First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து தமிழ் திரையுலகம் பேரணி: 19 ந் தேதி ராமேஸ்வரத்தில் நடக்கிறது - பிரதமர் தலைமையில் முதல்வர்கள் மாநாடு - புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த கருணாவுக்கு அமைச்சர் பதவி? இலங்கை அதிபர் பரிசீலனை - ஆந்திராவில் கலவரம்: ஆறு பேர் உயிருடன் எரிப்பு - இலங்கை தமிழருக்காக நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டம்: தேமுதிக புறக்கணிப்பு
இராமநாதபுரம்

ஈரோடு

கடலு£ர்
கரூர்
கன்னியாகுமரி
காஞ்சீபுரம்
கிருஷ்ணகிரி
கோயம்புத்து£ர்
சிவகங்கை
சென்னை
சேலம்
தஞ்சாவூர்
தருமபுரி
திண்டுக்கல்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
திருவண்ணாமலை
திருவள்ளூர்
திருவாரூர்
து£த்துக்குடி
தேனி
நாகப்பட்டினம்
நாமக்கல்
நீலகிரி
புதுக்கோட்டை
பெரம்பலு£ர்
மதுரை
விருதுநகர்
விழுப்புரம்
வேலு£ர்

தருமபுரி

தலைநகர் தருமபுரி
பரப்பு (ச.கி.மீ) 4,497
மக்கள் தொகை (2001) ஆண்கள் 14,73,597
பெண்கள் 13,82,703
மொத்தம் 28,56,300
மக்கள் நெருக்கம் 294
ஆண், பெண் விகிதம் 938
எழுத்தறிவு ஆண் 9,06,943
பெண் 6,09,278
மொத்தம் 15,16,221

அமைவிடம்

கிழக்கில் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம், தெற்கில் சேலம், வடக்கில் ஆந்திர மாநிலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டமும், மேற்கில் காவேரியும் எல்லைகளாக அமைந்துள்ளன.

புவியியல் அமைவு


அட்சரேகை 11°.47-11°.57° N
தீர்க்கரேகை 78°.02-7°.40° E
காலநிலை
அதிகபட்சம் 38° C
குறைந்த பட்சம் 17° C

வரலாறு

சங்க காலத்திற்குப் பின் கட்டி வம்சத்தினர், கங்கன், பாணர் போன்ற சிற்றரசர்கள் தகடூரை வென்று குறுநில அரசுகளை நிறுவினர். ஜந்தாம் நு£ற்றாண்டில் களப்பிரர் வீழ்ந்ததும் தகடூரும் பல்லவர் ஆட்சியின் ஒரு பகுதியாக விளங்கியது. கி.பி. 873-இல் இது நுளம்பர்கள் ஆட்சிக்குட்பட்டது. அப்போது இப்பகுதி நுளம்பாடி என அழைக்கப்பட்டு வந்தது. முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில் இப்பகுதி “நிகரில் சோழமண்டலம்” எனத் தனி மண்டலமாகி, பின்னர் குறு நில மன்னன் விடுகாதலாழகி பெருமான் என்ற அதியன் மரபினன் இப்பகுதியில் அரசோச்சினான். இதன் பின் உருவான கோசலர் ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு, தகடூர் விஜய நகர பேரரசின் ஒரு பகுதியாக விளங்கியது. 17-ஆம் நு£ற்றாண்டில் இப்பேரரசின் ஆட்சிக்கு உட்பட்ட ஜெகதேவிராயன் என்ற சிற்றரசனின் ஆட்சிக் காலத்தில் தகடூர், தருமபுரி எனப் பெயர் பெற்றது. பிரிட்டீஷ் கிழக்கிந்தியக் கம்பெனி படைக்கும், திப்பு சுல்தானுக்கும் இடையே 1792 இல் நடைபெற்ற போரைத் தொடர்ந்து ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் திப்பு சுல்தானிடம் இருந்து பெறப்பட்ட பகுதிகளைக் கொண்டு “பாரமஹால் மற்றும் சேலம்” மாவட்டம் 1792-இல் உருவாக்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளைக் கொண்ட பாரமஹால் (12 சமஸ்தானங்கள்) மற்றும் சேலம் மாவட்டத்தின் சில பகுதிகள் இதில் அடங்கியிருந்ததன் சில ஆண்டுகளுக்கு பிறகு இது கிருஷ்ணகிரியைத் தலைநகராகக் கொண்ட பாரமஹால் மாவட்டம் என்றும், சேலத்தைத் தலைநகராகக் கொண்ட தாலக்காட் மாவட்டம் என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 1801-இல் இவை இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டது. பின்னர் 1808-இல் இ. ஆ£. ஹார்கிரேவ் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது இது சேலம் மாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மாவட்டத் தலைநகர் தருமபுரியில் இருந்து சேலத்திற்கு 1830-இல் மாற்றப்பட்டது. தொடர்ந்து சில ஆண்டுகள் தலைநகர் ஒசூருக்கு மாற்றப்பட்டாலும் கூட, 1860-இல் ஆட்சித் தலைவர் அலுவகம் மீண்டும் சேலத்திற்கு மாற்றப்பட்டது. 1965-இல் சேலத்தில் இருந்து சேர்வராயன் மலையின் வடக்கில் உள்ள பகுதிகள் தனியாகப் பிரிக்கப்பட்டு, தருமபுரி மாவட்டம் புதியதாக உருவாக்கப்பட்டது (2-10-1965). 2003 நவம்பரில் தருமபுரியிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் உருவாக்கும் அரசு ஆணை வெளியானது.

 

சட்டசபைத் தொகுதிகள்-5

அரூர், மொரப்பூர், பாலக்கோடு, தருமபுரி, பென்னாகரம்.

பாராளுமன்றத் தொகுதிகள்-1

தருமபுரி

மொழி

தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் உருது.

மழையளவு

வருட சராசரி: 895.56 மி.மீ.

ஆறுகள்

காவிரி, தென்பெண்ணை.

அணைகள்

கிருஷ்ணகிரி, தொப்பையாறு, நாகாவதி, பஞ்சப்பள்ளி, பாம்பாறு, வாணியாறு, கெலவரப்பள்ளி, கேசரளிகுல்லா, ஈச்சம்பாடி நீர்த் தேக்கங்கள்.

முக்கிய விளை பொருட்கள்

நெல், கரும்பு, வாழை, தென்னை, காலிபிளவர், பருத்தி, தக்காளி, முட்டைக்கோசு, கேரட், புளி, மாம்பழம், ரோஜா மலர்கள்.

கனிமங்கள்

கிரானைட், குவார்ட்ஸ், மாலிப்டினம்.

தொழிற்சாலைகள்

பெரிய தொழிற்சாலைகள்-21, நடுத்தரத்தொழிற்சாலைகள்-89, சிறு தொழிற்சாலைகள்-9,951. விவசாயம், கனிம உற்பத்தி, தீப்பெட்டி தயாரித்தல், மின் அணுகருவிகள், கைக்கடிகாரங்கள், நான்கு மற்றும் இரு சக்கரவாகன உற்பத்தி, மலர் கொத்து தயாரிக்கும் பணி, மாம்பழம்கூழ் தயாரித்தல், வாகன உதிரிபாகங்கள், நு£ற்பாலைகள், சர்க்கரை ஆலைகள்.

கல்வி

பள்ளிகள் : துவக்க நிலை-2,059, நடுநிலை-203, உயர்நிலை-156, மேல்நிலை-81. போட்டோகள்-4.

குறிப்பிடத்தக்கோர்

சுப்பிரமணிய சிவா.

வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள்

அதியமான்கோட்டை, சுப்பிரமணிய சிவா நினைவகம் (பாப்பாரப்பட்டி).

சுற்றுலாத்தலங்கள்

ஒகனேக்கல், தீர்த்த மலை.

குறிப்பிடத்தக்க செய்திகள்

இந்திய அளவில் பிரசித்திப்பெற்ற சந்து£ர் மாம்பழங்கள் உலகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சுமார் 35,000 ஹெக்டேர் பரப்பில் தித்திக்கும் சுவைகொண்ட அனைத்து வகை மாம்பழம்களும் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. புகழ் பெற்ற கிரானைட் கற்கள் இங்கு கிடைக்கிறது.

|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter