|
கன்னியாகுமரி
| தலைநகர் |
நாகர்கோவில். |
| பரப்பு (ச.கி.மீ) |
1672 |
| மக்கள் தொகை (2001) |
ஆண்கள் |
8,32.269 |
| பெண்கள் |
8,43,765 |
| மொத்தம் |
16,76,034 |
| மக்கள் நெருக்கம் |
992 |
| ஆண், பெண் விகிதம் |
1,013 |
| எழுத்தறிவு |
ஆண் |
6,68,667 |
| பெண் |
6,39,655 |
| மொத்தம் |
13,08,322 |
அமைவிடம்
திருவிதாங்கூரின் தானியக்களஞ்சியமாக விளங்கிய கன்னியாகுமரி மாவட்டம், இந்திய தீபகற்பத்தின் தென்மேற்கு முனையில் அமைந்துள்ளது. இதன் வடக்கு மற்றும் கிழக்கில் திருநெல்வேலி மாவட்டமும், தென் மேற்கே மன்னார் வளைகுடவும், இந்திய பெருங்கடலும், மேற்கு மற்றும் வடமேற்கில் கேரள மாநிலமும் எல்லைகளாக அமைந்துள்ளன.
புவியியலமைவு
| அட்சரேகை |
8°03-8°
35 N |
| தீர்க்கரேகை |
77°
05-77°
36 E |
வரலாறு
நாஞ்சில் நாடு என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம், துவக்க காலத்தில் ஆய்மன்னர்கள், நாஞ்சில் வள்ளுவன் ஆகியோர் ஆட்சிக்குட்பட்டிருந்தது. பின்னர் வேணாடு, பாண்டியர் ஆட்சி. கி.பி. 11-இன் பிற்காலச் சோழர்களின் ஆதிக்கம். வேணாடு என்று வழங்கப்பட்ட இப்பகுதி வீர கேரள வர்மா காலத்தில் முழுமையும் திருவாங்கூரின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. மதுரை விஸ்வநாத நாயக்கருக்கு (1529-1564) வேணாடு சிறிது காலம் கப்பம் கட்டியது. டச்சுக்காரார்களுடன் நடைபெற்ற குளச்சல் போட்டோல் மார்த்தாண்டவர்மா மன்னர் வெற்றி பெற்ற போதிலும், மேற்கொண்டு அழிவுகள் ஏற்படாமல் தடுக்க சந்தா சாகிப்பிற்கு பெருந்தொகை கையூட்டாக கொடுக்கப்பட்டது. மார்த்தாண்டவர்மாவின் காலத்திற்குப்பின் பிரிட்டிஷாரின் ஆதிக்கம். இது 1947 வரை தொடர்ந்தது. 1947 இல் திருவாங்கூர் இந்திய யூனியனுடன் இணைந்தது. தொடர்ந்து1951 இல் கொச்சின், திருவாங்கூருடன் இணைக்கப்பட்டு திருவாங்கூர்-கொச்சின் எள்றழைக்கப்பட்டது மொழிவாரி மாநில மறு சீரமைப் புச்சட்டத்தின் அடிப்படையில் திருவாங்கூர்-கொச்சின் மாநிலத்தில் இருந்து அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குலம், விளவங்கோடு என்னும் நான்கு தமிழ்பேசும் தாலுகாக்கள் உள்ளடங்கிய கன்னியாகுமரி மாவட்டம் உருவானது தமிழகத்தின் ஒரு மாவட்டமானது (நவம்பர் 1, 1956).
சட்டசபைத் தொகுதிகள்-7
கன்னியாகுமாரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், திருவட்டார், விளவங்கோடு, கிள்ளியூர்.
பராளுமன்றத் தொகுதி-1
நாகர்கோவில்
மொழி
தமிழ், மலையாளம் மற்றும் உருது
வனங்கள்
மாவட்டத்தின் மொத்தப்பரப்பில் 32.7 சதவிகிதம் வனப்பகுதியாகும். தேக்கு, ரோஸ்வுட், ஆஞ்சலி, வேங்கை போன்ற மதிப்பு மிக்க மரங்களைக் கொண்டது மாவட்டத்தின் வனப்பகுதி. மலைச்சிகரங்களில் ஏலக்காயும், தேயிலையும், மலைத் தாழ்வாரங்களில் நல்லமிளகு, ரப்பா, இஞ்சி போன்றவையும் பயிராகின்றன. மாவட்டத்தின் மொத்த ரப்பர் பயிர் பரப்பு 12,686 ஹெக்டேர்.
மாவட்டப் பொருளா தராத்தில் ரப்பா பெரும் பங்கு வகிக்கிறது. கீரிப்பாறை, பறலையாறு, மணலோடை, சித்து£ர், மைலார், கல்லார் போன்ற பகுதிகளில் ரப்பர் அதிகம் பயிராகின்றன.
மழையளவு
வருட சராசரி. 1,443 மி.மீ
ஆறுகள்
தாமிரபரணியாறு (கோதையாறு மற்றும்பறளியாறு இணைந்தது), பழையாறு, முல்லையாறு, வள்ளியாறு மற்றும் து£வாறு. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் முக்கடல் என்னும் செயற்கை நன்னீர் ஏரிகள், மணக்குடி மற்றும் தேங்காய்ப்பட்டணம் எனும் இரண்டு இயற்கை உப்புநீர் ஏரிகளும் மாவட்டத்தில் உள்ளன. மாவட்டத்தின் மொத்த கடற்கரை நீளம் 68 கி.மீ.
விவசாயம்
மாவட்டத்தின் முக்கிய விளை நெல். சுமார் 25,000 ஹெக்டேர் நெல் சாகுபடிக்குப் பயன்படுத்தப்படுகிறது. மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியில் மாநிலத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது. (முதலிடம் சேலம் மாவட்டம்). சுமார் 11,907 ஹெக்டேரில் மரவள்ளிக் கிழங்கு பயிர் செய்யப்படுகிறது.
கால்வாய்களும், குளங்களுமே, நீர்ப்பாசனத்திற்கான முக்கிய ஆதாரங்கள். சுமார் 741 கி.மீ. நீளம் கொண்ட 84 அரசு கால்வாய்கள் மற்றும் 2,633 குளங்கள் வழி பாசனம் நடைபெறுகிறது.
முக்கிய விளைகள்
நெல், தேங்காய், பருப்பு வகைகள், காய்கறிகள், வாழைப் பழங்கள், ரப்பர், தேயிலை, முந்திரிப்பருப்பு.
வணிகம்
நாகர்கோவில் அருகேயுள்ள கோட்டார் அரிசி ஆலைகள் நிறைந்தது. மீன் இலங்கைக்கும், தோட்டவிளைகள், காய்றிகள், தேங்காய், தடி, நல்லமிளகு மற்றும் ரப்பர் போன்றவை கேரளம் மற்றும் அண்டை மாவட்டங்களுக்கும், கயிறு பொருள்கள். முந்திரிப்பருப்பு, மலர்கள் போன்றவை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தொழிற்சாலைகள்
மிகப் பெரும் தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. இந்திய அருமண் தொழிற்சாலை, மணவாளக்குறிச்சி, நாகர்கோவில் மற்றும் ஆரல்வாய்மொழியில் அமைந்துள்ள நு£ற்பாலைகள் குறிப்பிடத்தக்கன. இவற்றுடன் முந்திரிப்பருப்பு, கைத்தறி, கயிறு ஆலைகள், தேன் எடுத்தல்
போன்ற நடுத்தர மற்றும் கிராமியத் தொழில்களும் காணப்படுகின்றன.
போக்குவரத்து
விமானப் போக்குவரத்து வசதி இல்லை, அருகில் உள்ள விமான நிலையம் திருவனந்தபுரம் (86 கி.மீ). மாவட்டத்தலைநகர் நாகர்கோவில் இரயில் நிலையம் உள்ளது. சென்னை-நாகர்கோவில்-திருவனந்தபுரம் ட்ரங்க் சாலை ஆரல்வாய்மொழி அருகே மாவட்டத்திற்குள். துவங்குகிறது. குளச்சல் பழமையான இயற்கை துறைமுகம்.
கல்வி
பள்ளிகள் : ஆரம்பநிலை-83, துவக்கநிலை-413, நடுநிலை-147, உயிர்நிலை-121, மேனிலை-120,
போட்டோகள் : கலை மற்றும் அநிவியல்-16, மருத்துவம்-1, சிறப்புக்கல்வி-8, தொழிற்கல்வி-9.
குறிப்பிடத்தக்கோர்
அதங்கோட்டாசான், கவிமணி தேசிய வினாயகம் பிள்ளை, சதாவதானி செய்குத்தம்பி பாவலர், ஜீவானந்தம், நேசமணி, என். எஸ். கிருஷ்ணன்.
வழிபாட்டிடங்கள்
பகவதியம்மன் கோவில், கன்னியாகுமரி, தானுமாலையன் கோவில், சுசீந்திரம், நாகரரஜா கோவில், நாகர்கோவில், பகவதியம்மன் கோவில், மண்டைக்காடு, சவேரியார் கோவில், கோட்டாறு, ஞானிபீர் முஹமது மசு{தி, தக்கலை.
சுற்றுலாத் தலங்கள்
கன்னியாகுமரி, பத்மநாபபுரம் அரண்மணை, சுசீந்திரம், திற்பரப்பு அருவி, பேச்சிப்பாறை அணைக்கட்டு, வட்டக் கோட்டை.
|