|
நீலகிரி
| தலைநகர் |
உதகமண்டலம் |
| பரப்பு (ச.கி.மீ) |
2,452 |
| மக்கள் தொகை (2001) |
ஆண்கள் |
3,78,351 |
| பெண்கள் |
3,83,790 |
| மொத்தம் |
7,62,141 |
| மக்கள் நெருக்கம் |
330 |
| ஆண், பெண் விகிதம் |
1,015 |
| எழுத்தறிவு |
ஆண் |
2,96,573 |
| பெண் |
2,44,526 |
| மொத்தம் |
5,41,099 |
அமைவிடம்
மாவட்டம் முழுமையும் நீலமலைத் தொடர்கள் விரிந்து பரந்துள்ளது. இதன் மேற்கே கேரள மாநிலமும். வடக்கில் கர்நாடக மாநிலமும், கிழக்கிலும், தெற்கிலும் கோயம்புத்து£ர், ஈரோடு மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.
புவியியல் அமைவு
| அட்சரேகை |
10°38-11.49°
N |
| தீர்க்கரேகை |
76-77.15°
E |
கடல் மட்டத்திலிருந்து 900-2636மீ. உயரத்தில் அமைந்துள்ளது.
| அதிக பட்சம் |
21-25°C |
| குறைந்த பட்சம் |
10-12°
C |
வரலாறு
இறுதி மைசூர் போரையடுத்து (18-ஆம் நு£ற்றாண்டின் பிற்பகுதி) நீலகிரி பீடபூமி கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுகைக்குட்பட்டது. 1800-இல் டாக்டர் பிரான்சிஸ் புச்சானன் என்பவர் இப்பகுதிக்கு கால்நடையாகச் சென்றடைந்தார். 1812-இல் வில்லியம் கீஸ் மற்றும் மக்மோகன் என்னும் இரு ஆங்கிலேயர் இப்பகுதிக்குச் சென்றனர். கோயம்புத்து£ர் ஆட்சித்தலைவராக இருந்த சுல்லிவனே கோவையிலிருந்து நீலகிரிக்கு முதல் பாதை அமைத்தவர். உதக மண்டலத்தைக் கண்டுபிடித்த வரும்; இவரே. இறுதியாக 1882-இல் இது ஒரு தனி மாவட்ட அந்தஸ்தை அடைந்தது.
சட்டசபைத் தொகுதிகள்-3
குன்னு£ர், உதகமண்டலம், கூடலு£ர்.
பாராளுமன்றத் தொகுதி-1
நீலகிரி
மொழி
தமிழ், கன்னடம், மலையாளம், உருது மற்றும் தெலுங்கு.
மழையளவு
வருட சராசரி. 1,920.80மி.மீ.
முக்கிய அணைகள்
முக்குருத்தி, பைக்காரா, சாண்டிநல்லா, கிளன்மார்கன், மரவகண்டி, அப்பா பவானி, எமரால்டு, குந்தா, அவலாஞ்சி, போர்த்திமந்து, பார்சன்ஸ்வேலி.
முக்கிய விளை பொருட்கள்
உருளைக்கிழங்கு, கேரட், முட்டைக்கோஸ், முள்ளங்கி, தேயிலை, காப்பி, யூகாலிப்டஸ், நல்லமிளகு, இஞ்சி, காலிபிளவர், பட்டாணி, பீன்ஸ், பீட்ருட்.
தொழிற்சாலைகள்
பெரிய தொழிற்சாலைகள்-126, சிறியதொழிற்சாலைகள்-105. இதில் தேயிலை தொழிற்சாலைகள்-167. புகைப்படச் சுருள் தயாரிப்பு (இந்து), துப்பாக்கி மருந்து தொழிற் சாலை குறிப்பிடத்தக்கன. ஜெரேனியம், பினாயில், யூகாலிப்டஸ் எண்ணெய் போன்றவையும் தயாரிக்கப்படுகின்றன. ஊசித் தொழிற்சாலை, புரோட்டின் தயாரிப்பு, வானிலை ஆய்வு நிலையம் குறிப்பிடத்தக்கது.
நீர்மின் திட்டங்கள்
பைக்காரா, பைக்காரா மைக்ரோ, மோயார், குந்தா.
கல்வி
பள்ளிகள் : துவக்கநிலை-379, நடுநிலை-59, உயிர்நிலை-57, மேனிலை-39. போட்டோகள் : கலை மற்றும் அறிவியல்-1, தொழிற் கல்வி-7.
சுற்றுலாத்தலங்கள்
தாவரவியல் பூங்கா, உதகமண்டலம் ஏரி, தொட்டா பெட்டா, முதுமலை வனவிலங்கு சரணாலயம், சிம்ஸ்பார்க், குன்னு£ர், கோடநாடு வியூ பாயிண்ட், கோதகிரி, கல்லட்டி நீர் வீழ்ச்சி.
சிறப்புச் செய்திகள்
குறும்பர், தோடர், கோடர், பனியர், இருளர் போன்ற பழங்குடியின் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். தங்கள் பழம் கலாச்சாரத்தை இவர்கள் இன்றயவும் பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
|