First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு கைது: ராமதாஸ் கண்டனம் - மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: இடதுசாரிகள் முடிவு - தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் - மத்திய அரசுக்கு சமாஜ்வாடி ஆதரவு உறுதி: காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆபத்து நீங்கியது
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15

அத்தியாயம் 11

புஷ்பா தங்கதுரை
எழுதும்
காதல் நெருப்புகள்
தொடர் கதை

ஒரு நாள் சமையல் மாமி வரத் தாமதம் ஆகியது. அவனே சமையல் அறையில் புகுந்தான். சுகுணா தட்டுத் தடுமாறி ஹால் பக்கம் வந்தாள். உள்ளே பாத்திரங்களின் வித்தியாசமான சத்தங்களைக் கேட்டதும், அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

உள்ளே யாரு? என்று கேட்டாள். முதலில் அது அவன் காதில் விழவில்லை. இரண்டாம் முறை அவள் கேட்டதும்,

நான்தான்! என்றான்.

இரு சுகுணா! இதோ காப்பி கொண்டு வரேன்! என்றான். திரும்பவும் பாத்திரங்கள் கலகலத்த பிறகு, அவள் முன்னால் காப்பியைக் கொணர்ந்து வைத்தான்.

நீங்களா போட்டீங்க? என்றாள்.

ஆமாம். சாப்பிடு சூடு ஆறிடும்! அவன் தடதட என்று சமையலறை போய், பொங்கும் பாலை இறக்கி, மூடி வைத்து வந்தான். ஹாலில் வந்து உட்கார்ந்ததும்,

சமையல் மாமி வரல்லையா? என்று சுகுணா கேட்டாள்.

வரல்லை. லேட்டா வருவாளோ என்னவோ?

வரவர மோசமா ஆயிட்டா! நிறுத்திடலாம்.

நிறுத்தி................

வேறு ஆள் வச்சுக்கலாம்.

நானும் பார்த்தாச்சு! ஒரு ஆள் கிடையாது!

அப்படியா?

ஆமாம்.............. இப்போ அவங்களுக்கும் பெரிய கிராக்கி...................... எட்டு மணிக்கு மேல் அவனுக்கு யோசனை. என்ன செய்யலாம்? என்று யோசித்த போது, வாசலில் நடமாட்டம் தெரிந்தது. எழுந்து போனான். சமையல்காரி ஒரு ஆட்டோவில் வந்து இறங்கி இருந்தாள். அவனைப் பார்த்ததும்,

இப்படி வாங்க! என்று சத்தம் போடாமல் கூறி அழைத்தாள். மெல்ல நடந்து அவள் தோட்டப்புறமாக அவனை அழைத்துப் போனாள்.

தயவு செய்து ஒன்று சொல்றேன் கேளுங்க!

என்ன?

இன்னிக்கு வந்ததற்கு வேலை செஞ்சுட்டுப் போயிடறேன். இதுக்கு மேலே என்னாலே முடியலை!

நிக்கவே முடியலை................

அட பாவமே!
தயவு செய்து கேளுங்க! நான் தமாவை அனுப்பறேன். நானும் அவளோட வரேன். நான் உட்கார்ந்துக்கறேன்! அவள் போட்டோயம் மளமளன்னு செய்துடுவா! உங்க வீட்டுக்காரிக்கு தமா வந்தது தெரிய வேண்டாம்.......................

அப்போ தமா இங்கே மௌனமா இருப்பாளா?

ஆமாம். பேசவே மாட்டா! நீங்க பேசினா நான் தான் பதில் சொல்லுவேன்! அவள் சொல்ல மாட்டாள்! உங்க வீட்டுக்காரி இதனாலே தவறா எடுத்துக்க மாட்டா! தமாதானே அவளுக்குப் பிடிக்காது..............

அவன் பிரமித்துப் போய் நின்றான்.

எனக்கு இந்த ஒத்தாசை பண்ணுங்க! தமாவும் கஷ்டப்படறா. நானும் கஷ்டப்படறேன்! நீங்க எங்களுக்குக் கஞ்சி வார்த்தீங்கன்னாதான் ஏதோ மானமா வாழலாம். சிறிது யோசித்தான்.

இது நடக்கக் கூடிய போட்டோயமா?

நடக்கும் நடக்கணும்! நீங்க தமாவை மனைவி மாதிரி அழைச்சிட்டுப் போனீங்களே? சுருக்கென்று தைத்தது.

என்ன நீங்க பேசலையே? என்றாள்.

பேசறேன்! அப்போ தப்பு பண்ணியாச்சு! ஒவ்வொரு தப்புக்கு ஒவ்வொரு கோளாறு வருது!

எல்லாத்தையும் சமாளிக்கத்தான் வேணும். நீங்க படிச்சவா! நான் எதுவும் சொல்றதுக்கு இல்லை! சொல்றேன். வாழ்க்கையிலே வாழணும். அவ்வளவுதான்! எப்படி வாழறோம் என்கிறது அவங்க அவங்க சாமர்த்தியத்தைப் பொறுத்திருக்கு!

ம்!

நீங்க சொன்னா எனக்கு சந்தோஷம்.! இல்லாட்டி, பாவம் தமாவை ஓட்டல்லே விடப் போறேன் சமையலுக்கு! நல்ல பணம் தரேன்கறான்! இவ சின்னவளாச்சே! அனாதை ஆச்சே! ஓட்டல்லே இவளைத் தன்னந்தனியா விட முடியுமா?...................

சரி மாமி ! தமாவை வரச் சொல்லுங்க!

உண்மையில் தமாவும் வந்திருந்தாள். ஆட்டோவின் அருகில் நின்றிருந்தாள். சம்மதம் கிடைத்ததும் வந்தாள். நளினமான முகம்! கொஞ்சம் சோகம் பூத்திருந்தது. உடம்பில் மிருதுவான ஒரு மெருகு! வயசு கூடியதால் ஏற்பட்டது. மெருகினால் அவளது யௌவன வனப்பு மேலும் அதிகரித்திருந்தது. விஜயை அவள் ஏறிட்டுக் கூடப் பார்க்கவில்லை.

சமையலில் புகுந்து வேலை செய்ய ஆரம்பித்தாள். தினம் இந்த நாடகம் நடக்க, எந்தவித சிக்கலும் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தது. சமையல் மாமி காலையில் வந்ததும் சமையல் கட்டு ஓரம் படுத்து விடுவாள்! அவனோ, சுகுணாவோ ஏதாவது கேட்டால்தான் அவள் பதில் சொல்வாள். சுகுணா காதில் மாமியின் குரல் தினம் விழ வேண்டும் என்று விஜய் தினமும் ஏதாவது கேட்டான். சீக்கிரமே எல்லாம் பழகிவிட்டது. தமாவின் கண்கள் மெள்ள மெள்ள நிமிர ஆரம்பித்திருந்தன. சிறிது சிறிதாக ஏறிட்டு அவனைப் பார்க்க ஆரம்பித்தாள்.

எப்போதாவது கண்கள் சந்தித்த போது அவன் மனம் தத்தளித்து உருண்டது. ஆ! என்ன காந்தமான கண்! சமயங்களில் அவள் சமையல் மேடையில் துண்டுக் குறிப்புகள் எழுதி வைத்துவிட்டு போவாள். பாலை உரை குத்திக் கொள்ளவும். மத்தியான டிபன் அலமாரியில் மூடப்பட்டு வைத்திருக்கிறது.

காப்பிப் பொடி தீர்ந்து விட்டது வாங்கி வைக்கவும். அவளும் தாயாரும் போன பிறகு அவன் அந்தக் குறிப்புகளை வாசித்துக் கொள்வான். ஒரு நாள் படுத்த சமையல் மாமியால் எழுந்திருக்க முடியவில்லை.

தமா அவளை எழுப்பி உட்கார்த்த முயற்சி செய்தாள்! அதைப் பார்த்துக் கொண்டிருந்த விஜய் உள்ளே வந்தான். அவளுடன் சேர்ந்து மாமியை நிமிர்த்தி உட்கார்த்தினான். அப்போது ஏற்பட்ட தடுமாற்றத்தில் தமா நிலை மாறி சுவரை பிடிக்கப் போனவள் தவறாக அவன் மீது விழுந்து விட்டாள். சமாளிப்பதற்கு சில கணங்கள் எடுத்தன. பெரிய மூச்சு விட்டு அவள் இழைந்து நிற்க, அவனுக்குள் தோன்றிய அந்த இன்ப அதிர்ச்சி, திடு திடு என்று அவனை நடுங்கிக் கொண்டிருந்தது.

ஸாரி! என்று சத்தம் போடாமல் வாய் அசைத்தாள்.

பரவாயில்லை! அவனும் அப்படியே செய்தான்.

அம்மாவை டாக்டர்கிட்டே அழைச்சிட்டுப் போறேன்.

போங்க! மீதி வேலையை நானே பார்த்துக்கறேன்!

எல்லாம் முடிச்சாச்சு! அந்தப் பேச்சுகள் அவர்களுக்கே புதுமையாகவும், மென்மையான புன்னகைகளையும் வரவழைத்தன. அதில் ஏதோ ஒரு அன்னியோன்யம், சிநேகம், பிணைவு மிருதுவாக ஏற்படுவது போலிருந்தது. அவள் போன பிறகு அவன் சமையல் கட்டு வந்தான்.

பேச ஆரம்பித்துவிட்டோம்! ஆனால் அதிலும் ஊனமாகத்தான் பேசுகிறோம். எனவே குறிப்பு தேவையில்லை ! எனினும் பழக்க தோஷத்தால் குறிப்பு எழுதி வைக்க மனம் நச்சரிக்கிறது. இதோ எழுதி வைக்கிறேன். என் இதயத்தை இங்கே வைத்து விட்டுப் போகிறேன். பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

புது உதயம் இன்று கண்டதமா.

படித்து விட்டு பிரமை அடித்த கண்களுடன் அப்படியே நின்றான்.

Next page.....

|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter