|
கரூர்
| தலைநகர் |
கரூர் |
| பரப்பு (ச.கி.மீ) |
2,895 |
| மக்கள்தொகை (2001) |
ஆண்கள் |
4,65,538 |
| பெண்கள் |
4,70,148 |
| மொத்தம் |
9,35,686 |
| மக்கள் நெருக்கம் |
311 |
| ஆண்,பெண் விகிதம் |
1010 |
| எழுத்தறிவு |
ஆண் |
3,28,103 |
| பெண் |
2,38,625 |
| மொத்தம் |
5,66,728 |
அமைவிடம்
இதன் வடக்கில் நாமக்கல் மாவட்டமும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் முசிறு தாலுகாவும், கிழக்கில் திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களும், தெற்கில் சிவகங்கை மதுரை மற்றும் திண்டுக்கல மாவட்டங்ளும், மேற்கில் திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களும்
எல்லைகளாக அமைந்துள்ளன.
புவியியல் அமைவு
| அட்சரேகை |
11°-12°
N |
| தீர்க்கரேகை |
77°.
28-78°.
50°
E |
கால நிலை
| அதிகபட்சம் |
37.1°
C |
| குறைந்த பட்சம் |
19.1°
C |
வரலாறு
தமிழகத்தின் பழமையான நகரங்களுள் ஒன்றாக இது சோழர், நாயக்கர், பிரிட்டீஷார் என்று தொடர்ந்து பல ஆட்சிக்குட்பட்டிருந்தது. பழங்கால நில அகழ்வாய்வுகள் கரூர் ஒரு தங்க ஆபரணத் தயாரிப்பு மையமாக இருந்திருக்கலாம் என்று தெரிவிக்கின்றன. இந்துப் புராணங்களில் “புனிதப் பசுவின் ஸ்தலம்” என்று வர்ணிக்கப்படும் இங்கிருந்துதான் பிரம்மா தனது படைத்தல் தொழிலைத் துவங்கினார் எனப்படுகிறது.
நாணயவியல், கல்வெட்டியல், நில அகழ்வாய்வு மற்றும் இல்க்கியச் சான்றுகள் சங்க காலத்தின் முற்கால சேரர்களின் தலைநகராக கரூர் இருந்திருக்கலாம் என்று தெரிவிக்கின்றன. சங்ககாலத்தின் இது கருவூர், வஞ்சி எனப்பட்டது. சங்ககாலத்தில் “அன்ன பூர்ணை” என்றழைக்கப்பட்ட அமராவதி ஆற்றங்கரையில் உருவாக்கப்பட்ட நகரம். சேரன் செங்குட்டுவன் கரூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தான் என சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது.
முற்காலச் சேரருக்குப் பின் பாண்டியர், பல்லவர் தொடர்ந்து சோழரின் ஆட்சிக்குட்பட்டது. பின்பு நாயக்கர் மற்றும் திப்பு சுல்தான் ஆட்சிக்கும் உட்பட்டது. 1783-இல் திப்பு சுல்தானுடனான போட்டோல் கரூர் கோட்டையை அழித்து பிரிட்டீஷார் இதை தங்களுடன் இணைத்துக் கொண்டனர். பிரிட்டீஷாரின் ஆதிக்கத்தையடுத்து துவக்கத்தில் கோயம்புத்து£ர் மாவட்டத்தின் பகுதியாக இருந்தது. பிற்பாடு திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு 1995, நவம்பர் ஒன்றில் நிலவில் வந்தது.
சட்டசபைத் தொகுதிகள்
கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை.
பாராளுமன்றத் தொகுதிகள்-1
கரூர்
மொழி
தமிழ், கன்னடம், மலையாளம், உருது மற்றும் தெலுங்கு.
மழையளவு
வருட சராசரி. 1047.77 மி.மீ
ஆறுகள்
காவிரி, அமராவதி, நொய்யல், குடகனாறு, கீழ் பவானி, நங்காஞ்சி ஆறு.
தொழிற்சாலைகள்
இ.ஜ.டி. போட்டோ சர்க்கரை ஆலை, தமிழ்நாடு காகித ஆலை, கூட்டுறவு நு£ற்பாலை, செட்டிநாடு சிமென்ட் ஆலை.
கல்வி
பள்ளிகள்
| ஆரம்நிலை |
38 |
| துவக்கநிலை |
660 |
| நடுநிலை |
87 |
| உயர்நிலை |
54 |
| மேனிலை |
40 |
கல்லு£ரிகள்
| கலை மற்றும் அறிவியல் |
4 |
| ஆசிரியர் பயிற்சி |
2 |
| சிறப்புக்கல்வி |
1 |
| பொறியியல் |
2 |
போக்குவரத்து
தேசிய நெடுஞ்சாலை-149 கி.மீ. மாநிலச்சாலை-124 கி.மீ. இரயில்பாதை-94 கி.மீ.
இரயில் நிலையங்கள்-13.
சிறப்புத்தகவல்கள்
குடிசைத் தொழில்கள், நவீன அரிசி ஆலைகள், பருத்தி மற்றும் பித்தளைப் பாத்திர தயாரிப்பிற்கு புகழ்பெற்றது. |