|
வேர்க்கடலை மசால் வடை
செய்முறை
வெங்காயம், கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சரிசி, வேர்க்கடலை ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, வடைக்கு அரைப்பது போல் அரைக்க வேண்டும். அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து, வழித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து, பிசைந்துக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, வடைபோல தட்டிப் போட வேண்டும். வடையின் இருபுறமும் சிவந்ததும் எடுத்து விட வேண்டும். இதுவே 'வேர்க்கடலை மசால் வடை.
|
தேவையான பொருள்கள்
|
தேங்காய்எண்ணெய்
|
300 கிராம்
|
பச்சை வேர்க்கடலை
|
400 கிராம்
|
பச்சரிசி
|
50 கிராம்
|
பச்சை மிளகாய்
|
7 |
| வெங்காயம் |
100 கிராம்
|
இஞ்சி
|
சிறு துண்டு
|
கொத்தமல்லிஇலை கறிவேப்பிலை
|
கொஞ்சம்
|
உப்பு
|
தேவையான அளவு
|
|