அத்தியாயம் 8
மலையாளத்தில் பிரபலமாக இருந்தார் அந்த நடிகை. அவரின் பெயரில் மஞ்சம் இருக்கும். அந்தப் பெண் பள்ளி-கல்லூரிகளில் படித்துக் கொண்டிருந்த காலங்களில் அந்த பெரும் ஹீரோவுக்கு ரசிகராக இருந்தார். பின்னாளில் அவரே நடிக்க வந்த போதுதான் ஹீரோக்களின் ஒரிஜினல் முகமறிந்து நொந்து நூலானார் என்பது குறிப்பிடத்தக்கது!
கம்பீரத்திற்கு பேர்போன, யதார்த்த நடிப்பிற்காகவும் பெயர் பெற்ற அந்த நடிகரோடு அந்த நடிகை ஒரு படத்தில் ஜோடி போட வாய்ப்பு வந்தது. படிக்கிற காலங்களில் தான் ரசித்த நாயகரோடு ஜோடியாக நடிபோம் என அதற்கு முன் நினைத்துப் பார்த்திருப்பாரா அந்த நடிகை? மிகமிக உற்சாகமாக அந்த ஹீரோவோடு நடிக்கக் கிளம்பினார்.
பொள்ளாச்சி பகுதியில்தான் படப்பிடிப்பு.
யூனிட் மொத்தமும் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தது.
நடிகையின் டச்-அப் பையனை கூப்பிட்டு ஜாடைமாடையாக பேசி நடிகையை தன் அறைக்கு வரும்படி சொல்லச் சொன்னார் நடிகர்.
நடிகையும் போனார்.
நடிகையின் அழகைப் புகழ்ந்த நடிகர் ஜாடைமாடையாக தனது ஆசையைச் சொன்னார். இதில் அதிர்ச்சியான நடிகை.... உங்களை சின்ன வயசிலிருந்தே ரசித்து வருகிறேன். என் மனதில் உங்களுக்கென்று உயர்ந்த இடம் இருக்கு. நீங்க இப்படி என்னிடம் எதியோ எதிர்பார்ப்பது எனக்கு அதிர்ச்சியைத் தருது' எனச் சொல்லிவிட்டு வெளியேறினார் நடிகை.
ஆனால் ஹீரோ விடவில்லை. மறுபடியும் டச்-அப் பையனை அழைத்து ‘அக்காவ வரச்சொல்' என்றார்.
டச்-அப் பையனும் போய் விஷயத்தைச் சொன்னான்.
'நான் ஒண்ணும் யோக்கியமானவள் கிடையாது. ஆனாலும் எனக்கும் அவருக்கும் இடையே அப்பா-பொண்ணுக்கு உரிய வயசு வித்தியாசம் இருக்கு. அதனால் அவரோடு இருக்க என் மனசு சம்மதிக்கல. அவரு இப்படி கேட்கிறது தப்பு. நீ போய் என்னோட இந்த ஃபீலிங்ஸை அவரிடம் சொல்லு.' என சொல்லி அனுப்பினார் நடிகை.
டச்-அப் பையனும் தயங்கித் தயங்கி ஹீரோவிடம் விஷயத்தைச் சொன்னான்.
நடிகை வரமறுத்ததைவிட தன்னை கிழவன் என்று சொன்னதைத்தான் ஹீரோவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இண்டர்காம் மூலம் நடிகையை தொடர்பு கொண்டு கன்னாபின்னாவென திட்ட... வாக்குவாதம் முற்றியது.
இறுதியில் நடிகை சொன்னார்... என்னோட ஒடம்பு.... அதை என்னோட விருப்பமில்லாம ஒங்ககிட்ட ஏன் தரணும். என்னோட உடம்பை இன்னைக்கு ராத்திரி ................................................. தரப்போறேன் எனச் சொல்லிவிட்டு லைலை துண்டித்தார் நடிகை.
எதிர்முனையில் நடிகை என்ன சொன்னார் என்பதை அறியாத டச்-அப்பை ஓங்கி ஒரு பளார் விட்டார் ஹீரோ!
காரணம் புரியாமல் கன்னத்தை தடவியபடியே நடிகையிடம் போனான் டச்-அப்!
நடிகை என்ன சொன்னார்?
ஹீரோ எதற்காக அடித்தார்?
அது....
(அடுத்த ஸீன்)
|