Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
பிளஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - பிளஸ் ரிசல்ட் : நாமக்கல் மாணவி முதலிடம் - பிளஸ் ரிசல்ட் : முதல் 4 இடத்தையும் தட்டிச்சென்றது நாமக்கல் - கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மாதிரி எரிபொருள் அகற்றும்பணி தீவிரம் - ஆந்திராவில் ரெயில்கள் மோதி தீ பிடித்து 14 பேர் பலி - இலங்கை: இந்தியா ஒப்பந்தத்தை அனுமதித்திருந்தால் எந்த துன்பமும் வந்திருக்காது : ஞானதேசிகன் - இலங்கை சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் : சீமான் கோரிக்கை

நேற்றும் நடந்தது...!

டப்பிங் என்றொரு ஆயுதம்
-ஆர்.எஸ்.அந்தணன்

அத்தியாயம் - 13

தமிழ்சினிமாவை பொறுத்தவரை நடிகர், நடிகைகள் நன்றியோடு இருக்க வேண்டும் என்று நினைத்தால் ஒரே ஒருவார்த்தையை போர்டில் எழுதி, அதை பக்காவாக பிரேம் போட்டு தினம் தினம் ஊதுவத்தி கொளுத்தி வைத்து வணங்கலாம். அந்த ஒரே ஒரு வார்த்தை டப்பிங்!

திறக்க முடியாத கேஷ் கோட்டைகளை கூட திறக்கும் மந்திர சாவி ஒன்று உண்டென்றால் அது இந்த டப்பிங் சமாச்சாரம் மட்டும்தான். சினிமாவில் உழைத்து விட்டு ஊதியம் கேட்கிறவர்களுக்கு "டப்பிங் சமயத்தில் மீதியை வாங்கிக்கோங்க" என்று பெரும் தொகைகளை கூட பாக்கியாக வைப்பார்கள் தயாரிப்பாளர்கள். சொன்னபடி 99 சதவீத தயாரிப்பாளர்கள் பணத்தை கொடுத்து விடுகிறார்கள்.

நம்பி டப்பிங் பேச போகும் பல நடிகர் நடிகைகளுக்கு அந்த நேரத்தில் அல்வா கொடுக்கிற தயாரிப்பாளர்களும் உண்டு. எனக்கு தெரிந்த ஒரு முன்னணி நடிகர், தனது சம்பளத்தை சிறுக சிறுக வாங்கிவிட்டாலும், இறுதியில் கணிசமான தொகை ஒன்றை வாங்காமலிருந்தார். இவருக்கு டப்பிங் சமயத்தில் பணத்தை செட்டில் செய்வதாக கூறியிருந்தார் தயாரிப்பாளர்.

டப்பிங் போவததற்கு முன்பு வீட்டில் வந்து பணத்தை கொடுத்துவிடுங்கள் என்று நாகரிகமாக சொல்வதற்கும், டப்பிங் தியேட்டருக்கே வந்து பணத்தை கொடுத்தால்தான் பேச துவங்குவேன் என்று சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா? நாகரிகமாகவே இந்த பணத்தை வாங்கிவிட நினைத்தார் நடிகர். தயாரிப்பாளரோ எப்படியாவது டப்பிங்கிற்கு அழைத்து வந்து அவர் பேசி முடித்த பின் காந்தி கணக்கில் எழுதிவிடலாம் என்று கணக்கு போட்டார்.

தியேட்டருக்கு வந்திருங்கண்ணே, பணம் ரெடியாக இருக்கு என்றார் புரடக்ஷன் மேனேஜர். நாகரிகம் கருதி வந்தவுடனேயே பணம் எங்கே என்று கேட்காமல் மைக்கை பிடித்து பேச ஆரம்பித்தார் நடிகர். சிறிது நேரம் கழித்து டீ குடிப்பது போல வெளியே வந்தவர், புரடக்ஷன் மேனேஜர் எங்கே?என்றார் ஊழியர்களிடம். அண்ணே, உங்களுக்கு பணம் தரனும்னு பேங்கில் டிராப் பண்ண போயிருக்கிறார் என்றார்கள் அவர்களும். நம்பிக்கையுடன் தியேட்டருக்கு உள்ளே போன நடிகர் தனது வேலைகளை பார்த்துக் கொண்டே அவ்வப்போது வெளியே வருவதும் விசாரிப்பதுமாக இருந்தார். டிராபிக்கிலே மாட்டிக்கிட்டார். வண்டி பஞ்சராயிடுச்சு, என்று கதை கதையாக சொல்லி நேரத்தை ஓட்டிக் கொண்டிருந்தார்கள் மற்ற ஊழியர்கள்.

அதற்குள் தான் பேச வேண்டியதை பேசிய நடிகர், இறுதியாக ஒரே ஒரு ரீலில் பேச வேண்டியதை மட்டும் தப்பு தப்பாக பேசிக் கொண்டிருந்தார். வேண்டுமென்றே செய்வது தெரியாமலும், அதற்குள் பணம் வந்துவிடும், முடித்துவிடலாம் என்ற நம்பிக்கையிலும் இருந்தார். சரியாக முடியும் நேரத்தில் உள்ளே வந்த புரடக்ஷன் மேனேஜர், அண்ணே பேங்கிற்கு போக முடியாத மாதிரி வீட்டிலே ஒரு முக்கியமான வேலை வந்திருச்சு. பேரர் செக் தரேன். நாளைக்கு மாத்திக்கோங்க என்று ஒரு செக்கை நீட்ட, ஒரு ரீலுக்காக டப்பிங்கையே நிறுத்த முடியாதே? அரை மனதோடு பேசிவிட்டு வீட்டுக்கு போனார் நடிகர். அவ்வளவுதான். அந்த செக், அதன்பின் பலமுறை வங்கிக்கு போனதோடு சரி. பணம் வந்தபாடில்லை!

இப்போதெல்லாம் மிகவும் உஷாராக இருக்கிறார்கள் நடிகர் நடிகைகள். டப்பிங் பேசுகிற ஆர்ட்டிஸ்ட் என்றால், டப்பிங் ஸ்டுடியோவில் செட்டில்மென்ட். இல்லை தமிழ் தெரியாத நடிகையா? கடைசி நாள் ஷ§ட்டிங் கிளம்புவதற்கு முன் டேபிளில் முழு சம்பளமும் வந்தாக வேண்டும். இல்லையென்றால், எத்தனை பேர் படப்பிடிப்பில் தனக்காக காத்திருந்தாலும் மேக்கப் பாக்சை திறக்கவே மாட்டார்கள்!

திருவண்ணாமலை என்ற படத்தை பார்த்தவர்கள் அதில் காமெடி வேடத்தில் நடித்திருக்கும் சிட்டிபாபுவின் குரலை கேட்டால் அதிர்ந்தே போயிருப்பார்கள். படப்பிடிப்பு நேரத்தில் பேசும்போது ரெக்கார்டிங் செய்வார்களே, அதை மாற்றாமலே அப்படியே திரையில் பயன்படுத்தியிருந்தார்கள். காரணம் இதுவாகதான் இருக்க வேண்டும். டப்பிங் பேச வர மாட்டேன் என்று கூறியிருப்பார். சம்பள பாக்கியா? அல்லது வேறு ஏதாவது காரணங்களா என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்.

இதே நடிகரின் குரலுக்கு பொறுத்தமாக வேறொரு டப்பிங் கலைஞரை வைத்து பேச வைத்திருக்கலாம். ஆனால், அப்படி பேச வைக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட நடிகர், எனக்கு ஆட்சேபணை இல்லை என்று கடிதம் தர வேண்டும். அதனால் அந்த டிராக்கை அப்படியே லைவ் சவுண்டோடு விட்டு விட்டார்கள்.

எனக்கு பதிலாக வேறொருவரை டப்பிங் பேச வைக்கிறார்கள் என்று அலறி அடித்துக் கொண்டு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்த முன்னணி ஹீரோக்கள் கூட இங்கே உண்டு. தான் நடித்த ஒரு படத்திற்கு டப்பிங் பேச வராமலே இழுத்தடித்தார் பிரகாஷ்ராஜ். வேறு வழியில்லாமல் மிமிக்கிரி கலைஞர் ஒருவரை குறுக்கு வழியில் எப்படியோ சரிகட்டி டப்பிங் பேச வைத்தார் இயக்குனர். தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார் பிரகாஷ். ஆனால், இவர் டப்பிங்கிற்கு முறையாக வராமல் போனதால் தனக்கு எவ்வளவு நஷ்டம் என்று தயாரிப்பாளர் கணக்கு கொடுக்க, மிமிக்கிரி கலைஞருக்கு ஜே போட்டு விட்டது சங்கம். இது பிரகாஷ்ராஜின் குரல் அல்ல என்று தெரிந்தே படம் பார்த்தார்கள் ரசிகர்கள். படம் படுதோல்வி.

ஆனால் முதல் படத்திலிருந்தே தனக்கு குரல் கொடுத்த ஒரு டப்பிங் கலைஞரை பாராட்டுவதற்கு பதிலாக சண்டை போட்டார் ஒரு நடிகர். அவரது சினிமா வாழ்க்கையே அன்றிலிருந்து பறிபோன கதை தெரியுமா?

ஒரு காலத்தில் தொடர் வெற்றிகளை கொடுத்து ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களையே கதி கலங்க வைத்தவர் மோகன். மைக் மோகன் என்றால் சரக்கென்று உள்வாங்கிக் கொள்வீர்கள். இவரது குரல் பொறுத்தமாக இல்லை என்பதால் எஸ்.என்.சுரேந்தர் என்பவரை மோகனுக்காக டப்பிங் பேச வைத்தார்கள். (இந்த சுரேந்தர் இளைய தளபதி விஜயின் தாய் மாமா)

ஏதோ இரட்டை புலவர்கள் மாதிரி, இணை பிரியாமல் இருந்த இவர்களுக்குள் வந்தது ஈகோ. மோகனின் வெற்றிக்கு சுரேந்தரின் குரலும் முக்கிய காரணம் என்று பரவலாக பேச ஆரம்பித்தார்கள் ரசிகர்கள். பத்திரிகையாளர்களும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் இதை மோகனிடமும் நேரடியாக சொல்ல, சுரேந்தர் இல்லாமல் என்னால் பேச முடியாதா? நானே பேசுகிறேன் என்று தானே டப்பிங் பேச ஆரம்பித்தார் மோகன். அன்று விழ ஆரம்பித்தவர்தான். இப்போதும் எழ முயற்சி செய்து கொண்டேயிருக்கிறார். எழுந்தபாடில்லை.

இப்போதெல்லாம் ஸ்பாட் எடிட்டிங் வந்துவிட்டது. ஆனால் ஸ்பாட் டப்பிங்தான் வரவில்லை. அதுவும் வந்துவிட்டால் அந்த கால நடிகர், நடிகைகள் மாதிரி ஸ்பாட்டிலேயே எல்லாரும் வசனம் பேச வேண்டும் என்று கூறியிருப்பார்கள். தமிழ் தெரியாத நடிகர், நடிகைகளுக்கும் வேலை இருக்காது. ஏன் ஸ்பாட் டப்பிங் வரவில்லை? வேறொன்றுமில்லை. கேமிரா சத்தமும் சேர்த்து பதிவாகிவிடுவதுதான் காரணம். ஆனால் பிரசன்னா, சினேகா நடித்த அச்சமுண்டு அச்சமுண்டு லைவ் டப்பிங்தான். முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்பட்ட படம். இந்த படத்தின் ஒலிப்பதிவுக்காகவே இன்னொரு முறை படத்தை பார்க்கலாம். ரெட் ஒன் காமிராவை பயன்படுத்தியிருப்பார்கள். சத்தமே இல்லாத கேமிரா வந்துவிட்டால், இது சாத்தியம்தான். இந்த முறை பரவினால் மும்பை நடிகைகள் கூட தமிழ் கற்ற பிறகுதான் ஷ§ட்டிங்கிற்கே வர வேண்டிய நிலை ஏற்படும்.

அந்த காலத்தில் ஏ.வி.எம்மில் ஜீவா என்றொரு சவுண்ட் என்ஜினியர் இருந்தாராம். சிம்மக்குரலோன் என்று உலகமே வியந்த நடிகர் திலகம் சிவாஜியை பராசக்தி காலத்திலே பரிகாசம் செய்தவராம் இவர். நேரடியாக இவரது குரலையும் வாய் அசைவையும் கிண்டல் செய்வாராம். பிறகு அவரே சிவாஜியின் வளர்ச்சியை கண்டு தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டதும் நடந்தது என்கிறது திரையுலக வரலாறு.

(இன்னும் வரும்)

தொடர்கள்
மேலும்...
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter