|
மாம்பழ பர்பி
செய்முறை
மாம்பழத்தை மேல் தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பாதாம் பருப்பை நன்றாக ஊறவைத்து, மேல் தோல் நீக்கி, நெய்யில் வறுத்து, நீளமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, சீனியைப் போட்டு கலக்கி, அடுப்பில் வைக்கவும். சிறு தீயாக எரிய வேண்டும். பால் நன்றாகக் கொதித்துக் கொதித்து இறுகி வரும். மிகவும் கெட்டியாக இறுகி வரும்பொழுது, பொடியாக அரிந்துள்ள மாம்பழத் துண்டுகளைப் போட்டு கிளறி விட வேண்டும். ஏலக்காய்ப் பொடியை தூவி, நெய்யில் வறுத்த பாதாம் பருப்பைப் போட்டு கிளற வேண்டும். அல்வா பதமாக வந்ததும் இறக்கி, நெய் தடவிய தாம்பாளத்தில் பரவலாக பரப்பி, கேக்குகளாக வெட்டி, எடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே மாம்பழ பர்பி.
|
தேவையான பொருள்கள
|
மாம்பழம் (நார் இல்லாதது)
|
2 |
| எருமைப்பால் |
400கிராம் |
| சீனி |
250கிராம் |
| பாதாம் பருப்பு |
100கிராம் |
| நெய் |
50 கிராம் |
| ஏலக்காய் |
2 |
|