|
காஞ்சீபுரம்
| தலைநகர் |
காஞ்சீபுரம் |
| பரப்பு (ச.கி.மீ) |
7,857 |
| மக்கள் தொகை (2001) |
ஆண்கள் |
14,57,242 |
| பெண்கள் |
14,20,226 |
| மொத்தம் |
28,77,468 |
| மக்கள் நெருக்கம் |
647 |
| ஆண், பெண் விகிதம் |
972 |
| எழுத்தறிவு |
ஆண் |
10,88,943 |
| பெண் |
8,63,255 |
| மொத்தம் |
19,52,198 |
அமைவிடம்
தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களுள் ஒன்று. கிழக்கில் வங்கான விரிகுடவும், சென்னை மாவட்டமும், வடக்கில் திருவள்ளூர் மாவட்டமும், தெற்கில் விழுப்புரம் மாவட்டமும், மேற்கில் திருவண்ணாமலை மற்றும் வேலு£ர் மாவட்டங்களும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
புவியியல் அமைவு
| அட்சரேகை |
11°.
00-12°.
00 N |
| தீர்க்கரேகை |
77°.
28-78°.
50°
E |
காலநிலை
| அதிகபட்சம் |
36.6°
C |
| குறைந்தபட்சம் |
21.1°
C |
வரலாறு
தொண்டைமண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. கி.பி. இரண்டாம் நு£ற்றாண்டில் இது சோழ வமிசத்தின் தொண்டைமான் இளந்திரையன் ஆட்சிக்குட்பட்டிருந்தது. இளந்திரையனுக்குப் பின் இப்பகுதியின் பூர்வ குடிகளான குறும்பர்களை அடக்கி சோழ இளவரசன் இளம்கிள்ளி இதை
ஆண்டு வந்தார். இரண்டாம் புலுமயி தலைமையிலான ஆந்திர சாதவாகனர் படையெடுப்புடன், சோழர் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. காஞ்சிபுரம் பகுதியை நிர்வகிக்க சாதவாகனர்கள் ஆட்சியாளர்களை நியமித்தனர். 3-ஆம் நு£ற்றாண்டின் துவக்கத்தில் சாதவாகனர்களின் ஆட்சியாளராக இருந்த பப்பாசுவாமி எனும் பல்லவனே, காஞ்சீபுரத்தில் ஆட்சி செய்த முதல் பல்லவ மன்னன் என்று கருதப்படுகிறான். 3 முதல் 9-ஆம் நு£ற்றாண்டு வரை (களப்பிரரில் சில வருட ஆட்சி தவிர்ந்து) இப்பகுதி பல்லவரின் ஆதிக்கத்திற்குட்பட்டிருந்தது. கி.பி. 879 இல் சோழன் ஆதித்தனால் பல்லவர்கள் தோற்கடிக்கப்பட்டி, இது சோழர் ஆட்சிக்குட்பட்டது. 1264இல் ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் எழுச்சி, இதை பாண்டிய அரசுடன் இணைத்தது. சுமார் அரை நு£ற்றாண்டு பாண்டியர் ஆட்சிக்குப்பின் பாமினிவமிசமும், தொடர்ந்து கில்ஜி வமிசமும் இங்கு ஆட்சி செய்தது. 1361 இல் விஜயநகர மன்னன் ஒன்றாம் புக்கரின் மகனான குமார கம்பண்ணனால் தொண்டை மண்டலம் முழுமையும் விஜயநகர ஆட்சியின் கீழ் வந்தது. 1968, ஜூலை ஆறாம் தேதி இம்மாவட்டம் உருவாக்கப்பட்டது. 1981 மக்கள் தொகை
கணக்கெடுப்பு இம்மாவட்டம், பின்னர் செங்கல்பட்டு என்.ஜி.ஆர். என்றும் பிற்பாடு காஞ்சீபுரம் என்றும் இருமுறை பெயர் மாற்றம் அடைந்தது.
சட்டசபைத் தொகுதிகள்-9
ஆலந்து£ர், தாம்பரம், திருப்போரூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சரப்பாக்கம், உத்திரமேரூர், காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புது£ர்.
பாராளுமன்றத் தொகுதிகள்-2
ஸ்ரீபெரும்புது£ர், செங்கல்பட்டு.;
மொழி
தமிழ், மலையாளம், தெலுங்கு, உருது.
கடற்கரைபரப்பு
57 கி.மீ.
விவசாயம்
ஏரிகள் மிகுந்துள்ளமையால் ஏரி மாவட்டம் என வழங்கப்படுகிறது. பயன்படும் ஏரிகளின் எண்ணிக்கை 3,696. புகழ்பெற்ற செம்பரம்பாக்கம், மதுராந்தகம் ஏரிகள் இங்குள்ளன. நெல், கரும்பு, நிலக்கடலை முக்கிய விளைகள்.
தொழிற்சாலைகள்
ஹ¨ண்டாய் கார் தொழிற்சாலை, மகேந்திரா போர்டு தொழிற்சாலை, செயிண்ட்கோபைன் மிதவை கண்ணாடித் தொழிற்சாலை.
கல்வி
பள்ளிகள்-1,449, போட்டோகள்-16.
குறிப்பிடத்தக்கோர்
அறிஞர் அண்ணா, பச்சையப்ப முதலியார்.
வழிபாட்டிடங்கள்
காஞ்சி வரதராஜப் பெருமாள், காமாட்சியம்மன், ஏகாம்பரேஸ்வரர், குமரக்கோட்டம் கோயில்கள். திருக்கழுக்குன்றம், மகாபலிபுரம் கோவில்கள்.
முக்கிய விழாக்கள்
மேல் மருவத்து£ர் ஆதிபராசத்தி ஆலய ஆடிப்பூர விழா, காஞ்சி வரதர் கருட சேவை, வல்லக்கோட்டை முருகன் ஆடிக் கிருத்திகை விழா. ஸ்ரீஏகாம்பரநாதர் பங்குனி உத்திர திருவிழா, குமரக்கோட்டம் முருகன்சஷ்டி விழா, ஸ்ரீகாமாட்சி அம்மன் நவராத்திரிவிழா.
உள்ளூர் விடுமுறை
ஆடிப்பூர விழா, வரதராஜப் பெருமாள் கருட சேவை விழா.
சுற்றுலாத் தலங்கள்
காஞ்சீபுரம், வேடந்தாங்கல், திருக்கழுங்குன்றம், மகாபலிபுரம், வண்டலு£ர் அண்ணா உயிரியல் பூங்கா, முட்டுக்காடு.
சிறப்புகள்
காஞ்சீபுரம் பட்டுசேலைகளுக்குப் புகழ்பெற்றது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், மகாபலிபுரம் சிற்பங்கள் காஞ்சிபுரம் புராதன கோயில் நகரம்.
|