First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு கைது: ராமதாஸ் கண்டனம் - மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: இடதுசாரிகள் முடிவு - தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் - மத்திய அரசுக்கு சமாஜ்வாடி ஆதரவு உறுதி: காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆபத்து நீங்கியது
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15

அத்தியாயம் 8

புஷ்பா தங்கதுரை
எழுதும்
காதல் நெருப்புகள்

தொடர்கதை

ஊரில் ஆட்டோ லொடலொடத்து வந்து நின்றது.

ஒன்பது மணி வேளை.

மூட்டமான மேகத்தில் பூமி நிழலாக இருந்தது.

தென்னைகள் சிறிது சிறிதாய் ஓலைகளைச் சிலிர்த்தவண்ணம் இருந்தன. தெருப்புழுதி லேசாகக் கிளம்பியது. கிராமத்துத் தேர் கல்படிகள் இடிந்து கீழே சிதிளமாக உட்கார்ந்திருந்தது. கூரை தாழ்ந்த அந்த இரண்டு அடுக்கு வீட்டு முன் ஆட்டோ நின்றது. ஆவலுள்ள முகங்கள் எட்டிப் பார்த்தன.

அவன் அம்மா முற்றத்திலிருந்து தாவல் தாவலாக ஓடி வந்தாள். தங்கை சுதா வாசல் அடைசலாய் நின்று கண்ணை ஆகாயமாக்கினாள். முதலில் அவன் இறங்கினான்.

அடுத்து அவள் இறங்கினாள்.

தமா...............

அம்மா திண்ணை ஓரம் வந்து நின்றாள். கண்ணில் அதிசயம் தாளவில்லை.

வலது காலை வையம்மா! என்றாள். மருட்சியோடு ஒரு பதினெட்டு வயது அழகி அங்குமிங்கும் மான் பார்வையிட்டு இறங்கினாள். மனங்கள் பவுர்ணமிக் கடலாகப் பொங்கின. அவனும் அவளும் நின்றார்கள். சுதா உள்ளே போய் சோற்றுப்பட்டு கொண்டு வந்தாள்.

எவர்சில்வர் வட்டத்தில் மங்களநீர் சுழலும் அலையாக மூன்றுமுறை சுற்றியது. உள்ளே நுழைய, அந்த வீடே வெளிச்சமாகியது. தமா ஒரு யட்சிணி போல இருந்தாள். கண் குறுகுறு என்று துள்ளல் இட்டது. தெரியாத இடத்திற்கு வந்ததால் அவளிடம் ஒரு பிரமிப்பு! மருட்சி !

வா! உட்காரு மணையிலே! என்றாள் அம்மா.

உட்காருடா நீ!
பிரயாணம் பூராவும் அவளை ஒரு முறை பார்த்ததில்லை. பேசியதுமில்லை.
வழியில் காப்பியோ டிபனோ வாங்கி நீட்டியதோடு சரி. இருவரும் இரு மௌன உலகங்கள்.

ம், வாடா! என்றாள் அம்மா.

இந்தச் சம்பிரதாயம் எல்லாம் எதுக்கு அம்மா? என்றான் அவன் வெறுப்புடன்!

வீட்டுக்கு ஒரு மருமகடா! மணை சின்னது. உட்கார்ந்தான். சப்பளமிட்ட அவனது மருங்கு அவள் மருங்கில் ஸ்பரிசித்தது. சட்டென்று விலகினான் அவன்.

அம்மா விளக்கேற்றி என்னமோ சடங்கு செய்தாள். திருஷ்டி சுழித்தாள்.

இருவரும் எழுந்தார்கள். தமாவை அழைத்துக் கொண்டு சுதா உள்ளே அறைக்குச் சென்றாள். மாலை நான்கு மணிக்குத்தான் அப்பா தூக்கத்திலிருந்து எழுந்தார்.

விஜய் வந்திருக்கான்! என்றாள் அம்மா. தட்டிலேயே முகம் கழுவினார் அவர்.

அரை டம்ளர் காப்பியை ஆறுவதற்காகக் கீழே வைத்தார். பிறகு சிறிதாக வட்டையில் ஊற்றி மேலே தூக்கிய போது கை அப்படியே நின்றது. கண்கள் வெறித்து நின்றன. அறை வாயிலில் விஜய் நின்றான். அந்தப் பெண்ணும் நின்றாள். பெண்ணா அவள்? பாலில் செய்த பாற்கடல் பொம்மை! காந்தத் துண்டு கண்களுடன், முகமெல்லாம் மருளலோடு நின்றாள்.

வா என்றான் அவன். காலை வைத்து, விழி மாறா வண்ணம் நடந்து வந்தாள். நமஸ்கரிக்கும்படி ஜாடை செய்தான். இருவரும் நமஸ்கரித்தார்கள்.

உட்காரம்மா! என்றார் அப்பா.

உட்கார்ந்தார்கள்.

அவர் டம்ளர் கீழே அமர்ந்தது. காப்பியை அவர் அருந்தவில்லை.

அதிசயித்த கண்கள் அதிசயித்தே கிடந்தன. மெல்லிசாகக் குரலை எழுப்ப முனைந்தார்.

உம் பேர் என்னம்மா? என்றார். குரல் இரண்டு அடிக்குள் நின்றது.

சு....... சுகுணா!

«க்ஷமமா இரு! பையன் தங்கம் என்றால் தங்கம். சொன்ன சொல் தாண்ட மாட்டான். ஒரு தப்பு தண்டா போக மாட்டான். ஒரு பெண்ணைப் பார்க்க மாட்டான். பேச மாட்டான். நான் செய்த புண்ணியத்திலே அவன் பிறக்கலை! மூதாதையர் செஞ்ச புண்ணியத்திலே பிறந்திருக்கான். உன்னை கல்யாணம் செஞ்சதிலே அவன் அதிர்ஷ்டம் செஞ்சவன். சந்தர்ப்பவசத்திலே
செஞ்சிட்டா£னே தவிர சொல்லாம இருக்கணும்னு புத்தி கொஞ்சம் கூடக் கிடையாது. அதுகூட சொல்லியிருப்பான். சொல்றதுக்கு நேரமில்லை. இருந்தாலும் அவனுக்குத் தெரியும். இப்படி இப்படி சந்தர்ப்பத்திலே நடந்ததுன்னு சொன்னா அப்பா ஏதாவது சொல்ல மாட்டார்னு.

அப்படிச் சொன்னால் நான் மனுஷன்லே சேர்த்தி ஆவேனா?
மாட்டவே மாட்டேன். சௌபாக்கியத்தோடு கீர்த்தியோடு வாழுவாயம்மா! அவர் சொல்லச் சொல்ல அவன் மனம் தான் நெகிழ்ந்தது. கண்களில் சின்னச் சின்ன அரும்புகள் துளும்பின.
அறைக்கு விஜய் வந்தபிறகு அம்மா தமாவை அழைத்து வந்து அங்கு விட்டுச் சென்றாள்.

சுவர் ஓரம் ஒரு நாற்காலி. அதில் உட்கார்த்தி வைத்துப் போய்விட்டாள். அவன் தத்தளித்தான். எதிரே பிரித்த புத்தகம் அப்படியே கிடந்தது. கண்கள் மேலே சென்றன. அவளை ஒரு முறை பார்த்தான். இதுதான் முதல் தடவை!

மன்னிக்கணும்! என்றான். --- உங்களுக்கு நிறைய தொந்தரவு கொடுத்திட்டேன்!

அவள் நிமிரவில்லை.
அவள் பேச நினைப்பது தெரிந்தது. என்ன பேசுவாள்? என்ன பேச முடியும்? முயன்று கொண்டிருந்தாள். கடைசியில் மிக மெல்லிதான குரலில்,

பரவாயில்லை! இது ஒண்ணும் பெரிசில்லை. சுகுணாவுக்கு என்ன வேணாலும் நான் செய்வேன். அவள் நன்றாக இருந்தா போதும்! என்றாள். கண்கள் மெள்ளமாக மேலே நிமிர்ந்தன. அவனைப் பாராமலேயே நின்றன.

உங்களுக்கு ஒண்ணும் கஷ்டமில்லையே? அவன் கேட்டான்.

எதுவும் இல்லை! என்றாள். இன்னும் அவள் விரல்கள் திருகிக் கொண்டிருந்தன. பாவம் என்று அவன் மனம் நினைத்தது. சமையல் செய்பவளின் மகள்! கிராமச் சூழ்நிலையில் வாழ்ந்தவள்.
இயற்கையோடு வாழ்ந்து இயல்பான வாழ்வு முறைகளைத்தான் தெரிந்தவள்.

அவளை அவளது கூட்டிலிருந்து இழுத்து வந்து, இங்கே விநோதனமான மட்டும் அல்ல, தர்மமில்லாத ஒரு நடிப்புக்கு ஆளாக்கினால் என்ன செய்வாள்? சுகுணாவுக்காக இசைந்து வந்து விட்டாள்.

ஒருவேளை, பார்த்தாயா! சமையல்காரியின் மகள் என்பதால்தானே என்னை இந்தச் சோதனைக்கு ஆளாக்குகிறார்கள்? என்று நினைப்பாளோ? அல்லது, கணவனோடு முதல் முறை வெளியே செல்லும் போது எனக்கு ஏற்படக் கூடிய புத்தம் புதிய இன்ப அனுபவத்தை இதன் மூலம் நான் பெற விடாமல் செய்கிறார்களே என்று நினைப்பாளோ?

அவன் மனம் இரக்கத்தில் கசிந்தது.
அவளுக்கு மேலும் அவன் சோதனை ஏற்படுத்த விரும்பவில்லை.
மௌனமாக நீள நேரத்தை ஓட்டுவது கூட அவளுக்கு கடினமாக இருக்கும்.

உடனே எழுந்தான்.

நீங்க சௌகரியமா இருந்துக்குங்க! நான் வெளியிலே போய்ட்டு வரேன்! என்றான் அவன்.

அடுத்த ஒரு மணியில் அவன் வெளியிலிருந்து திரும்பினான். அவர்கள் ஊருக்குப் புறப்படத் தொடங்கினார்கள், அம்மாவுக்கு அழுகையாக வந்தது.

ஒரு நாள் முழுதும் இருந்திட்டுப் போகக் கூடாதா? என்றாள் அவள்.

இல்லைம்மா! இன்னிக்கே நிச்சயம் திருப்பிக் கொண்டு விடறதாச் சொல்லியிருக்கேன்! என்றான்.

அப்படி யாராவது சொல்வாங்களா? என்று அவள் கேட்க அவன் பதில் சொல்லவில்லை. அப்பாவும் அதையே கேட்டார்.

அம்மாவிடம் சொன்ன அதே மாதிரி பதில். அவன் மனசே அதை ஒப்பவில்லை.

இருந்தாலும் சொல்லித்தானே ஆக வேண்டும்? சொன்னான்.

விடைபெறல் என்பதே எவ்வளவு கஷ்டமாக இருந்தது?

குறிப்பாக அப்பாவின் முகத்திலிருந்து கண்ணை எடுப்பதே கஷ்டமாக இருந்தது. அப்பா ஒரு புதிர். அவர் முகம் உணர்வுகளின் மறைவிடம். வெளியே வந்த போது காற்று சிலுசிலுத்திருந்தது. மழை எங்கேயோ பெய்தது. பூதாகார மேகங்கள் இரண்டு வான் உச்சிக்கு ஏறிக் கொண்டிருந்தன. பஸ் ஸ்டாண்ட் முக்கால் மைல் தூரம். ஆட்டோவைத் தேட வேண்டும்.
காத்திருக்கவில்லை. புறப்பட்டார்கள். ஊரின் எல்லை தாண்டியதும் இரண்டு முறை புழுதிச் சுழல் வீசியது. அவர்கள் கண், முகம், தலை எல்லாம் மண் மயமாகின. இருமருங்கும் புன்னை மரங்கள் நெடிதாக நிற்க, மாலையில் வெளிச்சம் மாயமாக மாறிக் கொண்டிருந்தது. சாலை சூன்யம்! இருவரும் மௌனம்! பதினைந்து நிமிடம் நடந்ததில் கிராமம் தொலை தூரம் பின்வாங்கியது.

அதோ! என்றான்.

மேலே ஆகாயத்தில் கடல் ஏறினாற்போல பெரிய மேகத் திரை!
அத்தனையும் பச்சை மேகங்ககள். அங்கங்கே கலவையில் ஊதா, கருநீலம், சுத்தமான கருமை.......... சில் என்ற காற்று பூமியைக் குளிர வைத்தது. சீக்கிரமாக எங்கும் குளிரின் தண்மை பரவியது.

மழை வருமோ? என்றான் அவன்.

தெரியலை! என்றாள் அவள்.

அவசரமாக நடந்தார்கள். கடைசியில் நெடுஞ்சாலையின் விளிம்பைப் பிடித்து விட்டார்கள்.

அங்கே பஸ் ஸ்டாண்ட் போல ஒரு தங்கும் கட்டிடம். ஒரு கூரையும் நாலு சுவரும்................. அதில் ஏறுவதற்கும், மழை சட சட என்று சண்டை பிடித்தாற்போல் வரவும் சரியாக இருந்தது. ஏறி அமர்ந்தார்கள். மழை ஆர்த்துக் கொண்டு வந்தது. அடிவானம் சுற்றி திரை கட்டியது போல மழை பொழிவு! சீக்கிரம் வானம் எது பூமி எது என்று தெரியவில்லை.

உள்ளே ஒழுக, ஒரு ஒதுக்கமாக, ஒரு சிறு விஸ்தீரணத்தில் ஒதுங்கினார்கள். மழை துவைத்தது. சமயங்களில் சரிவான கோணங்களில் திவலைகள் தெறித்து அடித்து உள்ளே முத்துக்கள் சிதறின. பூமி மறைந்து விட்டது.

இன்னும் அவர்கள் நெருங்கினால் இடைவெளி சாண் ஆகும்.
அவன் நகரவில்லை. மழைக் கோளங்கள் வீசி வீசி அவனை நோக்கிச் சிதற, அவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் இல்லை. உக்கிரமாக ஒரு மனம். ஏகாக்கிரமாக ஒரு பார்வை.
விக்கிரகமாக ஆடாது அசையாது குந்தியிருந்தான். வைராக்கியம்!

மழையில நனையறீங்க! வாங்க! வாங்க! என்று பல முறை அவள் கூறினாள். அவன் கேட்கவில்லை. அரைமணி ஓடியது. மழை சோர்ந்தது.

அதன் ஓசைகள் குறைந்து, எங்கும் ஒரு தளர்வு தோன்றியது. சீக்கிரம் பேரோசைகள் மறைந்து சீரான சுருதியாக ஒரு லயம் பிறந்தது. கட்டட விளிம்பில் ஒரு குடை தோன்றியது. அதைத் தொடர்ந்து யாரோ உள்ளே ஏறிக் கொண்டிருந்தார்கள். ஊர்ப் பையன் அவன்.

நல்லவேளை! இங்கேதானே இருக்கீங்க! பஸ் வரல்லையே! என்றான் அவன்.

வரல்லை!

உடனே முகத்தைச் சுழித்து,

உங்க அப்பாவுக்கு உடம்புக்கு வந்துடுத்து. உடனே கூட்டியாரச்
சொன்னாங்க! என்றான் பரபரத்துக் கொண்டு,. விஜய் திரும்பினான்.

அப்பா சரியாத்தானே இருந்தார். இப்போ வலி வந்திடிச்சு. சீக்கிரம் வாங்க! ஒரு கணம் ஸ்தம்பனமாக நின்றான். மறுகணம் அவளைப் பார்த்தான். அவள் எழுந்துவிட, இருவரும் அவன் கொடுத்த ஸ்பேர் குடையில் நுழைந்தார்கள். மீண்டும் கிராமத்தை நோக்கிப் புறப்பட்டார்கள்.

Next page.....

|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter