Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
பிளஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - பிளஸ் ரிசல்ட் : நாமக்கல் மாணவி முதலிடம் - பிளஸ் ரிசல்ட் : முதல் 4 இடத்தையும் தட்டிச்சென்றது நாமக்கல் - கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மாதிரி எரிபொருள் அகற்றும்பணி தீவிரம் - ஆந்திராவில் ரெயில்கள் மோதி தீ பிடித்து 14 பேர் பலி - இலங்கை: இந்தியா ஒப்பந்தத்தை அனுமதித்திருந்தால் எந்த துன்பமும் வந்திருக்காது : ஞானதேசிகன் - இலங்கை சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் : சீமான் கோரிக்கை
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15

அத்தியாயம் 16

இ.எஸ்.லலிதா
எழுதும்
எனக்கே வேண்டும் நீ
தொடர் கதை

தன்னைச் சார்ந்தவர்கள் தவறு செய்யும்போதோ அல்லது தவறான முடிவு எடுக்கும்போதோ உண்மையான நட்பு கொண்டவர்களின் உள்ளம் பதைக்கும், ஆதங்கப்படும்! கோபம் கொள்ளும்! அத்தகைய கோபம் ராஜாவுக்கும் எழுந்தது.

உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? வெண்ணை திரண்டு வரும்போது தாழியை உடைச்ச கதையா, கிருஷ்ணா அவ்வளவு தூரம் மன்னிப்பு கேட்டும், தனியாதான் வாழ்வேன்னு பிடிவாதம்
பிடிக்கிறியே, படிச்ச முட்டாள்ங்கறது இதுதானா? அவனது சீற்றத்தில் அவள் நன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணமும் அக்கரையும் இருப்பதை சாந்தினி உணர்ந்தே இருந்தாள். பதில் பேசாது ஓடி வரும் கடல் அலையையே வெறித்து பார்த்தாள் சாந்தினி. கடல் பொங்கி வடிவது போல் வாழ்க்கையில்தான் எத்தனை மேடு பள்ளங்கள் என்று தோன்றியது.

அவள் கிருஷ்ணாவை சந்தித்தது, காதலித்தது, கல்யாணம் பண்ணியது, பிரிந்தது என கடலலைகள் போல நினைவுக்கு வந்து மோதின. கிருஷ்ணா மீது அவள் கொண்ட காதல் நிஜமாயிருந்தது. ஆனால் அவன்? கடிகார முள் மாறுவது போல்
எப்படியெல்லாம் மாறிப்போனான்? இப்போது மறுபடியும் வந்து கெஞ்சுகிறான். மன்னிக்க சொல்கிறான். கெஞ்சுவது அல்ல காதல்! அது உண்மையான உள் மனதில் இருந்து பீறிட்டு வருவது, மனதால் உணர்வது! ஆனால் இச்சமூகத்தில் எல்லோருடைய காதலும் வலிமையானதாய்- கடைசி வரை இருப்பதில்லை. சிலருடைய காதல் நிலவு போல் தேய்ந்து போகிறது. கிருஷ்ணாவுடைய காதலும் அப்படித்தான் அவன் அம்மா இருந்தவரை அவன் கண்களுக்கு நான் தெரியவில்லை. இப்போது தெரிகிறது. புண்ணுக்கு மருந்திட்டால் ஆறிவிடும்! ஆனால் வடு ஆறாதே! கிருஷ்ணா வடுக்கு மருந்திட எண்ணுகிறான்.

என்ன சாந்தினி பதிலே பேசமாட்டேங்கற? என்னுடைய கோபம் அர்த்தமற்றதுன்னு நினைக்கிறியா? மணலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த சாந்தினியின் விரல்கள் மீது கீழே கிடந்த ஐஸ்
குச்சியை எடுத்து தட்டினான் ராஜா. அவள் சுய நினைவு பெற்றதுபோல், உம்......என்ன கேட்டீங்க? என்றாள்.

அவள் வேண்டுமென்றே நடிக்கிறாள் தனது கேள்வியின் அர்த்தம் போட்டோந்து பாசாங்கு செய்கிறாள் என்று பட்டது ராஜாவுக்கு. விளையாட்டில் பாசாங்கு இருக்கலாம்...... அதுவும் குழந்தைகளிடம்!

வாழ்க்கையில் பாசாங்கு, போலி எதற்கு? கிருஷ்ணா வந்து மன்னிப்பு கேட்டபோதே நீ அவர்கூட போயிருக்கணும் சாந்தினி........ ராஜா அவள் நடிக்கிறாள் என்பதை தெரிந்து நேரடியாகவே பேசினான். அவனை சுட்டு விடுவது போல் பார்த்த
சாந்தினி, ஆண்கள் எது வேணா செய்வாங்க, எப்படி வேணா நடந்துப்பாங்க.... உடனே பெண் ஜென்மம் மன்னிச்சிடணுமா ராஜா?

சே....சே..... நான் அப்படி சொல்லலை. அப்ப ஏதோ ஒரு சூழ்நிலையில் தெரியாம தப்பு செய்திட்டார். சூழ்நிலைதான் மனிதனை மாத்துது. இப்ப திருந்தி வந்திருக்கார். வாழ்க்கையில்
தவறு செய்யறது சகஜம். அதை மறந்து மன்னிக்கறதுதான் புத்திசாலித்தனம்.....

ரெண்டு மூணு வருஷமா அவர் இல்லாம தனிச்சு வாழ்ந்திருக்கேன் ராஜா! அதுமாதிரி இனிமேலும் வாழ்ந்துட்டுப் போயிடறேன்! எதுக்கு உடைந்து போன கண்ணாடியை ஒட்ட வைக்கணும்....

நீ சொல்ற கண்ணாடி தத்துவம் வாழ்க்கைக்குப் பயன்படாது சாந்தினி. உடைஞ்சு போன கண்ணாடி கூட உதவும். ரசம் போன கண்ணாடிதான் பயன்படாது. தனிச்சு வாழ்வேன்னு பிடிவாதம் பிடிச்சு என்னத்த சாதிக்கப் போறே? கிருஷ்ணாவை நீயா வெறுக்கல! விலக்கல! அவரா விலகிப் போனார்! அவர் போய்ட்டதால அவர் மீது நீ கொண்ட காதல் இல்லேன்னு ஆயிடுமா? இல்ல வற்றிப் போயிடுமா?

பாலைவனத்தில் கூட பசும்புல் படரும்போது, உன் மனதில் ஈரம் இல்லேன்னு சொன்னா நான் நம்பத் தயாரா இல்ல சாந்தினி. உனக்காக இல்லாவிட்டாலும் ப்ரியா குட்டிக்காகவாவது நீ கிருஷ்ணா கூட சேர்ந்து வாழத்தான் வேணும்.....

ஏன் இத்தனை நாள் கிருஷ்ணா இல்லாம ப்ரியா குட்டி இல்லையா? சாந்தினியின் குரல் சுரத்தின்றி வெளிப்பட்டது. ராஜா சொல்வது போல்... வறட்டு பிடிவாதத்துடன் தனித்து வாழ்ந்து என்னத்த சாதிக்கப் போகிறேன் என்ற கேள்வி அவளுக்குள்ளே ஒலித்துக் கொண்டிருந்தது.

ஆயிரம்தான் இருந்தாலும் ஒரு குழந்தைக்கு அப்பாவும் முக்கியம் சாந்தினி. முதுகுல சுமந்து யானை விளையாட.... அப்பா முகத்தில் தெரியும் மீசையை பிடித்து இழுக்க..... கண்ணாமூச்சு காட்டி அம்மா முந்தானைக்குள் ஒளிந்து கொள்ள என்று அதற்குள் எத்தனையோ ஏக்கங்கள் இருக்கும். அந்த ஏக்கமெல்லாம் ஏன் உன் பிடிவாதத்தால் ப்ரியாவுக்கு கிடைக்காமல் போகணும்?

ராஜாவின் பேச்சிலிருந்த உண்மை சாந்தினியை யோசிக்க வைத்தது. எனக்கு துரோகம் செய்து விட்டதை நினைத்தே நான் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறேனோ? எனக்கு பின்னால் வளரும் ப்ரியாவின் ஆசைகள் ஏக்கங்களை போட்டோந்து கொள்ளவில்லையா? ப்ரியா தினமும் அப்பா எங்கே என்று கேட்காவிட்டாலும் அவளுக்குள் ஏக்கங்கள் இருக்குமோ? என் பிடிவாத குணத்தால் என் குழந்தைக்கு கிடைக்கக்கூடிய சில சந்தோஷங்கள் கிடைக்காமல் போகுமோ? சாந்தினி யோசித்தாள்! யோசிப்பு நிதானத்தை கொடுத்தது. என்னதான் கிருஷ்ணாவை வெறுத்துப் பேசினாலும் அந்த வெறுப்புக்கூட அவன் மீதுள்ள காதலால்.... அவன் அப்படி செய்து விட்டானே என்ற ஆதங்கத்தால்தான் என்பது போட்டோந்தது. எல்லாவற்றுக்கும் மேலாய்..... அவன் கட்டிய தாலியைக் கூட அவள் கழற்றவில்லை! அதற்கும் அவன் மீதுள்ள காதல் தான் காரணம். அப்படியிருக்கையில் இன்று அவனே வந்து மன்னிப்பு கேட்கும்போது வேண்டாம் என்று மறுப்பது என்ன நியாயம்? வாழ்க்கையில் ஏற்றமும் இறக்கமும் சகஜம் என்பது போல் தவறும்- மன்னிப்பும் சகஜம்!

மன்னிப்பது மனிதப் பண்பு. நீ கிருஷ்ணாவை மன்னித்து ஏற்றுக் கொள்! கொலை குற்றவாளிக்குக்கூட ஜனாதிபதி கருணை காட்டுகிறார்! கிருஷ்ணா ஒன்றும் கொலை செய்தவன் அல்ல! அவளை கொண்டவன்...... அவனை மன்னிப்பதுதான் நியாயம்! தர்மம்! மனசாட்சி பதில் கூற........

சாந்தினி ஒரு தெளிவோடு எழுந்தாள். ராஜா அவள் முகத்தையே பார்த்தான். என்ன முடிவெடுத்திருக்கே சாந்தினி?

நாளைக்கு பால் பாயசம் சாப்பிட வீட்டுக்கு வாங்க ராஜா........ நான் ஆபீசுக்கு லீவ்...... சாந்தினி சொல்ல........ தேங்க்யூ சாந்தினி........ தேங்க்யூ என்று உற்சாகமாய் கத்தினான் ராஜா!

முற்றும்!

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter