|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தமிழக சட்டசபைக்கு முன் கூட்டியே தேர்தல் வராது: புதிய தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி அறிவிப்பு - விலைவாசி உயர்வு பிரச்சினை: பாராளுமன்றம் 4-வது நாளாக முடங்கியது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி - ஐகோர்ட்டு நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது 65 ஆக உயர்வு: மத்திய மந்திரி சபை ஒப்புதல் - கோஹினூர் வைரத்தை திருப்பித் தர இயலாது: பிரிட்டிஷ் பிரதமர் - இலங்கையில் சியதா டி.வி. அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் - கருணாஸ் வழக்கு: சீமானின் உதவியாளருக்கு முன்ஜாமீன்
|
|
|
|
இராமநாதபுரம்

ஈரோடு

கடலு£ர்
கரூர்
கன்னியாகுமரி
காஞ்சீபுரம்
கிருஷ்ணகிரி
கோயம்புத்து£ர்
சிவகங்கை
சென்னை
சேலம்
தஞ்சாவூர்
தருமபுரி
திண்டுக்கல்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
திருவண்ணாமலை
திருவள்ளூர்
திருவாரூர்
து£த்துக்குடி
தேனி
நாகப்பட்டினம்
நாமக்கல்
நீலகிரி
புதுக்கோட்டை
பெரம்பலு£ர்
மதுரை
விருதுநகர்
விழுப்புரம்
வேலு£ர்

திருச்சிராப்பள்ளி

தலைநகர் திருச்சி
பரப்பு (ச.கி.மீ) 4,403
மக்கள் தொகை (2001) ஆண்கள் 12,08,534
பெண்கள் 12,09,832
மொத்தம் 24,18,366
மக்கள் நெருக்கம் 542
ஆண், பெண் விகிதம் 1,000
எழுத்தறிவு ஆண் 9,26,354
பெண் 7,47,124
மொத்தம் 16,73,478

அமைவிடம்

கிழக்கில் தஞ்சாவூர், பெரம்பலு£ர் மாவட்டங்ளும், வடக்கில் சேலம், பெரம்பலு£ர் மாவட்டங்களும், மேற்கில் நாமக்கல் மாவட்டமும், திண்டுக்கல் மதுரை மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன.

புவியியல் அமைவு

அட்சரேகை

10கு.11-30குழி

தீர்க்கரேகை

77கு.45-50கு ணி

காலநிலை

அதிகபட்சம்

37.7கு சி

குறைந்த பட்சம்

18.9கு சி

வரலாறு

இன்றைய திருச்சிராப்பள்ளியின் ஒரு பகுதியான உறையூர் கி.மு. முந்நு£றிலிருந்து சோழர்களின் தலைநகரமாக விளங்கியதற்கு இலக்கியச் சான்றுகள் உள்ளன. இப்பகுதிகளில் நிகழ்ந்த அகழ்வாய்வுகளின் போது வெளிப்பட்ட சான்றுகளும் உறையூரின் பழமையை உறுதிப்படுத்திகின்றன. களப்பிரர் காலத்திலும் (கி.பி.300-கி.பி.575) உறையூர், சோழர்களின் கீழ்
இருந்திருக்கலாமெனக் வரவாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. கி.பி. 590-இல் முடிசூடிய முதலாம் மகேந்திரவர்மர் காலத்தில் உறையூரும், இன்றைய
திருச்சிராப்பள்ளியின் பழம் பகுதிகளும் பல்லவராட்சியின் கீழ் வந்கன. கி.பி. 880 வரை இப்பகுதி பல்லவர், பாண்டியர் மேலாட்சியின் கீழ் மாறி மாறி இருந்து. கி.பி. 880-இல் பல்லவர் ஆதிக்கத்தை முறியடித்து முதலாம் ஆதித்த சோழர் போரட்சியின் கீழ் கொணர்ந்தது. கி.பி. 1225-இல் ஹொய்சாள மன்னர்களால் கையகப்படுத்தப்பட்டு, பின்பு இரண்டாம் பாண்டியப் பேரரசின் கீழ் சில ஆண்டுகள் இருந்த திருச்சிராப்பள்ளி, முகமதியப்படையெடுப்பைத்
தொடர்ந்து அவர்களின் ஆட்சிக்குட்பட்டது.

ஏறத்தாழ நு£றாண்டுக் காலம் அமைந்த இவ்வாட்சியை விஜயநகரப் பேரரசு முடிவுக்குக் கொணர்ந்தது. நாயக்கர்கள், விஜயநகர அரசர்களின் முகவர்களாக இப்பகுதியை ஏறத்தாழ 1736 வரை ஆண்டார்கள். தற்போதுள்ள தெப்பக்குளம், கோட்டைப் பகுதி போன்றவை விசுவநாத நாயக்கரால் தோற்றுவிக்கப்பட்டவை. அரசி மீனாட்சியுடன் நாயக்கராட்சி முடிவுற்றது. தொடர்ந்து ஆங்கில, பிரேஞ்சுப்படைகளின் உதவியுடன் முகமதியர் மீண்டும் இப்பகுதியிவ் ஆட்சியமைத்தனர். ஆற்காடு நவாபுகளின் மரபில் வந்த சந்தாசாகிபு, முகமதலி போட்டோன் கையில் சில ஆண்டுகள் இருந்த இப்பகுதி, இறுதியில் ஆங்கிலப் பேரரசின் கீழ்க் கொணரப்பட்டது. நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் 1995, மெப்டம்பர் 30 ஆம் தேதி மூன்றாகப் பிரிக்கப்பட்டது (திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலு£ர்)

சட்டசபைத் தொகுதிகள்-9

திருச்சிராப்பள்ளி-ஐ, திருச்சிராப்பள்ளி-ஐஐ, திருவெறும்பூர், திருவரங்கம், லால்குடி, தொட்டியம், முசிறி, உப்பிலியபுரம், மருங்காபுரி.

பாராளுமன்றத்தொகுதி-1

திருச்சிராப்பள்ளி.

மழையளவு

வருட சராசரி. 821.4 செ.மீ.

ஆறுகள்

காவிரி, அரியார், கோரையார், அய்யாளு, நந்தலாறு, உப்பாறு.

தொழிற்சாலைகள்

பெரும்தொழில்கள்-145. சிறு தொழில்கள்-802, குடிசைத் தொழில்கள்-463.

கல்வி

பள்ளிகள்


துவக்கநிலை 1054
நடுநிலை 273
உயிர்நிலை 89
மேனிலை 121

கல்லு£ரிகள்

ஆசிரியர் பயிற்சி 5
கலை மற்றும் அறிவியல் 22
மருத்துவம் 1
பொறியியல் 10
வேளாண்மை 1
சட்டம் 1
சிறப்புப் படிப்பு 1
பல்கலைக்கழகம் (பாரதிதாசன் பல்கலைக் கழகம்). 1

போக்குவரத்து

தேசிய நெடுஞ்சாலைகள்-358 கி.மீ. மாநிலச் சாலைகள்-219 கி.மீ, இரயில் பாதை-118 கி.மீ. இரயில் நிலையம்-17, விமான நிலையம்-1.

கனிமங்கள்

சுண்ணாம்புக்கல்-லால்குடி, திருச்சி, மணப்பாறை, மண்ணச்சநல்லு£ர், குவார்ட்ஸ் மற்றும் பெல்ஸ்பார்-மணப்பாறை, மண்ணச்ச நல்லு£ர், ஜிப்சம்-லால்குடி, வெள்ளைக் களிமண்-லால்குடி, கார்னட்-முசிறி.

வழிபாட்டிடங்கள்

மலைக்கோட்டை தாயுமானவர் திருக்கோயில், திருச்சிராப்பள்ளி, ரெங்கநாதர் திருக்கோயில், திருவரங்கம், ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருவானைக்காவல், மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம், வயலு£ர் சுப்ரமணியர் திருக்கோயில், வயலு£ர், வெக்காளியம்மன் திருக்கோயில், உறையூர், புனித லு£ர்து அன்னை தேவாலயம், திருச்சி, தப்லே ஆலம் பாதுஷா நத்தர்வலிதர்கா, திருச்சி, கன்னிமாரம்மன் திருக்கோயில், வீரப்பூர், மணப்பாறை, பொன்னர்-சங்கர் திருக்கோயில், வளநாடு, மணப்பாறை.

குறிப்பிடத்தக்கோர்

தாயுமானவர்

சுற்றுலாத்தலங்கள்

முக்கொம்பு, புளியஞ்சோலை, பொன்னணியாறு அணைக்கட்டு.

|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter