|
சத்துமாவு அல்வா
செய்முறை
கொண்டைக்கடலை, கேழ்வரகு, காராமணிப்பயறு, உளுந்து பயறு, நிலக்கடலை, கொள்ளு இவைகளை அதிகாலையில் ஊறவைத்து இரவில் நீரை வடித்து விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு நல்ல வெயிட்டான பாத்திரத்தைப் போட்டு மூடிவிடவும். மறுநாள் முளைகண்டிருக்கும். இவைகளை தனித்தனியாக காய வைக்கவும். இரண்டுநாள் நன்கு காய்ந்ததும் பொன் வறுவலாக வறுத்துக் கொள்ளவும். (மேலே கூறியுள்ள தானிய பொருட்களையும் கல், மண் இன்றி அனைத்தையும் சுத்தப்படுத்தவும். பிறகு முளைகட்டவும்.) முளைக்கட்டாதப் பொருட்களையும் தனித்தனியாக வறுத்து ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு, இத்துடன் ஏலக்காயைப் போட்டு மிஷினில் நைசாக அரைக்கவும். மாவை சற்று ஆறவிடவும். ஓர் அகலமான அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடி செய்துப் போட்டு பசும்பாலை ஊற்றி, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, பாகை காய்ச்ச வேண்டும். பாகு கம்பி பதம் வந்ததும் மாவுகளை சிறுகச் சிறுகக் கொட்டி, கட்டி விழாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். நன்றாக மாவு வெந்து திரண்டு (ஒரு முறை) வந்ததும் நெய்யை ஊற்றி, கிளறிக் கொண்டே முந்திரிப்பருப்பை இரண்டாக உடைத்து, நெய்யில் வறுத்து அல்வாவில் போட்டு நன்கு கிளறி விடவும். பிறகு, இரண்டு-மூன்று அகலமான சில்வர் பாத்திரத்தில் நெய்யைத் தடவி, அல்வா நன்றாக திரண்டு வந்ததும் தாம்பாளத்தில் கொட்டி கத்தி (அல்லது) தோசை எடுக்கும் கரண்டியால் நன்றாக பரப்பி துண்டுகளாக வெட்டிப் போட்டோமாறவும். (தாம்பாளத்தில் அல்வாவைக் கொட்டும் முன் முந்திரிபபருப்பை போடுகிறோம் அல்லவா? காய்ந்ததிராட்சையையும் நெய்யில் சற்று வதக்கி போட்டு கிளறிய பிறகு தாம்பாளத்தில் கொட்டவும்.) துண்டுகள் போடவும். (இந்த சத்துமாவு அல்வா பலவித சத்துள்ளதாகவும் இருக்கும். தானியங்கள் முளைக்கட்டுவதால் அதிக சத்துக்கள் கிடைக்கிறது. பயறு முளை கட்டி சேர்ப்பதால் ஈறு, பல் இவைகள் உறுதியாகிறது. பல் நோயும் வராது. குழந்தைகள் வளர்ச்சிக்கு நல்ல ஊட்டச் சத்தான மாவு(சத்துமாவு)-(சத்துமாவு அல்வா). இவைகளை சேகரிப்பதற்கும், மாவாக்குவதற்கும் கஷ்டப்பட்டாலும் இந்த சத்துமாவில் பலகாரம் செய்து சாப்பிட்டால் டானிக் தேவையில்லை.
|
தேவையான பொருள்கள்
|
சம்பா கோதுமை
|
100 கிராம்
|
| கேழ்வரகு |
100 கிராம் |
கொண்டைக் கடலை
|
100 கிராம் |
கம்பு
|
100 கிராம் |
சோளம்
|
100 கிராம் |
கருப்புமுழு உளுந்து
|
100 கிராம் |
முழுப்பயறு
|
100 கிராம் |
பெரிய
ஜவ்வரிசி
|
100 கிராம் |
நிலக்கடலை
|
50 கிராம் |
எள்
|
50 கிராம் |
காராமணிப் பயறு
|
100 கிராம் |
கொள்ளு
|
100 கிராம் |
பாதாம் பருப்பு
|
100 கிராம் |
முந்திரிப் பருப்பு
|
300 கிராம் |
ஏலக்காய்
|
15 |
காய்ந்த திராட்சை
|
300 கிராம் |
வெல்லம்
|
3 கிலோ
|
பசுநெய்
|
1/2 கிலோ
|
பசுவின் பால்
|
300மி.கி
|
|