|
மராட்டிச் சக்ளி
செய்முறை
கடலைப்பருப்பு, கோதுமை, அரிசி மூன்றையும் தனித்தனியாக ஒரு வாணலியில் வாசனை வருமாறு வறுக்க வேண்டும். ஒர் ஈயம் பூசிய பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூள், ஒரு தேக்கரண்டி சீனி, தேவையான அளவு உப்பு போட்டு அடுப்பில் வைக்கவும். எல்லாம் ஒன்றாகக் கலந்து, நன்றாக கொதித்து வரும் பொழுது, மூன்று மாவையும் கொட்டி, நன்றாகக் கிளறிவிட வேண்டும். பிறகு பாத்திரத்தை கீழே இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும், பிழிந்து வைத்துள்ளதை (வாழை இலையில் எண்ணெய் தடவி தேன்குழல் பிடியில் சிறுசிறு உருண்டைகளாகப் பிழிய வேண்டும்.) மெதுவாக எடுத்துப் போட வேண்டும். இருபுறமும் சிவக்க வெந்ததும் எடுத்து விட வேண்டும். இதுவே 'மராட்டி சக்ளி' என்பது. சாப்பிட சுவையாய் இருக்கும். இது மராட்டியர்கள் விரும்பி சாப்பிடும் பலகாரம்.
|
தேவையான பொருள்கள்
|
கடலைப்பருப்பு மாவு
|
ஒருகோப்பை
|
வெள்ளை கோதுமை மாவு
|
2 கோப்பை
|
அரிசிமாவு
|
1 கோப்பை
|
எண்ணெய்
|
250 மி.லி.
|
சீனி
|
1 டீஸ்பூன்
|
மிளகாய்ப் பொடி
|
1 டீஸ்பூன்
|
மஞ்சள்தூள்
|
ஒரு சிட்டிகை
|
உப்பு
|
தேவையான அளவு
|
|