|
நெய்ச் சோறு
செய்முறை
அரிசியை களைந்து, சுத்தம் செய்யவும். முந்திரிப்பருப்பை வறுத்து, நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நெய் ஊற்றவும். காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு போடவும். வாசம் வந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும். வதங்கியதும், அரிசியைப் போட்டு, சிறிது நேரம் வறுக்கவும். பிறகு ஒரு படி தண்ணீர் விட்டு, முந்திரிப்பருப்பு போட்டு, உப்பு போட்டு வேக விடவும். தண்ணீர் வற்றியதும் இறக்கி விடவும். பிறகும் தண்ணீர் இருந்தால், தணலில் வைக்கவும். இந்த நெய்ச்சோறு மிகவும் சுவையானது. பிரியாணி போலவே இருக்கும். செய்வதும் எளிது. இதற்கு கோழி அல்லது கறி குருமா மேலும் சுவை கூட்டும்.
|
தேவையான பொருள்கள்
|
பிரியாணி அரிசி
|
500 கிராம்
|
நெய்
|
250 மி.லி.
|
பெரிய வெங்காயம்
|
3 |
முந்திரிப்பருப்பு
|
10 |
பட்டை
ஏலக்காய்
கிராம்பு
உப்பு
|
தேவையான அளவு
|
|