First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து தமிழ் திரையுலகம் பேரணி: 19 ந் தேதி ராமேஸ்வரத்தில் நடக்கிறது - பிரதமர் தலைமையில் முதல்வர்கள் மாநாடு - புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த கருணாவுக்கு அமைச்சர் பதவி? இலங்கை அதிபர் பரிசீலனை - ஆந்திராவில் கலவரம்: ஆறு பேர் உயிருடன் எரிப்பு - இலங்கை தமிழருக்காக நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டம்: தேமுதிக புறக்கணிப்பு
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15

அத்தியாயம் 9

புஷ்பா தங்கதுரை
எழுதும்
காதல் நெருப்புகள்
தொடர் கதை

அவர்கள் புறப்பட்டுப் போன பிறகு ரவீந்தருக்கு முதல் வலி வந்திருந்தது. தோள் பக்கம் தொடங்கியது. சீக்கிரம் உடம்பு பூராவும் பரவியது. நெஞ்சில் கையை அழுத்தி ஒரு புறமாக சுருண்டு கொண்டிருந்தார். மனைவி தவித்தாள்.

சுதா இங்கும் அங்கும் ஓடினாள். எங்கே போய் யாரைத் தேடுவது? இரண்டு மைல் போனால் குட்டி போட்டோல் மருத்துவ உதவி கிடைக்கும். அதற்கு வழி? மழை வேறு நெருக்கி அடித்தது.

தூறல் சீக்கிரம் மழைக் கம்பிகளாக மாறியது. கொட்டி நொறுக்கியது. ஊரே ஸ்தம்பித்து விட்டது. இயக்கம் எதுவுமில்லை. ராமா...... ராமா......... என்று சுதாவும் அம்மாவும் ஜபித்தார்கள். மழை பீறி அடித்து கூரைகளைத் தாளம் போட வைத்தது. ஒரு மணி ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு,

சீற்றம் சிறிது சிறிதாகத் தணிந்தது. அம்மா குடை எடுத்து வெளியே போனாள்.

அடுத்த நாலு வீடு தாண்டிப் போய் --- நாராயணா! நாரயணா! என்றாள். ஒரு இள வயது ஆசாமி ஓடி வந்தான்.

அவருக்கு நெஞ்சுவலி. விஜய் இப்போதான் புறப்பட்டுப் போனான். பஸ் கிடைக்காமல் ஸ்டாண்டிலே நின்னாலும் நிப்பான். பார்க்கிறியா? ஓடிப் போ.............

விஜய் வீட்டுக்கு வந்தான். அப்பாவைப் பார்க்கும் போது பார்வை தத்தளித்தது. பக்கத்து டவுனுக்குப் போய் டாக்டரை அழைக்கலாமா? அல்லது பி.சி.ஓ.வில் கால் புக் செய்யலாமா? போய் பேசினான். டாக்டர் ஊரில் இல்லை. அடுத்த நாள் மாலைதான் ஊருக்கு வருகிறார். அரைமணி இதற்குள் ஓடிவிட்டது. என்ன நடந்திருக்குமோ, ஏது நடந்திருக்குமோ என்ற தத்தளிப்பில் வீட்டுக்கு வந்த போது....

அப்பா கண்ணை விழித்திருந்தார். அவனைத் தெம்போடு பார்த்தார். அவர் முகம் ஒரு கிராமத்துக் குளம் போல நிர்மலமாக இருந்தது. பேசவும் செய்தார்.

அப்புறம் டாக்டரைப் பார்த்துக்கலாம், போ! என்றார் அவர். விஜய் முகத்தில் மெல்லிதாக குறுநகை ஓடியது.

அப்பாவுக்கு எத்தனை கண்டங்கள்?

ஒவ்வொன்றிலும் தப்பித்து, பழைய சொரூபமாக எழுந்து உட்காருகிறார். யார் செய்த புண்ணியம்? அல்லது தவம்? அம்மாவதாக இருக்கும்! வெறும் பிரார்த்தனையிலேயே எல்லாவற்றையும் நடத்துகிறாள். ஆகா! போன தலைமுறை தாம்பத்திய அழகு எவ்வளவு? பந்தம் எவ்வளவு? ஒருவர்க்கொருவர் தியாகம் செய்து, தவம் செய்து..................

மணி ஒன்பதாகியது. மழை நேர இருள் கனத்து விழுந்தது. வெளியே பார்த்தால் உலகமே தெரியவில்லை. இனிமேல் ஊர் எப்படிப் போவது? தன் இருப்பிடத்திலேயே தங்க வேண்டிய நிர்ப்பந்தம்! அவன் பெட்டியை வைத்து கீழே உட்கார்ந்ததைப் பார்த்ததுமே, அம்மா முகத்தில் கொள்ளை மகிழ்ச்சி பூத்தது..

அடுத்த நிமிடங்களில் வீட்டில் விளக்குகள் எல்லாம் ஜொலித்து எழுந்தன. உள்ளே சுவாமி சன்னதி முன் அம்மா ஜோதி கொளுத்துவது தெரிந்தது. அவள் வாய் தோத்திரம் முணுமுணுத்தது. பிறகு அவள் வந்தாள். அவன் முன்னால் நின்றாள். முகத்தில் அமைதி! எனினும் சஞ்சலம். வீட்டில் எத்தனை துயர்களை தாங்கியோ, தாண்டியோ வந்திருக்கிறாள்?

அம்மா! என்றான்.

வீட்டின் மாடியில் சுதா ஏதோ செய்யும் சத்தம் கீழே கேட்டது.

என்னம்மா மாடியிலே சத்தம்? என்றான்.

ஒண்ணுமில்லைடா! நீ ராத்திரி தங்க வேண்டாமா? அதுக்கு...................

அம்மா தனி அறை வேண்டாம்மா. இன்னும் எங்களுக்கு சாந்தி ஆகலை! உங்க சம்மதம் எல்லாம் வாங்கிட்டுத்தான் செய்யணும்னு சொல்லிட்டேன். இதை உங்ககிட்டே சொல்லியிருக்கேனே?

சொன்னேயப்பா! ஆனா....... இன்னிக்கே அது நடந்தாப் போச்சுன்னு இப்போ அப்பா சொல்றார். திடுக்கிட்டான்.

அது அவங்க வீட்டிலேதானே அம்மா நடக்கணும்? என்றான் மனத்தாங்கலாக.

அதனாலே என்ன? கல்யாணத்தைத் தான் பார்க்கலை! இதையாவது இங்கே நடத்திடலாமா? திரட்டுப் பால் இதோ செய்திடறேன். சுவாமியைக் கும்பிட்டுட்டு......... அவன் பதிலுக்கு இல்லாமல் மறைந்து போனாள்.

அவனும் ஒரு பதிலையும் உண்டாக்க முடியவில்லை. எங்கிருந்து எல்லாம் கொண்டு வந்தாளோ! மாடியில் முதல் இரவு அறை தயார். எல்லாம் அவன் மறைவில் எவ்வளவு விரைவாக நடந்தது? சாப்பிட்ட பிறகு அவனையும் அவளையும் கொண்டு விட்டார்கள்.

சுதா வாசல் கதவில் நின்று கொண்டே மர்மச் சிரிப்போடு பார்த்தாள். கன்னம் நன்றாகக் குழி விழுந்தது. உள்ளே தாளிட்டபிறகு பக்கத்து வீட்டுப் பெண்மணி ஒரு பாடலை கர்ண கொடூரமாகப் பாடினாள். கேட்டவருக்குச் சாந்தி ஆசையே போய்விடும். உள்ளே ஊதுபத்தி மணத்தது. தட்டுகளில் மூவகை பழங்கள் மின்னின. சந்தனக் கும்பாவில் சந்தனம் ஜொலித்தது. கற்கண்டுக் குவியல் வெள்ளித் தகட்டில். கிண்ணத்தில் தேன்! அவசரமாக சூட்டோடு வந்திருந்த முந்திரிப்பருப்புக் கேசரி! கட்டிலில் மீது பூக்கள் நட்சத்திரம் கிடந்தாற்போல.

தமா குனிந்திருந்தாள். அவன் சரிகைக் கரை வேஷ்டியுடன் வந்த போது நிமிர்ந்து பார்த்தாள். கிளுக் என்று சிரிப்பு உடைந்தது.

அவன் நாற்காலியில் உட்கார்ந்தான். அவளும் புன்னகையாக வழிந்தாள்.
இருவரும் எவ்வளவு நேரம் மௌனமாக இருப்பார்கள்? நிசி மெள்ள மெள்ள நகர்ந்து கொண்டிருந்தது. அவன் தான் மௌனத்தைக் கலைத்தான்.

தமா! என்றான். நீ என்னையும் மன்னிக்கணும்! சுகுணாவையும் மன்னிக்கணும்! பார்வையைத் திருப்பிய போது கட்டில் ஓரம் வெட்கம் பூசிய வதனத்துடன் அவள் உட்கார்ந்திருந்தாள். சுண்டு விரல் நுனிகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

அவனை நிமிர்ந்து பாராமல் மெள்ள மெள்ள முகத்தை உயர்த்தினாள். கடைசியில் கண்கள் சந்தித்தன. பொறிகள் தெளித்தன.

மன்னிப்பா? எதற்கு? என்றாள் தவழும் குரலில்.

உன்னை இங்கே கொண்டு வந்து இந்த மாதிரி துன்பத்துக்கு ஆளாக்கி!......... சில கணங்கள் அவளிடம் நிசப்தம்.

