|
சேலம்
| தலைநகர் |
சேலம் |
| பரப்பு (ச.கி.மீ) |
5205 |
| மக்கள் தொகை (2001) |
ஆண்கள் |
15,63,633 |
| பெண்கள் |
14,52,713 |
| மொத்தம் |
30,16,346 |
| மக்கள் நெருக்கம் |
580 |
| ஆண், பெண் விகிதம் |
929 |
| எழுத்தறிவு |
ஆண் |
10,21,772 |
| பெண் |
7,12,670 |
| மொத்தம் |
17,34,442 |
அமைவிடம்
இதன் மேற்கில் தருமபுரி மாவட்டமும், கிழக்கில் விழுப்புரம் மற்றும் பெரம்பலு£ர் மாவட்டங்களும், தெற்கில் திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களும், மேற்கில் ஈரோடு மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.
புவியியல் அமைவு
| அட்சரேகை |
11°.14-12°.53°
N |
| தீர்க்கரேகை |
77°.44-78°.50°
E |
காலநிலை
| அதிகபட்சம் |
37.9°
C |
| குறைந்தபட்சம் |
20°
C |
வரலாறு
பிரிட்டீஷ் கிழக்கிந்தியக் கம்பெனி படைக்கும், திப்பு சுல்தானுக்கும் இடையே 1792-இல் நடைபெறற் போரைத் தொடர்ந்து ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் திப்பு சுல்தானிடம் இருந்து பெறப்பட்ட பகுதிகளைக் கொண்டு “பாரமஹால் மற்றும் சேலம்” மாவட்டம் 1792-இல் உருவாக்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளைக் கொண்ட பாரமஹால் மற்றும் சேலம் மாவட்டத்தின் சில பகுதிகள் இதில் அடக்கியிருந்தன. சில ஆண்டுகளுக்கு பிறகு இது கிருஷ்ணகிரியைத் தலைநகராகக் கொண்ட பாரமஹால் மாவட்டம் என்றும், சேலத்தைத் தலைநகராகக் கொண்ட தாலக்காட் மாவட்டம் என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 1801 இல் இவை இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டது.. பின்னர் 1808 இல் இ.ஆர். ஹார்கிரேவ் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது இது சேலம் மாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மாவட்டத் தலைநகர் தருமபுரியில் இருந்து சேலத்திற்கு 1830-இல் மாற்றப்பட்டது. தொடர்ந்து சில ஆண்டுகள் தலைநகர் ஒசூருக்கு மாற்றப்பட்டாலும் கூட, 1860-இல் ஆட்சித்தலைவர் அலுவலகம் மீண்டும் சேலத்திற்கு மாற்றப்பட்டது. 1965-இல் சேலத்தில் இருந்து சேர்வராயன் மலையின் வடக்கில் உள்ள பகுதிகள் தனியாகப் பிரிக்கப்பட்டு, தருமபுரி மாவட்டம் புதியதாக உருவாக்கப்பட்டது. 1996, மேயில் சேலம் மாவட்டத்திலிருந்து நாமக்கல் மாவட்டம் உருவானது.
சட்டசபைத் தொகுதிகள்-11
மேட்டூர், தாரமங்கலம், பனைமரத்துப்பட்டி, ஒமலு£ர், ஏற்காடு, சேலம்-1, சேலம்-2, வீரபாண்டி, ஆத்து£ர், தாளவாசல், எடப்பாடி.
பாராளுமன்றத் தொகுதிகள்-1
சேலம்
மொழி
தமிழ், தெலுங்கு, கன்னடம்.
மழையளவு
வருட சராசரி. 976.4 மி.மீ.
ஆறுகள்
காவிரி, மணிமுத்தாறு, வசிஷ்ட நதி.
அணைகள்
மேட்டூர் (ஸ்டான்லி நீர்த் தேக்கம்), ஆணைமடுவு, போட்டோய கோயில்.
முக்கிய விளை பொருட்கள்
நெல், பருப்பு வகைகள், பருத்தி, மரவள்ளிக் கிழங்கு, கரும்பு, நிலக்கடலை, மாம்பழம் மற்றும் ரோஜா, மல்லிகை.
தொழிற்சாலைகள்
| விவசாயம் சார்ந்தவை |
125 |
| காடு சார்ந்தவை |
31 |
| கனிமப்பொருள் |
38 |
| துணியாலைகள் |
393 |
| பொறியியல் |
20 |
| வேதிப்பொருள் |
95 |
| ஸ்டார்ச் |
726 |
| ஏனையவை |
410 |
கல்வி
பள்ளிகள்
| துவக்கநிலை |
1,308 |
| நடுநிலை |
162 |
| உயிர்நிலை |
173 |
| மேனிலை |
81 |
கல்லுரிகள்
| மருத்துவம் |
2 |
| ஹோமியோ |
1 |
| பொறியியல் |
3 |
| ஆசிரியர் பயிற்சி |
1 |
| சட்டம் |
1 |
| கலை மற்றும்அறிவியல் |
10 |
| பல்கலைக்கழகம் (பெரியார் பல்கலைக் கழகம்). |
1 |
போக்குவரத்து
தேசிய நெடுஞ்சாலைகள்-169 கி.மீ, மாநிலச் சாலைகள்-1926, இரயில் பாதை-415 கி.மீ, இரயில் நிலையங்கள்-27, விமான நிலையம்-1 (கமலாபுரம்)
குறிப்பிடத்தக்கோர்
டாக்டர்.சுப்பராயன்-(நிர்வாகி), மோகன் குமரமங்கலம்-(நிர்வாகி), மாம்பழக் கவிராயர்-(சுதந்திரப் போராட்ட வீரர்), டாக்.குரு பாதம் (ராஜாஜி அமைச்சரவை உறுப்பினர்), எஸ்.பி.ராமசாமி- (சுதந்திரத்திற்கு முன் மத்திய அமைச்சர்).
வழிபாட்டிடங்கள்
சேலம் கோட்டைமாரியம்மன்கோவில், கந்தாஸ்ரமம், தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம், சேலம் ராஜகனபதி ஆலையம், சுகவனேஸ்வரர் திருக்கோயில்.
முக்கிய விழாக்கள்
மாரியம்மன் திருவிழா, ஆடிப்பெருக்கு விழா மற்றும் ஏற்காடு கோடைவிழா.
சுற்றுலாத்தலங்கள்
ஏற்காடு (மலைவாழிடம்-கடல் மட்டத்திலிருந்து 5100 அடி உயரம்), மேட்டூர் அணை, தாரமங்கலம் கோயில், சேலம் உருக்காலை, சேலம் கந்தாஸ்ரமம், குருவம்பட்டி உயிரியல் பூங்கா.
சிறப்புக்கள்
இந்தியாவிலேயே அதிகம் மாக்னசைட் உற்பத்தி செய்யும் பகுதிகளில் ஒன்று. ஜவ்வரிசி மிகுதியாக உற்பத்தி செய்யப்படுகிறது. சேலம் மாம்பழம் புகழ் மிக்கது.
|