First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தேசிய திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்: ரஜினி ஒப்புதலின்றி அவரது ரசிகர்கள் புதுக்கட்சி துவக்கம் - முதல்வர் கருணாநிதி வற்புறுத்தலை தொடர்ந்து இலங்கை தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம் - ஈழத்தமிழர் பிரச்சனை கருணாநிதி ஆட்சியிலேயே முடிவுக்கு வந்துவிடும்: அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு - பொய் வழக்கை கண்டு அஞ்ச மாட்டேன்: விஜயகாந்த் பேச்சு
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15

அத்தியாயம் 2

புஷ்பா தங்கதுரை
எழுதும்
காதல் நெருப்புகள்
தொடர் கதை

திருப்பதியில் வண்டி நின்றது.

க்ளுக் க்ளுக் என்று மின்னல் சிரிப்புகள் பொடிந்து விழ, பெண்கள் குதூகலத்துடன் இறங்கினார்கள். விஜய் எழவில்லை. கம்பார்ட்மெண்டின் சின்ன வாசலில் நெரிசல் உண்டாக்க விருப்பமில்லை. ரயில் அந்த ஸ்டேஷனில்தான் நிற்க போகிறது.

மேலே போக போவதில்லை. அதற்குள் இந்த அவசரம் எல்லோருக்கும்! சன்னல் வழியே இயல்பாகப் பார்க்க, கும்பலிடையே பளிச்சென்று அவள் மீது கண் விழுந்தது.

அந்தக் கணம் அவளும் அவன் சன்னல் நோக்கித் திரும்பினாள்.

அவனைப் பார்த்ததும் அவள் பார்வை ஒரு போட்டோச்சயம்., ஒரு குசலம் , ஒரு நன்றி மூன்றையும் மிகச் சின்ன விநாடிகளுக்குள் தெரிவித்துவிட்டது. இன்னும் ஒரு செகண்ட் இருந்தால் அவள் உதட்டில் புன்னகை விசாலமாகப் பூத்திருக்கும். அதற்குள் அவள் திரும்பிக் கொண்டாள். சம வயது தோழிகளின் கேலிகள், நகைப்புகள் எல்லாம் இன்ப மயமாக அவளை வருடிச் செல்ல, எல்லோருமாக ஸ்டேஷன் வாசலை நோக்கிப் போய் கொண்டிருந்தார்கள். பெட்டியிலிருந்து எல்லோரும் இறங்கிய பிறகு விஜய் கடைசியாக தான் சீட்டை விட்டு எழுந்தான். கம்பார்ட்மெண்ட் போட்டோடோரில் அங்கங்கே மல்லிகைப் பூக்கள் சிதறி விழுந்து கொண்டிருந்தன. அந்தப் பெண்கள் சூட்டியிருந்த பூக்கள். அவைகளை மிதிப்பிதற்கே அவனுக்கு மனம் இல்லை.

ஒவ்வொரு புஷ்பமும் சின்னச் சின்னக் கவிதைச் சொட்டுகள் போல் தோன்றின. என்ன பிரமை! அசட்டுப் பிரமை!

அவனுக்கே முறுவல் வந்தது. ரயில் பெட்டியின் வாசல் கதவருகே வந்தான். மிதந்து செல்லும் அவன் பார்வை ஜில்லிட்டு நின்றது. பெட்டியின் தரையில் சில சம்பங்கி பூக்கள் சிதறி இருந்தன. ஆ!

அவள் கூந்தலில் இருந்தவை இந்த சம்பங்கி பூக்கள்! ரயில் பெட்டியின் கதவு பின்னால் அடித்துத் தள்ள வெளியே தொங்கிக் கொண்டிருந்த அவளை உள்ளே இழுத்து பதட்டத்துடன் நிறுத்தியது..... இந்த இடத்தில் தான்!....... ஆமாம்! அந்த சம்பவத்தின் போது அந்தப் பூக்கள் உதிர்ந்திருக்கின்றன சம்பவத்தின் நினைவுச் சின்னங்கள். மனத்தில் சுழல் சுழலாக எண்ணங்கள் எழுந்தன! ஒவ்வொரு சம்பங்கியும் ஒரு முழுக்கவிதை.

குனிந்தான்! கையை கீழே நீட்டியதும் தயங்கினான். ஒரே ஒரு பூவை எடுத்தான்.........

அதுவும் அசட்டுத் தனமாகத் தோன்றியது.

நினைக்கும் போதே தனது பையில் போட்டுக் கொண்டான். வாழ்க்கையில் எத்தனை அசட்டுத்தனங்கள் செய்கிறோம்! அதுவும் இள வாழ்க்கையில். அந்த ரயில் சம்பவமே அதன் புதுமையுடன், அதன் பொலிவுடன் அவன் பையில் அடங்கியது போல் இருந்தது. பெட்டியை விட்டு பிளாட்பாரத்தில் இறங்கினான். அவன் நீலங்குளம் போக வேண்டும்.

அங்கிருந்து 20 மைல் தள்ளி ஒரு தொன்மையான கிராமம். பஸ் ஸ்டாண்டை அடைந்தான். நல்லவேளை!

நீலங்குளம் பஸ் அப்போது தான் நகர்ந்து கொண்டிருந்தது. தொத்தி ஏறினான்.!

“என்னடா? என்ன வேலை பார்க்கப் போறே!” என்றார் வேங்கடசாமி. நீலங்குளத்தில் கனதனவான்! அப்பாவின் ஆப்த நண்பர். வாசல் திண்ணை நிழலும் குளிருமாகக் கலந்து கிடந்தன.

கல் திண்டு மேல் வெறும் முதுகைச் சாய்த்து கழுத்தில் தங்கச் சங்கிலி பிரதிபலிக்க வேங்கடசாமி பேசினார்.

அதான் ஸார்! அப்பா அனுப்பிச்சார்! என்று அப்பா அவருக்கு எழுதிய கடிதத்தைக் கொடுத்தான். வேங்கடசாமி படித்தார்.

ரைட்! செஞ்சா போச்சு! முதல்லே பல்லைத் தேய்ச்சிட்டு காப்பி சாப்பிடு. டேய் முத்துசாமி! என்றார். வேலைக்காரன் முத்துசாமி வந்து அழைத்துப் போனான்.

விருந்தினருக்கு மாடியில் பெரிய அறைகள் அங்கே அவனை விட்டு விட்டு, “பாத்ரூம் அதோ இருக்கு! நான் காப்பி கொண்டாறேன்!” என்று போனான். அறையில் டவல், உடுத்திக்க புது வேட்டி எல்லாம் ரெடியாக இருந்தன. பழங்கால உபசாரங்கள் இன்னும் நடந்தன. காப்பி வந்ததும் குடித்து விட்டு குளித்தான்.

மணி பதினொன்றுக்கு கீழே வேங்கடசாமியுடன் அருமைச் சாப்பாடு! அது முடிந்து சற்று இளைப்பாறி விட்டு புறப்பட்டான். வேங்கடசாமி கடிதத்தை ஒரு கவரில் அப்போது மடித்துப் போட்டு வைத்திருந்தார். கவர் மேலே நீள நீளமாக அட்ரஸ் எழுதினார்.

ராகவரெட்டி! எனக்குத் தெரிஞ்சவர்தான்....... இந்தக் கடிதத்தைக்
கொடு! வேலை போட்டுக் கொடுப்பார்.......... என்றார் அவர்!

மீண்டும் பஸ் கிடைத்து திருப்பதி செல்லும் போது பொழுது சாய்ந்து விட்டது. இறங்கினான். இரவு தங்குவதற்காக லாட்ஜில் அறை ஒன்று எடுத்தான். களைப்பாக இருந்தது. சாப்பாடு கொண்டு வரச் சொல்லிவிட்டு படுக்கையில் அலுப்போடு படுத்தான்! நிம்மதியாக உறங்கிவிட்டான். ஒரு மாதிரி சோம்பல் முறித்துவிட்டு குளித்து விட்டு முதல் காப்பி வரவழைத்துச் சாப்பிட்ட போது மணி எட்டு. காலையில் வெகு நேரம் கழித்து எழுந்தான். எழுந்த போது புத்தம் புதிதாக மாறி இருந்தான்.

புதிது உடுத்திக் கொள்வதற்காக சூட்கேஸைத் திறக்க முயன்றபோது சாவி சிக்குவது தெரிந்தது. கஷ்டப்பட்டு திறக்க வேண்டி வந்தது. திறந்ததும் கண்கள் நிலைகுத்தாக நின்றன. பெட்டியின் மேலாக இருந்த துணி ஏதோ பெண் துணியாக இருந்தது. பட்டுத் துணி என்று நினைத்தான்.

சந்தேகத்தோடு அதைத் தூக்கிப் பார்க்க பார்வை மீண்டும் திடுக்கிட்டது. உள்ளே அத்தனையும் கண்ணைப் பறிக்கும் நகைகள்! புத்தம் புது நகைகள்! நெக்லஸ், வளையல், சங்கிலி, ராக்குடி, ஜடவில்லை என்று ஒவ்வொன்றும் 100-வாட் மின்னிக் கொண்டு வெளிவந்தது. தவிர சின்னச் சின்ன பேழைகளில் வைர அணிகள். அத்தனையும் ராத்திரிகால நட்சத்திரங்கள் போல் டால் அடிக்க, பல லட்சங்கள் பெறும்..

மனம் துள்ளி தாவியது.

உடனே அதன் காரணம் போட்டோந்து விட்டது.

அவனது சூட்கேஸ் கைமாறிவிட்டது. கல்யாண பார்ட்டியின் பெட்டி அவனுக்கு வந்துவிட்டது கிட்டத்தட்ட இரண்டு பெட்டிகளும் ஒரே நிறம். ஒரே அளவு. தவறுதலாக அவர்கள் அவனது பெட்டியைக் கொண்டு போய் விட்டார்கள்.

யோசித்தான்! நகைக¬ப் பார்த்தால் அத்தனையும் புதிது! கல்யாணப் பெண்ணுக்குப் போட வேண்டியவையாக இருக்கும். இதைக் காணாமல் அவர்கள் கவலைப்படுவார்களே!

நடந்த விஷயம் தெரியாமல், எல்லோரும் வேதனைப்படுவார்களே!
யோசித்ததில், அன்று தான் முகூர்த்த நாள். அந்தப் பெட்டியை அவர்களிடம் உடனே சேர்ப்பிக்க வேண்டும். அவர்கள் இதற்குள் திண்டாடிப் போயிருப்பார்கள் !

மலைக்கு ஏறும் பஸ் கியூவில் நின்றான். அரை மணிக்குப் பிறகு பஸ் கிடைத்தது.

மேலே போவதற்குள் பரபரப்பு. அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். திருமலை பஸ் ஸ்டாண்டை அடைந்ததும் அவசரமாக இறங்கினான். திருமலையில் ஆழ்வார்திருநகர் கண்டுபிடிப்பது எளிதாக இருந்தது. மூன்று காட்டேஜ்களை வியாபித்து பந்தல் போட்டிருந்தார்கள். அவன் போன போது ஜனங்கள் கும்பல் கும்பலாக வெவ்வேறு இடங்களில் நின்றார்கள். ஒருவேளை முடிந்து விட்டதா? எல்லோரும் அதிகம் பேசவே இல்லையே? அவன் கண்கள் பெண்; பகுதியைத் தேடின. தனியாய் நின்ற ஒரு நடுத்தர வயதினரை அணுகி, பெண் வீட்டார் எங்கே? என்று கேட்டான்.

நாலாவது காட்டேஜுக்குப் போயிருக்காங்க! என்றார் அவர்.

கல்யாணம் நடந்தாச்சா? அவர் ஏறிட்டுப் பார்த்தார்.

சரிதான் போங்க! முகூர்த்தம் தாண்டி போயிட்டிருக்கு. அவங்க சண்டைப் போட்டுக்கிட்டு இருக்காங்க!

என்ன காரணம்?

பெண் வீட்டுக்காரங்க சொன்ன சீர் செய்யலையாம்.. நகை எதுவும் கொண்டாரலையாம்!


அடுத்த கணம் அவனது விரைவான அடிகள் நாலாவது காட்டேஜை நோக்கிப் பறந்தன. அங்கே அழகாக ஒரு துணிப் பந்தல் வேய்ந்திருந்தது. உள்ளே நுழைந்ததும் ஒரு காட்சி அவனைக் கலங்க வைத்தது.

ஒரு மத்திய வயது மனிதர் கீழே மண்டியிட்டு ஒரு இளைஞனின் காலை பிடித்துக் கொண்டிருந்தார்.

பக்கத்தில் ஒரு அம்மாள். அவரது மனைவியாக இருக்க வேண்டும். அருவியாகக் கண்ணீர் சொரிந்து கொண்டிருந்தார். கூடியிருந்த அத்தனை பேர் கண்களும் கலங்கி இருந்தன. அந்த இளைஞன்தான் மாப்பிள்ளை என்று போட்டோந்தது. வீராவேசம், கோபாவேசம், எல்லா வேசத்தோடும் நின்று கொண்டிருந்தான். அவன் பின்னால் அவன் தகப்பனார், முகத்தில் கோப வெடிப்புகள் படர, அமோகமாக வியர்த்துக் கொண்டிருந்தார். ஒரு கீச்சுக்குரல் அம்மாள். அவர் பின்னால் இருந்து கொண்டு, நாங்கதான் சொல்லுதோமே.........

சொன்ன நகையைப் போட்டுருங்க! இந்தக் கணமே கல்யாணத்தை நடத்திரலாம்! என்றாள். அவள் தான் பிள்ளையின் தாயாராக இருக்க வேண்டும். எதிர்ப்பக்கம் பெண்கள் கும்பல் அதிகம்..

எல்லோரும் பட்டு உடுத்தி மினுக்கோடு இருந்தார்கள். முகத்தில் கனத்துப் போய் நிச்சலனமாக இருக்க, அவர்களில் ஒருத்தி, அதான் சொன்னோங்களே, வர்ற வழியிலே நகை தாரை வார்ந்து போச்சுங்க! போலீஸ்லே சொல்லி கண்டுபிடிக்கறோம். கிடைக்காட்டி மூணு மாசத்திலே அத்தனையும் புதுசு செஞ்சு போடறோம். இதுக்கு மேலே என்னா சொல்ல முடியும்? ஒரு இக்கட்டு வந்துட்டா........

இந்தாம்மா! என்றான் மாப்பிள்ளையாகும் பையன். குரல் சிறாய்ச்சிக் கொண்டு வந்தது.

எப்போ போடுறீங்களோ, அப்போ கல்யாணம் வச்சுக்கலாம்! அதனாலே என்ன? இப்போ எங்களை விடுங்க! நாங்க ஊருக்கு கிளம்பறோம் !

விஜய்யின் கண்கள் பெண்களை ஒரு கணம் நோட்டம் பார்க்க,

நடுநாயகத்தில் அந்தக் கல்யாணப் பெண் நிற்பது தெரிந்தது. ரயிலில் சந்தித்த அதே பெண்! ரயிலில் அவன் எதிரே உட்கார்ந்திருந்த பெண்! அதிர்ச்சியில் அவள் கலங்கி நின்று கொண்டிருந்தாள். கண்கள் வெறிக்கப் பார்த்தன. மை கலைந்து கன்னத்தில் தீற்றியிருந்தது. இமை அடிவாரம் இரண்டு வைரத் துளிகள் தயங்கி நின்றன. ஒரு கையை இன்னொரு கையில் கோர்த்து நின்றவள், சிலை போல ஸ்தம்பனத்தில் நின்றாள். அவளை ஒரு முறை பார்த்துவிட்டு, இன்னும் சில கணங்களில் அவள் எப்படி ஒரு சிருங்கார பொம்மையாக மாறப் போகிறாள் என்பதை மனத்தில் விஜய் நினைத்தான். அதுவே அவனுக்கு என்ன மகிழ்ச்சியாக இருக்கும்.

கும்பலை விலக்கி உள்ளே நடுமத்தியில் குதித்தான்.

ஸார்! ரயில்லே பெட்டி மாறிடுச்சு! உங்க பெட்டியைக் கொண்டு வ
ந்திட்டேன்! தவறி என்னோடு வந்திடுச்சி! நகை எல்லாம் உள்ளே இருக்கு! என்று சற்று உரக்கவே கூறினான்.

ஒரு மின்சாரம் அந்த சபையிலே பாய்ந்தது.

எப்படி அத்தனை முகங்களும் புன்னகைகளாக மாறின என்று தெரியவில்லை.

மாப்பிள்ளைப் பையன் மெள்ள தன் இறுக்கத்தை இறக்கினான். முகம் தானாகக் கீழே குனிந்தது. அவனது தந்தை மௌனமாக அந்த ஜரிகைத் துண்டை எடுத்து மேலே போட்டுக் கொண்டார்.யாரோ ஒருவர் அவனிடமிருந்து பெட்டியை வாங்கித் திறந்து எல்லோருக்கும் காண்பித்தார். நகைகள் அத்தனை ஊசி நட்சத்திரங்களாக ஜொலித்தன.

இந்தாங்க! எடுத்துட்டு போங்க! பெண்ணை அலங்காரம் பண்ணுங்க! சீக்கிரம்! முகூர்த்தம் ஆரம்பமாகிறது! என்று கனத்த குரலில் கூறினார். அத்தனை உருவச் சித்திரங்களும் நகரத் தொடங்கின.

மேளம்! மேளம்! என்று ஒரு குரல்.

புரோகிதர், புரோகிதர்! என்று ஒரு குரல். பரபரப்புகள் தொற்று நோய் போல் பரவின. பந்தலே சிலிர்த்துக் கொண்ட மாதிரி இருந்தது. அப்போது.

நிறுத்துங்கள்!

ஒரு குரல் உறைப்பான தொனியில் கேட்டது. எல்லோர் கண்களும் திரும்பின. அந்தக் கல்யாணப் பெண் தான் மருட்சியை விட்டு, முன்னே ஒரு தேவதை போல் நகர்ந்து வந்தாள்.

கண்கள் இரண்டும் ஈட்டிகள் போல் வெளிவந்தன.

 

 

Next page.....

|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter