|
வாழைத்தண்டு மோர் குழம்பு
செய்முறை
தேங்காயைத் துருவி அரைக்க வேண்டும். அத்துடன் பச்சை மிளகாய், கடலைப்பருப்பை சேர்த்து வெண்ணெய்போல் அரைக்க வேண்டும். நன்றாக அரைத்ததும் வழித்து எடுத்து, தயிரில் கலந்து கொள்ள வேண்டும். வாழைத்துண்டை பொடியாக நறுக்கி, ஒரு ஈயமுள்ள பாத்திரத்தில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வேகவிடவும். வெந்தபின் தண்ணீரை இறுத்து விட்டு, உப்பு போட்டு, தயிருடன் கலந்து, வைத்திருக்கும் விழுதையும் சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் கொதிக்க விடவும். கொதித்த பின் பாத்திரத்தை கீழே இறக்கி, கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு, சுத்தமான தேங்காய் எண்ணெயையும் ஊற்றி, ஒரு கிளறு கிளறி மூடி வைக்கவும். சிறிது நேரங்கழித்து சூடாக சோற்றில் பிசைந்து சாப்பிட, மிகவும் சவையாக இருக்கும்.
|
தேவையான பொருள்கள்
|
வாழைத்தண்டு
|
2 அடி நீளம்
|
பச்சை மிளகாய்
|
6 |
கடலைப்பருப்பு
|
1 1/2 டீஸ்பூன்
|
தயிர்
|
100 கிராம்
|
100 கிராம்
|
1 |
கறிவேப்பிலை
|
2 கொத்து
|
தேங்காய் எண்ணெய்
|
1 டீஸ்பூன்
|
உப்பு
|
தேவையான அளவு
|
|