பிறகு தாழ்ந்த குரலில், நானே இதையெல்லாம் எதிர்பார்த்திருந்தால்.......? என்று வார்த்தைகளை அந்தரத்தில் நிறுத்தினாள். கேள்வியா அது?

எதிர்பார்த்தியா? அவன் குரலில் அதிர்ச்சி இருந்தது.

ஏன், கூடாதா? மென்மையாக குழைந்து அவனை ஒரு நேர் பார்வை பார்த்தாள்.

கண்களை வீசி மீண்டும் அவளைப் பார்த்தான்.

இதென்ன தமா! இதையெல்லாம் நிஜமின்னே எடுத்துக்கிறியா?

நிஜமின்னு எடுத்துக்கலை! ஆனா நிஜமா ஆக்கினா என்ன? சட்டென்று திரும்பினான். முகத்தில் கலவரம் ஓடியது.

நீ என்ன சொல்றே? எழுந்தான்.

நான் சுகுணாவுக்கு கடமைப்பட்டவன். அவளுக்குத் தப்பிதம் எதுவும் செய்ய மாட்டேன். என்றான். அவன் வாசல் கதவைத் திறக்கப் போவதைப் பார்த்து,

நில்லுங்க! நில்லுங்க! என்று ஓடினாள்.

நில்லுங்க! நில்லுங்க! சும்மா வார்த்தையிலே சொன்னாலே எல்லாம் ஆயிடுச்சா?

நீங்கதானே ஆண்! நீங்க நிறைவேத்தினாத்தானே உண்டு. சத்தியமாச் சொல்றேன். ஏதோ ஒருத்தருக்கு உதவி செஞ்சோம், அந்தக் காரணத்திலே ஒருத்தருக்கு மனைவி மாதிரி நாடகமா நடிச்சோமே, அந்த நடிப்பிலே இவ்வளவு தூரம் வைராக்கியமா பேசாமே இருந்துட்டோம், இப்போ ஒரு வார்த்தையாவது நாமே பேசுவோம்னு பேசினா........................ தொடர்ந்தாள்.

ஒரு வியாபாரி எதையோ காட்டி வாங்கிக்கச் சொல்றான்னு வச்சுக்குங்க. இஷ்டம் இருந்தா வாங்கிக்கிடணும்! இல்லாட்டி வேண்டாம்னு சொல்லிடணும்! இதை விட்டுட்டு வியாபாரி இருக்கும் இடத்தையே விட்டுட்டு இப்படி ஓடலாமா? குரலில் தாபமாகக் கேட்டாள்.

இன்னொன்றும் சொல்கிறேன்! பஸ் ஸ்டாண்டில் நின்றோமே மழை அடித்ததே! அருகில் வரும்படி எத்தனை முறை கூப்பிட்டீர்கள்! வந்தேனா? கடும் மழையில் நனைந்து கொண்டு வைராக்கியத்தில் தானே இருந்தேன்! உங்கள் அருகில் வரவே இல்லையே?

விஜய் தலை அசைத்தான்.

இங்கேயும் என்னால் வைராக்கியம் கடைப்பிடிக்க முடியும். ஆனால் என் மனத்தின் நெகிழ்ச்சி கொஞ்சம் வந்துட்டுது! உலகில் எந்த நீதியும் நியதியும் காலக்கணக்கிலே நிக்காது என்பாங்க! தெரியுமா? பரவாயில்லை. நீங்க அதுக்காக..........

வெளியே.............. போக வேண்டாம். அவள் கிராமீய வார்த்தைகளில் பேசினாள்.

அதன் தூய எளிமை, தூய வெளுமை அவன் மனத்தைத் தொட்டுவிட்டன. நிச்சயம் இவள் சாதாரணமானவள் அல்ல என்று நினைத்தான். உள்ளே திரும்பி வந்தான். நாற்காலியில் மீண்டும் அமர்ந்தான். வெளியே மழை மீண்டும் பற்றியது. காற்றும் கலந்து முரண்டியது. சன்னல்கள் படபடக்க, உள்ளே நீர்த் தூவானம் வாரி இறைக்க, அவன் எழுந்தான்.

அவளும் எழுந்து கதவுகளை அடைத்தாள்.

வெளியே கூரைகள் சத்தம் போட்டன. ஓடைகள் வழிந்த வண்ணம் ஓடின. ஒரு சத்தம் கேட்டுத் திரும்பினான். விம்மலா?

தெரியுமா, விஜய்! ஒரு கன்னிப் பெண்ணை ஒருத்தர் மனைவியாக நடிக்கச் சொல்றது எவ்வளவு தப்பிதமான போட்டோயம்?

அவள் கண்கள் அவன் முகத்தில் லயித்தன.

Next page.....

|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter