் உதாசீனம் செய்தால், நான் நின்று கொள்ள வேண்டியதுதான். ஏனெனில் உங்கள் முன்னால் எனது தாபத்தை நான் அடக்கிக் கொள்ள முடியவில்லை.
கடிதம் முடிந்திருந்தது.
அந்தக் கடிதம் விஜய்யின் மனத்தின் பல உணர்ச்சிகளை கொடுத்தது. ஒரு வாரமாக ஒன்றை உணர்ந்தான். அவள் வேண்டுமென்றே எட்டத்தில் போனது, அவனுக்கு ஏதோ போல் இருந்தது. அண்மையில் நின்று சாடை பேசி பழகியதால், அவளுடன் ஒருவித தொடர்பு ஏற்பட்டு இருந்தது.
அதில் அவனை அறியாமல் ஒரு சுகம் தோன்றி இருந்தது. அதை இப்போழுது ஒரு வாரமாக இழந்ததில் மனசு துன்பப்பட்டது. மனத்தில் ஏதோ ஒரு வேதனை இனம் தெரியாமல் இருந்தது. அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. அண்மையில் இருந்து ஜாடை காட்டிய பழகிய அந்த உணர்வு கூட ஒரு விதத்தில் சொந்தமாகி விட்டதே என்று நினைத்தான்.
தவிர அவள் சொன்ன சொற்கள் ஆணித்தரமாக விழுந்தன. நாம் இப்படி வாழ்ந்தோம் என்று யாராவது பாராட்டப் போகிறார்களா? வாழ்க்கைத் தந்த ஒரு இயல்பான சுகத்தை ஏன் இழக்க வேண்டும்?
இரவு முழுதும் அவன் தூங்கவில்லை. ஒரு இயல்பான சுகத்தை ஏன் இழக்க வேண்டும்? இரவு முழுதும் அதே கேள்வி வந்து கொண்டிருந்தது. அவன் தூங்கவில்லை.
இத்தனை நாளும் நினைப்பில் கூட சில தவறுகளை செய்ய மாட்டான். அன்று தமாவின் நினைவு அபரிமதிமாக வந்தது. அவள் தன் அருகே படுத்திருப்பது போலவும், அவளை அணைவது போலவும் அவனது மனம் எண்ண ஆரம்பித்தது. மனம் அப்படி நினைப்பதை அவன் தடுக்கவில்லை. அதை இயற்கையாகவே விட்டுவிட்டான்.
அந்த நினைப்பிலேயே அவனுக்கு பெரிய ஆனந்தம் ஏற்படுவதை உணர்ந்தான். மறுநாள் அவன் எழுந்த போது வாசல் கதவை திறந்து வைத்தான். வழக்கம் போல் ஐந்து மணிக்கு அவள் உள்ளே நுழைந்திருந்தாள். இன்னும் முழு இருட்டும் விலகவில்லை. அவன் சிறிது நேரம் பொறுத்து சமையல் அறை சென்றான்.
அங்கே அவள் அடுப்பு முன்னால் நின்றிருந்தாள். காலடி கேட்டு சற்றே திரும்பிப் பார்த்தாள். கண் அப்படியே அவனையே பார்த்திருக்க, அவன் மெல்ல மெல்ல அவளை நோக்கி நடந்தான்.
Next
page..... |